BREAKING NEWS
Search

பிரபாகரன் மட்டுமே என் தலைவன்! – பினாங்கு துணை முதல்வர் ராமசாமி

பிரபாகரன் மட்டுமே என் தலைவன்! – பினாங்கு துணை முதல் ராமசாமியின் நெத்தியடி

கோலாலம்பூர்: பிரபாகரன் மட்டுமே என் தலைவன். இந்தியாவுக்கு நான் வரக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பது குறித்து நான் கவலையே படவில்லை என்று கூறியுள்ளார் பினாங்கு துணைமுதல்வர் டாக்டர் ராமசாமி.

முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்துப் பேசியதாலும், ஈழப் போர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியதாலும் ராமசாமி தமிழகத்திற்கு வர அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வர அவரை அனுமதிக்கக் கூடாது என்று கோரி மத்திய உள்துறைக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ராமசாமியிடம் கேட்கப்பட்டபோது, “கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும் மே 18 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் மாநாட்டிலும் நான் கலந்துகொண்டேன்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது 40, 000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு தமிழக அரசும், இந்தியாவை ஆட்சி புரியும் காங்கிரஸ் உடந்தையாக இருந்திருக்கிறது. இந்த துரோகத்தை மறைக்க முடியாது.

என் உயிர் இருக்கும் வரை தமிழீழ மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.

இந்த மாதம் 23 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரை கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் நான் கலந்து கொள்ளமாட்டேன்.

கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வரும்படி இந்திய அரசாங்கமே எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தது. ஆனால், அந்த அழைப்பையே நான் முற்றாக புறக்கணித்தவன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டுமே எனக்குத் தலைவர். நான் பெரியார் பாசறையைச் சேர்த்தவன். வேறு யாருக்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் எனக்கில்லை”, என்றார் ராமசாமி.

நாம் தமிழர் மாநாட்டில் பங்கேற்றபோது, மலேசியாவில் எங்கள் ஆட்சி வந்தால், புலிகள் மீதான தடையை நீக்குவேன் என்றும், ஈழத் தமிழருக்கு முழு அங்கீகாரம் வழங்குவேன் என்றும் ராமசாமி பேசினார். இதனை உளவுத் துறை மத்திய அரசுக்குத் தெரிவிக்க, இந்திய வெளியுறவுத்துறை ராமசாமி மீது நடவடிக்கை கோரி மலேசியாவுக்கு கடிதம் எழுதியது. இந்திய இறையாண்மையை மீறியதாகவும் குற்றம் சாட்டியது.

அதற்கு அப்போது பதிலளித்த ராமசாமி, “மலேசிய அரசியலில் மாற்றம் வரும்போது, நாங்கள் புலிகள் மீதான தடையை நீக்குவோம் என்று கூறியது இந்திய இறையாண்மையை எப்படி பாதிக்கும்?” என்று திருப்பிக் கேட்டார்.

அத்துடன், “எனது தமிழ் உறவுகளுக்கு ஆதரவாக எந்த மேடையிலும் குரல் கொடுப்பேன். அது தவறல்ல… இதை ஐநா அதிகாரிகளிடம் கூட சொல்லியிருக்கிறேன்” என பதில் அனுப்ப, மத்திய அரசு மவுனமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
6 thoughts on “பிரபாகரன் மட்டுமே என் தலைவன்! – பினாங்கு துணை முதல்வர் ராமசாமி

 1. thasmen ipoh, malaysia

  வாழ்க ராமசாமி , மலேசிய தமிழன் என்ற முறையில் மிகவும் பெருமை படுகின்றேன். சிங்கப்பூர் அரசும் மலேசிய பினாங்கு மாநில அரசும் தமிழ் ஈழத்திற்கு பகிரங்க அதரவு தெரிவித்துள்ளது. தமிழ் ஈழ வரலாற்றில் மிகப்பெரிய திருப்பங்கள் இனிமேல் நிகழும்.

 2. குமரன்

  இப்படியும் மனிதர் இருக்கிறாரா என்னும் வண்ணம் பேசிய இவருக்கு வீரவணக்கங்கள்.

  ஆனால் இவரை அதிகநாட்கள் பதவியில் இருக்க சோனியாவும் கருணாநிதியும் விடமாட்டார்கள்:. சதிவலை பின்னி கீழே இறக்கிவிடுவார்கள். இல்லாவிட்டால், காலப் போக்கில் ராஜபக்சே கொல்ல வழிசெய்து கொடுப்பார்கள். எத்தனைத் தமிழர்களை ராபக்சே கொள்ள இவர்கள் உதவியிருக்கிறார்கள். லட்சன்களோடு இன்னும் ஒன்று.

 3. villallan malaysia

  EN THALAIVAR PRABAKARAN NICHAYAM THANGALAI VAALTHUVAR…….
  TAMIL THUROGI KUNAA (NITHI)(KARAN) EVARKAI MANAMULL THAMILZHAN MANNIKKAMADDAN…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *