BREAKING NEWS
Search

பிரதமர் இல்லத்தில் இரு ‘குற்றவாளிகள்!’

ராஜபக்சே: “பயப்படாம சும்மா குலுக்குங்க டக்ளஸ்… மெட்ராஸ்ல உங்க மேல உள்ள கொலை கொள்ளை குழந்தை கடத்தல் கேஸெல்லாம் ஜூஜுபி.

என் மேல கூடதான் 80 ஆயிரம், 1 லட்சம் தமிழர்களைக் கொன்னுட்டதா குற்றச்சாட்டு இருக்கு. சிங்கு கூசாம கட்டிப்புடிச்சி கைகுலுக்கலையா…!!”

இடம்: பிரதமர் இல்லம், தலைநகர் டெல்லி

நாள்: 10.06.2020
15 thoughts on “பிரதமர் இல்லத்தில் இரு ‘குற்றவாளிகள்!’

 1. Kumar

  What a spectacular article.You all will see Rajini movies produced by Sun TV who has hand in war happened in SL but you will not accept it.Very nice.First of all i ask everyone whether you all will not see rajini movie then talk about fellow tamil SL people.

 2. sakthivel

  இந்தியன் என்று சொல்லடா; தலைகுனிந்து நில்லடா….
  காங்கிரஸ்= களவானிகளின் கூடாரம்.

 3. saravanaraj .s.p

  டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை பொலிஸ் கமிஷனர்
  [ வியாழக்கிழமை, 10 யூன் 2010, 01:57.46 PM GMT +05:30 ]
  சென்னை பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரனிடம், செய்தியாளர்கள் இன்று டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமிஷனர் இராஜேந்திரன், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் ஒரு குற்றவாளி என்று கூறியுள்ளார்.

  இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் இந்தியா வந்துள்ளார்.

  1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார்.

  இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

  வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் பொலிஸில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

  1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.

  இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

  இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரனிடம், டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

  இதற்கு பதில் அளித்த சென்னை பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரன், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி. அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது குறித்து டில்லி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு நடவடிக்கைகளை டில்லி பொலிஸார்தான் பார்க்க வேண்டும். டில்லி பொலிஸார் கேட்டுக்கொண்டால், தமிழகத்தில் இருந்து சிறப்பு காவல்படையை அனுப்பி உதவி செய்யப்படும். ஆனால் டில்லி பொலிஸார் தான் கைது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

 4. kavirimainthan

  இலங்கை அரசாங்கம் சார்பில்
  அழைப்பிதழ் கொடுக்கப்பட்டும் அதை
  வாங்கவே மறுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

  தமிழர் பிரச்சினை தீரும் வரை
  அவமானம் தொடரும்:
  சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.

  வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை
  மீள்குடியேற்றி, நியாயமான அரசியல்
  தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின்
  முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை
  இலங்கையால் தவிர்க்கவே முடியாது.
  ஐய்ஃபா விழாவில் நடந்துள்ள அவமானம்
  தொடரும்

  என்று இலங்கை ஐய்க்கிய தேசிய கட்சியின்
  சிங்கள பெண் எம்பி ரோஸி சேனநாயக்க
  கூறியுள்ளார்.

  கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர்
  அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்
  கூட்டத்தில் பங்கேற்ற ரோஸி கூறியதாவது:

  போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து
  வாழும் மக்களை மீள்குடியேற்றி விட்டதாக
  ராஜபக்சே வெளிநாட்டு ஊடகங்களுக்கு
  பேட்டி கொடுத்து வருகிறார்.

  இது அப்பட்டமான பொய்.

  உண்மையில், மூன்றில் இரண்டு பங்கு
  மக்கள் இன்றும் அகதி முகாம்களில்
  எந்தவிதமான வசதிகளுமின்றி வாழ்கின்றனர்.

  மக்களை மீள்குடியேற்றியதாக அரசாங்கம்
  கூறுகின்றது. ஆனால் அம்மக்கள் இன்றும்
  தகரக் கொட்டகைகளில் மிருகங்களைப்போல்

  வாழ்கின்றனர்.

  உண்ண உணவில்லை,
  வாழ்வதற்கு வழியில்லாது,
  தொழில் இல்லாது
  பிள்ளைகளுக்கு கல்வி இல்லாது,
  அடிப்படை வசதிகளின்றி
  பரிதாபமான நிலையில் உள்ளனர்.

  மறுபுறம் யுத்தம் முடிந்து ஒரு வருடம்
  கழிந்தபோதும் இதுவரையில்
  தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும்
  அரசியல் தீர்வு என்னவென்பதை
  மகிந்த அரசாங்கம் முன்வைக்கவில்லை.

  இந்த சூழலில் சர்வதேச ரீதியாக
  புகழ்பெற்ற ஐய்ஃபா திரைப்பட விழா
  இலங்கையில் நடைப்பெற்றது. இது
  இலங்கைக்கு கவுரவம்தான்.

  ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான
  அரசாங்கத்தின் நடவடிக்கைகளால்
  தென்னிந்தியா உள்பட சர்வதேச
  நாடு களில் வாழும் தமிழ் மக்கள்
  இவ்விழாவில் நடிகர்கள் கலந்து
  கொள்ளக்கூடாது என கடும்
  ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

  இதன் மூலம் இலங்கைக்கு களங்கமும்
  அவமானமும் ஏற்பட்டுள்ளது. இதற்கான
  முழுப்பொறுப்பும் ராஜபக்சே
  அரசாங்கத்தையே சேரும்.

  ஐய்ஃபா சினிமா விழாவின் தூதுவரும்
  ஏற்பாட்டாளருமான அமிர்தாப்பச்சன்,
  அபிஷேக் பச்சன், உலகப் புகழ் பெற்ற
  நடிகை ஐய்ஸ்வர்யாராய் போன்ற நடிகர்களும்,

  தென்னிந்திய புகழ் நடிகர்கள் கமல்ஹாசன்,
  ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம்
  போன்ற முக்கிய பிரமுகர்கள்,
  புகழ் பெற்றவர்கள் இந்நிகழ்வில்
  கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

  தென்னிந்தியாவிலும் சர்வதேச ரீதியிலும்
  இலங்கை அரசுக்கு எதிராக எழுந்துள்ள
  எதிர்ப்பு நிலைதான் இதற்குக் காரணம்.

  இதன் மூலம் தமிழ் மக்களுக்கு இலங்கை
  எந்த நியாயத்தையும் வழங்கவில்லையென்பது

  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  யுத்தத்தில் வெற்றி பெற்று பயங்கரவாதத்தை
  ஒழித்து ஒரு வருடம் கழிந்த போதும்

  இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம்

  வழங்கவில்லை.

  வெறுமனே அரசியலமைப்பு திருத்தம்,
  ஆசியாவில் ஆச்சர்யமிக்க நாடாக
  மாற்றுவோம் என அரசு தரப்பில் வாய்கிழிய

  கூறித்திரிகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு
  அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதற்கான
  அறிகுறியே இல்லை.

  இப்படியொரு சூழலில், இந்தியாவிலும்
  உலகிலும் அரசாங்கத்திற்கு எதிராக
  கிளர்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே
  இருக்கும். இலங்கைக்கு அவமானங்களும்
  தொடரவே செய்யும்.

  ஐய்பா சினிமா விழா என்பது உலகப் புகழ்
  பெற்றது. ஆசியாவின் ஆஸ்கர் என
  வர்ணிக்கப்படுவது.

  சர்வதேச திரைத்துறையில் மூன்றில்
  இரண்டு பங்குடன் பெரும் ஜாம்பவானாகத்
  திகழும் இந்திய திரைத்துறை

  வேறு நாடுகளில் இதனை நடத்துவது
  அந்த நாட்டுக்கு கவுரவத்தையும், புகழையும்

  பெற்றுக்கொடுக்கும்.
  ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பிழையான

  செயற்பாடுகளால் கவுரவத்துக்குப் பதில்

  அவமானமே மிஞ்சியுள்ளது. அரசாங்கம்
  தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து,
  அதிகாரப் பரவலாக்கல்,
  இனத்துவ கவுரவத்தை வழங்கும்
  அரசியல் தீர்வை உடனே அறிவிக்க வேண்டும்.

  அதைவிடுத்து தமிழ் மக்களை
  ஓரம் கட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தால்
  உலக நாடுகளிலிருந்து நாம்
  தனிமைப்படுத்தப்படுவோம் என்றார்.

  – காவிரிமைந்தன்
  http://www.vimarisanam.wordpress.com

 5. M.S.Vasan

  இருப‌தாயிர‌ம் உயிர்க‌ளை, காவு வாங்கிய‌
  வார‌ன் ஆன்ட‌ர்ச‌னையே, த‌ப்பிப் போக‌
  விமான‌ம் த‌ந்த‌ துரோக‌ த‌லைவ‌ர்க‌ளும்,
  இருப‌த்தைந்தாண்டுக‌ள் இதையறியா
  முட்டாள் ம‌க்க‌ளும்,வாழும் ந‌ம்ம‌ நாட்டில்,
  வேறு எதை எதிர்பார்க்கிறீர்க‌ள்?

 6. palPalani

  சூப்பர்!!!
  இதுதான் உண்மையான் தலையாட்டி பொம்மை… சாரி, கையாட்டி பொம்மை.

  சோனியா சொல்லிட்டா பாம்பு புத்துக்குள்ளகோட கையவிடும்போல.

 7. Sridhar

  நாம் தமிழர்களாக இருந்து என்ன பயன் ?
  நம்மிடம் நல்ல தலைவர் இல்லை.
  கடவுள் கல்லாக இருபதனால் கயவர்கள்
  கல் நெஞ்சகாரர்கள் ஆகின்றனர் ….
  கடவுளே நீ உண்மை என்றால்
  மறுபடியும் ஒரு சுனாமியை வீசு …
  நம் தமிழர்களை மட்டும் விட்டு விடு…

 8. palPalani

  /*
  டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி
  */
  இந்திய நாட்டில் தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தாலோ அல்லது அவருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவருக்கும் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கப்படுமாம். அப்ப இந்த டொப்பி தலையனுக்கு தண்டனை கிடைக்குமா?

 9. Manoharan

  இப்போது முக்கால்வாசி தமிழர்களிடம் ஈழப் பிரச்சனை நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது . நிச்சயம் ஒருநாள் இது மிகப் பெரிய எரிமலையாக வெடிக்கும் .
  அதன் அறிகுறிகள் தான் IIFA விழாவின் தோல்வி . தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் எந்த அரசாங்கமும் நம்மிடம் படியும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

 10. eelam tamil

  for prabaharan’s old mother case, people talked about rules and regulations. how come every thing gone lost for duglas? Anyone could ask mr karuna or ask courts system…

 11. Dinesh

  தமிழ் நாட்டில தேடப்படும் குற்றவாளி இந்தியாவுக்கு தான போனாரு. விடுங்க தமிழ் நாட்டுக்கு வரும் போது புடிச்சிக்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *