BREAKING NEWS
Search

பிரபாகரன் தாயாருடன் பழ நெடுமாறன் தூதர் சந்திப்பு

பிரபாகரன் தாயாருடன் பழ நெடுமாறன் தூதர் சந்திப்பு


வல்வெட்டித்துறை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தூதர் ராமசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பார்வதி அம்மாள். ஆரம்பத்தில் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தற்போது மெதுவாக தேறி வருகிறார்.

அவரை உறவினரான முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் கவனித்துக் கொள்கிறார். தினசரி பலரும் பார்வதி அம்மாளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிங்களர்கள் பலரும் வந்து பார்த்து, காலில் விழுந்து வணங்கிச் செல்வதாக இலங்கை தமிழ் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், உலகத் தமிழர் பேரவை செயலாளரான ராமசாமி பத்மநாபன் நெடுமாறனின் பிரதிநிதியாக வல்வெட்டித்துறைக்கு சென்று பார்வதி அம்மாவைச் சந்தித்தார். அவரிடம் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று நலம் விசாரித்தார். சிவாஜிலிங்கத்தையும் அவர் சந்தித்துப் பேசினார்.

பார்வதி அம்மாள் நோயின் தாக்குதலால் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுவதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தெரிவித்ததாகவும் ராமசாமி தெரிவித்தார்.




2 thoughts on “பிரபாகரன் தாயாருடன் பழ நெடுமாறன் தூதர் சந்திப்பு

  1. sakthivel

    இடது கையிலிருந்து வலது கையுக்கு மாற்றுவதற்குள் மனம் மாறிவிடுமோ என்று கேட்டவுடன் கொடுத்தான் கர்ணன்….

    ஆனால், நமது அரசியல் தலைவர்கள் போட்டோ இல்லாமல்…..
    இரண்டாவது போட்டோ மனதை சுடுகிறது…

  2. shanmuga

    ஆனால், நமது அரசியல் தலைவர்கள் போட்டோ இல்லாமல்…..
    இரண்டாவது போட்டோ மனதை சுடுகிறது…//

    இவர்கள் எல்லாம் தமிழனை அளிக்கப் பிறந்தவர்கள்..
    வளர்க்க அல்ல..
    தமிழனை காக்க போராடிய தலைவரின் தாய்க்கு இந்த கொடுமை ஏற்பட காரணம் இவர்களை போன்ற அரசியல்வாதிகளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *