Breaking News

‘புலிகள் பணம் ரஜினிக்கு தரப்பட்டது’… ஒரு அமைச்சரின் பிதற்றல்!

Thursday, August 20, 2009 at 12:56 pm | 866 views


‘புலிகளின் பணம்  ரஜினிக்கு தரப்பட்டது’… ஒரு அமைச்சரின் பிதற்றல்!

மிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் 20-rishad-bathiudeen-200எடுக்கப்பட்ட படத்தில் நடித்ததற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பெரும் பணம் கொடுக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் என்பவர் உளறியுள்ளார் (இதைவிட வேறு நாகரீகமான வார்த்தையைப் பயன்படுத்த முடியவில்லை!).

ரஜினிகாந்த் என்ற பெயரை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு பயன்படுத்தி பப்ளிசிட்டி தேடிக் கொள்வதில் இந்திய – தமிழக அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல இலங்கை அரசியல்வாதிகளும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

முன்பு ஈழத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரதத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் ஈழ விடுதலைப் போரை ஆதரித்துப் பேசினார் ரஜினி. தமிழர்களை இன அழிப்பு செய்யும் ராஜபக்சேவுக்கு பகிரங்கமாகக் கண்டனமும் தெரிவித்தார்.

அதே மேடையில் நடிகர்களிலேயே அதிக அளவு நிதியுதவியாக ரூ 10 லட்சத்தை, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் நிவாரணத்துக்காகவும் அளித்தார்.

உடனே, அவருக்கு புலிகளுடன் தொடர்பிருப்பதாக அதிபர் ராஜபக்சே, அமைச்சர்கள் மற்றும் ராஜபக்சேவின் தம்பிகள் கதையளக்கத் தொடங்கினர்.

இப்போது புலிகளை ஒழித்துவிட்டதாகக் கூறிக் கொள்ளும் இலங்கை அரசு, மீண்டும் மீண்டும் புலிகள் பெயரைச் சொல்லி தங்கள் மனிதாபிமான மீறல்களை மறைத்து வருகிறது. முள்கம்பி கொடும் வதை முகாம்களுக்குள் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை அடைத்து வைத்து ஆயிரக்கணக்கானோரை பட்டினி போட்டு சத்தமின்றிக் கொன்று வரும் கொடூரத்தை மறைக்க நாளும் ஒரு புலிக்கதை சொல்லி வருகிறார்கள் பொய்யே உருவான இலங்கை அமைச்சர்கள்.

அப்துல் ரிஷாத் பதியுதீன் என்பவர் இலங்கை அரசில் அங்கம் வகித்துவரும் ஒரு ஜுனியர் அமைச்சர். இலங்கை புனரமைப்பு மற்றும் இயற்கை பேரிடர் நிவாரண அமைச்சகத்தில் பொறுப்பு வகிக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பு இவர் இலங்கை பத்திரிகைகள் மற்றும் ஊடகத்துக்கு ஒரு செய்தியை பேட்டியாக வழங்கியுள்ளார். அதில் இதில் விடுதலைப் புலிகளிடம் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் பெரும் பணம் பெற்று வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும் சில தமிழ்ப் படங்களை விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு தமிழகத்தில் தயாரித்துள்ளனர். இந்தப் படங்களுக்கான நிதியை, தமிழ் மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை எடுத்து புலிகள் கொடுத்துள்ளனர்.

இந்தப் பணத்தை அவர்கள் நேரடியாக அனுப்பவில்லை. மாறாக, லட்சக்கணக்கான பணத்தை லண்டனைச் சேர்ந்த ஒரு இலங்கைத் தமிழருக்கு அனுப்பி வைத்து அவரை தமிழகத்தில் திரைப்படங்களைத் தயாரிக்குமாறு கட்டளையிட்டனர்.

அவரும் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களை வைத்து பல்வேறு படங்களை தமிழகத்தில் தயாரித்துள்ளார். இதில் ரஜினிகாந்த்துக்கு மிகப் பெரிய அளவில் பணம் தரப்பட்டுள்ளது. அது எவ்வளவு என்பதை இப்போது கூறுவதற்கில்லை.

மேலும் இந்தப் பணத்தை வைத்து அவர்கள் டிவி, ரேடியோ நிலையங்கள் மற்றும் இணையதளங்களையும் தொடங்கியுள்ளனர்…,” என்று சுப்பிரமணிய சாமியை மிஞ்சும் அளவுக்கு அந்த அமைச்சர் இஷ்டத்துக்கு அடித்துவிட்டுள்ளார்.

இதை கடந்த இரு தினங்களாக பெரிய அளவில் பரப்புரை செய்து வருகின்றன இலங்கை அரசு சார் ஊடகங்கள்.

முட்டாள்… முட்டாள் அமைச்சர்! – வைகோ

பதியுதீனின் புகாரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது முட்டாள்தனமான, அரசியல் உள்நோக்கம் கொண்ட வெற்றுப் புகார். இதைச் சொன்னவர் வெறும் முட்டாள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல, என்றார் வைகோ.

ஐங்கரன் கருணாமூர்த்தியை கூறுகிறாரா பதியுதீன்…?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினி நடித்த எந்திரன் படத்தை முதலில் தயாரித்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம். இந்த நிறுவனத்தின் அதிபர் கருணாமூர்த்தி. இவர் லண்டனைச் சேர்ந்தவர்.

இவர்தான் நடிகர் அருண் பாண்டியனுடன் இணைந்து எந்திரன் படத்தைத் தயாரித்து வந்தார். இடையில் இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தயாரிப்பிலிருந்து அவர்கள் விலகிக் கொண்டனர். இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

ரஜினியைப் பொறுத்தவரை அவர் கடந்த சில ஆண்டுகளாகவே சம்பளம் என்று எதையும் வாங்குவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. படத்தின் லாபத்தில் இத்தனை சதவீதம் என்றுதான் அவர் சம்பளமாக பெற்று வருகிறார்.

சிவாஜி படம் ரிலீசாகி 25 நாட்களைக் கடந்த பின்னர்தான் ரஜினியிடம் சம்பளத் தொகையை ஒப்படைத்தார் ஏவிஎம் சரவணன் என்பது நினைவிருக்கலாம். இந்தப் படத்துக்கு அவர் வாங்கிய அட்வான்ஸ் தொகை வெறும் ரூ.1000 மட்டுமே.

எனவே பெரும் பணத்தை கருணாமூர்த்தி, ரஜினிக்கு கொடுத்ததாக பதியுதீன் கூறுவது கடைந்தெடுத்த பொய். கருணாமூர்த்தியின் தயாரிப்பில் ரஜினி நடித்த ஒரே படம் எந்திரன்தான். அதுவும் கூட பாதியிலேயே சன் பிக்சர்ஸ் வசம் கை மாறி விட்டது.

ஆக நடிக்காத படத்துக்கு ரஜினி சம்பளம் வாங்கினார் என்று பிரச்சாரம் செய்யும் இந்த நபரை என்னவென்று சொல்வது!

-வினோ

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

26 Responses to “‘புலிகள் பணம் ரஜினிக்கு தரப்பட்டது’… ஒரு அமைச்சரின் பிதற்றல்!”
 1. priya says:

  “இந்தப் படத்துக்கு அவர் வாங்கிய அட்வான்ஸ் தொகை வெறும் ரூ.1000 மட்டுமே.”

  HAHAHAHAHA
  gud joke
  nenga rajni kanthuku jaalra adinga no prob
  bt entha alavuku adika koodathu
  :) :)

  _________________

  இதுல என்ன ஜால்ரா இருக்கு… போய் பழைய செய்திகளைப் பாருங்க… இல்ல படத்தோட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மகன் குகன்கிட்ட கேளுங்க. இவங்களையெல்லாம் விட, அல்லது ஏவிஎம்முக்கே தெரியாத ;) நம்பகமான தகவலை நீங்க ஆதாரத்துடன் வச்சிருந்தா இப்பவே கொடுங்க… தாராளமாக பிரசுரிக்கிறோம்!

  -என்வழி

 2. Manoharan says:

  ஆக நடிக்காத படத்துக்கு ரஜினி சம்பளம் வாங்கினார் என்று பிரச்சாரம் செய்யும் இந்த நபரை நியாயமாக கல்லால் அடித்தே காலி செய்யவேண்டும்!

  Ignore these Bastards……
  _______

  நன்றி மனோகர்…

  இந்த விஷயத்தை அப்படி விட்டுட முடியாது… காரணம் இந்த wasteland ஒரு நாட்டு அரசாங்க மந்திரி… ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைப்புச் செய்தியா போடும் அளவுக்கு இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கு!

  -என்வழி

 3. priya says:

  “இதுல என்ன ஜால்ரா இருக்கு… போய் பழைய செய்திகளைப் பாருங்க…”

  HAHAHAHA
  again gud joke :P
  unga palya sethigal paarkum poothu rajni kanth fans club(webpage) paakure oru feeling
  enn sir entha pulaipu?
  athu sari rajni peeyare vaacihe kaalathe ooota paakurenga
  hummm cary on
  unga sevai,engaluku thevai
  :D

 4. endhiraa says:

  கல்லால் அடித்தால் மட்டும் பத்தாது வினோஜி…சாவடிக்கணும் இந்த நாய்ங்களை எல்லாம்.

  கோத்தபய..ராஜபக்சே..எல்லாரையும் சேர்த்து உனக்கும் இருக்குடி ஆப்பு !!!

 5. Tamilan says:

  These Idiotic Srliankan country Idiotic minister can say other than north Indians all south Indians got money from Puligal…Still our North media publish in front Page…

  “when i was talking with one of my North Indian Friend (Delhi Guy) …

  he was asking me that why do u guys (Tamil People) asking Indian government to have only Tamil language as official language in India!!!!”

  That was really surprising me… I dont know who is misleading them…
  if the Indian media publish everything what the Srilanka says…for sure they will believe everything…I dont know whether the media doing it purposely…

  I believe, since the Sinhals dont like Tamils they are also trying to create gap between our north Indians and out Tamilnadu Tamils…unfortunately our Indians doesnt realize the Sinhals tactics!!!!!

 6. Balakumaran says:

  Dear All,
  This is a reply to Priya,
  What Vino Said is right,Yes.AVM Saravanan told NDTV in their coverage that hes has paid only Rs.1001 as advance and he paid the remaining money after the movie released.Go through the following links,These links are a just few of a lot.And do not give any information that is not correct.

  1. http://www.indianmalaysian.com/sound/modules.php?name=News&file=print&sid=536
  2. http://www.exoticindiaart.com/book/details/IDK395/
  3. http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-02/13-06-06-rajini.html
  4. http://www.bharatwaves.com/news/NDTV-explores-%E2%80%98The-Rajni-Factor%E2%80%99-1652.html
  5. http://tamilmovies.com/cgi-bin/news/viewnews.cgi?category=2&id=1177985043
  6. http://www.behindwoods.com/tamil-movie-news/july-07-01/07-07-07-sivaji.html

 7. bharath says:

  vino sir,
  A humble request intha mathiri(PRIYA) ponu peruku pinadi olinchu comment podravanai elam ethuku allow panrinak please remove them.
  In your busy schedule its waste of time unnecessary bias.

 8. bahrainbaba says:

  Ms. Priya

  If you do not like Mr. Vino’s article, please ignore and do some work which u feel is valuable.. no need to come out and comment like this.. above all it’s fact that Rajini and Shankar got only 1000Rs as advance when they signed for Shivaji.. This was telecasted and informed through your top media SunTV only.

 9. saranya says:

  priya. before writing a comment pls think and write pk. if u have any doubt pls ask avm saravanan or his spn gugan. wo knowing the past dont comment.

 10. sekar says:

  நம்ப முடியாத அளவுக்கு ரஜினியின் செயல் பாடுகள் இருக்கின்றன என்கின்ற வகையில் சந்தோஷமே. என்ன செய்வது…. இந்த காலத்திலும் இப்படி தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் கொடுக்காத மனிதர் ரஜினி.

  பிரியா…நீங்கள் நம்ப வேண்டாம்….இதனால் என்ன கேட்டு போய் விட்டது!

 11. vaseegaran says:

  @ PRIYA WARNING UNGALUKKU..JALRA ADIKIRA PALAKKAM RAJANI RASIGARGALUKKU KIDAYATHU
  UNGALUKKU VISAYAM THERIYALA NA POTHIKITTU IRUNGA …UNGAL COMMENT KUM ENGAL THOZLAR THANMAYAGA BATHIL KOORINAARE ATHAI NINAITHU PARKA VENDUM……MIND IT

 12. santhosh says:

  இந்த நபரை நியாயமாக கல்லால் அடித்தே காலி செய்யவேண்டும்!

  Whoel world know that Rajini has got only 1001 as advance for the movie.

 13. Tamilan says:

  May be that Priya is not from Tamilnadu or Tamilian…may be this is a Sinhal guy commenting like this…if we closely watch the words typed by Priya…it look like guy know littlebit Tamil… May be i am wrong…

  we can see these kind of tactics used by sinhal government in world media…comment like a Tamilian to twist us… we can see these kind of comments even in International media…they comment like, i am a Tamilian living happily in Srilanka and those people in the concentration camp are Tigers. But if we see the news..it’s just opposite..
  I think it’s part of their propaganda to hide the genocide on tamils and keep releasing these kind of news everyday to let us forget about the people in the concentration camp… It’s better we skip those comments. We know about our Thalaivar…

 14. ப்ரியா (பெயரில்) போன்றவர்களுக்கு
  ஒரு செய்தியை பிரசுரித்தால், அதில் தவறு என்பது, அட நிருபியுங்கள் என்றால், அதை நிருப்பிக்காமல், HaHaHa gud Joke என்று சொல்லி தேவையே இல்லாமல் ஆஜார் ஆக அடுத்து பெயரை தேர்வு செய்வது. இத என்ன என்று சொல்ல…

  அது சரி, சுவைமிகு பழ சுலைகள் உள்ள இடத்தில் தானே பிரியா போன்ற ஈ-க்களும், நச்சு பூச்சிகளும் மொயிக்க தானே செய்யும்.

  //**இந்த நபரை நியாயமாக கல்லால் அடித்தே காலி செய்யவேண்டும்!**//

  வழிமொழிகிறோம்

 15. Kamesh (Botswana) says:

  Vinoji,

  Friends, Ayyayyaa vidungappa… ivangala polavanga (Priya) thenamum yaravathu kilambittu thaan iruppanga itha poi seriousa eduthikkittu.. Sooriyana paarthu … etho kolaichuthaanu vidaama … pathil vera sollikkittu…

  Nice reply vinoji for the comment simply shows how maturered we are.. and how are others who would like to do negative and nakkal commenting.

  Kamesh

 16. Rishi says:

  I’m deeply hurt by this false allegation by SL minister. This is not good. This should not have happened. We cannot ignore this news because this has been making headlines in the media through out india. I hope some one gives a fitting reply to the minister. Enough is enough.

  - Rishi

 17. harisivaji says:

  Hello Miss or Mrs or MR Priya whoever you are i guess you are somehow related to SL minister Abdul

  Neenga ennathaan thalakeela ninaalum

  நீங்க எய்த அம்புகள் என்றுமே
  வெற்றி பூமாலையாக எங்கள்
  கழுத்தில் விழும்
  இன்னும் இன்னும் நெறய வீசுங்க

 18. naren says:

  Good publicity for Srilankan minister.

 19. S.Vijay says:

  என்னடா இது தலைவர் படம் 85% முடிந்து விட்டது என சொன்ன பிறகும் எந்த வம்புல் வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் ;) கொண்டிருந்தேன்.
  இதோ வந்துட்டோம்ல என்று இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கிறார்.
  நண்பர்களே, படம் வெளிவரும் நாள் நெருங்க நெருங்க இன்னமும் நிறைய வேதனை மிகுந்த காமெடிக் காட்சிகள் காத்துக் கொண்டிருக்கிறது.

 20. Peraveen says:

  Ava kidakara (thevdiya munda or bastard (sorry for using those words if i dont use those words its a great felony!))

 21. palPalani says:

  ரஜினி விடுதலை புலிகளினின் ஆதரவாலர்கலிடமிருந்து பணம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. நிற்க.

  ரஜினி ஒருவேளை, புலிகளினின் ஆதரவாலர்கலிடமிருந்து பணம் பற்று படம் பண்ணியிருந்தால் அதை பாராட்டத்தானே வேண்டும், இது ஒன்றும் களவாணித்தனம் இல்லையே?
  உண்மையில் பெரிய நடிகர்கள் யாரும் இதுவரை உதவி செய்யவில்லை என்றால் அது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
  ஒருவேளை ரஜினி உதவியிருந்தால் அதற்க்காக அவைரப் பாராட்டுகிறேன்! இந்த மிகச் சிறிய உதவி செய்ததற்காக.

 22. கோடங்கி கோவிந்து! says:

  ரஜினி அடிபொடிகளே! அவர் 1001 அட்வான்ஸ் நடித்தே இருக்கட்டுமே! பின்னர் சம்பளமாக வாங்கிய பணம் கோடிகளில் தானே. ரஜினி படத்தை முதல் 15 நாள் வரை பார்ப்பது அவர் ரசிகர்கள் குறிப்பாய் நடுத்தர மற்றும் ஏழை மக்கள். அவர்களின் உழைப்பை சுரண்டும் ரஜினி, அந்த ஆளை தூக்கி வைத்து கொண்டாடும் இவர்களை என்ன சொல்வது. பாவம் ஒவ்வொரு முறை ரஜினி படம் வரும் போது அவரே எதாவது பரபரப்பு உண்டு பண்ணுவார் இப்போது சிங்களன் உதவி பண்றான்.

 23. r.v.saravanan says:

  இதுபோன்ற உளறல்களுக்கு அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்க வேண்டாம்!’

  good word our golden times no waste in this person

 24. pisasu says:

  kodangi yeendaapa pei ottarathai vittu inge vanththu udukku adichi paakire, kannu neeyellam ithunaale famous aaga mudiyaathu. sh yaapa, yen, vino sir,konjam kosu marunthu adichi vaikkak padatha? priya kosu,ippa pei ottra janmam ellam inge vanthu serappurai aaththuthu. thaabgamudiyale inga enga oorle veyil vera koluthuthu, athuve saamalikka mudiyale. Veppilai koththai vasala maati vainga, konjam ithunga ellam thalli nikkum

 25. Mark12 says:

  I know how to solve the issue though. ,

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)