BREAKING NEWS
Search

பிரபாகரன்… பொட்டு… ஏமாந்ததா சிங்கள ராணுவம்?


பிரபாகரன்… பொட்டு… ஏமாந்ததா சிங்கள ராணுவம்?

விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் குறித்த சரியான தகவல்களை அறிய தமிழர்கள் பெரிதும் நாடியவை தமிழ்நெட் மற்றும் புதினம் போன்றவற்றைத்தான்.vp_pa_tc_0715

இன்றைக்கு தமிழ் உணர்வுடன் நிறைய தளங்கள் இயங்குகின்றன. ஆனாலும் ஈழத் தமிழர் தொடர்பான செய்திகளுக்கு அவை பெரிதும் சார்ந்திருப்பது தமிழ்நெட் மற்றும் புதினம் போன்றவற்றைத்தான்.

பிரபாகரன் கொல்லப்பட்டாரா இல்லையா என்பது குறித்து இதுநாள் வரை அதிகாரப்பூர்வமாக இந்த இணையங்களில் எந்த செய்தியும் இல்லாமல் இருந்து வந்தது.

ஆனால் இன்றோ, ‘பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதான்’ என்ற தொனியில் அந்த தளத்தில் தி.வழுதி என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. ‘தமிழரின் தேசிய தலைவர் என்ற பெருமைக்குரிய பிரபாகரன் இறவா அமரத்துவம் கொண்டவர்’ என்றும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

அதேநேரம், அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் புதினத்துக்கு ஏற்புடையவையா என்பது தெரியவில்லை.

இன்னொரு பக்கம் தமிழ்நெட் தளத்தில், ‘இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம்  மோசமான சூழலில் இருப்பது  உண்மையே. ஆனால் மீண்டும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணையும் சூழல் உண்டாகி இருப்பதாகவும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்துவிட்டு ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளை முன்னெடுப்போம், என்றும் கூறியுள்ளது.

ஆனால் தமிழகத்தின் முன்னணி புலனாய்வு இதழான ஜூனியர் விகடன் இன்று வெளியிட்டுள்ள கட்டுரை இவற்றுக்கு முற்றிலும் எதிர்மறையான செய்திகளைத் தருகின்றன.

ஜூவி சொல்வது மட்டும்  உண்மையாக இருந்தால், தமிழருக்கு அதைவிடப் பெருமையும் சந்தோஷமும் தரும் விஷயம் வேறேதும் இருக்காது, என்கிறார்கள் தாயக மற்றும் புலம்பெயர் தமிழர்கள்.

இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க தங்கள் புலனாய்வின் அடிப்படையில்  வெளியிட்டுள்ளதாக ஜூவியே கூறுவதையும் கவனிக்க வேண்டும்.

அந்தக் கட்டுரை:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக்கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்’ என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!

பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,

”பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலையின்போது சின்ன சாந்தன், ‘பொட்டு’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.

அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ‘பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்’ என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது சிங்கள ராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கை யின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் ராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட ராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை ராணுவத்தால் கண்டறிய முடியவில்லை…” என்கிறார்கள்.

புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ”ராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், ‘எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!’ என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டுநாயகா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் ராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.

எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமேமிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’, இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, ‘ரா’வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு. கருணா, சிங்கள அரசோடுலேசான தொடர்பில் இருந்தபோதே, அதுகுறித்துப் பிரபாகரனிடம் எச்சரித் திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.

பிரபாகரன் போலவே இருந்தவரின் சடலமா அது?

அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை ராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள ராணுவமும் நம்பிவிட்டது. பிரபா கரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, ‘ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட் டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்…’ என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பி லிருந்தே செய்திகள் கசிகிறது.

புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் ராணுவம் இதுவரை அடை யாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது ராணுவத்துக்கே புரியாத புதிர்தான். ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றி தழைக் கேட்டு இந்திய அரசு, சிங்கள ராணுவத்தை நச்சரித்துவருகிறது. பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், சிங்கள அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப்போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் ராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், ‘பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது’ என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!” என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.

மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிற நாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்பட விருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே ‘புலிகளின் பெரிய மூளை’ என்று குறிப்பிடப்பட்டவர்.

பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!

– இரா.சரவணன்
16 thoughts on “பிரபாகரன்… பொட்டு… ஏமாந்ததா சிங்கள ராணுவம்?

 1. Thamilan

  Pottu is the BEST. I am sure this article will be 100% true. All medias are trying to make different stories and make our/ tamils mind to complicate.

  What karuna said is true…
  ‘ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட்டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்…’

  singalavanidam emarum alavukku,,,,,,, thamilan enne madayana????

  Even Karuna…. onnum singhalavanidam emaravillai… he is cheating the stupid singhalese only. Mahinda is thinking Karuna is on his custody….. but it is not true. he is on mahinda’s custody means why karuna needs a separete arm group??

  Thamilanukku thevai…. ottrumai….. all tamils are born as intelligent,…. thats the reason tamils are in all around the world

 2. GokulDass

  வினோ,
  இன்றைய ஆவீ இல் தோற்றது ரஜினி பஞ்சாயத்து
  ஜெயித்தது நயன் காதல் என்று மறுபடியும் சிண்டு
  முடித்து இருகிறார்கள்

 3. kayamozhi

  chances are there…! but we cant belive anything…anyhow we are waiting for prabakaran…!

 4. I'm thinking...

  @Raja: I think, there is something going on beyond the screen. There is lot of Indian media release or covered the news today about prabhakaran, after one month of last battle.

 5. Manoharan

  Everybody are confusing. What JV is trying to tell ? Prabhakaran was dead and Pottu Amman is alive…..? Too Confused.

 6. Paarvai

  இருக்கின்ற குழப்பத்தில் மேன்மேலும் குழப்புவதற்காக ஜூவியின் முயற்சியே இந்த கட்டுரை. இந்த கட்டுரை மூலம் ஜூவி என்ன சொல்ல வருகிறது? தேசியத்தலைவர் உயிருடனில்லையென்றா அல்லது பொட்டு அம்மான் மட்டும் தப்பித்துவிட்டாரென்றா… நண்பர்களே…80 சதவிகிதத்திற்கு மேலான நமது இந்திய ஊடகங்கள் இவ்வாறான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன (தினமணி மட்டும் சமயத்தில் விதிவிலக்கு). இப்போதைய நிலைமையில் , இந்த மாதிரி செய்திகளைப் போட்டால் நன்றாக கல்லா கட்டலாம். வேறொன்றுமில்லை. விகடன் குழுமத்தின் தரம் என்றோ சாக்கடையைவிட கீழே போயாகிவிட்டது. நேரத்திற்கு தகுந்தாற்போல , செய்திகளைப் போட்டு கடையை நன்றாக ஓட்டுகிறார்கள் (இதோ…சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து செய்தும் நயன்தாரா-பிரபு தேவா திருமணமாம்) என்வழி போன்ற நியாயமான தளங்கள் அநாவசியமாக ஜூவி போன்ற பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் செய்யவேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

  ஷங்கர்

 7. Tamilan

  Singalava n India saying LTTE is nolonger exist(all of them gone) OK thats fine becoz u are proving it right.
  WHAT THEY HAVE TO DO NOW…..GIVE MY PEOPLE EQUAL RIGHTS…THAT IS WHAT U MUST DO NOW…..
  We are waiting guys…forget about prabakaran..why must waste your time for someone who has GONE?

 8. புருஹானி

  இப்போதைக்கு தேவை அங்குள்ள மக்களின் நிலமை மாறுபடவேண்டும்

 9. Elavarasan

  this artical not ful and full real prabhakaran full family was not escape.Prabhakaran and his wife and grandsons,daughter and his daugher-in-law ,son-in-law escape

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *