BREAKING NEWS
Search

பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன! – கருணாநிதி


பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன! – கருணாநிதி

சென்னை: ஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.mar09_Karu15

ஆனால் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றிய ஜெயலலிதா என் மீது பாய்வதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று இரவு வெளியிட்ட கேள்வி – பதில் வடிவ அறிக்கை:

நீங்கள் 18-11-2009 அன்று “நம் மவுன வலி; யாருக்கு தெரியப் போகிறது?” என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?

ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் இளந்தலைவர் ராஜீவ்காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும், யோதீஸ்வரனும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது – அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?

அனுதாபம் தெரிவிக்கவும் உரிமையில்லையா?

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன்.

அது-

“எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை!

கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?”

மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தவர்தான் அவர்.

அப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்!

பிரபாகரனைப் பற்றி…

விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றி நேரடியாக எந்த விதமான தனிப்பட்ட குற்றச்சாட்டினையும் கூறாமல், அந்த இயக்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையெல்லாம் சுட்டிக்காட்டி, தெளிவில்லாமல் அவசரப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அல்லவா இத்தனை பாதிப்புகள் என்று வேதனையோடு எழுதியிருந்தீர்கள். அந்த கடிதத்தை அனைவரும் பாராட்டி எழுதியிருந்தார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலர் மட்டும், குறிப்பாக எதிர்க்கட்சி தலைவி ஜெயலலிதா உள்பட தாங்கள் பிரபாகரனை கடுமையாகத் தாக்கி எழுதி விட்டதைப்போல அறிக்கை விடுத்துள்ளனரே?

பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல, கடிதம் அல்ல, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 16-4-2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் வருமாறு:

சட்டப்பேரவையில் தீர்மானம்

* இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.

* விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

* ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக்கொண்டு வரவேண்டும்.

இப்படியொரு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியவர்தான் தற்போது நான் நல்லதையெண்ணி நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். பிரபாகரனை; என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்கு துணை போய் நம்மைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.

துரோகிகளுக்கு பாராட்டுப் பத்திரமா?

துரோகிகளுக்குப் பாராட்டுப் பத்திரம் நீங்கள் வழங்குவதாக ஒருவர் அறிக்கை விட்டிருக்கிறாரே?

உண்மைதான் -துரோகிகள் யார் என்று தெரியாமல் அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்!
9 thoughts on “பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன! – கருணாநிதி

 1. Magesh

  What MK is saying abt Prabhakaran, the word he used “வீழ்த்தப்பட்ட” means, he died or lost in the war?
  ஈழ விடுதலைப்போரில் “வீழ்த்தப்பட்ட” வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன
  Can anyone explain it?

 2. Mariappan

  kulla nari marupadi than வேலைய காமிக்குது. சென்ட்ரல் கோவேர்ந்மேன்ட் ஒரு விளையாட்டு விளையாடுது. ஸ்டேட் கோவேர்ந்மேன்ட் நீலி கண்ணீர் வடிக்குது. ஜனங்களே உஷாரு.

 3. muthuvel

  பொது அறிவு கேள்வி.

  நரகாசுரன் செத்தா வட இந்திய தீபாவளி.
  எவன் செத்தா தமிழன் தீபாவளி ?

 4. Manoharan

  தமிழன் தீபாவளி கொண்டாட நரகாசுரர்கள் சாகவேண்டும்…
  ராஜ,பசில்,கோத்தப்பாய பக்ஷேக்கள்,சரத் பொன்சேகா,கருணா‍‍ 1,கருணா 2,சோனியா,எம்.கே.நாரயணன்,சிவசங்கர்மேனன்,மற்றும் பலர்….

 5. சூர்யா

  அடச்சீ… இதெல்லாம் உனக்கு ஒரு பிழைப்பா…?

 6. endhiraa

  கலைஞரின் காமெடிக் கவிதைகள் என்ற தலைப்பில் வந்துள்ளதை அவ்வப்போது தமாசுல போடுங்க…எல்லாரும் நிறையவே சிரிக்கலாம் !

 7. தமிழன்

  summaa irukkavanai…
  soriya soriya sugamaa irukkumm…
  apparam punnaagidum…
  piragu thadivikoduththaa sugamaa irukkum..
  enna azhagaan kanakku…

 8. fullmoon

  இத்துணை பேருக்காக கலங்கிய இதயமும் கண்ணீர்வடிக்கும் விழிகளும் அன்று உமது தலைமை கழக உடன் பிறப்பு,தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்த, ஐ நா வில் உரையாற்றிய,உமது சொத்துக்களுக்கு எல்லாம் பாதுகாப்பாக விளங்கிய,உமது துணை முதல்வர் மகனுக்கு இடது கரமாக விளங்கிய,மறைந்த “தா.கிரிட்டிணன்” படுகொலை செய்யப்பட்டபோது ஏனப்பா அழுகவில்லை?உமது கண்கள் குழமாகவில்லை? அவர்தம் மனைவி மக்கள் துன்பப்பட்டது யாரால்? நிர்கதியாகிப்போன அவரின் குடும்பத்திற்கு யார் காரணம்?

  தேவகோட்டையில் நடு வீதியில் குடும்பத்துடன் வெட்டி சாய்க்கப்பட்டாணே “ரூசோ “அவனது சொந்தங்கள் அழுவது உமது செவிகளில் விழவில்லையோ?

  இப்படி உம்மால் உன் குடும்பத்தாரால் குடி கெட்டோர்,குடி இழந்தோர் ஏராளம் ஏராளம்.அவர்கள் எல்லாம் செய்த பாவமென்ன.?

  இவைதான் உண்மையான சகோதர யுத்தங்கள்,நம்பிக்கை துரோகங்கள். குள்ள நரித்தனங்கள்.

  மனசாட்சி உள்ளவரென்றால் இதற்கும் சேர்த்தே அழட்டும் உன் மனது.

  அவர்கள் ஆன்மா விரைவில் உம்மை பழி தீர்க்கும்…………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *