BREAKING NEWS
Search

புறக்கணித்த சூப்பர் ஸ்டார்களும் புறப்பட்டுப்போன சும்மா ஸ்டார்களும்!

புறக்கணித்த சூப்பர் ஸ்டார்களும்… புறப்பட்டுப்போன சும்மா ஸ்டார்களும்!

கொழும்பு: உலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்களுக்கு மதிப்பளித்து (அல்லது வசூல் பாதிக்குமே என பயந்தாவது!)கொழும்பு நகரில் நாளை தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என்று இந்தித் திரையுலகின் பெரும்பான்மை நடிகர்களும், நடிகைகளும் முடிவு செய்துள்ளதால், கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது.

கொழும்பில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட வட இந்திய திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கான அழைப்பிதழை தமிழகத்தில் ஆளும் வர்க்கத்துக்கு முதலில் வைத்துவிட்டு, அடுத்து தமிழ் சினிமா பிரபலங்களுக்குத் தர முயன்றனர்.

முதலில் அவர்கள் அணுகியது ரஜினியை. சற்றும் தயக்கமின்றி, பளிச்சென்று விழா அழைப்பிதழைக் கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் ராஜபக்சே ரகசியமாக விட்ட தூதையும் தூக்கியெறிந்தார். இந்த விவரங்கள் தெரிந்த பிறகுதான் மற்ற தமிழ் நடிகர் நடிகைகள் புறக்கணிப்பை பகிரங்கப் படுத்தினர். இந்த விஷயம் பத்திரிகைகளில் வந்தபிறகுதான் நாம் தமிழர் போன்ற உணர்வாளர்கள் களமிறங்கினர்.

தமிழ் திரையுலகம் ஒருமித்த எதிர்ப்புணர்விலிருப்பது தெரிந்த பிறகு, பாலிவுட் பக்கம் பார்வையைத் திருப்பினர் உணர்வாளர்கள்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து, அந்த ரத்தம் கூட காயாத நிலையில், ராஜபக்சே அரசு, தனது சுய லாபத்துக்காக இந்த விழாவை கொழும்பில் நடத்த அனுமதி கொடுத்துள்ளது. எனவே இதில் இந்திய திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி போராட்டத்தில் குதித்தது நாம் தமிழர் இயக்கம்.

மும்பையில் நூற்றுக்கணக்கான தமிழர்களைத் திரட்டி அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு போராட்டத்திலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இதேபோல உலகெங்கும் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் பாலிவுட் நட்சத்திரங்கள் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி மெயில்களை அனுப்பிக் குவித்தனர்.

இதையடுத்து தமிழ்த் திரையுலகினர் மொத்தமாக, இதில் நாங்கள் யாரும் பங்கேற்க மாட்டோம், யாரும் பங்கேற்கவும் கூடாது. மீறி பங்கேற்றால் அவர்களது படங்கள் எதுவும் தென்னிந்தியாவில் திரையிடப் பட மாட்டாது என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

இந்த நேரத்தில் சற்றும் எதிர்ப்பாராத நட்சத்திரங்களெல்லாம் ஐஃபாவுக்கு எதிராக, தமிழ் உணர்வாளர்களுக்கு கரம் கொடுத்தனர்.

‘நாங்களும் சென்னைவாசிகள்தான். தமிழர்கள் எங்களுக்கு முக்கியம். அவர்கள் மனதைப் புண்படுத்தும்ம் ஒரு நிகழ்வுக்கு நாங்கள் போகமாட்டோம்’ என்று கூறி மலையாளத்தின் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கின் வெங்கடேஷ், கன்னட முன்னணி நடிகர் புனீத் ராஜ்குமார் ஆகியோரும் அறிவித்து விட்டனர். குறிப்பாக புனீத் ராஜ்குமார் அறிவிப்பு ஒரு இனிய அதிர்ச்சியாக இருந்தது தமிழர்களுக்கு. கன்னடத்தில் பெரிய ஹீரோ என்றாலும் அவர் படங்கள் தமிழகத்தில் ரிலீசாவதுகூட இல்லை.

தொடர் எதிர்ப்பால் உந்தப்பட்ட அமிதாப் பச்சன் தனது குடும்பத்தினர் யாரும் கொழும்பு செல்ல மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறி விட்டார். தனது ஐஃபா தூதர் பொறுப்பையும் உதறிவிட்டார்.

தற்போதைய நிலவரப்படி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ஆமிர் கான், காத்ரீனா கைப், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் கொழும்பு பட விழாவுக்குச் செல்ல மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

விவேக் ஓபராய், லாரா தத்தா ஆகியோர் உள்ளிட்ட ஒரு சில 2ம் நிலை நடிகர், நடிகையர் மட்டுமே இந்த விழாவுக்கு போயுள்ளனர். தமிழகத்தில் ஒரு நடிகையாக அறிமுகமாகி, இப்போது இந்தியில் நடிக்கும் ஜெனிலியா (பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம்), சஞ்சய் தத், பொம்மன் இராணி (முன்னாபாய் வில்லன்), அனில் கபூர் ஆகியோரும் புதன்கிழமை மாலை கொழும்பு சென்றுவி்ட்டனர்.

ஆனால் இவர்களில் பலரை இலங்கை மக்களுக்கு தெரியுமா என்பதே சந்தேகம்,

மொத்த சூப்பர் ஸ்டார்களும் விழாவுக்குப் போகாததால் கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது. இலங்கை அரசும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

என்ன கொடுமை என்றால், இந்த விழாவுக்கு அமிதாப் பச்சன் வருகிறார், ஐஸ்வர்யா ராய் வருகிறார், ஷாருக் கான் வருகிறார் என்று கூறி வீதி வீதியாக போய் கூவாத குறையாக டிக்கெட்களை விற்றுள்ளனர். இதனால் பெரும் விலையாக இருந்தாலும் டிக்கெட்களை கொழும்புவாசிகள் வாங்கியுள்ளனர். அனைவருக்கும் தற்போது பெரும் ஏமாற்றமாகியுள்ளதாம்.

தமிழகத்தில் எழுந்து சிறிய அளவிலான எதிர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் பரவி, இந்தியாவின் முக்கிய திரையுலகமான பாலிவுட்டைப் புரட்டி முடக்கிப் போட்டிருப்பதைப் பார்த்து இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

கொழும்பு பட விழாவுக்குப் போனால், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களை முழுமையாக பகைத்துக் கொள்ள நேரிடும். அது தங்களது திரைப்பட வர்த்தகத்துக்கு பெரும் அடியாக அமையும் என கருதியதால்தான் பாலிவுட் நடிகர், நடிகையர் கொழும்பு விழாவுக்குப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

எப்படியோ கொழும்பு ஐஃபா விழா முழுமையான தோல்வியைத் தழுவ வேண்டும். இலங்கை அரசின் ரத்தவெறி, யுத்த குற்றம் எந்த அளவு தமிழரை பாதிதுள்ளது என்பதை உலகம் உணர வேண்டும்.
10 thoughts on “புறக்கணித்த சூப்பர் ஸ்டார்களும் புறப்பட்டுப்போன சும்மா ஸ்டார்களும்!

 1. paranthaman

  அடுத்து ரிலீஸ் ஆகும் தனுஸ் ஜெனிலியா …”உத்தம புத்திரன் ;” பாக்காதிங்க நாம் தமிழர் இனிய நெஞ்சங்களே

 2. boopathy

  கலந்துகொள்ளும் யாருடைய படத்தையும் பார்க்காதது மட்டுமல்ல தமிழகத்தில் வெளியிடாமல் போராட்டம் நடத்த வேண்டும். இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தயரிப்பாளர்களது படங்களையும் புறக்கணிக்கவேண்டும்.

 3. பிள்ளையாண்டான்

  “உத்தம புத்திரன்” படத்திற்க்கு, தென்னிந்திய திரைப்பட உலகம் தடைவிதித்தாலும் கூட, ப்டத்தை சன் டீவி அல்லது தயாநிதி அழகிரி வாங்கி விட்டால்???

 4. பிள்ளையாண்டான்

  கீழக்கண்ட “ட்வீட்டர்” ஐடிகளில், பங்கு பெற்றவர்களுக்கு உங்கள் கன்டனத்தை தெரிவியுங்கள் தமிழர்களே!

  @geneliad
  @DuttaLara
  @riteishd
  @bomanirani
  @vivek_oberoi

 5. குமரன்

  ///இந்த விழாவுக்கான அழைப்பிதழை தமிழகத்தில் ஆளும் வர்க்கத்துக்கு முதலில் வைத்துவிட்டு, அடுத்து தமிழ் சினிமா பிரபலங்களுக்குத் தர முயன்றனர்.

  முதலில் அவர்கள் அணுகியது ரஜினியை. சற்றும் தயக்கமின்றி, பளிச்சென்று விழா அழைப்பிதழைக் கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.
  ///

  அப்படியானால் நான் முன்னரே சந்தேகப்பட்டபடி, கருணாநிதியும் ஸ்டாலினும் தயாநிதி கலாநிதியும் கனிமொழியும் அழகிரியும் பத்திரிகையை வாங்கிவிட்டார்கள். சரிதான். தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதியின் சாயம் கொஞ்ச நஞ்சமும் வெளுத்துவிட்டது.

  துரோகிகள்.

 6. Gokul

  Aamir khan usually does’nt attend award functions.He has never participated in IIFA award functions.Shah rukh khan has not attended the IIFA function for the past 2 years. To say that these people are not attending the function for tamil issue is an illusion.
  Salman,Akshay kumar,Ranbir Kapoor,Saif Ali Khan,Kareena are all participating in the function.Bachan family are not participating because their daughter-in-law is involved in two big tamil projetcs (Raavan & Enthiran)..Her involvement in the event will definitely create problem for these two films by the so called tamil saviours.

 7. devraj

  The IIFA has lost its colour this year and there is no doubt about this. Good decision by the stars.

 8. jagadeeswaran

  குமரன் மிகவும் சரியாகச் சொன்னார்.

  அரசியல் தலைவர்கள் எல்லோரும் நம் தலைவரிடம் கொஞ்சாமாவது அன்பை கற்றுக் கொள்ள வேண்டும். நட்புடன் இருந்தாலும் கருணாநிதிக்கு கொஞ்சம் அறிவுரை நம் தலைவர் வழங்கி அவரை நல்வழிப்படுத்த வேண்டும்.

  இல்லையெல்றால் நம் தலைவர் அவர்களி்ன் நட்பையும் தூக்கி எறிந்து விடுவார்.

  ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com

 9. Jey

  “A Tamil newspaper had put out a story today (June 4) that top actress Genelia has gone to Colombo for the IIFA. But Genelia says she is very much in Mumbai and is busy with one of her endorsements.

  Speaking exclusively to **** from Mumbai, Genelia said: “I’m very much in Mumbai doing an ad shoot and will be in Chennai on Sunday to complete my film with Dhanush. I really don’t know how these rumours started. Actually I was supposed to perform with Saif and Shah Rukh Khan, and was also to walk the ramp with Manish Malhotra, but I have opted out of IIFA, as I did not want to hurt Tamil sentiments. I refused to go for IIFA only because of my deep love and commitment to Tamil cinema and its audiences who were extra good to me.”

  Genelia is all praise for the unit of Uthama Puthiran and her hero Dhanush and says that it will be a rollicking entertainer. In fact the actress has just tweeted- “Sitting at home checking all the news and all the tweets on IIFA. I won’t make it this year, looking forward to it next year.” FROM SIFY.COM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *