BREAKING NEWS
Search

பிஎட் படித்தவரா… 564 அரசுப் பணியிடங்கள் காத்திருக்கு!

பிஎட் படித்தவரா… 564 அரசுப் பணியிடங்கள் காத்திருக்கு!

tnemblemமுழுக்க முழுக்க அரசுப் பதவி இது. நல்ல சம்பளம், உடனே விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்.

பணியின் பெயர்: வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் (Teacher Trainer). அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார வள மையங்களில் நிரப்பப்படும் பணி இது.

தகுதி: இளங்கலை / அறிவியல் படிப்புடன், பிஎட் முடித்திருக்க வேண்டும்.

பணியிடங்கள்:

தமிழ்                 18

ஆங்கிலம்      18

கணிதம்       283

இயற்பியல்  29

வேதியியல்  30

தாவரவியல்  27

விலங்கியல்  45

வரலாறு         90

புவியியல்     24

மொத்தம் –  564

சம்பளம்: ரூ.9300-34800 Band ரூ.4400

தகுதி: மேற்கண்ட பாடங்களில் பிஎட் முடித்திருப்பது கட்டாயம்.

வயது வரம்பு: அதிகபட்சம் 57 ஆண்டுகள் (வேலைவாய்ப்பு மையத்தில் 14.12.2009-க்குள் பதிவு செய்திருப்பது கட்டாயம்)

விண்ணப்பங்கள்: விண்ணப்ப படிவங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை 50 ரூபாய்.

தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் சார்பில் இதற்கான போட்டி எழுத்துத் தேர்வு, 2010 ஜனவரி 31-ல் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 300 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை(டி.டி) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய மூன்று வங்கிகளில், ஏதாவது ஒரு வங்கியில் ‘தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை’ என்ற முகவரிக்கு டி.டி. பெற வேண்டும்.

தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு கட்டண விலக்கு உண்டு.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, டிசம்பர் 14, 2009 கடைசி தேதி.

மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தைத் தொடர்பு கொள்ளவும்.




5 thoughts on “பிஎட் படித்தவரா… 564 அரசுப் பணியிடங்கள் காத்திருக்கு!

  1. kavin

    தகவலுக்கு நன்றி…

    முழுமையான விபரங்கள் என்னுடைய வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளடததில் விபரங்கள் update செய்யப்படவில்லை

    http://aasiriyar-niyamanam.blogspot.com/2009/11/block-resource-teacher-educator.html

    நன்றி

  2. Ragu

    I’m finished BCA. Now i’m pursuing B.Ed (2010-2011). When can i get a government job? When govt wil appoint c.s teachers.

  3. dhanalakshmi

    I am finished computer science B.Ed in 2008. We have any chance to get a computer teacher from government job. When government will appoint computer teacher sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *