BREAKING NEWS
Search

‘பிரபாகரன் இருக்கிறார் என எனக்குத் தெரியும்… அதனால் சொல்கிறேன்’!

பிரபாகரன்: எனக்குத் தெரியும்… அதனால் சொல்கிறேன்!

கரூர்: திரும்பத் திரும்ப பிரபாகரன் இருக்கிறார் என்றே கூறுகிறாரே என்று சிலர் விமர்சிப்பதாகக் கேள்விப்பட்டேன். உண்மையை எத்தனை vaiko-karurவிதமாக சொன்னாலும் உண்மைதான். அதில் மாற்றம் ஏதுமில்லை. பிரபாகரன் நிச்சயம் உரிய நேரத்தில் வருவார். எனக்கு அது தெரியும், அதனால் சொல்கிறேன்”, என்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கொண்ட அவர் நேற்று பேசியதாவது:

ம.தி.மு.க.இயக்கம் அழிந்து விடும் என்று நினைத்தவர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போன்று கரூர் தொகுதியில் நமது கூட்டணி வேட்பாளர் தம்பிதுரை வெற்றி பெற்று உள்ளார். கரூர் தொகுதியில் தம்பிதுரையின் வெற்றி போற்றுதலுக்கு உரியது.

தற்போது கழகத்திற்கு பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த இயக்கத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. ம.தி.மு.க.வுக்கு சோதனை எதுவும் ஏற்படவில்லை. விருதுநகரில் நான் (வைகோ) வெற்றி பெறவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.

நான் தோற்றதை பற்றி ஒரு நிமிடம் கூட கவலைப்படவில்லை. நம் தோழர்கள் விரக்தி அடைந்து விடுவார்களே என்றுதான் கவலைப்பட்டேன். ம.தி.மு.க.வுக்கு எப்போதும் இல்லாத பணி தற்போது வந்துள்ளது.

எந்த லட்சியத்திற்காக அண்ணா இந்த இயக்கத்தைத் தொடங்கினாரோ அவரது நூற்றாண்டில் அது குழி தோண்டி புதைக்கும் காலம் இப்போது உள்ளது. அண்ணா கொள்கையை அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் இனம் கருவறுக்கப்படுகிறது. அங்கே தமிழ் இனத்திற்குப் பாதுகாப்பு இல்லை. யூதர்கள், பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று பேசுகிறார் அமெரிக்க ஜனாதிபதி. ஆனால் ஈழம் பற்றி வாய்திறக்க மறுக்கிறார்.

ஈழத்தில் உள்ள தமிழர்கள் பூர்வீகத்திற்கு சான்று தேவை இல்லை. இலங்கையில் ஒரு சதவீதம் இருந்த சிங்களர்கள் தற்போது 34 சதவீதம் ஆகிவிட்டார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக 16 பேர் தீக்குளித்து உள்ளார்கள். தமிழன் உணர்ச்சி செத்து விட வில்லை. தற்போது அழுது புலம்பி என்ன பயன்… ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த இறவர்களுக்கு முதல்வர் கருணாநிதி குறைந்தபட்சம் ஒரு இரங்கல் தெரிவித்தது உண்டா? காலம் இப்படியே இருந்து விடாது.

தலைவன் கொள்கைக்கு துரோகம் செய்யும் போது அதை தூக்கி எறிவார்கள். தி.மு.க.விற்கு பழைய தொண்டன் நான். நாங்கள்தான் உண்மையான தி.மு.க. என்று வரலாறு நிரூபிக்கும். இலங்கை துரோகத்திற்கு காரணம் சோனியா மட்டும் அல்ல. பல முறை சோனியாவின் திட்டம் நிறைவேறவில்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள் வழங்க ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. விடுதலைபுலிகளை அழிக்கும் திட்டத்திற்கு காரணம் கலைஞர். தமிழர்களுக்கு இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு போன்று உலகில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை.

உலகம் முழுவதும் தமிழர்கள் அழுகிறார்கள். போராடுகிறார்கள். எல்லாம் என்ன ஆயிற்று. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பிரபாகரன் போல் ஒரு வீரன் வரமுடியுமா? இலங்கையில் தமிழர்கள் தனி நாடு கேட்பதில் என்ன தவறு.

உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். பிரபாகரன் மகனும் வருவார். திரும்பத் திரும்ப பிரபாகரன் இருக்கிறார் என்றே கூறுகிறாரே என்று சிலர் விமர்சிப்பதாகக் கேள்விப்பட்டேன். உண்மையை எத்தனை விதமாக சொன்னாலும் உண்மைதான். அதில் மாற்றம் ஏதுமில்லை. எனக்கு உண்மை தெரியும்… அதனால் சொல்கிறேன்.

டெல்லிக்கும் எங்களுக்கும் 200 வருட உறவுதான். ஆனால் இலங்கைக்கு தொப்புள் கொடி உறவு. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை எண்ணிப் பாருங்கள்.

நான் தோற்று விட்டதாக மக்கள் அனுதாபம் தெரிவிக்கிறார்கள். இதுவே எனது வெற்றிதான். காலம் மீண்டும் ஒரு வெற்றியைத் தராமல் போராது, என்றார் வைகோ.
5 thoughts on “‘பிரபாகரன் இருக்கிறார் என எனக்குத் தெரியும்… அதனால் சொல்கிறேன்’!

 1. jana

  Vaiko,
  Stop this nuisance. If you really care for the Tamil people, do something constructive, instead of going around chanting he is alive. If you can’t do something for the people as a Tamilan or a politician, or someone with some power, then please stop using the names of people who died for their people.

  Enough is enough. There are millions of Tamils in Srilanka who are living scared. More than 300,000 living without necessities. And people like Vaiko can only chant their publicity mottos.

 2. Thamilan

  காலம் ஒரு வெற்றியைத் தராமல் போகாது,

 3. Xmen

  First stop getting suitcases from AMMA.Then talk for tamil.

  Keta Keta Varthaya Varuthu vaikova parthu

 4. Manoharan

  Vaiko is the only Clean Politician in TN . He can talk whatever he wants. He deserves it. If he would have needed suitcases then he would have gone too high in TN Politics. His Politics is neat and clean. He is MR.CLEAN.He is the only leader in TN who really cares for Ealam people. Failure does not mean that he is a joker. What really matters is irrespictive of so many failures he is still able to survive in these Ugly TN politics. Nobody can survive for too long without success. But vaiko does. He will stand tall for too long. Thats true. Even in this election Keduketta karunanidhi did fraud and defeat vaiko in election. He is the real culprit and not vaiko.
  காலம் ஒரு வெற்றியைத் தராமல் போகாது. Thats right.

 5. Gopi

  Vaiko now praises Jayalalitha for her support to Tamil Eelam now. Same Vaiko, even few months back when asked about his opinion on Jayalalitha’s statnce on Tamil Eelam (she was against it then), told that it is her point of view and it is not a conflict for people with different ideologies sharing the alliance. Vaiko is also a sample of Indian Politician only. As he said, he doesn’t have money power and that’s the reason he could not get dirty. Otherwise he would also had his share of dirty games in politics.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *