BREAKING NEWS
Search

புவனேஸ்வரி… இனி முழுநேர அரசியல் தலைவி!

கலைஞருக்கு விருது கொடுக்கப் போவது யாரு?

pop-logoநாளை நடக்கும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவில் நடிகர் நடிகைகளுக்கு விருது கொடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. இந்த விழாவில் அவருக்கும் ஒரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உளியின் ஓசை படத்துக்காக சிறந்த வசனகர்த்தா விருது அது.

விருது பெற்ற கலைஞர்களுக்கு கருணாநிதி விருது கொடுக்கிறார்… இந்தக் ‘கலைஞருக்கு’ விருது தரப்போவது யாரோ…

ஆளுநரா அல்லது அனைத்துக் கலைஞர்களுமா?

புவனேஸ்வரி… இனி முழுநேர அரசியல் தலைவி!

pop-logoமூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணிச் செயலாளராக நடிகை புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

விபச்சார வழக்கில் கைதாகி, அதன் தொடர்ச்சியாக திரையுலகம் மற்றும் பத்திரிகையுலகையே இரண்டுபட வைத்த புவனேஸ்வரி, இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். நேற்று அவர் முறைப்படி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

இதுகுறித்து நடிகை டி.புவனேஸ்வரியின் வக்கீல்கள் டி.ரமேஷ், காமேஸ்வரராவ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட மற்றும் டி.வி. நடிகை டி.புவனேஸ்வரி, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் முன்னிலையில் இணைந்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் டாக்டர் சேதுராமனுக்கு அப்போது மாலை அணிவித்தார்.

நடிகை டி.புவனேஸ்வரிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம் என்ற சட்டத்தையாவது குறைந்தபட்சம் திருத்தினால் நிம்மதியாக இருக்கும்!

உடல்தானம் செய்த உதயநிதி!

pop-logoதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று 33-வது பிறந்த நாள். மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய அவர், திடீரென தனது உடலை தானமாகத் தருவதாக அறிவித்தார்.

அவருடன் அவரது மனைவியும் உடல்தானம் செய்ய, உடனிருந்த அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து 33 பேராக உடல்தானம் செய்தனர். இதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டு மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *