BREAKING NEWS
Search

பிரபாகரன் பேனர்கள் அகற்றம்… வைத்தவர்கள் கைது… கருணாநிதியின் சூப்பர் வேகம்!

பிரபாகரன் பேனர்கள் அகற்றம்… வைத்தவர்கள் கைது… கருணாநிதியின் சூப்பர் வேகம்!

சென்னை: ஈரோட்டில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படங்கள் பேனர்களை நேற்று கிழித்தார் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

prabakaran_board_-tuti

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இளங்கோவனின் சென்னை வீட்டின் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். பெரிய சேதாரம் ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கும்பலாகப் போய் இன்று கருணாநிதியைப் பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவனும் முதல்வர் கருணாநிதியுடன் பேசினார். நிருபர்களுக்கு பின்னர் பேட்டி கொடுத்த இளங்கோவன், என் உயிரை விடவும் நான் தயார். ஆனால் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், அவர்களை ஆதரிக்கும் அமைப்புகளை அடியோடு ஒழிக்கவும் முதல்வருடன் பேசுவேன் என்றார்.

அவர் இப்படி சொல்லி முடித்த சில மணி நேரங்களில் தமிழக காவல்துறைத் தலைவர் கேபி ஜெயின், பிரபாகரன் பேனர்கள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணி துவங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.

பிரபாகரன் பேனர் வைத்தவர்களையும், போஸ்டர் ஒட்டியவர்களையும் கைது செய்யத் துவங்கியுள்ளது தமிழக போலீஸ். முதல் கட்டமாக ஈரோட்டில் 9 பேரைக் கைது செய்துள்ளது போலீஸ்.

தமிழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க போலீசார் அனுமதி மறுத்ததால், சென்னை உயர்நீதி மன்றம் போனார்கள் தமிழுணர்வாளர்கள். நீதிமன்றமும் அனுமதி கொடுத்தது.

தமிழகத்தில் என்றுமில்லாத அளவு மிகப் பெரிய எழுச்சியுடன் பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடந்ததில் மகா கடுப்பிலிருந்தனர் காங்கிரஸ்காரர்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த மாவீரர் தின நிகழ்வுகளில் முதல் கல்லெறிந்தவர் இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களே.

இப்போது அவர் நினைத்தது நடந்தது. வன்முறையை அவரே முதலில் தூண்டினார். தங்கள் தயவு எப்போதும் தேவைப்படும் கருணாநிதியைச் சந்தித்து, தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கு எதிரான தீர்ப்பையும் பெற்றுவிட்டார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீமான் இப்படிச் சொன்னார்: “தமிழருக்கு எதிரான காங்கிரஸ் தயவில் நடக்கும் இந்த ஆட்சியில் நியாயத்தை எதிர்ப்பார்ப்பது தவறுதான்!  இன்று இத்தனை வேகம் காட்டும் டிஜிபிக்கு எனது கார், தா பாண்டியன் கார்கள் எரிக்கப்பட்ட நிகழ்வாவது நினைவிலிருக்குமா என்று கூட தெரியவில்லை.

ஆனால் நண்பர்களே, ஒரு விஷயத்தை நினைத்து பெருமிதமாக இருக்கிறது…

வார்த்தைக்கு வார்த்தை ‘பிரபாகரன் இல்லை, செத்துப் போய்விட்டார்’ என்று கூப்பாடு போடும் இளங்கோவன் கும்பலுக்கு, அவர் படத்தைப் பார்க்கக் கூட தைரியமில்லாமல் போய்விட்டது போலும்… அந்த சூரியனை போஸ்டரில் பார்க்கக் கூட இவர்களின் கண்கள் கூசுகின்றன. நடக்கட்டும்!”
19 thoughts on “பிரபாகரன் பேனர்கள் அகற்றம்… வைத்தவர்கள் கைது… கருணாநிதியின் சூப்பர் வேகம்!

 1. Manoharan

  இளங்கோவன் ஒரு பொட்டை பயல். தைரியமிருந்தால் போலீஸ் பாதுகாப்பில்லாமல் இருக்கவேண்டியதுதானே. பிரபாகரன் படத்தை கிழித்தால் கூட இவர்களுக்கு உயிர் பயம் வந்துவிடுகிறது. இன்னும் நாலு பெட்ரோல் குண்டுகள் வீசினால் போய் சோனியா சேலைக்குள் ஒளிந்து கொள்வான். இவன் கிழித்தது ஒரே ஒரு படம். ஆனால் ஆயிரக்கண‌க்கில் தமிழகம் முழுவதும் போஸ்டர்களும் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. இதை என்ன செய்யமுடியும். பத்துப்பேர் பாதுகாப்புக்கு போக போய் போஸ்டரை கிழிக்கும் செயலை ஒரு நாய் தன்னந்தனியாய் செய்துவிடும். இதில் என்ன வீரம் வேண்டிகிடக்கு

 2. Ramesh

  இ வீ கே எஸ் இந்தியாவின் முதலாவது ஈழத்து ஆல்பர்ட் துரையப்பாவாகத் துடிக்கிறார் போலும் !!! விரும்பியபடியே வாழ்த்துக்கள் !!!

 3. eelam tamil

  whatever you report or people comment, These tamil naadu tamils going to vote to karunanithi for free TV, free items. Even this ellangovan will win always until our tamil people will get to know the real situation. God only knows when we can get this people understand the truth

 4. Arun

  வினோ,
  எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை வினோ சார். எந்த ஒரு பிரச்சனைக்கும் அகிம்சையே தீர்வு ஆகும். நான் மிக தீவிர ரஜினி ரசிகன் எனக்கு சூப்பர் ஸ்டார் கிட்ட புடிச்சதே அகிம்சை தான். நான் சீமான் அவரோட interview எல்லாம் பாத்து இருக்கேன். பிரபாகரன் அவர்கள் கஷ்ட பட்டத்துக்கு கூட காரணம் அவர் துப்பாக்கி மட்டுமே நம்பி இருந்தார். terrorism will never bring solution for anything in this world. It might bring a temporary happiness but for long term it will never bring any happiness. உங்க எழுத்துகள் எனக்கு romba புடிக்கும் வினோ சார், neenga சீமான் போன்ற மக்களக்கு ஆதரவா பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நிச்சயம் SL மக்கள் சந்தோசமா இருக்கனும் அதில் மறு கருது இல்லை ஆனா சீமான் போல வன்முறைக்கு ஆதரவ பேசுரவன்கல உங்க பேனா ஆதரிப்பது தன ரொம்ப வருத்தமா இருக்கு சார். என்னோட கருத்து உங்கள காயபடுத்தி இருந்தா மன்னிச்சுடுங்க
  – Arun
  ___________
  நன்றி அருண்…
  நாமும் சீமான் இயக்கத்தினரின் வன்முறையை ஆதரிக்கவில்லை. இங்கு நாம் சொல்ல வந்தது, பிரச்சினையின் ஆரம்பமே ஈவிகேஎஸ் இளங்கோவன் என்பதை மட்டும்தான். பிரபாகரன் துப்பாக்கி ஏந்தியது வன்முறையல்ல… இந்தியாவே ஊக்குவித்த விடுதலைப் போராட்டம். அதுபற்றி இப்போது விவாதிப்பது சரியாக இருக்காது. நன்றி.

 5. tamilan

  ********************************************
  பாருங்க தமிழன் என்று சொல்லடா தளை நிமர்ந்து நெலல்ட பிரபாகரன் திவிரவதி அல்ல தமிழ் கடவள் ஓவரு தமிழனனி உலகத்துக்கு அறிமுகம் சேத கடவுள் தமிழன் வீரம் எதுடண்ட எண்டு உலலகம் பாத்து பஜந்து எங்கல் அன்னவள் தஜவு சேது அன்னவ்ய் அவமதிகதிகள் நன்றி வலக தமிழன்

 6. kuppan

  காந்தி சொன்னார் காங்கிரஸ் சை கலைக்க வேண்டும் என்று. இந்த நாய்கள் இதை எப்போது செய்யும்.

 7. charles antony

  தம்பி அருண்… ஈழ போராட்டம் என்னே என்று theirya விட்டால் கொஞ்சும் அமைதியா இருங்கள். சும்மா தேவை இல்லாத கருத்து தெரிவிக்காமல்.பிரபாகரன் ஏன் துப்பாக்கி எடுத்தார்???? அகிம்சை போராட்டம் நடத்தி எதுவும் கிடைக்கததால். தமிழ் நாட்டில் இருந்து தமிழ் சீரியல் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணுற உங்களுக்கெல்லாம் எங்க சீமான் சொல்வது புரிய போகுது….

  இப்படியே கருனநிதுக்கு ஜே போடுங்கள்…. ஒரு நல… தமிழ் நாட்டையும்… சீக்கியன் ஆட்சி செய்வன்…. அப்ப நீங்கள் அகிம்சை வழியில் போராடி…. உங்கள் உரிமைகள் வந்குவீன்கள்…..

  ****
  அவர் கடவுள் வருவர்….. சீக்கிரம் ஏன் யா அவர் சேது இருந்தா ஸ்ரீ லங்கா அரசாங்கம் மரண சான்றிதல் தர வேண்டியது தானே… ஏன்… இந்த மங்க மடையன் கருணாநிதி இரங்கல் kuttam வைத்து… நிழி கண்ணீர் வடிதிருபரே… கொஞ்சம் உங்கள் மூளையை கசக்கி யோசித்து பாருங்கள் என்னே நடக்கு என்று….

 8. Jude

  தமிழர்கள் என்ன குட்டக்குட்ட குனிந்து போக என்ன இளிச்ச வாயனுகளா, பொறுத்தார்கள் ஆனமட்டும் பொறுத்தார்கள், பின்னர் பொங்கி எழுந்தார்கள். இதில் குட்டக்குட்ட குனிபவனும் மடையன் குட்டுபவனும் மடையன் என்ற நாட்டு வழக்கு உண்மையாகிவிட்டது.

  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியதுபோல ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் திருபிக்காட்டு என்ற வழக்கில் தமிழினம் வாழ்ந்திருந்தால் இன்று தமிழினமே அழிந்து வரலாறாகியிருக்கும்.

  இந்திய தேசிய விடுதலைக்கு படைகட்டி போராடிய நேதாஜி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றோர் இதற்கு சிறந்த முன்னுதாரணம். இதைபோன்ற எமது முன்னோர் இட்ட பிச்சையில் தான் நாம் இன்னும் உயிர் வாழ்கிறோம்.

  தம்பி அருள் போன்றோரின் சாத்வீக கருத்துகள் பேசப்பேச இனிக்கலாம். ஆனால் நடைமுறையில் (தற்காலத்தில்) ஒருபோதும் சாத்தியப்படாது.

 9. paraba vinod

  அவர் கடவுள் வருவர்….. சீக்கிரம் ஏன் யா அவர் சேது இருந்தா ஸ்ரீ லங்கா அரசாங்கம் மரண சான்றிதல் தர வேண்டியது தானே… ஏன்… இந்த மங்க மடையன் கருணாநிதி இரங்கல் kuttam வைத்து… நிழி கண்ணீர் வடிதிருபரே… கொஞ்சம் உங்கள் மூளையை கசக்கி யோசித்து பாருங்கள் என்னே நடக்கு என்று…

 10. Arun

  நண்பர் சார்லஸ் அவர்களே,
  ஈழம் குறித்து தனிய research பண்ணி ஒரு article லே submit பண்ணி இருக்கேன் சார். உங்க கருது ஆதரவா சொல்லடி உடனே டிவி சீரியல் பாக்குறவங்க நு கேலி பண்ணாதீங்க. உங்களுக்கு சுபாஷ் சந்திரபோஸ் புடிச்சு இருகுணா எனக்கு காந்திய புடிக்கும் அவளவு தான். உங்களுடிய கருத்துகள் நிச்சயம் நான் மதிகுறேன் நண்பரே. இந்திய ஈழம் விசயத்துல நெறைய விளையாடி இருகாங்க அதுல no second thought. ஆனா விடுதலை புலிகளும் இதை வேறை மாதிரி கொண்டு பொய் இருக்கலாம் 2000 starting ல எனபது தான் என்னோட வாதமே. சீமான் மாதிரி சும்மா அடிதடி யா பேசுரவன்கல நாம அப்படியே support pannama கொஞ்சம் யோசிச்சு பாருங்க இதை வேறை மாதிரி நிச்சயம் கொண்டு போய் இருக்கலாம் நு உங்களுக்கே புரியும்.

  “நாமும் சீமான் இயக்கத்தினரின் வன்முறையை ஆதரிக்கவில்லை” – ஸ்பெஷல் தேங்க்ஸ் வினோ சார்

 11. Tamilan

  அருண் அவர்களே!!

  உங்கள் கருத்து தெளிவாக இருப்தாக எனக்கு தெரியவில்லை.. அகிம்சை என்பது எல்லோரும் கடைபிடிக்கவேண்டிய வழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு மனிதனிடம் அகிம்சை வழியில் போராடி வெல்வது சாத்தியம். ஆங்கிலேயர்கள் மனிதர்களாக இருந்தார்கள்.. ஆங்கிலேயர்கள் காலத்தில் உண்ணாவிரதம் இருந்து இந்தியன் மாண்டான் என்று கேள்விபட்டது உண்டா?
  ஆங்கிலேயர்கள் கற்பழிப்பை ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என்று கேள்விபட்டது உண்டா?
  ஈழ தமிழனின் ஆரம்ப முப்பது வருட அகிம்சை போரட்டத்தில் எத்தனை கொலை, கற்பழிப்பு நடந்தது என்பது தாங்கள் அறிந்து இருப்பீர்கள். திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து மாண்டார் என்பது உலகம் அறியும். எதனால் ஈழ தமிழன் ஆயுதம் ஏந்தினான் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்து இருக்கும். வெறுமனே அப்பிடி இருந்து இருக்கலாம், இப்படி இருந்து இருக்கலாம் என்று கூறுவது சுலபம்!!

  2000 ஸ்டார்டிங்!!! 2001 இல் புலிகள்தான் தனிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அந்த இயக்கத்தை பலவீனபடுதிய இலங்கை அரசு எந்த ஒரு தீர்வு திட்டத்தயும் முன்வைக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எல்ல சந்தர்பத்திலும் தமிழ் மக்களை ஏமாற்ற முயலும் இந்த மிருகங்களிடம் அகிம்சை வழி செல்லுபடியாகும் என்று நினைப்பது சரியாக தோன்றவில்லை.
  ஈழம் குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்பித்தால் எல்லாம் தெரியும் என்று எடுதுகொள்ளகூடது. மனசாட்சி உள்ள எவரும் இதை எற்றுகொள்ளமட்டர்கள். நீங்கள் சீமானை எதிர்த்து பேசுவது ஒன்றுதான் குறியாக இருக்கிறீர்களே?
  கொட்டடிக்குள் அடைந்து கிடக்கும் அந்த அப்பாவி மக்களை காப்பாற்ற என்னசெய்யலாம் என்று ஆய்வு கட்டுரை சமர்பித்தால் நன்றாக இருக்கும்..
  அடுத்தவரை குறைசொல்வதை விட்டுவிட்டு நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம்!!!!

 12. Arun

  தமிழன் அவர்களே,
  எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் சொல்லவே இல்லை தயவு செஞ்சு எல்லோரின் comment டும் படிச்சு பாருங்க நான் அகிம்சையை சப்போர்ட் பண்ணதும் நண்பர் சார்லஸ் சீரியல் பாக்குறவங்க நு underestimate பண்ணார் அதுக்காக தான் நான் research பண்ணத சொனேன். மத்தபடி சுய விளம்பரத்துல எனக்கும் நம்பிக்கை இல்லை. கொஞ்சும் யோசிச்சு பாருங்க ஏன் இவளவு இருந்தும் நமல உலக நாடுகள் இந்திய உட்பட கடைசி நேரத்துல நியாயம் கிடைகல?

  அதுக்கு முக்கியமான கரணம் ஆயுத கலசாரத மட்டுமே நாம நம்பிட்டு இருந்தோம். உலக நாடுகள் ல 9/11 கு அப்புறம் ஆயுத கலச்சரதாக் எதிர்க்கும் மனோபாவம் ரொம்ப அதிகமா வந்துடுச்சு இது தான் உண்மை. அப்படி இருக்கும் பொது நாம அந்த டைம் ல approach கொஞ்சும் மாதி இருந்தா நிச்சயம் நமக்கு உலக நாடுகள் அதரவு கிடைக்க நெறையவே வாய்ப்பு இருந்து இருக்கும்.

  “அடுத்தவரை குறைசொல்வதை விட்டுவிட்டு நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம்!!!!” – நான் யாரையும் குறை சொல்லல தலைவரே. இப்படி கொஞ்சும் யோசிச்சு இந்த மாதிரியும் பாத்து இருக்கலாம் நு நான் சொன்னதுக்கு பிறகும் நீங்க தனி மனித தகுதல் வார்த்தைகள் உபயோக படுத்தமா இருந்தா ரொம்ப சந்தோசம்.

  அன்புடன்
  அருண்

 13. pjs

  தம்பி அருண் உங்களுக்கு ஒன்னு தெரியுமா…. தன் பிள்ளைக்கு அகிம்சை வழியை போதித்தவர் தான் பிரபஹரனின் தந்தை அந்த பெரியார் வேலுப்பிள்ளை அவர் என்ன பவம் செய்தார்.. இன்று நாலாம் மாடியில் இந்த வயதான காலத்தில் சித்திரவதை அனுபவிப்பதற்கு???? அகிம்சை போராட்டம் செய்ய சிங்களவன் ஒன்றும் அங்கிலேயர் மாதிரி மனிதாபிமானம் உள்ளவன் இல்லை. அவனுக்கு தங்கம் தேவை இல்லை சாதாரண மஞ்சள் துண்டுக்கு கூட கழுதருப்பன் அந்த அளவுக்கு மடையனும் கூட….

  நீங்கள் எங்கிருந்து ஈழம் குறித்து தனிய research பண்ணி ஒரு article லே submit பண்ணினீங்கள்??? தமிழ் நாட்டில் இருந்து அப்படி தானே…???

  நான் இந்த சிங்கள நாய்களுடன். … ஒரே நாட்டில், ஒரே அலுவலகத்தில் வேலை செய்து…. கஷ்டப்பட அனுபவத்தில் சொல்லுறேன்… அகிம்சை… இங்க எடுப்படாது….

 14. சகார்த்தா நண்பன்

  அகிம்சை…… அகிம்சை….ன்னு பேசுறவங்க கொஞ்சம் யோசிக்கனும். நம்பளை ஓங்கி ஒருத்தன் பொடறியில அறைஞ்சான்னா அங்கே இதே அகிம்சையை நம்மாள பேசமுடியுமான்னு? அகிம்சையை போதித்த அதே காந்தி பகத்சிங்கை தூக்கில போடும்போது சும்மாதான் இருந்தார். ஏன் தெரியுமா? தீவிரவாதத்தின் மேல அவருக்கு இருந்த வெறுப்பு. தான் தேர்ந்தெடுத்த பாதைதான் சிறந்தது அப்படீங்கறது அவரது எண்ணம். என்னை பொறுத்தவரை அந்த நேரத்தில் அவர் காத்த மவுனம் தீவிரவாதத்தைவிட மோசமானது. அதே போலதான் நீங்கள் இப்போது பேசுகிற அகிம்சையும். ஆயிரம் ஆயிரம் மக்கள் கண்ணீர் வீட்டு கதறிய போதெல்லாம் காதை இருக்க மூடிக்கொண்டு தமிழின எதிரிகளுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு உணர்வை ஏற்படுத்த சீமான் போன்றவங்க முயற்சி செய்யறாங்க. அதையும் உங்களைப் போன்றவங்க அகிம்சை புடலங்காய் அது இதுன்னு பேசி கெடுத்துடுங்க. உங்களைப்போன்றவர்கள் அகிம்சையை பேசி என்ன சாதிச்சீங்க? தொலைக்காட்சியில தமிழினம் குத்துயிரும் குலயுருமா கிடக்கறத சிக்கன் ’௬௫ சாபிட்டுகிட்டே பார்த்துட்டு உச்சு கொட்றவங்கதான் இந்த அகிமசாவாதிகள்! விடுதலைப்புலிகள் மொத்தம் பத்தாயிரம்பேர் இருப்பாங்களா? அவங்க செய்யறது தப்புன்னா அவங்கள ஒன்னும் இல்லாம ஆக்குறது பத்துலட்சம் தமிழினத்துக்கு ஒரு பெரிய வேலையா? அப்புறம் ஏன் அவங்க பின்னாடி போனாங்கன்னு எப்பவாவது யோசிச்சி இருக்கீங்களா? சும்மா தமிழ்நாட்டுல உக்காந்து பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு அகிம்சை புடலங்காய்னு பேசக்கூடாது. உங்கள் சகோதரிகளை உங்க முன்னாடியே கற்பழிச்சா தெரியும் அகிம்சையின் விலை என்னான்னு! ஈழமக்களுக்குன்னு ஒரு துரும்பயையும் கிள்ளி போட வக்கில்லாதவங்க வந்துட்டாங்க அகிம்சை புடங்காய்ன்னு!

 15. Arun

  நண்பர் சகார்தா,
  உங்கள் உணர்வுகள் நிச்சயம் என்னால புரிந்து கொள்ள முடியுது. நான் இந்த அகிம்சை மட்டுமே சொல்லி கிட்டு எழந்த விஷயங்கள் ஏராளம். உங்களுக்காக ஒரு விஷயம் சொல்லுறேன் காந்தியோட அகிம்சை போரடதுல கலந்துகிட்டு உயிரையே british கிட்ட விட்டர்வர் தான் எங்க தாத்தா. என்னோட அப்பபா, நான் ரெண்டு பேருமே அகிம்சை ல இருக்கோம் நு இழந்த விஷயங்கள் ஏராளம் இப்ப உள்ள இந்த சமுதாயத்துல அப்படி இருக்குறது ரொம்ப கஷ்டம் தன நான் நிச்சயம் மறுக்கல ஆனா இந்த உணர்வுகள் தாண்டிய ஒரு விஷயம் தன அகிம்சை எனபது சத்தியமா நானும் அதை ரொம்ப குறைச்சு தன நினச்சு கிட்டு இருந்தேன அதோட சக்தியே வேற. இப்ப நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்ப தன தெரியும் .

  சேரி அதை விடுங்க , நீங்க இவளவு கடுமையா சொன்னது நாள் சொலுறேன் – “சும்மா தமிழ்நாட்டுல உக்காந்து பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு அகிம்சை புடலங்காய்னு பேசக்கூடாது” – நானும் என்னோட kudumbamum மாசத்துல ரெண்டு நாள் ராமேஸ்வரம் அகதிகள் முகம்கு பொய் எங்களால முடிஞ்ச உதவிகள் செஞ்சு கிட்டு வந்துடு இருக்கோம். அது போக SL ku எங்களால முடிஞ்ச donation collect பண்ணி மாசம் மாசம் அந்த மக்கள் காக கொடுத்து கிட்டு இருக்கோம். நீங்க நினைக்குற மாதிரி அகிம்சை பேசிட்டு popcorn சாப்ட்டு நாங்க உக்காந்து இருகல நண்பா அதை கொஞ்சும் புரிஞ்சு கொங்க. விடுதலை புலிகள் சப்போர்ட் பண்ண தன மனிதர்கள் / மனித நேயம் இருக்கனும் நு எந்த அவசியமும் இல்லை. எல்லாருக்கும் கோபம் ஒன்னு தன் அதை கட்ட கூடிய மூறையீல் தன வித்தியாசம். நான் சொன்னதுல எதாவது உங்கள கயபடுதி இருந்த மனிசுடுங்க.
  – அருண்

 16. pataas

  helo arun history theriyama pesaathinga..un veetkula வந்து oruthan உக்காந்துகிட்டு una koduma panina agimsainu unnaa viradam irupya poiya velaiya paathukitu ..research panina elam theriumnu artham ila

 17. pJS

  தம்பி அருண் ராமேஸ்வரம் அகதி முகமிட்கான உங்கள் உதவிகளுக்கு எங்கள் நன்றிகள். ஆனால் ராமேஸ்வரம் அகதிமுகம் நிலவரம் வேற இலங்கை நாட்டில் தமிழர் படும் வேதனை வேற. ராமேஸ்வரம் அகதிமுகாமில் ullavargaluuku அட்லீஸ்ட் நிம்மதியா துங்க சரி முடியும்… ஆனால்… இலங்கைளில்… எந்த தமிழனாவது நிம்மதியா thungurana ??? இல்ல துன்கதான் முடியுதா???

  தமிழ் நாட்டில் உட்காந்து அகிம்சை பேசுறது லேசு… சிங்களவனுடன் வாழும் எங்களுக்கு அகிம்சை பேசுறது ஒன்னும் அவ்வளவு இலகு அல்ல. பிரபாகரன்… வழி எங்கள் வழி… போராடுவோம் போராடுவோம் கடைசி தமிழன் உயிர் உள்ளவரை தமிழுக்காக, தமிழ் ஈழத்துக்காக போராடுவோம். நீங்கள் சோழ சேர பாண்டியன் வழி வந்த தமிழன் என்றல்….முடிந்தால் உதவி செய்யுங்கள்.

  நங்கள் அறவழியில் ஆண்டப்பரம்பரை…. இனியும் அடிமைகளாக வாழ மாட்டோம்.

 18. Arun

  நண்பர் PJS,

  “ராமேஸ்வரம் அகதி முகமிட்கான உங்கள் உதவிகளுக்கு எங்கள் நன்றிகள்” – அது எங்கள் கடமை நண்பரே. உங்கள் அன்பிருக்கு நன்றி.

  “நீங்கள் சோழ சேர பாண்டியன் வழி வந்த தமிழன் என்றல்….முடிந்தால் உதவி செய்யுங்கள்” – என் குடும்பத்தால் (எங்கள் அகிம்சா வழியில்) ஆனா உதவிகளை நாங்கள் ஈழ மக்களுக்கு தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்போம். கூடிய விரைவில் நிச்சயம் எல்லோரும் சந்தோசமா வாழுவாங்க என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. உங்களின் வழியிலான போராட்டமும் வெற்றி பெற மனதார வாழ்துகுறேன்.

  அன்புடன்
  அருண்

 19. periyar

  ஜப்பான் மேல் அமெரிக்கா குண்டு போட்டது அஹிம்சையா? இந்தியா இவ்வளவு ஆர்மி வைத்துள்ளதே அது அஹிம்சையா? மண்ணை செடி தின்னுது. செடியய் ஆடு தின்னுது ஆட்டை நரி திங்குது மனுஷன் எல்லாத்தையும் திங்கறான். பெரியவர் பிரபாகரன் எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்வார். அஹிம்சையும் வெல்லும் ஆனால் அது மனிதர்களிடம் . குட்ட குட்ட வெட்டுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *