BREAKING NEWS
Search

புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்! – வைகோ, பழ நெடுமாறன் வலியுறுத்தல்

புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்! – வைகோ, பழ நெடுமாறன் வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன் வழக்கறிஞர் ஆகியோர் வலியுறுத்தினர்.

ஆனால் தடையை நீக்கக் கூடாது என ‘சட்ட விரோத செயல்கள் தடுப்பு ஆணையத்தில்’ மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு கடந்த மே மாதம் உத்தரவிட்டது. தடை உத்தரவை குறித்து விவாதிக்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சிங் தலைமையில் சட்ட விரோத செயல்கள் தடுப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய மத்திய அரசு வழக்கறிஞர் சந்தியோ, விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வாய்ப்பு இருப்பதால், தடையை நீக்கக் கூடாது, என்றார்.

சட்ட விரோத செயல்கள் தடுப்பு ஆணையம் டெல்லியில் 2 முறை கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த ஆணையத்தின் அடுத்தக் கூட்டம் வரும் 20ஆம் தேதி ஊட்டியில் நடக்கிறது.




One thought on “புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்! – வைகோ, பழ நெடுமாறன் வலியுறுத்தல்

  1. கடலூர் எழில்

    இல்லாத ஒரு அமைப்புக்கு தடை எதற்கு?
    இந்த ஏவல்(காவல்) துறையை தடை செய்தாலே தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும்.இவனுங்க விசாரணைக்கு கொண்டுபோய் அப்பாவிகளை கொன்னுடரானுங்க.போலி என்கவுன்ட்டர் அப்பப்பா இவனுங்க தொல்ல தாங்க முடியல. புலிகள் ஒரு மக்கள் இயக்கம் என்று நேவ்சிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறது.நம்ம ஊருல இதெல்லாம் செவுடன் காதுல ஊதுன சங்குதான்.
    இந்திய இறையாண்மை என்று சொல்லி ஒரு லட்சம் அப்பாவி மக்களை கொன்றார்கள் அதற்க்கு பக்க பலமாக இருந்த இந்திய எப்படி தடை நீக்கும்! புலிகள் ஒரு மாவீரர்கள் என்று தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் தெரியும்,அந்த அமைப்புக்கு தடை விதிக்க எவனுக்கும் இங்கு தகுதி இல்லை. மீனவர்கள் குரலாக பேசிய சீமானுக்கு தடை?(தேசியப் பாதுகாப்பு சட்டம்)
    தடை செய்யவேண்டியது
    – காமன்வெல்த் ஊழல்,போபர்ஸ் ஊழல்,ச்பெக்ட்ரும் ஊழல்,கொலைஞர் குடும்பம்,சோனியா குடும்பம்,போர்க்குற்றவாளி ராஜபக்ஷேய்வுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு, பட்டியல் நீளும். ஈன துரோகிகள் – கருணாஸ்,அசின்,சூர்யா(ரத்த சரித்ரம் விவேக் ஒப்ரையுடன் ),கார்த்திக்(ஏர்டெல் விளம்பரம்).அரசியல் விபச்சாரி சரத்குமார் & குழுவினர்(அசினுக்கு வக்காலத்து வாங்கியதற்கு).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *