BREAKING NEWS
Search

பிரபாகரன் குடும்பம் பற்றி உ(க)ளவுத் துறையின் இன்னுமொரு கதை!


பிரபாகரன் குடும்பம் பற்றி உ(க)ளவுத் துறையின் இன்னுமொரு கதை!

மிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தும் அவர் ‘கொல்லப்பட்ட’ விதம் குறித்து தினசரி ஒரு கதையை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றன இலங்கை ராணுவமும், இந்திய உளவு அமைப்புகளும்.prabhakaran-family

மிகச் சரியாக திட்டமிட்டு தினசரி ஒரு கதையை கட்டவிழ்த்து விடும் இவர்கள், தொடர்ச்சியாக தமிழர்களையும், தமிழீழ ஆதரவாளர்களையும், இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டு கொடுமைக்குள்ளாகி வரும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இந்தக் கூத்தில் புலிகள் அமைப்பும் கொஞ்ச நாள் பங்கேற்று வந்ததையும் மறுப்பதற்கில்லை.

முன்பெல்லாம், ஒரு நாள் விட்டு ஒருநாள் பிரபாகரன் குறித்து கதைகள் சொல்லி வந்த ராணுவமும் உளவு அமைப்புகளும், இப்போது தினசரி ஒரு கதையை வேறு வேறு அமைப்புகளின் பெயர்களில் வெளியிட்டு வருகின்றன.

பிரபாகரனையும் அவரது மகனையும் உயிருடன் பிடித்து, தமிழ் சினிமா பாணியில், தந்தையின் கண்முன் மகனைக் கொன்று, பின் பிரபாகரனைக் கொன்றதாக புளுகினார்கள்.

நேற்று வெளியிட்ட ஒரு கதையில், பிரபாகரனை அவரது தளபதிகளுள் முக்கியமானவரான பொட்டு அம்மான் சுட்டுக் கொன்றார் என்று கூறினார்கள்.

இன்னொரு கதைப்படி, பொட்டு அம்மான் உயிருடன் ராணுவப் பிடியில் இருப்பதாகக் கூறிப் பார்த்தார்கள்.

இன்று இன்னொரு கதை…

பிரபாகரன் மனைவி, இளைய மகன் மற்றும் மகள்கள் உயிருடன் இருப்பதாக இன்று இந்திய உளவுத் துறையான ரா உறுதி செய்துள்ளது. இந்த உளவுத் துறை வெண்ணை வெட்டிகள்தான், பிரபாகரன் குடும்பமே போரில் அழிக்கப்பட்டு விட்டதாகவும், மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் உடல்கள் நந்திக் கடல் பகுதியிலேயே கிடப்பதாகவும் ஒரு நாள் முழுக்க சொல்லிக் கொண்டே இருந்தார்கள், தங்கள் ஊதுகுழலான வட இந்திய சேனல்கள் மூலம்.

பிராபகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு, இந்திய அரசு… ஏன் புலிகளே கூடச் சொன்னாலும் அதை நம்ப முடியாத தகவல் என ஒதுக்கும் மனநிலையில்தான் இன்றைக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். காரணம், பிரபாகரன் என்ற மாபெரும் தலைவருக்கு தமிழர்கள் தங்கள் மனதில் கொடுத்துள்ள இடம் அப்படி.

இந்த சூழ்நிலையில், அந்த நம்பிக்கையை எப்படியெல்லாம் சிதைக்க முடியுமோ அந்த வழிகளையெல்லாம் முயன்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இலங்கை-இந்திய ராணுவ, உளவு  அமைப்பினர்.

இப்போது ரா வெளியிட்டுள்ள புதிய செய்தியை கவனமாகப் படியுங்கள்…

பொய்யான ஒரு விஷயத்தை மாற்றி மாற்றிச் சொல்லி உண்மை நிலையை அறிந்து கொள்ள முயற்சிக்கும் ரா அதிகாரிகளின் தில்லு முல்லு அதில் வெட்டவெளிச்சமாவதைக் காணலாம்.

அந்தச் செய்தி:

“பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவரது இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பத்திரமாக உள்ளனர். கனடாவில், பிரபாகரனின் சகோதரி வினோதினியின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

பிரபாகரனின் மூத்த மகள் துவாரகா ஏற்கனவே அயர்லாந்தில் வசித்து வருகிறார். அவர் இலங்கைக்கு வந்து நீண்ட காலம் ஆகிறது. எனவே பிரபாகரன் குடும்பத்தினர் பத்திரமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

எப்படித் தப்பினார் மதிவதனி?

கடந்த ஆண்டு புலிகளுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது இலங்கை ராணுவம். தங்கள் தரப்புக்கு நெருக்கடி அதிகரித்து வருவதை உணர்ந்த பிரபாகரன், தானும், தனது மூத்த மகன் சார்லஸும் மட்டும் போர் முனையில் இருப்பது எனவும், மற்றவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவது எனவும் தீர்மானித்தார்.

விடுதலைப் புலிகளின் கொள்கைப்படி, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே போர் களத்தில் இருக்க வேண்டுமாம். மற்றவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவது வழக்கமாம்.

அந்த அடிப்படையில் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் தானும், தனது குடும்பத்தின் சார்பில் தனது மூத்த மகனும் களத்தில் இருப்பது என தீர்மானித்தார் பிரபாகரன்.

ஆனால் இதை மதிவதனியும் மற்றவர்களும் ஏற்கவில்லை. நாங்களும் உங்களுடனேயே இருந்து விடுகிறோம். எங்களைப் பிரிக்க நினைக்காதீர்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அதை பிடிவாதமாக நிராகரித்து விட்டாராம் பிரபாகரன். நாங்கள் இருவர் மட்டும் இருப்போம், நீங்கள் போய் விடுங்கள் என்று கூறிய அவர் அத்துடன் நில்லாமல், அவர்கள் கிளம்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வன்னிப் பகுதியிலிருந்து மதிவதனியும், துவாரகா, பாலச்சந்திரனும் கடல் மார்க்கமாக இந்தோனேசியாவுக்குத் தப்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அயர்லாந்து சென்றுள்ளனர். அங்கு துவாரகா, பாலச்சந்திரன் தங்கிக் கொண்டனராம். ஆனால் மதிவதனி மீண்டும் வன்னிக்கே திரும்பி விட்டாராம்.

இதை எதிர்பார்க்காத பிரபாகரன் அவரது விருப்பத்திற்குத் தடை போட விரும்பாமல் விட்டு விட்டார்.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே ராணுவத்தின் முற்றுகை அதிகரிக்கத் தொடங்கியது. இனியும் மனைவி இங்கிருப்பது சரியல்ல என்று முடிவு செய்தார் பிரபாகரன்.

இதையடுத்து மதிவதனியை தப்ப வைக்க ஏற்பாடுகள் தொடங்கின. இம்முறை கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்குப் போக முடியாத நிலை. இதையடுத்து தமிழகம் வழியாக தப்ப வைக்க முடிவு செய்யப்பட்டது.

வேதாரண்யம் வந்தார்

கடந்த ஜனவரி மாதம் மதிவதனிக்கு திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து பாஸ்போர்ட் எடுக்கப்பட்டது. வசந்தி என்ற பெயரிலும், கணவர் பெயர் மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, கோட்டைப்பட்டனம் என்ற முகவரியில் மதிவதனி புகைப்படம் ஒட்டி இந்த பாஸ்போர்ட் எடுக்கப்பட்டது.

உரிய முறையிலான ஆவணங்களையும் (வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம்) ஆகியவற்றையும் இணைத்துள்ளனர்.

இதையடுத்து பிரபாகரனுக்குத் தகவல் போனது. இதைத் தொடர்ந்து தனது நம்பிக்கைக்குரிய சில தளபதிகளை அழைத்த பிரபாகரன், அவர்களிடம் மதிவதனியை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை ஒப்படைத்தார்.

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தப்பினார்…

மே மாதம்தான் மதிவதனி வன்னியிலிருந்து தப்பி தமிழகம் வந்தார். கடல் மார்க்கமாக அதி விரைவுப் படகு ஒன்றில் மதிவதனியுடன், புலிகள் இயக்கத்தினர் வேதாரண்யம் வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் மே 10ம் தேதியன்று ஹாங்காங் போயுள்ளார். ஹாங்காங்கில் இருந்து கனடாவுக்கு தப்பினார் மதிவதனி.

அங்கு நேராக பிரபாகரனின் சகோதரி வினோதினியின் வீட்டுக்குப் போய் விட்டார் மதிவதனி. அங்கு வந்து சேர்ந்த மதிவதனியை மிக மிக ரகசியமான இடத்திற்கு மாற்றி விட்டார் வினோதினி”.

– இந்தச் செய்தியை ரா புனைந்திருக்கும் விதம் பாருங்கள். இவர்களே கூட இருந்து வழி அனுப்பி வைத்தமாதிரி அத்தனை தத்ரூபமான ஜோடிப்பு… ஆனால் அப்பட்டமாக வெளித்தெரியும் இவர்களின் கயமைத்தனம்.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது, புலி உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர், தலைமை முழுவதுமாக துடைத்தெறியப்பட்டுவிட்டது என பகிரங்கமாக அறிவித்துவிட்ட பிறகு, பிரபாகரன் மரணம் குறித்தோ, அவரது குடும்பத்தினர் பற்றியோ இந்த பஞ்சமா பாதகர்கள் பேச வேண்டிய அவசியமென்ன?

தமிழர்கள் துக்கத்தில் பங்கெடுக்காத, தமிழன் அழிவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய அரசுக்கு இதில் என்ன அவ்வளவு அக்கறை? இன்னும் என்ன துரோகம் மிச்சமிருக்கிறது இவர்கள் செய்ய?

எமது சொந்தங்கள் எங்கோ இருந்துவிட்டுப் போகிறார்கள்… அவர்கள் இருக்கிறார்கள் என்ற குறைந்தபட்ச சந்தோஷத்தோடு அடுத்து ஆக வேண்டியதை நாமே தீர்மானித்துக் கொள்வோம். இந்த உளவு மற்றும் களவுத் துறையினர் மூடிக் கொண்டு இருக்கட்டும். அது போதும்!

-வன்னிமகன்
13 thoughts on “பிரபாகரன் குடும்பம் பற்றி உ(க)ளவுத் துறையின் இன்னுமொரு கதை!

 1. வடக்குப்பட்டி ராமசாமி

  இந்திய உ(க)ளவுத் துறைக்கு வேண்டுகோள், இப்போதைக்கு பிரபாகரன் பற்றி எழுவது trend இல்லை, கமலோட மகள் பற்றி ஏதாவது சொல்லுங்க, ரொம்ப வேகமா famous ஆகும்!

  இல்லாட்டி பிரபாகரன் கெட்டவர்னு எழுதிட்டு, அதுக்கு உதாரணாமா ஏதாவது ரூம் போட்டு யோசிச்சு எழுதுங்க, இதுவும் இப்ப trend தான்!

 2. வடக்குப்பட்டி ராமசாமி

  என்(உங்க)வழி ஆசிரியரே! அறிவிப்பு பகுதில் இன்றைக்கு சுற்றுலா பகுதி ஆரம்பம்ன்னு போட்டுரிக்கேன்களே, அது இதுதான?

  /*
  மே மாதம்தான் மதிவதனி வன்னியிலிருந்து தப்பி தமிழகம் வந்தார். கடல் மார்க்கமாக அதி விரைவுப் படகு ஒன்றில் மதிவதனியுடன், புலிகள் இயக்கத்தினர் வேதாரண்யம் வந்து சேர்ந்தனர்.

  அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் மே 10ம் தேதியன்று ஹாங்காங் போயுள்ளார். ஹாங்காங்கில் இருந்து கனடாவுக்கு தப்பினார் மதிவதனி.

  அங்கு நேராக பிரபாகரனின் சகோதரி வினோதினியின் வீட்டுக்குப் போய் விட்டார் மதிவதனி. அங்கு வந்து சேர்ந்த மதிவதனியை மிக மிக ரகசியமான இடத்திற்கு மாற்றி விட்டார் வினோதினி”.
  */

 3. sonja

  போதும்டா சாமீ, புலி பற்றி பேசியதும் புகழ்ந்ததும் இகழ்ந்தும் போதும்.தமிழனை புலியுடன் சேர்ந்து உங்களைபோன்ற இணையங்களும் பலியெடுத்தது போதவில்லையா? உங்களின் கேலி,கிண்டல்களுக்கு வவுனியா முகாம்களில் அல்லற்படும் அப்பாவிகள்தான் பலியாகின்றனர்.அவர்களை உங்களின் இலாபகரமான வியாபாரமூலதனமாக்கிய நீங்களெல்லாம் எந்தவினமோ?ஆண்டவன் உங்களை மன்னிக்கட்டும்!!

 4. Amuthan

  Very good sonja,

  I agreed ur thoughts,By birth im a indian ,but i dont want this begger

  indian citicenship.Iam studied M.B.B.S in merit quota,but now im ready to

  sacrify my degree also…

  I want tamil peoples should live with freely,I already told tamilnadu peoples via this website,but their main aim is to collect money from politicians,

  and chicken briyani…

  Iam ready to surrender my pancard,bank passbook,driving license ETC,,,ETC..

  Even i dont want indian citicenship..

  I wil ready to go as a tamil refugee,,…..

  I wil say one thing from the bottom the heart ,INDIA wil give one big price

  for this huge mistake…….

 5. Allan

  Amuthan ….,

  Please surrender all the indian citicenship related documents….

  We dont such a *** in our country….

  True Indian – Allan.

 6. வடக்குப்பட்டி ராமசாமி

  அல்லன்: என் பேருல என் அனுமதியில்லாம அரசாங்கம் கடன் வாங்குது, பரவைல்லைன்னு திருப்பி செளுத்துங்கன்னு நம்ம காசு கொடுத்தா, அதை பிரதமரோட நிவாரண நி்தில சேர்த்திருது!

  என்ன கொடுமை சார்?

  இந்தியாவில பொறந்தா, நான் கடைசி வரை கடன்காரன் தான?

 7. மு.முகிலன்

  தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
  என்று நாம் இந்தியன் என்று சொல்ல ஆரம்பித்தோமோ அன்றே வந்தது நமது தலைக்கு ஆபத்து.

  இனியாவது True Indian , … Indian என்று சொல்வதை நிறுத்துவோம்.

  நான் ஒரு தமிழன். இந்தியா என்பது ஆங்கிலேயேர்கள் எங்களின் இனைதின் அடையாளத்தை அழிக்க வகுத்த நாடு. அது மிகச் சிறப்பாகவே நடந்தது.

  ஆனால் தமிழ் ஈழம் (விடுதலைப்புலிகள்) வழி என் இனம் மீண்டும் மீட்சிப்பெற்றது.

  இனி ஒவ்வொரு தமிழனின் கடமை – தமிழன் என்று சொல்வது!!! இந்தியா இனி நமது தாய் நாடாக இருக்க முடியாது – இருக்கக்கூடாது.

  நமக்கு இனி தேவை – தனித் தமிழ் ஈழம் மற்றும் அல்ல. தனித் தமிழ் நாடும் தான்.

  தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!

 8. Allan

  Mukilan,

  I am not willing to reply for the comments made by Srilankan Tamils…

  True Indian – Allan.

 9. தமிழன்

  என்னை அழித்து மண்ணோடு மண்ணக்கலாம்
  ஆனால் என் மண்ணை என்ன செய்வாய்!

  தமிழனை அழிக்கலாம்
  ஆனால் என் எண்ணத்தை அழிக்க முடியுமா?

  தமிழக தமிழர்கள் ஈழ தமிழர்களுக்கு வடிக்கிறார்கள் கண்ணீர்
  அதை அழிக்க நினைக்கிறது இந்திய அரசு!

  கிடக்கிறார்கள் விடுங்கள்
  எங்கள் தமிழக தமிழரின் இயலாமையை மீறி வரும்
  என் விழியில் வரும் கண்ணீரை
  உனக்கு தாரை வார்த்து தருகிறேன் ஈழத்தமிழா

  உண்மையான தமிழன்

 10. kavin

  naamellam, indha madhiri innum ethanai nalaikku dhan vetti thanama pesittu irukaporomnu therila. ennaikavadhu seyalla edhavadhu urupadiya panniirukoma?modhalla thamizhan pesaradha niruthittu seyal pada arambikanum. indru elangaiyil nadandha kodumai tamilnattil nadakka romba naal agadhu. namakkaga irundha adharavana puligallum ippodhu illai, iniyavadhu vilithukondu otrumaiyaga irupom.

 11. வடக்குப்பட்டி ராமசாமி

  True Indian – Allan = fraud tamizhan.

 12. sepiyan

  சென்னை இருந்து கன்னியாகுமாரி வரை. அனைத்து மக்களுக்கும்
  ஒரே எண்ணம் ஒரே உணர்வு என்பதை இந்த அரசியல்வாதிகளுக்கு உணர்தக் கிடைத்த அருமையான சந்தர்பமாக அமைந்த 2009 பாராளும் மன்றத் தேர்தலை பயன்படுத்த தவறிவிட்டனர்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *