BREAKING NEWS
Search

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? – வே.மதிமாறன்

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? – வே. மதிமாறன்

பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று சிங்கள ராணுவத்தின் செய்தியை விடுதலைப் புலிகளின் எதி்ர்ப்பாளர்கள் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லிக் presentation11கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உறுதியில் அந்தச் செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்ற விரும்பமும் இணைந்திருக்கிறது. அந்த விருப்பமே அவர்களை உறுதியாக சொல்ல வைக்கிறது.

‘பிரபாகரன் இறக்கவில்லை’ என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உறுதியாக சொல்கிறார்கள். இவர்களின் உறுதியையும் இவர்களின் விருப்பமே தீர்மானிக்கிறது.

இலங்கைஅரசும், உளவுத்துறையும் வெளியிட்ட படங்கள்தான் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், ‘பார்ப்பனர்கள்’ மத்தியில் பெரிய செல்வாக்கும் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ‘அவர் உயிரோடு இருக்கக் கூடாது, விடுதலைப் புலிகள் இயக்கம் இத்தோடு முடிந்து விட வேண்டும்’ என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் இலங்கை ராணுவத்தின், இந்திய உளவு நிறுவனங்களின் செய்திகளை, படங்களை ஒரு சின்னன சந்தேகமின்றி நம்பவும், அவைகளை தனது படங்கள் போல எடுத்து பயன்படுத்தவும் செய்கிறார்கள்.pirabakaran1

எந்தப் படங்களை வைத்து இவர்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று உறுதியாக சொல்கிறார்களோ, அந்தப் படங்களைப் பார்த்துதான் ஆதரவாளர்கள் சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அவர் உயிரோடு இருப்பதாகவும் நம்புகிறார்கள்.

இதில் வேடிக்கை இலங்கை ராணுவம் வெளியிட்டு இருக்கிற பிரபாகரன் பற்றிய படத்தை, செய்தியை இலங்கை அதிபர் ராஜபக்சேவே நம்பவில்லை. அதனால்தான் ‘உண்டு, இல்லை‘ என்று திட்டவட்டமாக அறிவிக்க மறுக்கிறார். ராணுவம் வெளியிட்டிருக்கிற பிரபாகரன் பற்றிய படங்களின் மூலம், தான் செய்த கொலைகளையும், வெறியாட்டத்தையும் திசை திருப்பவும், மீதமிருக்கிற தமிழர்களைப் பற்றி பேசாமல் பிரபாகரன் பற்றியே பேசவேண்டும் என்ற நோக்கத்திற்காகவுமே ராஜபக்சே மவுனம் சாதிக்கிறார்.

அவரின் பிரதிநிதியாகவே செயல்படுகிற இங்கு இருக்கிற ஊடகங்கள் ‘பிரபாகரன் இறந்து விட்டார்‘ என்ற செய்தியை சிறப்பாக பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை மறுத்து ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று யாராவது நம்பினால், ‘அப்படி நம்புவதே தவறு’, என்று ராஜபக்சே ஆதரவு ஊடகங்களும் பார்ப்பனர்களும் எரிச்சலும், கோபமும் அடைகிறார்கள்.

பிராமணர் சங்கத்தின் பத்திரிகையான ‘தாம்ப்ராஸ்’…

‘’இலங்கையில விடுதலைப்புலிகளின் தலைவர் திரு. வேலுபிள்ளை பிரபாகரன் இறந்து விட்டார் என்று இலங்கை ராணுவமும், இறக்கவில்லை என்று விடுதலைப் புலிகளின் சில ஆதரவாளர்களும் கூறுகின்றார்களே இதில் எது உண்மை?’

-எம். ராதாகிருஷ்ணன், சேலம்
விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடித்தது மட்டுமின்றி, அவர்களை ஈழத்தில் செயல்பட முடியாத அளவிற்கு விரட்டியடித்து விட்டது இலங்கை ராணுவம் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுபிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தான் அரசியில் நோக்கர்களும், நடுநிலை பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

-என்று மனமார எழுதுகிறது.

சோ துக்ளக்கில்…

“விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை இலங்கை அரசு வெளியிட்டதிலிருந்து – அது பொய்ச் செய்தி என்று கூறுகிற மறுப்புகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பது நிரூபிக்கப்படாத வரையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்: பல பத்திரிகைகளும், இந்திய அரசும் கூட, இந்தச் செய்தியை அப்படித்தான் பார்க்கின்றன.

………………………………………………………..

இது எப்படி வீரமரணம் என்பது நமக்குப் புரியவில்லை. அப்பாவி மக்களை தனக்குப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அவர்கள் மத்தியில் தான் பாதுகாப்பாக இருந்துகொண்டு, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிக்க வழி தேடிய பிரபாகரனின் மரணம் எப்படி வீரமரணமாகும்?

……………………………………

தமிழ்த் தலைவர்களைக் கொன்று, தமிழர்களை அடிமைப்படுத்தி, அவர்களுடைய சிறுவர்களை இலங்கை ராணுவத்திற்குப் பலியாக்கி, தமிழர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, பிரபாகரன் நடத்தியது விடுதலைப் போர் அல்ல: தான் ஆள்வதற்கு, தன்னுடைய சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு நிலப்பரப்புதான் அவர் நாடியது. ஒரு நிலப்பரப்பைத் தனதாக்கி, அதில் வாழ்ந்த மக்களைத் தன்னுடைய அடிமைகளாக்கி விட, ஒருவர் நடத்திய வெறிச் செயல்கள் விடுதலைப் போராட்டம் அல்ல, ஆதிக்க வெறி.

…………………………………..

பற்பல காரணங்களினால், சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துவிட்ட இலங்கைத்தமிழர்கள். இனி நிம்மதியுடன் வாழ்வதற்கு இப்போது வழி பிறந்திருக்கிறது. இந்த வாய்ப்பு கானல் நீராகப் போய்விடாமல் பார்த்துக் கொள்வது இந்திய அரசின் கடமை”.

-தமிழர்களின் வாழ்க்கை அல்ல, தமிழர்களே முடிந்திருக்கிறார்கள். ஆனால் சோ, ‘இனி நிம்மதியுடன் வாழ்வதற்கு வழி பிறந்திருக்கிறது’ என்று எழுதுகிறார்.

இவர்கள் விடுதலைப் புலிகளை எதிர்த்து எழுதுவதை நாம் குறை சொல்லவில்லை. அது அவர்களின் அரசியல் நிலை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதை எதிர்த்து இலங்கை அரசையோ, ராணுவத்தையோ, ராஜபக்சேவையோ கண்டித்து ஒரு வார்த்தைகூட எழுத மறுக்கிறார்களே, ஏன்?

கேட்டால், ‘அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்கிறார்கள் விடுதலைப் புலிகள்’ என்று சொல்கிறார்கள்.

சரி… இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

சங்கர மடத்தில் புகுந்து ஒரு தீவிரவாத கும்பல் அங்கிருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் இன்னும் அவர்களை ஸேவிக்க வந்த பார்ப்பனர்களை, சொர்ணமால்யா போன்ற பக்தர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ராணுவம் அல்லது காவல் துறை என்ன செய்யவேண்டும்?

தீவிரவாதிகளிடம் தந்திரமாக பேசி அல்லது கோரிக்கையை நிறைவேற்றி பிணைக் கைதிகளாக இருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் இன்னும் மத்தியம் ஒருமணிக்கு ஜெயேந்திரனை தரிசிக்க வந்த பார்ப்னர்களை பத்திரமாக மீட்க வேண்டும். இதுதானே முறை.

ஆனால், அதற்குப் பதில் ராணுவம் , ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் உட்பட்ட ஒட்டுமொத்தப் பார்ப்பனர்களையும் கொன்று, அதன் பிறகு தீவிரவாதிகளையும் கொன்றுவிட்டால் அது மனித தர்மமாகுமா? அதைச் செய்வதற்கு ராணுவம் எதற்கு?

இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுடனான போரில் என்றாவது, ஒரு இடத்திலாவது ஈழத் தமிழர்களை பாதுக்காக்க வேண்டும் என்று செயல்பட்டதா?

‘மாறாக நீ என்னடா கொல்றது நானே கொல்றேன்’ என்று ஒரு நாட்டு ராணுவம் தன் சொந்த நாட்டு மக்களை இப்படித்தான் கொல்லுமா? உலகில் எந்த நாட்டிலாவது பிணைக் கைதிகளை முற்றிலுமாக கொன்று அதன் பிறகு தீவிரவாதிகளை கொன்ற ராணுவம் இருக்கிறதா?

இதுபோல் இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள் சோ போன்ற பார்ப்பனர்கள்…

‘ஈழத்தில் இருக்கிற தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் துப்பாக்கி முனையில் மிரட்டித்தான் தனக்கு ஆதரவாக வைத்திருக்கிறாகள்’ என்று.

சரி. இது உண்மையாக இருந்தால், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களில் மிகப் பெருமான்மையானவர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பதற்கு எது காரணம்? அவர்களை யார் மிரட்டுவது?

தமிழர்களைக் கொன்று குவிக்கிற இலங்கை ராணுவம் நேர்மையானது. ராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்கள் தீவிரவாதிகள். கொலைக்காரர்கள். நன்றாகத்தான் இருக்கிறது மனுநீதி!

இவைகள் பிராமணர் சங்கம், சோ போன்ற பார்ப்பன உணர்வை மறைக்காமல் வெளிபடுத்துகிறவர்களின் நிலை. இதே நிலைதான் முற்போக்காக ‘ரொம்ப நல்லவன்’ மாதிரி பேசுகிறவர்களின் நிலையுமாக இருக்கிறது.

இணையத்தில் விரவி இருக்கிற பார்ப்பனர்களில் பலர், ஈழப் பிரச்சினையில் பெரும்பாலும் எந்த கருத்தும் சொல்லாதவர்கள் அல்லது ஈழமக்களுக்கு எதிராக இலங்கை அரசும் இந்திய ராணுவமும் செயல் பட்டதைக் கண்டித்து எழுதாதவர்கள். இவர்கள் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப்பட்ட பிறகு, மிகுந்த ‘வருத்தத்தோடு’ தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“பிரபாகரன் இறந்து விட்டார் என்பதற்காக ஈழ விடுதலைப் போராட்டம் இத்துடன் முடிந்து விடாது. அது எந்த தனிநபரையும் சார்ந்து இல்லை.” என்று ஒரு போராளியைப் போல் சிலர் பிரகடனப் படுத்தினார்கள். அவர்கள் உறுதியாக சொல்ல வருகிற செய்தி இதுதான் ‘பிரபாகரன் இறந்துவிட்டார்!’

இன்னும் சிலர், “விடுதலைப் புலிகள் மீது நமக்கு விமர்சனம் இருந்தாலும் 30 ஆண்டுகளாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதை நினைத்து வருத்தமாகத்தான் இருக்கிறது. பிரபாகரன் இறந்து விட்டார். விடுதலைப் புலிகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இனி அங்கே விடுதலைப் போராட்டம் நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று நினைக்கும் போது இன்னும் அதிக வருத்தமாகத்தான் இருக்கிறது.” என்று ஈழப் போரட்டத்தில் அதிக அக்கறை உள்ளவர்கள்போல், ஒட்டு மொத்தமாக ஈழப் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

இவர்கள் சுற்றி வளைத்து சொல்ல வருகிற செய்தி இதுதான்:

” ஒழிஞ்சான்டா பிரபாகரன். முடிஞ்சுதுடா விடுதலைப் புலிகள் இயக்கம்”

-விடுதலைப் புலிகள் இயக்கமோ அதன் தலைவர் பிரபாகரனோ பார்ப்பன எதிர்ப்பாளர்களோ இந்து மத எதிர்ப்பாளர்களோ அல்ல. இன்னும் சொல்லப்போனால் பிரபாகரன் உட்பட அவர்களில் பலர் இந்து மத கடவுள் நம்பிக்கையாளர்கள்தான். ஆனாலும் பார்ப்பனர்கள் ஏன் அவர்கள் மீது கடும் வெறுப்பு கொண்டு இருக்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு பார்ப்பனர்கள் இப்படி பதில் சொல்லக்கூடும்: jesus1

“விடுதலைப் புலிகள் யாரை வேண்டுமானலும் கொலை செய்பவர்கள். வன்முறையாளர்கள். அவர்களை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?”

அப்படியானால் இவர்கள் ஆதரிக்கிற இலங்கை ராணுவம் என்ன ‘வாடியப் பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்கிற வள்ளலார் வழி வந்தவர்களா? இவர்களின் குரு ஜெயேந்திரன் என்ன சங்கரராமனுக்கு கனகா அபிஷேகமா செய்து வைத்தார்? இவர்கள் தீவிரமாக ஆதரிக்கிறவர்களின் யோக்கியதை இப்படி இருக்கும்போது, அப்புறம் ஏன் இவ்வளவு வன்மம் விடுதலைப் புலிகளின் மேல் மட்டும்? இதற்கான விடையைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நீங்கள் தந்தை பெரியாரிடம்தான் வந்தாக வேண்டும்.

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசை கண்டிக்காத, இலங்கைக்குத் துணை நின்ற இந்தியாவைப் பற்றி ஒரு வார்த்தை எழுதாத இவர்கள்தான் மனிதாபிமானம் பற்றி பேசுகிறார்கள். நம்புகங்கள் தோழர்களே, பார்ப்பனர்களும் தமிழர்கள்தான். பாவம் பெரியார்.

‘இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தார்’ என்பதற்கு பைபிளைத் தவிர எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் அப்படி ஒருவர் இருந்தார் என்று இன்னும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை, அப்படி இல்லாத ஒருவர்  ‘இப்போது வரப்போகிறார்‘ என்று 2000 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என்று நம்பி ரொம்ப சீரியசா கண்ணீர் மல்க ‘வருகீறாரா’ என்று ஆவலோடு காத்துக் கிடக்கிறார்கள் மிகப் பலர்.

அப்படி நம்புகிறவர்கள் இருக்கும்போது, தங்களின் தலைவர் அல்லது தாங்கள் விரும்புகிற தலைவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்படாதவரையில், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதவரையில் அவர் உயிரோடு இருக்கிறார் என்று அவர் ஆதரவாளர்கள் நம்புவதில் என்ன தவறு இருக்க முடியும்?

குறிப்பு: கட்டுரையாளர் திரு மதிமாறன், பெரியாரிய ஆய்வாளர்.  தமிழ் உணர்வாளர். இந்த இரு விஷயங்களைக் கருத்தில் கொண்டு இக் கட்டுரையை வாசிக்கவும். அவருடைய வலைப்பூ முகவரி: http://mathimaran.wordpress.com/

மற்றபடி, பிரபாகரன் குறித்து ‘எரிந்த கட்சி.. எரியாத கட்சி பாணியில்’ தொடர்ந்து வெளியாகிவரும் கட்டுரைகளுக்கு ஒரு மாற்றாக இந்தக் கட்டுரையை நமது தளத்தில் மீளப் பிரசுரித்துள்ளோம்.

இதில் வருகிற கருத்துக்கள் முழுவதும் கட்டுரையாளரின்  பார்வையே. திரு ரஜினி சொன்னது போல இந்த ‘பெரியாரிய விருந்தில்’ உங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளலாம்!




20 thoughts on “பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? – வே.மதிமாறன்

  1. Kesava

    வணக்கம் திரு.மதிமாறன் …..தங்கள் ஆக்கத்தை வாசித்தேன் ….உங்கள் கருத்தகளை கூறியுள்ளீர்கள்….அது உங்கள் கருத்து சுதந்திரம்….ஆனால் அந்த மாவீரன் உள்ளாரா? இல்லையா? என்ற வாதங்களை ஒரு புறம் வைத்துவிட்டு அந்த மாமனிதன் என்ன லட்ஷியத்துடன் 30ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டாரோ அந்த தமிழ் மக்களின் விடுதலைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம் என உங்களையும் மற்றும் தமிழக உறவுகளையும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ்……….

  2. Jegan

    May be probhakaran is one of the best of Tamil leaders.

    //இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தார்’ என்பதற்கு பைபிளைத் தவிர எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் அப்படி ஒருவர் இருந்தார் என்று இன்னும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை, அப்படி இல்லாத ஒருவர் ‘இப்போது வரப்போகிறார்‘ என்று 2000 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என்று நம்பி ரொம்ப சீரியசா கண்ணீர் மல்க ‘வருகீறாரா’ என்று ஆவலோடு காத்துக் கிடக்கிறார்கள் மிகப் பலர்.//
    This sentences are very worst you(Mathimaran) handled. ungaludaiya words la oru kindal irukku. That is very wrong. Prabhakaran is a man not a god. Ok. pls remove whole words related with Jesus.
    May be you are a good Hindu or Muslim athukkaga Jesus illa appadinnu solla ungalukku entha arugathaiyum illa. (Ithu Vinokku) Nee enna rajini rajini rasigan. appadi sollathe. antha manusan kalaikaluvi kudikka kooda unakku arugathai illa. unna mathiri rasikarkal irukkathu than avarukku kedu. etho blog vaichi nadathidda maddum pothathu. eppadi nadanthukkanumnu theriyanum. அதுகூட பரவாயில்லை, அப்படி இல்லாத ஒருவர் intha word use banna vendiya avasiyame illa. I’m a regular visitor of your site. But this is the last visit from me and my friends

    Antha mathikeddavan(Mathi illathavanukku beru Mathimaran ) ezhuthina unakku enga pochi arivu. immediate aa antha sentence a cut bannu illaddi irukka koncham visitors m kanama poyiruvanunga.

    Bagaivanaiyum anbu seyyunnu sollurathu than Christianity.

    God bless you.

  3. Muthu

    Ayya vankkam ..

    thayavu seithu ottu motha parpanargalayum thavaraga yenni vida vendam..
    yenakku therinthey yethanayo parpanargal viduthai puligal -kku aathara vagavum , thalaivar prabhavidam unmaiyana unarvodum ninaithu vaazhnthu kondu irukkirargal.

    Arasiyal -kkaga silar seivathai oru samooga pratchanai yendru thayavu seithu yenna vendam.

    Appadi paarthal yellar samoogathilum siral panathukkagavum, arasiyal aathayathu-kkagavum ivvaru seikirrargal.

    Innum oru mukkiyamana vishayam Eezha unarvu Indiyavil ulla ella samoogathu thamizhargalai vidavum , ayal naadugalil vaazhum “Indiya- thamizhargalukku” miga miga adigam.

    Indiyavil thamizhnaatil ulla 100% thamizh makkalil 20% makkalukku thaan Eezha nigazhvugal oru Vali (pain) matra anaithu makkalukkum athu oru seithi (News).

  4. palPalani

    Muthu: நீங்க சொல்வதில் உண்மையும் இருக்கு!

    நண்பர் ஜெகன் அவர்களே! உங்களுக்கு (உங்களைபோன்றவர்களுக்கு) ஒரு சின்ன வேண்டுகோள், கிறிஸ்து அல்லது முஸ்லிம் இல்லாதவர்கள் எல்லோரும் ஹிந்து இல்லை!

  5. Amuthan

    See guys,

    I dont want go ur religion matter ,because iam a nathigan…

    Mr..ram,&soa,can u say this is ur indusim..Is hinduism say this type of genocode?.

    Very ashame to born in INDIA,if i was in born in UK and NEHERLANDS i wil be very happy…

    Even justice is differs from jews and tamilians,we should destory this mottai soa&Fu……ram..

    SEE,our tamil ilam wil be form one day wil arise..That time they wil

    behind us

    as a dog..

    Actulay im a doctor,if tamil ilam wil be formed,i wil be ready serve our

    peoples…this is god promise…

  6. Paarvai

    இவர்களின் இந்த வெத்து பார்ப்பனீய எதிர்ப்பு என்றுதான் ஓயுமோ….இந்த கட்டுரையில் கூட தேசியத் தலைவர் பெயரால் பார்ப்பன எதிர்ப்பு நடத்தியுள்ளார் இந்த பெரியாரிஸ்ட். அன்னாரது தலைவர் ப்ரேவ் பெல் , தேசியத்தலைவர் பற்றி என்ன சொல்கிறார் என இந்த கட்டுரையாளர் கேட்டாரா எனத் தெரியவில்லை. அல்லது குடும்பத்திற்கு பதவி வாங்க மத்தியிலே போராட்டம் செய்த முன்னாள் தமிழினத்த்லைவர் என்ன சொல்கிறார் என்பதுவும் தெரியாதா? அதைவிட்டுவிட்டு நிரந்தர புலியெதிர்ப்பு கொண்டிருக்கும் பத்திரிக்கைகளைச் சாடுகிறார்… இது ஒரு வெற்றுக்கூச்சல் தவிர வேறொன்றுமில்லை. இவர்களால் ஐந்து பைசா பிரயோசனமில்லை. எல்லா பிராமணர்களும் அப்படி அல்ல என்பதை இந்த உருப்படாத கும்பலுக்கு தெரிந்தாலும் விடுவதில்லை. ஏனென்றால் இதைவைத்தே இத்தனை வருடம் பிரிவினை செய்தாச்சே…கல்லா கட்டியாச்சே… விளக்கு கம்பத்தின் மீதே உச்சா போய் பழகிய நாய், பாத்ரூமில் போகுமா…

  7. endhiraa

    ஒட்டுமொத்த பார்ப்பனர்களையும் தவறாக நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்னைப் பொறுத்தமட்டும், தமிழகத்தில் எது நடந்தாலும் பார்ப்பனர்களை ஏளனம் செய்வது வாடிக்கையாகிவிட்ட ஒன்று. சோ ஒரு எழுத்தாளர். அவர் கூறியிருக்கும் கருத்துகள் அவர் மனம் சார்ந்ததாகவும் இருக்கலாம். அதற்காக ஒரு இனத்தையே இழிவாக பேசுவது மிகவும் தவறு. இந்த கருத்துகளுக்கெல்லாம் பார்ப்பன சமுதாயம் எதுவும் கண்டிக்கப் போவதில்லை (ஒரு சில அரசியல் சார்ந்த அமைப்புகளைத் தவிர).

    திரு. மதிமாறன் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் கூறிய பிராமண விரோத கருத்துகளை நான் தவறென்று நினைக்கிறேன்.

  8. VIVEK KAYAMOZHI

    EVERYTHING ‘MATHI’ SAYS ARE CORRECT. ‘MOST’ BHRAMINS ARE LIKE THAT(ESPECIALLY IN MEDIAS). IM ALSO A HINDU. BUT I ACCEPT PERIYAR’S ROLE IN MY SOCIAL DEVELOPEMENT. THEY ARE ALWAYS
    CONDEMN’S FALSE BELIEVES IN EVERY RELEGIONS,BUT MOST OF TIME IN HIDUISM ONLY.
    LIKE THAT HE SAYS SOMETHING ABT JESUS. SO, NOTHING IS WRONG WITH HIM.
    I BELIEVE YOUR SITE IS NOT ONLY FOR RAJNI.FOR ALL TAMILS. YOU DONT NEED PEOPLE
    LIKE JAGAN. MANY OF US (NOT RAJNI FANS,BUT NOT HIS ENEMIES) ARE WITH U.

    CONTINUE UR JOB…GOODLUCK…!

  9. sivasankar

    I am a regular visitor of this site. But of late i found that several articles like this only . I dont mind u criticise brahmins but critize logically (i am being a Brahmin and also a Rajin fan). I am saying i am a brahmin you crticized brahmins that is why i am saying other wise i wont say my caste.. Most brahmins practicses caste only inside the house and almost brahminism has been diluted but even then these so called periyar intellcutals wont leave brahmins… they criticise brahmins for everything because that is their easy target…these people never have the guts to crticise the caste clashes happened in law colleges or happened in Tirunelveli few months back anyhow being a Rajini fan i will visit this site frequently never mind whatever the crticisim against that community….

  10. sivasankar

    adding on to my earlier comments, Superstar is also having good friends belonging to that community .. i am not saying all brahmins are good … there are several bad people in that community also ….like other coomunites… but when somethings is found wrong in people belonging to Brahmins community, people will not loose that opportunity of criticising that community as a whole.. if Cho’s policy or Brahmins Associations policy is wrong criticise that policy…….Last but not least now a days ……..it is all up to the individualism… there is no community or clashes.. it is how they brought up that matters…………..anyhow i am not saying these type of articles should not be published.. but at the same time let us not hurt the feeling of the community as a whole… as SS is having fans from all communits irrespective of caste, creed religion and even it extends beyond India….. One good thing about that site is it is also publsihing the comments if the comments are against the article hence i think this will also be published for the viewers benefit…

  11. Bhuvanesh

    //இவர்கள் விடுதலைப் புலிகளை எதிர்த்து எழுதுவதை நாம் குறை சொல்லவில்லை. அது அவர்களின் அரசியல் நிலை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதை எதிர்த்து இலங்கை அரசையோ, ராணுவத்தையோ, ராஜபக்சேவையோ கண்டித்து ஒரு வார்த்தைகூட எழுத மறுக்கிறார்களே, ஏன்?//

    நேத்தி அடி மதி மாறன் சார்.. அவர்கள் விடுதலை புலிகளை பற்றி மட்டும் சொல்கிறார்கள்.. அது தீவிரவாதமாம்.. அப்பாவி மக்களை கொவதற்கு பேர் என்னவாம் ??

    ஆனால் நான் உங்களை போல் இப்படி சொல்பவர்களை பார்பனர் என்று சொல்லவில்லை.. தமிழக முதல்வர்.. பெரியார் சீடர் பார்பனர் இல்லை.. அவரும் நீங்கள் மேலே சொன்ன ரெண்டு பேருக்கும் எந்த வித்யாசமும் இல்லை..

    அதனால் நான் இதை புலி எதிர்பாளர்களுக்கான கேள்வியாய் தான் காண்கிறேன்..

    (நீங்களும் ஈழ பிரச்சனையை வைத்து உங்கள் அரசியலை (பார்பன வெறுப்பு/ எதிர்ப்பு) ஆரங்கேற்றி இருக்க வேண்டாம் !!)

  12. Manoharan

    மதி தன்னுடைய கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.இதில் தவறேதும் இல்லை. பார்ப்பன எதிர்ப்பு என்பது எல்லா பார்ப்பனரையும் எதிர்ப்பது அல்ல. அதிகாரத்தில் உள்ள பெரும்பாலான பார்ப்பனர்களுக்கு தமிழ் உணர்வு என்பதே கிடையாது.இவர்கள் புலிகளை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள்.சோ,இந்து,தினமலர் போன்ற பார்ப்பனர்களுக்கு கீழ்தட்டு மக்களை பற்றியோ,ஈழ மக்களை பற்றியோ ஒரு கவலையும் கிடையாது. இந்துவில் பிரசுரிக்கபடும் வாசகர் கடிதம் எல்லாமே ராஜபக்க்ஷேவை பாராட்டி வருகின்றன. ஏன் ஒரு கடிதம் கூடவா பிரபாகரனை ஆதரித்து வரவில்லை ? வரும், ஆனால் பிரசுரிக்கப்படுவதில்லை. காரணம் இந்துவின் பார்ப்பன திமிர். அதே போல்தான் தினமலரும்…ஈழமக்களின் அவலங்களை பற்றியோ, இங்கு நடக்கும் போராட்டங்கள் பற்றியோ செய்திகள் திரித்து பிரசுரிக்கப்படுகின்றன.காரணம் தினமலர் ஆசிரியன் ஒரு பார்ப்பனன்.அதிகார வட்டத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் கூட இப்படித்தான். இன்னொரு பெரியார் வந்தால் கூட இவனுகளை அடக்க முடியாது. நாம் புறக்கனிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

  13. Manoharan

    See, Even Mr.Sivasankar did not mention anything about Ealam or Prabhakaran. This is their mentality. They never care for Low level or Low caste Tamils or that of Eazham Tamils. He writes only about his caste. Thats it.

  14. sivasankar

    Mr Manoharan, everyone need not have to have their views similar to you with respect to Eelam or Prabhakaran. If i have a different view,u will immdly jump to the caste and then people forget about the issue only the caste will prevail… that is what happenign in Tamil Nadu.. if u want to talk about the issue please carry on with the issue, and substanitate it with favourable points and dont dilute it with unncessarily invoking caste name… if MK/P Chidambaram talk against Tamil elam do u have the guts to use their caste name and condemn that .. why the same priniciple cannot be applied to Cho.. i am not having opinion that Brahmins cannot be criticized criticse logically that is what i am telling u … u have mentioned that we never care for Low caste tamils just by talking and makign a hue and cry .. doesn;t mean that others care.. we were also responsible citizens… u also said we should try to ignore… ignoring is your right no one is going to object but dont fall prey in to the dravidian politics of criticziing brahmins publicly and behind the scenes they do some thing else…..

  15. Manoharan

    Mr.Sivasankar I respect your views. But I ma not in DMK or ADMK. Infact I really dont know the caste of Mr.Karunanidhi. Chidambaram is Nattukottai Chettiar and as per my knowledge no other Nattukottai Chettiar is betraying Tamils like Chidambaram does. I just exactly mean that Most of the Brahmins are still thinking that they are Superior and most of the other castes or Inferior to them. U cant diagree with me. I m sorry to say that still there is no words from you about the sufferings of Tamil People. This is only my opinion and not conclusion. I dont intend to hurt Brahmins. But sometimes the Highlevel Brahmins are making me to think like they does not care for others.Any way I m keeping a Big full stop to this caste issue. I m not for caste Politics. This is just a view.

  16. lingam

    பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!
    12 02 2009

    ஈழத்தமிழர்களுக்கு எதிராக பார்ப்பன ஊடகங்கள் சொல்லி வைத்தாற்போல் ஒன்றுபோலவே செயல்படுகின்றனவே?

    -கு. தமிழ்ச்செல்வன்

    ஒருமுறை தந்தை பெரியார், பார்ப்பனர்களின் சுயநலத்தை விளக்கி சொல்லும்போது:

    “நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறதை எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று சொன்னார்.

    ‘என்னடா இது பைத்தியத்துலக் கூடவா பார்ப்பனப் பைத்தியம், பார்ப்பனரல்லாத பைத்தியம் இது கொஞ்ச ஓவரா தெரியுதே’ என்கிற எண்ணம் அதை படித்தபோது எனக்கு தோன்றியது.

    ஆனால், இந்த சுப்பிரமணிய சுவாமி, சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து ராம் போன்றவர்களின் செயல்களைப் பார்க்கும்போது, பெரியார் எவ்வளவு தெளிவா, தீர்க்கமா சிந்திச்சிருக்காருன்னு புரியுது.

    ‘பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை’ என்று பெரியார் சொன்னார்.

    தமிழ்த்தேசியவாதிகள், ‘பெரியார்தான் தமிழர் இல்லை. பார்ப்பனர்கள் பச்சைத் தமிழர்கள்’ என்று திருப்பிப் போட்டனர்.

    ஆனால், தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போது, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம், பார்ப்பனர்கள் தமிழ்தேசியவாதிகளின் கூற்றைப் பொய்யாக்கி, பெரியாரின் வார்த்தையை மெய்யாக்குகிறார்கள்.

    ‘ஈழத்தமிழர்களை குவியல் குவியலாக கொலை செய்கிறான் சிங்கள ராஜபக்சே. இந்திய அரசே, அதை தடுத்து நிறுத்து’ என்று தமிழகத் தெருக்களில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, ‘டிசம்பர் மாத கச்சேரி’ என்று சபாக்களில் கர்நாடக சங்கீத ஆலாபனைகளில் தாளம்போட்டு ‘ச்சூ’ கொட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள் பார்ப்பனர்கள்.

    அவர்களின் ‘ச்சூ’, ஒலி ரசனையின் அடிப்படையில்தான் எழுகிறதே தவிர, தமிழர்களின் மீதான இரக்கத்தின் அடிப்படையில் ஒருநாளும் எழுவதில்லை.

    (வீதியில் இறங்கி போராடுவதை கேவலமாக, பொது மக்களுக்கு இடைஞ்சலாக கருதுகிற இவர்கள்தான், கொலை செய்த ஜெயேந்திரனுக்கு ஆதரவாக, வீதியில் இறங்கி போராடினார்கள்.)

    ஈழத்தமிழர்களின் துயரங்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், என்பதுகூட பிரச்சினை இல்லை. அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதுதான் வருந்ததக்கது. அதையும்மீறி, ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையோடு பேசுகிறார்கள். ‘பரவாயில்லையே’ என்று நாம் புருவம் உயர்த்தினால், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில், மாவரைக்கிற கருணாநிதியை திட்டுவதற்கான ஒரு நல்வாய்ப்பாகத்தான் ஈழத்தமிழர்களின் துயரங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், ஞாநியைப் போல.

    ‘தங்கபாலு, ப. சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசு, குமரி அனந்தன், ஓ. பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் பச்சைத் தமிழர்கள்தான். அவர்கள் என்ன ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவா இருக்கிறார்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம்.

    இவர்கள் தங்கள் சொந்தக் கருத்தைவிடவும் தாங்கள் சார்ந்திருக்கிற கட்சியின் நிலைபாட்டை பிரதிபலிக்கிறார்கள். அல்லது இவர்களுக்கு சொந்தக் கருத்து என்பதே கிடையாது. எது அவர்களுக்கு லாபமாக இருக்கிறதோ அதை செய்கிறார்கள். ஆக, இவர்களை தமிழர்கள் என்றோ, இல்லை அவர்கள் சார்ந்திருக்கிற ஜாதிகளின் பிரதிநிதிகள் என்றோகூட முடிவு செய்யமுடியாது.

    ஆனால், கட்சி சாராத பார்ப்பனர்கள்கூட பெரும்பாலும், ஈழத்தமிழர்கள் விவகாரங்களில் எதிராக இருக்கிறார்கள். அல்லது அக்கறையற்று இருக்கிறார்கள்.

    பத்திரிகைகளில்கூட, பார்ப்பனரல்லாத பத்திரிகைகளில் வருகிற இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளுக்கு பின்புலமாக, இலங்கை அரசின் ‘விருந்தாளி’யாக இன்ப சுற்றுலா சென்று வந்த பத்திரிகையாளர்கள், தாங்கள் வாங்கிய காசுக்கு விசுவாசமாக செய்திகள் வெளியிடுகிறார்கள்.

    ஆனால், துக்ளக், தினமலர், இந்து நாளிதழ்கள் இன்ப சுற்றுலாவிற்கு முன்பிருந்தே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகத்தான் இயங்குகிறார்கள்.

    “நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறத எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று பெரியார் சொன்னது எவ்வளவு தீர்க்க தரிசனம்.

    தேசப்பற்றாளரைப்போல், ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்று தீவிரமாக எழுதிய சுப்பிரமணிய பாரதி, ‘பார்ப்பன எதிர்ப்பு’ அல்லது ‘பார்ப்பனரல்லாதார் உரிமை’ என்று சிலர் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கல்லை விட்டெறிந்தைப் போல்,

    சுற்றுசூழல் பாதுகாப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம், அமெரிக்காவின் அட்டூழியம் என்று எழுதினால் ஓடி வந்து அதற்கு ஆதரவாக ஒரு நக்சலைட்டைப் போல் கருத்து சொல்கிற பார்ப்பனர்களில் பலர்,

    பெரியார் – அம்பேத்கர் நிலையில் இருந்து இந்து மத எதிர்ப்பு, இட ஓதுக்கீடு ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, பாரதியின் பார்ப்பன பாசம் என்று நாம் எழுதினால், அதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல், ஒரு வெறிப்பிடித்த தெருநாய் பாய்ந்து வந்து கடிப்பதுபோல், நம்மை கடித்து குதுறுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகளில் பலர்.

    ஆக, பெரியார் சொன்னபடி பெரியார் கட்சிக்காரர்கள் நடந்துகொள்கிறார்களோ இல்லையோ, பார்ப்பனர்கள்தான் பெரியார் சொன்னபடி நடந்து கொள்கிறார்கள்.

    குறிப்பு:

    ஈழத்தமிழர்களின் துயரங்களுக்காக தன் வருத்தத்தைத் தீவிரமாக பதிவு செய்கிற, மிகச் சிறுபான்மையான ஒன்று, இரண்டு பார்ப்பனர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மற்றபடி, எந்த நேரமும் நான் என்ன எழுதுகிறேன் என்பதையே கண்காணித்து, என்னை பாய்ந்து புடுங்குகிற அறிவாளிகளே… ஆரம்பிங்க உங்க வேலையை…

    http://mathimaran.wordpress.com/2009/02/12/article164/

  17. sivasankar

    Mr Vino, these blogs/sites are based on your hardwork and who else will have the right to give your views apart from you… it is just that we wanted to give our views … irrespective of whether u write opposite to us or not we continue to visit your site and enrich ourselves on various subjects….Thanks for publishing our comments.

  18. மன்னை முத்துக்குமார்.

    திரு சிவசங்கர் அவர்களே
    கருத்தை எதிர்கொள்ளாமல் கருத்துக்கு பதில் அளிக்காமல் தனிப்பட்ட முறையில் அன்பாக கோரிக்கை வைத்து பார்ப்பன ஆதிக்கத்தை ஆதரிப்பது பார்ப்பன ஆதிக்கத்தை அம்பலப்படுத்துவதை வேற வழியல் வந்து தடுத்து நிறுத்தவதுதான் பார்ப்பனய சிந்தனை.

    எதையும் நேரடியாக எதிர்கொள்ளாமல் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து புகழ்ந்து காரியம் சாதிப்பது தனக்கு எதிரானவர்களை காலி செய்வதுதான் பார்ப்பனியம்.

    வரலாறு முழுக்க இப்படித்தான் பார்ப்பனர்கள் மன்னர்களை ஆளும் வர்க்கத்தை தாஜா செய்து தங்களை வசதிகளை வாய்ப்புகளை பெறுக்கி கொள்வது அடுத்தவர்களுக்கான வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதாக செய்படுகிறது.

    அந்த தொனி உங்களிடமும் இருக்கறது.இனி மதிமாறனின் எழுத்துக்களையோ அவர் பொன்ற பெரியார்வாதிகளின் கருத்துகளையோ பிரசுரிக்கக் கூடாது என்பதுதான் உங்களின் கோரிக்கை.

    வாழ்க உங்கள் தொண்டு.

  19. Manoharan

    This site does not belongs to people like Mr.Sivasankar only. Its for all our Rajini Fans and True Tamilians. Vino is one among us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *