BREAKING NEWS
Search

பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்!

பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் (60) சென்னையில் வியாழக்கிமை காலை காலமானார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24-ந் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் அவர் நினைவிழந்து, ‘கோமா’வில் மூழ்கினார். அவரை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை பொதுமருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக அவரது மகன் தெரிவித்தார்.

இந்நிலையில் அவருக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை இறந்தார். தீவிர

நினைவில் நின்ற ‘மாம்பூவே சிறு மைனாவே…

இசையமைப்பாளர் தேவாவும், சந்திரபோசும் ஆரம்ப காலங்களில் பக்தி பாடல்களுக்கு இசையமைத்தனர். பின்னர் அகில இந்திய வானொலியிலும் சில காலம் பணியாற்றினார்.

வி.சி.குகநாதன் டைரக்டு செய்த ‘மதுரகீதம்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், சந்திரபோஸ். எம்எஸ்விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா அவரை மிகப் பிரபலமாக்கியது.

பின்னர் இவர் இசையமைத்த மச்சானைப் பார்த்தீங்களா படத்தில் இடம்பெற்ற ‘மாம்பூவே சிறு மைனாவே’ என்ற பாடல் மிகப் பிரபலமடைந்தது.

தொடர்ந்து மாங்குடி மைனர், முதல் குரல், மைக்கேல்ராஜ், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, ராஜா சின்ன ரோஜா, விடுதலை உள்பட 120 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

ரஜினியின் மனிதன், ராஜா சின்ன ரோஜா, விடுதலை போன்ற படங்களுக்கு தொடர்ந்து இசையமத்து முன்னணியில் இருந்தார் சந்திரபோஸ். ஏவி எம் தயாரித்த 12 படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தவர் சந்திரபோஸ்.

மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற ‘மெதுவா மெதுவா’, சங்கர் குருவில் இடம் பெற்ற ‘காக்கிச் சட்ட போட்ட மச்சான்’, மக்கள் என் பக்கம் படத்தில் வரும் ‘ஆண்டவனைப் பாக்கணும்’ போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

கடந்த சில ஆண்டுகளாக டிவி தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். மலர்கள், வைரநெஞ்சம், ஜனனம் போன்ற தொடர்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்தார்.

சமீபத்தில் தன் மகனுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்த சந்திரபோஸ், மனைவியுடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார்.

சந்திரபோஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மைலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
3 thoughts on “பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்!

 1. கிரி

  திரு சந்திரபோஸ் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  நான் 1998 கம்ப்யூட்டர் சர்வீஸ் ல் இருந்த போது இவரது வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் பழுதானால் என்னைத்தான் அழைப்பார். மிகவும் நட்பாக பழகுவார். அவரது வீட்டிற்கு சர்வீஸ் செல்வது என்றாலே எனக்கு ரொம்ப விருப்பமாக இருக்கும். ஒரு இசையமைப்பாளர் என்ற பந்தா இல்லாமல் பழகினார்.

  என்னப்பா கிரி! நீ வந்தால் தான் கம்ப்யூட்டர் சரி ஆகும் போல என்று நகைச்சுவையாக கூறுவார்.. இப்படி அன்பாக பழகியவர் தற்போது இல்லை எனும் போது அளவுகடந்த வருத்தம் ஏற்படுகிறது.

  இவருடைய இசையில் வந்த சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் பாடல் இன்று வரை பலரின் உதாரணமாக கூற பயன்படுத்தப்படுகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவாகும்.

  தற்போது சீரியலில் நடித்துக்கொண்டு இருந்தார்.. உடன் பழகியவர்களுக்கு இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பு.

  அவர் மறைந்தாலும் அவரால் இசையமைக்கப்பட்ட பாடல்கள் என்றும் அவரது நினைவை கூறும்.

 2. Logan

  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *