BREAKING NEWS
Search

பால் தாக்கரேவைச் சந்தித்த ரஜினி!

கொழும்பு… முதல் நாளில் 12000 பேர் எந்திரன் பார்த்தனர்!

லங்கையில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது எந்திரன் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு நகரம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட இலங்கை மற்றும் கிழக்கு இலங்கையில் வெளியாகியுள்ள எந்திரனைக் காண வேலை நாட்களிலும் ஏராளமானோர் குவிவதாகக் கூறப்படுகிறது.

முதல் நாளில் மட்டும் கொழும்பு சினிசிட்டி மல்டிப்ளெக்ஸில் 12000 பேர் எந்திரனைப் பார்த்து ரசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் அந்த திரையரங்கின் உரிமையாளர். இதுவரை சிவாஜி உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் இவ்வளவு பேர் திரண்டதில்லையைாம். சிங்களர்களும் நிறையப் பேர் வந்து எந்திரனை ரசித்துள்ளனர். தமிழரல்லாதவர்களின் வசதிக்காக ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது எந்திரன்.

மட்டக்களப்பில் எந்திரன் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் இதே நிலைதான்.

மலேசிய பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் எந்திரன்!

லேசியாவில் எண்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படம் வெளியாகியுள்ளது.

முதல் மூன்று நாட்கள் முடிவில் இந்தப் படம் இதுவரை மலேசியாவில் வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் தாண்டி முதலிடத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரிலும் எந்திரன் பெரும் வசூலைப் பெற்றுள்ளது. வசூலான தொகை பற்றிய விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

பால் தாக்கரேவைச் சந்தித்த ரஜினி!

சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரேவை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பால்தாக்கரேவை கடவுளோடு ஒப்பிட்டார். தனது பெற்றோர் மராட்டிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்றும், மராட்டிய திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வம் உள்ளதாகவும் ரஜினிகாந்த் அப்போது குறிப்பிட்டார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை கடுமையாகச் சாடி வருகிறார் பால் தாக்கரே. ஆனால் தனது சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில், பாலிவுட் நடிகர்கள் ரஜினியைப் போல இருக்கவேண்டும் என்றும், தன்னை வளர்த்த தமிழ் மண்ணுக்கு அவர் விசுவாசமாக இருப்பதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முன்பு எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.
27 thoughts on “பால் தாக்கரேவைச் சந்தித்த ரஜினி!

 1. shah

  பால் தாக்கரே கடவுளா ? தலைவா என்ன ஆச்சு உங்களுக்கு ? அவன் ஒரு டுபாக்கூர் ..

 2. saranya

  ena sir anga north la anjaana anjaani than oduthaame…. ndtv la potu irukaanga pola… enaku sariyaana details kedaikala…. office la link open aaga maatenguthu…. jus check for this link plsss.. reply….
  ************
  ***************
  _____________

  Will be updated soon
  -Vino

 3. krish

  ///shah says ,
  பால் தாக்கரே கடவுளா ? தலைவா என்ன ஆச்சு உங்களுக்கு ? அவன் ஒரு டுபாக்கூர்
  ————————————————
  தனது பெற்றோர் மராட்டிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்றும், மராட்டிய திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வம் உள்ளதாகவும் ரஜினிகாந்த் அப்போது குறிப்பிட்டார்.*****************************
  ********************************************

 4. Tiger

  Mass Hero (Super star) is the hero , CM’s grandson is producer but movie till not yet released in karur.Theater owners announced that they will not be shown sun pictures films here after, Hahahahahaha….
  இன்று வரை எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

 5. abdul vahab

  இவர் மனுசனே ellam கடவுள் என்று சொல்கிறார் பக்தி முத்தி போய்விட்டட்து. அந்த நாய் எத்தனே பெற கோல பண்ணி இருக்கு. இற்குர பெற கேடுதுடதே thaliva

 6. SASI

  தட்ஸ் தமிழ்இல் படித்தது, ஹீரோயின் ஹிட்ஸ்: அனுஷ்கா: சிங்கம் நயன் தாரா: பில்லா ஜெனிலியா: பாய்ஸ் சிம்ரன்: வாலி ஷ்ரேயா: சிவாஜி த்ரிஷா: சாமி மீரா ஜாஸ்மின்: ரன் தமன்னா: அயன் ஹீரோயின் ஃப்ளாப்ஸ்: அனுஷ்கா: வேட்டைக்காரன் நயன் தாரா: வில்லு ஜெனிலியா: சச்சின் சிம்ரன்: உதயா ஷ்ரேயா: அழகிய தமிழ்மகன் த்ரிஷா: ஆதி,குருவி மீரா ஜாஸ்மின்: புதிய கீதை தமன்னா: சுறா “Only One man can do all these Damages, That one man is Our Indian Flop Star…. Dr.Vijay.”

 7. Aaryan

  ஆனாலும் பால் தாக்ரேவை கடவுளா வர்ணிச்சதை ஏத்துக்கொள்ள முடியாது, வெற்றி தலைவரோட மண்டைய குழப்ப முதல்ல சீக்கிரமா இமய மலை பக்கம் ஒதுங்குறது நல்லதுன்னு நெனைக்குறேன்.

 8. Vivek

  என்ன ஆச்சு தலைவருக்கு… அந்த நாயே போய் ஏன் இவர் பாக்குறார்…

 9. samuel dhyriam

  டியர் சார், சுபெர்ச்டார் பல்தகறாய் பார்த்தது தவறு இல்லை என்று தான் நன் நினைகின்ரன். இது வியாபரநோக்கம். ரஜினி ஒரு இந்தியன்,பிறகு தமிலர்களுகாக வாழ்பவர். நன்றி மறவாதவர்.-சாமுவேல் தய்ரியம்.

 10. Rajmohan.K

  Mr. Vino,

  What is the necessary thing happen to Mr. Rajini to portray Mr. Pal Thackarey like this?
  Please respond.

 11. Rajmohan.K

  Once upon a time he (Pal Thackarey) only attacked and brutally beated all South Indians including Tamils to show his stand and love towards Marathi and Maharashtra.

  Mr. Rajini should think before saying this REMARK abt him.

 12. ss

  தலைவர் ரொம்ப தெளிவா தான் இருக்கார். நீங்க யாரும் குழம்ப வேண்டாம்.

  தலைவர், மும்பை விமான நிலையத்தில் ஒரு நிருபரிடம், அரசியல் பற்றிய கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ் ‘ என்று இரண்டாம் முறையாக அழுத்தமாக சொன்னார்.

  தலைவரின் எல்லை, தமிழ்நாடு கடந்து, ஆந்திர, கர்நாடகம், கேரளம் என்று தென்னிந்தியா முழுவதும் விரிவடைந்து உள்ளது. நான் முன்பு ஒரு முறை எழுதியிருந்தேன். தலைவர் மகாராஷ்டிரா வையும் சேர்த்து 5 மாநிலங்களிலும் ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்க முடியும். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக அவர் மாற முடியும் என்று.

  இன்றைய பால் தாகேரே சந்திப்பு மரியாதையை நிமித்தமானது தான், அவர் தாக்ரேயை மகாராஷ்டிரா மக்களுக்கு கடவுள் போன்றவர் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். நாம் விருப்ப பட்டாலும் , இல்லைஎன்றாலும் மராட்டிய இன மக்களுக்கு தாக்ரே ஒரு விருப்ப கடவுள் போன்றவர் தான். மும்பை, புனே வை தாண்டி மகாராஷ்டிரா விலே இருந்தவர்களுக்கு அது புரியும். தலைவர் அதை தான் கோடிட்டு காட்டியுள்ளார்.

  மேலும் மராட்டிய சினிமாவில் நடிப்பதின் முலம் அந்த மொழிக்கு ஒரு அந்தஸ்தை அவரால் தேடி தர முடியும். அந்த மாநில மக்களுடன் நெருங்கிய உணர்வு பூர்வமாக உறவு ஏற்படும்.

  இப்போது யோசித்து பாருங்கள்.. தலைவரிடம் ஒரு தொலை நோக்கு பார்வை கொண்டம் திட்டம் இருப்பதாக தான் நான் நினைக்கிறேன்.

  நாம் அவரை தமிழ் நாட்டுக்கு மட்டும் அரசனாக்க நினைக்கிறோம். அவர், அகில இந்தியாவின் நலனையும் நினைத்து பார்க்கிறார்..

  மராட்டிய மொழி பேசும் பெற்றோருக்கு, தமிழ் நாட்டில் பிறந்து , கர்நாடகத்தில் வளர்ந்து, தமிழ் நாட்டில் வெற்றி கொடி நாட்டி, கேரளா, ஆந்திராவில் எல்லையை விரிவாக்கி இன்று இந்திய சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். மராட்டியத்தில் எல்லையை விரிவடைய ய்வதன் இந்தியாவின் பெரும் பகுதியை அவர் எண்ணப்படி நாடக்க கூடும். அதன் மூலம் ஒரு மாபெரும் சக்தியாக தலைவர் உருவெடுக்கும் நாள் வெகு அருகில் உள்ளது

 13. YESMI

  இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார் ? என்ற கேள்வியுடன் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி சேனல், சமீபத்தில் ஒரு சர்வேயை நேயர்களிடத்தில் நடத்தியது.

  A) ரஜினிகாந்த், B) அமிதாப் பச்சான், C) ஷாரூக்கான், D) சல்மான்கான் – இவர்களில் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார் ?என்ற கேள்வியுடன் வாக்கெடுப்பு நடத்தியது.

  இதில் ரஜினிக்கு 86.41 சதவீத ஓட்டுக்களும், அமிதாப்பச்சனுக்கு 3.69 சதவீத ஓட்டுக்களும் கிடைத்திருப்பதாக அறிவித்தது அந்த சேனல் . ஷாரூக்கானுக்கு 7.16 சதவீதமும், சல்மான் கானுக்கு 2.74 சதவீத ஓட்டுக்களும் கிடைத்ததாகவும் ஒளிபரப்பியது அந்த சேனல். பாலிவுட்டின் முடிசூடா மன்னனான அமிதாப்பை ரஜினி தோற்கடித்து விட்டதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன

 14. kicha

  Well said Mr. SS.

  Thalaivar enna sonnarnu theliva therium munbu ellarum ean critisize panna thodangareenga?

  Avar தாக்ரேvai andha makkal kadavula ninaikarangannu solli irukalamnu thonudhu. Adhukulla ingulla medias vazhakam pola adhai oru issue aaka pakaranga.

  Mr. Vino. Unmayil enna sonnarnu clear pannalame?

 15. Sivaji Rao Veriyan

  //அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பால்தாக்கரேவை கடவுளோடு ஒப்பிட்டார்//

  யாராவது, தலைவர் அப்படி ஒப்பிட்டதை வீடியோவில் பார்த்தீர்களா?
  அமிதாப் வீட்டில் பால் தாக்கரே வின் ஆட்கள் தர்ணா செய்வதை தடுக்க, சமரசம் பேசுவதற்காக போனார் என வட இந்தியாவில் கூறுகின்றனர்.
  தலைவர் என்ன செய்தாலும் அதில் காரணம் இருக்கும். வேலை வெட்டி இல்லாமல் கணினியில் உட்கார்ந்து கொண்டு , ஏதோ பத்திரிகையில் போட்டதை வைத்து, தலைவரை கண்டிப்பதற்கு நமக்கு என்ன தகுதி ,என்று தம் முகத்தை கண்ணாடியில் பார்த்து கேட்டு கொள்ள வேண்டும்.

 16. rasikaran

  நண்பர்களே அவர் மராத்தி டிவியில் சொன்னது நான் எல்லா மொழி படங்களிலும் நடிக்க ஆசை படுகிறேன் , மரியாதை நிமித்தமாக பால் தாக்கரேவை சந்தித்துள்ளார். Trying to make something sensational out of nothing…
  I could’nt control my laughter after reading Charu joker’s site saying I have to pay to read his writing about his intellectual take on “worst movie of tamil cinema Endhiran”.

 17. நைனா

  //செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பால்தாக்கரேவை கடவுளோடு ஒப்பிட்டார்.//

  //பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி-ரஜினிகாந்த்// – thatstamil.com

  ஹி…ஹி…ஹி… உங்க பதிவு கொஞ்சம் underplay பன்றாபோல இருக்கு? ஏன்?

 18. karthik

  @ ss //அதன் மூலம் ஒரு மாபெரும் சக்தியாக தலைவர் உருவெடுக்கும் நாள் வெகு அருகில் உள்ளது//
  அவர் ஏற்கனவே மாபெரும் சக்தி தான். நாம் தான் ஒரு கண்ணாடி அணிந்து கொண்டு அவரை அரசியல் என்று ஒரு குறிகிய வட்டத்தில் பாக்கறோம். அதனால் தான் சிலருக்கு அவர் சின்னதாக தெரிகிறார். கலை, ஆன்மிகம் என்று சிந்தித்து பாருங்கள். அவரின் கடும் உழைப்பு, வளர்ச்சி, முதிர்ச்சி புரியும். சின்ன பயல்கள் எல்லாம் டாக்டர் பட்டம் பின்னாடி ஓடும் போதும், இந்த வயதிலும் அவர் ஒரு பள்ளி மாணவனை போல் புதியவைகளை கற்று கொள்ள காட்டும் ஆர்வம் அலாதியானது. அவரை அவராக இருக்க விடுவோம். இந்திய சினிமாவின் ஒரு மாபெரும் படைப்பை தந்த கம்பிரதுடன் ஒரு கலைஞனாக அவர் நடந்து வரும் போது, அதை பற்றி அதிகம் கேட்காமல் அரசியலை பற்றி குடைந்தால் அவரின் மனது எவ்வளவு புண்படும் என்று ஏன் நமக்கு புரிய மாட்டேங்குது? படத்தை பற்றி கேட்கும் போது துடிப்பாக பதில் சொன்னவரின் முகம் அரசியல் பற்றி கேட்டதும் எப்படி கவலை கொள்கிறது என்று தயவு செய்து மீண்டும் அந்த காணொளியை பாருங்கள்…

 19. haji

  சுந்தர் என்ன சொன்னாலும் தமிழனை அடித்து விரட்டிய தாக்கரே நாயை தலைவர் புகழ்ந்து பேசியதை ஏற்க முடியாது. கூடாது.
  என்னமோ போ.
  இப்படி வெறுத்து போறதே நம்ம வேலையா போச்சு.
  அட போ தலைவா.

 20. நைனா

  karthik says:
  //படத்தை பற்றி கேட்கும் போது துடிப்பாக பதில் சொன்னவரின் முகம் அரசியல் பற்றி கேட்டதும் எப்படி கவலை கொள்கிறது//

  இந்த நிலைமைக்கு ரஜினி தானே காரணம். “வர வேண்டிய நேரத்தில் வருவேன், என் கையில் இல்லை, காலம் பதில் சொல்லும், கடமையை செய் பலனை எதிர் பார்” என்றெல்லாம் பூடகமாக பேசி, தான் அரசியலுக்கு வருவதை பற்றி நேரிடையாக ஆம் / இல்லை என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதில் சொல்லாமல் ரசிகர்களிடம் அவருடைய அரசியல் பிரவேசம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அவர் தானே. அதனால் தான் ரஜினியிடம் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்வி தவிர்க்க முடியாமல் போகிறது. இன்னமும் அவர் அரசியலுக்கு வரக் கூடும் என்று எதிர் பார்க்கும் அவருடைய ரசிகர்கள் அநேகம்.

 21. rasigan

  தலைவரிடம் இருந்து இதனை நிச்சயமாக எதிர்பார்கவில்லை. மனிதர்களெல்லாம் கடவுள் என்றால் இங்கே கடவுளுக்கு என்ன வேலை தலைவா.. இறைவன் என்பவன் மனிதர்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதை தலைவர் எப்போது உணரப் போகிறார்??..அதுவும் பால் தாக்கரேவை போயி ?…என்ன கொடும சார் இது?

 22. Sathish

  Friends,
  eppada thalivara thitta visayam kidaikkumnu naakka thonga pottukittu sila per irukkanunga…..avanunga itha vachu konjam “stomach burning” korachukilam.

 23. karthik

  @ நைனா..
  // ஒருவர் ஒரு வேலையை நன்றாக செய்தால், அவர் மீது பல பொறுப்புகள் துணிப்பது நம் வழக்கம். இன்று ஒரு நல்ல அரசியல் தலைவர் நமக்கு தேவை. அதனால் அவர் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று பலர் நினைகின்றனர்.அந்த காலத்தில் கௌரவமாக மதிக்கப்பட ஒரு அரசாங்க வேலையை அவர் துறந்து சினிமாவை தேடி வந்த போது, அவர் பின்பு எந்த ரசிகனும் இல்லை. யாரும் அவரை நிர்பந்த படுத்தவில்லை. இன்றுவரை அவருக்கு ரசிகனாக இருக்கும்படி யாரையும் அவர் கட்டயபடுதவில்லை. அது போல அவர் நாளை ஒரு அரசியல்வாதி ஆனாலும் கூட, தனது ரசிகர்கள் தனக்கு தொண்டர்கள் ஆக வேண்டும் என்று நிச்சயம் அவர் நிர்பந்திக்க மாட்டார். அவர் என்ன வேலையை எடுத்து கொண்டாலும் நிச்சயம் செவ்வனே செய்து முடிப்பார். அதற்காக எல்லா வேலையும் அவரே செய்ய வேண்டும் என்றால் எப்படி?

 24. Rajmohan.K

  Mr. Vino

  For your info.

  ******************
  ***************
  _______________________

  நீங்கள் குறிப்பிடும் தளத்துக்குச் சொந்தக்காரர்கள் அல்லது பணியாற்றுபவர்களை முதலில் ஒழுங்காக, சொந்தமாக செய்தி எழுதத் தெரியுமா என்று கேளுங்கள். இன்னொன்று, எந்திரன் தெலுங்கில் கூடத்தான் வெளியானது. அதற்காக அங்குள்ளவர்களைப் பார்த்து உயர்த்திப் பேசவில்லையே ரஜினி. பால் தாக்கரேயைப் பார்த்தார்… ஒரு மரியாதைக்காக அப்படி சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். அந்தளவில் விட வேண்டிய விஷயம் இது. அவர் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், சிரித்தால் கூட குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்தால், இது எங்கே போய் நிற்கும்!

  மராத்தியில் நடிக்க ஆவலாக உள்ளதென்று அவர் சொன்னது, ஒரு கலைஞனுக்கு இயற்கையாக உள்ள உணர்வு.

  ரஜினி சொன்ன இதே வார்த்தையை so called அறிவு ஜீவி நடிகர்கள் வேறு யாராவது சொல்லியிருந்தால் உடனே, “மராத்தியில்தான் அற்புத படைப்புகள் வருகின்றன. Theater artistகளின் சொர்க்கம் அந்த மொழி. அதனால்தான் நம்மாள் அப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்” என்று பாராட்டித் தள்ளியிருப்பார்கள் இந்த அரைவேக்காடுகள்.

  இந்த மாதிரி கேவலமான தளங்களின் லிங்குகளை எனக்கு அனுப்பி, உங்கள் / எனது நேரத்தை வீணாக்காமல், உங்கள் சொந்த கருத்துக்களை எழுதுங்கள் நண்பரே. அது என் கருத்துக்கு எதிரானதாகவே இருந்தாலும் பிரசுரிப்பேன்.

  -வினோ

 25. kicha

  /அவர் நின்றால், நடந்தால்,
  உட்கார்ந்தால், சிரித்தால் கூட
  குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்தால்,
  இது எங்கே போய் நிற்கும்!/

  Well said Vino!

  Porumaya irukar engira kaaranathal, porambokkunga ellam andha manushana pathi pesa aarambikudhunga.

  Inga nithyanandha pinnadi oodina ethanayo nadigargal irukanga. Avanungala ellam oruthanum kekkaradhu illa. Adhai vida kevalama edhadhuvum illaye? Avanungala ellam vimarsanam pannittu aparam vanga.

 26. Rajmohan.K

  Mr. Vino,

  Thanks for ur reply.

  I am always interested to write / register my thoughts only but u have not responded. when i come across those websites, i have just passed on this.

  Please make a note that, i am not big enough to criticize or comment on such a humble human Mr. Rajini.

  My only remark is,” No need to call Mr. Pal Thackarey as GOD”.

  Mere respect one should not praise him like this. Tell me what is the necessity?

 27. Rajmohan.K

  Mr. Vino,

  For your info again.

  Hope u will accept, “Tamilcinema.com is not an ordinary website”.

  From Tamilcinema.com as well as from its author,

  ‘பத்த வச்சிட்டீயே பரட்டை’ன்னு புலம்பினாலும் தப்பில்லை. இந்த விஷயம் கொஞ்சம் கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம்தான். மும்பைக்கு போன ரஜினி, பால்தாக்கரேவை சந்தித்துவிட்டு திரும்பியிருந்தால் கூட பிரச்சனை இல்லை. “அவர் எனக்கு கடவுள் போன்றவர்” என்றொரு முத்தை உதிர்த்திருக்கிறார். இதையடுத்து ரஜினியின் இனப்பற்று குறித்து மீண்டும் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறது உணர்வாளர்கள் வட்டாரம்.

  From one of the World Tamil Association Leader,

  உலக தமிழர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் ரஜினியின் இந்த பேச்சு குறித்து ஆவேசப்பட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது-

  பால்தாக்கரே தாராவியில் தமிழர்களை விரட்டியது இருக்கட்டும். அவரால் தமிழ்சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ரஜினிக்கு தெரியுமா? 1969 ல் பி.எஸ்.வீரப்பா தமிழில் எடுத்த ஆலயமணி படத்தை இந்தியில் திலீப்குமாரை வைத்தும் எடுத்தார். அந்த படத்தை திரையிடுவதற்கு பால்தாக்ரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏ.வி.மெய்யப்ப செட்டியார், வாசன், நாகிரெட்டி ஆகியோர் மும்பை சென்று எப்படியாவது வீரப்பாவை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினர். அப்போது தமிழ்நாட்டில் இந்தி படத்தை திரையிட்டால்தான் வீரப்பாவின் படம் மஹாராஷ்டிராவில் வெளியிடப்படும் என்று அவர்களை மிரட்டினார் தாக்கரே.

  தனது படம் ஒடவேண்டும் என்பதற்காக என்ற சுயநலத்திற்காக பால்தாக்கரேவை கடவுள் என்று சொன்ன ரஜினி, இலங்கையில் படம் ஓட வேண்டும் என்பதற்காக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை ‘மகா கடவுள்’ என்று சொல்வாரா என்று ஆவேசப்படுகிறார் ஜனார்த்தனன்.

  _____________

  தனது படம் ஓடவேண்டும் என்பதற்காக பேசக்கூடியவரல்ல ரஜினி. தமிழர் உணர்வு என்ற பெயரில் ஜனார்தனம் என்பவர் எப்படியெல்லாம் பிழைப்பு அரசியல் நடத்துகிறார் என்பதை உலகம் அறியும், கட்டுரையை எழுதிய நண்பர் அந்தணனும் அறிவார்!
  -வினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *