BREAKING NEWS
Search

புலிகளின் மேலும் ஒரு நீர்மூழ்கி கண்டுபிடிப்பு!

புலிகளின் சொந்தத் தயாரிப்பு நீர்மூழ்கி கண்டுபிடிப்பு!

கொழும்பு: வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலிகளின் இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் ‘கோகுலன் 24’ தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

3752923880_07fe37206a

இந்தக் கப்பல் முழுவதுமாக புலிகளின் சொந்தத் தயாரிப்பாகும். மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.

இதன் மோட்டார் நன்கு இயங்கும் நிலையில் இருந்தது. கார் பாட்டரிகள் பொருத்தப்பட்டிருந்த இந்த நீர்மூழ்கியை தயார் நிலையில் வைத்திருந்த புலிகள், கடைசியில் அதை உபயோகிக்காமல் விட்டு வைத்தது ஏன் என்ற கோள்வி எழுந்தது. அதைவிட முக்கியம், இந்தக் கப்பல் இருக்குமிடத்தை இப்போது ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தது யாராக இருக்கும் என்ற கேள்விதான்.

இந்த நீர் மூழ்கிக்கும் இறுதிப் போருக்கும் மிகுந்த தொடர்பிருக்கும் என நம்பப்படுகிறது. காரணம் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியின் கடற்கரையில் இருந்து சுமார் 600 மீட்டர் கடற்பரப்பில், கடலுக்கடியில் இக்கப்பல் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கப்பல்களைக் கட்டுவதில் புலிகள் நிபுணர்கள் என்பதால், இன்னும் எத்தனைக் கப்பல்கள் இந்தப் பகுதியிலிருந்து கிளம்பிச் சென்றிருக்குமோ என்ற சந்தேகம் அவர்களை வாட்டுகிறது.

3752130975_bdedba199c

காரணம், இந்தப் பகுதியில் இருதி நேரத்தி்ல ராணுவம் தரையிறக்கம் எதையும் செய்யவில்லை எனறும், மாறாக டோரா படகுகளில், இங்கிருந்து 2 கிமீ தூரத்தில் நிலைகொண்டுதான் தாக்கினர் என்றும் தெரிய வந்துள்ளது. அப்படியானால், எழுத்தாளர் திருநாவுக்கரசு சொன்னதுபோல, மே 15-ம் தேதி மாலை, இந்தப் பகுதியிலிருந்து முக்கிய நீர்மூழ்கிகள் ஏதேனும் கிளம்பிச் சென்றிருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

சந்தேகங்கள் பலவாக இருந்தாலும், தமிழனின் அறிவியல் திறமைக்கும், கடுமையான உழைப்புக்கும் இன்னொரு சினனமாக இந்த நீர்மூழ்கிகள் நிற்கின்றன. ஏற்கெனவே புலிகள் கைவிட்டுச் சென்ற இதுபோன்ற பல நீர்மூழ்கிகளை ராணுவம் கண்டுடித்துப் பார்த்து வியந்து, அதனுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டது நினைவிருக்கலாம்.

இது போன்ற நீர்மூழ்கிகள் மட்டுமல்ல, சாதாரண மோட்டார் படகை உருவாக்கக் கூட முழுமையான அறிவில்லாத நிலையில்தான் சிங்கள ராணுவம் உள்ளது. ஆனால் இந்தியா போன்ற வல்லரசுகள் சகல வசதிகளையும் பயன்படுத்தி தயாரிப்பதை விட, அதிக சக்தி கொண்ட நீர் மூழ்கிக் கப்பல்கள், அண்டர்வாட்டர் ஸ்கூட்டர் போன்றவற்றைத் தமது சொந்த உழைப்பால் உருவாக்கியவர்கள் தேசியத் தலைவர் பிரபாகரனின் தம்பிமார்கள் என்பது புலிவீரத்துக்கும் உழைப்புக்கும் இன்னுமோர் சான்று!




One thought on “புலிகளின் மேலும் ஒரு நீர்மூழ்கி கண்டுபிடிப்பு!

  1. Manoharan

    புலிகளின் அறிவுக்கு கொஞ்சம் கூட இலங்கை ராணுவத்தினர் நிகராக முடியாது. சென்ற வாரம் கொழும்பு சென்றிருந்தபோது ஒரு முக்கியமான விஷயத்தை காணமுடிந்தது. 200 மீட்டருக்கு ஒரு முறை சோதனை செய்கிறார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் பார்த்தவரை ராணுவத்திணர்கள் அனைவருக்குமே கிட்டத்தட்ட 20 வயதுதான் இருக்கும். அப்படியென்றால் மூத்த ராணுவத்திணர்கள் எல்லாம் எங்கே ? ஒன்று புலிகளுடனான சண்டையில் இறந்திருக்க வேண்டும் அல்லது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கவேண்டும். ஆனால் இலங்கையின் தலைநகரில் 20 வயதானவர்கள்தான் இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டிருக்கவேண்டும். அதுவும் சிலரை பார்த்தால் 15,17 வயது கூட இருக்காது. நிச்சயம் வெளிநாட்டு உதவி இல்லாமல் புலிகளை இவர்களால் ஒன்றுமே செய்திருக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *