BREAKING NEWS
Search

பிரபுதேவா – நயன்தாராவின் கள்ளக் காதலுக்கு அங்கீகாரம்!

பிரபுதேவா – நயன்தாராவின் கள்ளக் காதலுக்கு அங்கீகாரம்!


சென்னை: நடிகை நயன்தாராவும் பிரபுதேவாவும் நேற்று வீட்டில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு பிரபுதேவாவின் பெற்றோர் அட்சதை தூவி ஆசீர்வதித்தார்கள். இதன் மூலம், ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் உள்ள பிரபு தேவா, நயன்தாராவுடன் கொண்டிருந்த கள்ள உறவுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நயன்தாரா மனைவியா, துணைவியா என்று அறிவிக்காதது ஒன்றுதான் பாக்கி.

‘வில்லு’ படத்தை பிரபு தேவா இயக்கியபோது காதல் அம்பு விட்டு நயன்தாராவை கரெக்ட் செய்தார். அம்பு இதயத்தில் ஆழமாகத் தைத்துவிட்டதால், அதன்பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் நயன்தாரா. பிரபு தேவா – நயன்தாரா உறவு ‘கள்ளக் காதலாக’ மாறியது. இருவரும் கணவன்-மனைவியாக ஒரே அறையில் தங்குகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள். ஊருக்கே தெரிந்த தங்களின் உறவைப் பற்றி யார் கேட்டாலும் ஒன்றுமே தெரியாதவர்களைப் போல பம்மி வந்தார்கள்.

நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். என் கணவருடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ளாவிட்டால், நயன்தாராவை பார்க்கிற இடத்தில் அடிப்பேன் என்று ரமலத் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் திரையுலகப் புள்ளிகளை வைத்து பஞ்சாயத்து கூட்டினார். அதில் நயன்தாராவை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகக் கூறி, தன்னைப் பிரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்றார் பிரபுதேவா. அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்று பஞ்சாயத்து தரப்பு கழன்று கொண்டது.

இன்னொரு பக்கம் இவர்களின் காதலுக்கு, பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், தாயார் மகாதேவம்மா ஆகிய இருவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.

இவர்களின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில், நாரதகான சபாவுக்கு எதிரில் உள்ளது. அந்த வீட்டில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அவருடைய மனைவி மகாதேவம்மா, கடைசி மகன் நாகேந்திரபாபு ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

அந்த வீட்டில், நேற்று ஒரு விசேஷ பூஜை நடந்தது. 4 புரோகிதர்கள் சேர்ந்து யாகம் வளர்த்து, பூஜை நடத்தினார்கள். காலை 10-30 மணிக்கு தொடங்கிய பூஜை, பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது.

அதில் நயன்தாராவும், பிரபு தேவாவும் கலந்துகொண்டார்கள். இருவரும் மணமக்களைப்போல் கழுத்தில் மாலை அணிந்திருந்தார்கள். புரொகிதர்கள் மந்திரம் சொன்னதும், இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். அப்போது இரண்டு பேர் தலையிலும் புரோகிதர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.

அறிவிக்காத திருமணம்

இது கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத திருமணம் மாதிரி கருதப்படுகிறது.

ஆனால் திருமணம் என்று அறிவித்தால் பிரபுதேவாவும் நயன்தாராவும் கம்பி எண்ண வேண்டிவரும். உயிரோடு இருக்கும் முதல் மனைவி ஒருவேளை நீதிமன்றத்துக்குப் போனாலும், ‘இது சும்மா சடங்கு, பூஜை’ எனக் கூறி சமாளித்துக் கொள்ளலாம்; சமூகத்தின் பார்வையில் கல்யாணம் பண்ண மாதிரியும் இருக்கும் என்ற மெகா திட்டத்துடன் நடத்தப்பட்ட நிகழ்வு இது.

பொதுவாக இதே போன்ற சட்டவிரோத கள்ளத் தொடர்புகளில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் சிக்கும்போது, சரேலென பாயும் இருதார மண தடைச் சட்டம், கள்ளத் தொடர்புக்கான விபச்சாரத் தடைச் சட்டம் இப்போது மட்டும் மௌனித்து நிற்கிறது.

இந்த விஷயத்தில் பணக்காரர்கள், பிரபலங்களின் இஷ்டத்துக்கேற்ப வளைந்து நிற்கும் சட்டமும் அதன் காவலர்களும், சாதாரண வர்க்கத்தினரையும் இதேபோல கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமே… சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வெட்டிப் பேச்சு எதற்கு!
12 thoughts on “பிரபுதேவா – நயன்தாராவின் கள்ளக் காதலுக்கு அங்கீகாரம்!

 1. Virumaandi

  உனக்கு வெட்டிப் பேச்சு எதற்கு !!!!

 2. Ravanan

  நம்ம முதல்வர் மூன்று மனைவி அல்லது துணைவி வைத்துளாரே….. அதற்க்கு என்ன பெயர்….. கள்ள காதலா…கனிந்த காதலா….

 3. r.v.saravananr

  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வெட்டிப் பேச்சு எதற்கு!

  yes

 4. குமரன்

  மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

  சிலைன்ஜர் கருணாநிதி நெடுங்காலத்துக்கு ராஜாத்தி அம்மாளைத் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்ததும், தமிழக சட்டப்பேரவையிலேயே அவரே (முதல்வராக இருந்தபோது) கனிமொழி என் மகள், ராஜாத்தி அம்மாள் கனிமொழியின் தாய் என்றும் சொன்னது வரலாறு.

  இந்த முறை முதல்வர் ஆனபிறகு அவரே தமது வாயால் மனைவியார் துணைவியார் என்று சொன்னதும் வரலாறு.

  எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக முதல்வர் ஈழப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் என்ற ஓரங்க நாடகத்தை நடத்திய பொது மனைவியார் காலடியிலும் துணைவியார் தலைமாட்டிலும் இருக்கும் காட்சி மக்கள் மனதில் இடம் பிடித்ததும் வரலாறு.

  1996 இல் முதல்வர் ஆனபின்னர் மூப்பனாரின் ஆதரவுடன், அவர் முன்னிலையில் மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் அம்மன் சந்நிதியில் கருணாநிதியும் ராஜாத்தி அம்மாளும் மாலை மாற்றிக்கொண்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 5. Manoharan

  இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. ரமலத் பாவம்தான். அதே போல் கல்யானமானவரை காதலித்தது நயனின் தப்பு .ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டபிறகு, ஒன்று விவாகரத்து செய்யவேண்டும் அல்லது சேர்ந்தது வாழ வேண்டும் . இரண்டும் இல்லை என்றால் தனித் தனி வீடுகளில் குடும்பம் நடத்தலாம் . இல்லையென்றால் எல்லோருக்கும் பிரச்சனைதான். முவரும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.

 6. ஆனந்த்

  தமிழ் நாட்டை ஆட்சி செய்பவர்களே இரண்டு மனைவிகளுடன் வாழும் போது இவர் தனி மனிதன் எப்படி இருந்த என்ன?. முதலில் தலையை விமர்சனம் செயுங்க.

 7. IMTHATH

  ஹாய். இந்த கல்யாணம் பொய் அன்று நன் கருதுஹிறேன். அநேன்றல் நயன்தார ஒரு மாதிரி டிப் . சார்ட்டர் . பட் பிரபு இஸ் குட்.

  நயன்தார இஸ் லைக் செக்ஸ்ய் கேர்ள்.

 8. venki

  பிரபு தேவ அவர்களின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு
  மனைவியை விவாகரத்து செய்யாமல் இருந்து இருக்கலாம்

 9. sasisen

  தர்ஷன் நடிகருடன் தொடர்பு: நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டு நடிக்கத் தடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *