BREAKING NEWS
Search

பூரண குணமடைந்தார் மணிரத்னம்!

மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகும் மணிரத்னம்!

மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்கநர் மணிரத்னம், முழுமையாக குணமடைந்து விட்டார். தனது ராவண் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அவர் வரும் மே 20 ம் தேதி கேரளா வனப்பகுதிக்குச் செல்கிறார்.manirathnam

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் மணிரத்னம் இயக்கும் ராவண் (தமிழில் அசோகவனம்) படப்பிடிப்பின் இறுதி ஷெட்யூல் போகும் தறுவாயில், மூன்றாவது முறையாக மாரடைப்புக்கு உள்ளானார்.

உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது மணிரத்னம் பூரண குணமடைந்துவிட்டார். இதை தொடர்ந்து மீண்டும் வருகிற 20-ந்தேதி படப்பிடிப்பை துவக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ‘ராவணன்’ படத்தில் விக்ரம், அபிஷேக்பச்சன், அஜய் கேய், ரவிகிஷன், பிரியா மணி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்தியதால் இந்தப்படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே ஒதுக்கிய ஒரு மாதம் கால்ஷீட் வீணானது. அதற்காக வருத்தப்படாமல் மீண்டும் கூடுதல் நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்துள்ளார் இப்போது.

மணிரத்னம் ஆஸ்பத்திரியில் இருந்தபோது அடிக்கடி டெலிபோன் செய்து அக்கறையோடு விசாரித்தார். ஒரு முறை சென்னைக்கு வந்து நேரடியாக மணிரத்னத்தைச் சந்தித்து பேசிவிட்டுச் சென்றுள்ளார். மீண்டும் பட வேலைகள் துவங்குவதையொட்டி, எந்திரனில் தனது பகுதிகளை முடித்துக்கொண்டு ராவண் இறுதிக் காட்சியில் நடிக்க கேரளா வருகிறார் ஐஸ்வர்யா.




One thought on “பூரண குணமடைந்தார் மணிரத்னம்!

  1. Kamesh Botswana

    Vinoji

    Kelvi Bathil “Naalai Veliyagum” is it ? (Not Again)

    Varum Aaanaa Varaadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *