BREAKING NEWS
Search

புதுக்கோட்டையில் 10 சதவிகிதம் ’49 ஓ’!

துவங்கியது வாக்குப் பதிவு: புதுக்கோட்டையில் 10 சதவிகிதம் ’49 ஓ’!

சென்னை: மக்களவையின் 86 தொகுதிகளுக்கான இறுதி கட்ட தேர்தல் விறுவிறுப்புடன் துவங்கியள்ளது. news_46652948857

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் ஓட்டு பதிவு காலையிலேயே பரபரப்புடன் துவங்கியது. காலை 7 மணிக்கெல்லாம் வாக்களிக்க மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். ஆர்வத்துடன் ஓட்டளிக்க மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை தொகுதியை நீக்கியதை எதிர்த்து மக்கள் ஓட்டளிக்க விரும்பவில்லை என தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். காலையிலிருந்து இந்த பகுதியில் 10 சதவீதம் பேர் 49(0)வை பயன் படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களித்த வி.ஐ.பி.க்கள்: சிதம்பரம் சிவகங்கையில் ஓட்டளித்தார். கலிங்கப்பட்டியில் வைகோ தனது வாக்கைப் பதிவு செய்தார். அசோக்நகர் பள்ளியில் இல.கணேசன் வாக்களித்தார்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத கிராமப்புற மக்கள் ரேஷன் கார்டை அடையாள அட்டையை காண்பித்துள்ளனர். அதில் குடும்பத் தலைவர் போட்டோ மட்டும் இருப்பதால் மற்றவர்களுக்கு அதை அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ள முடியாது என கூறப்பட்டதால் பல இடங்களில் மக்கள் ஓட்டளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இதனால் மக்கள் கோபத்துடன் வாக்களிக்காமல் செல்வதைக் காண முடிந்தது.

சேலம் தொகுதியில் ஆத்தூர் உட்பட சில இடங்களில் ஓட்டு பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாகவே வாக்களிப்பு துவங்கியது.

மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *