BREAKING NEWS
Search

பாட்ஷா – 2..? பரபரக்கும் சத்யா மூவீஸ்!

பாட்ஷா – 2?

டுத்த வெடியை ரஜினியே எடுத்துக் கொடுக்க, கொஞ்சமும் தாமதிக்காமல் கொளுத்த ஆரம்பித்துவிட்டது மீடியா.

சமீபத்தில் ஆர்.எம்.வீ. இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினி, “என்னால் பலன் அடைந்தவர் பலர்; நஷ்டமடைந்த சிலரில் ஆர்.எம்.வீ-யும் ஒருவர். ‘பாட்ஷா’ போன்ற படத்தை ஆர்எம்வீயால் மட்டுமே மீண்டும் தயாரிக்க முடியும்…”

என்று ‘எடுத்துக் கொடுக்க’ , அதன் எதிரொலியாக, ‘எந்திரன்’ படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஆர்.எம்.வீ-யின் சத்யா மூவீஸ் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஆர்எம் வீரப்பனின் மருமகனும், சத்யஜோதி பிலிம்ஸ் உரிமையாளருமான தியாகராஜனிடம் கேட்டோம்.

அவரோ, “அப்படி ஒரு படம் உருவானா சந்தோஷம்தானே… ஆனால் இன்னும் எதுவும் முடிவாகலை. அதுக்குள்ள அதைப் பத்தி பேசக்கூடாது” என்றார்.

ஆனால், ‘பாட்ஷா – 2’ என்ற தலைப்பில் தீவிர கதை ஆலோசனை நடக்கிறதாம், சத்யா மூவீஸ் கதை இலாகாவில்!

எந்திரனுக்குப் பிறகுதான் சுல்தான்!

சுல்தான் பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. வெளியீட்டுக்கான பணிகளில் இறங்கலாமா என சௌந்தர்யா யோசித்தபோது குறுக்கிட்ட ரஜினி, “இந்தப் படத்தை இப்போது விட வேண்டாம். எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு வெளியிடலாம். பொறுமையாக இரு” என்று தடுத்துவிட்டாராம்.

அதற்கு உடனடி பலனும் கிடைத்துள்ளது. படத்தின் உலக உரிமையை சன் பிக்ஸர்ஸ் பெரும் விலைக்கு வாங்கிக் கொண்டுள்ளது. கலாநிதி மாறனே இதனைத் தெரிவிக்க, உற்சாகமாகவிட்டார் சௌந்தர்யா.

இன்னொரு பக்கம், சுல்தானிலிருந்து விலகுவதாக அறிவித்த வார்னர் பிரதர்ஸ் மீண்டும் சௌந்தர்யாவுடனான தங்கள் உறவினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன் விளைவாக 5 புதிய படங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் வார்னர் பிரதர்ஸும், சௌந்தர்யாவும் கையெழுத்திட்டுள்ளனர்.

எந்திரன்… பூசணிக்காய் உடைக்கப்பட்டது!

பொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்தபிறகு, யூனிட்டில் பூசணிக்காய் உடைப்பது ஒரு சம்பிரதாயம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கும், படப்படிப்பு முற்றாக முடிந்ததை அறிவிக்கும் வகையில் பூசணிக்காய் உடைக்கப்பட்டதாக எந்திரன் வட்டாரங்கள் தெரிவித்தன.

விரைவில் எந்திரன் விளம்பர பணிகளை ஆரம்பிக்க உள்ளது சன். அசத்தலான ஸ்டில்களையும் வெளியிட உள்ளது, தங்கள் நிறுவனப் பத்திரிகைகளில். முன்பு எந்திரன் முதல் செட் ஸ்டில்களை வெளியிட்டபோது தினகரன் நாளிதழின் விற்பனை 4 லட்சம் பிரதிகள் கூடுதலாக விற்றது.

அதை மனதில் கொண்டே இந்த முறையும் தங்கள் நாளிதழ் / வார இதழ் மூலம் எந்திரன் ஸ்டில்களைத் தரப் போகிறார்களாம், சன் நிறுவனத்தினர்!

-என்வழி
10 thoughts on “பாட்ஷா – 2..? பரபரக்கும் சத்யா மூவீஸ்!

 1. krishsiv

  இனி வரும் இந்த வருட நாட்கள் முழுதும் தீபாவளி தான்
  பாஷா 2
  எந்திரன்
  சுல்தான்
  இப்பவே திஷ்டி சுத்த ஆரம்பிச்சடனும்
  எத்தனை ரெகார்ட் முறியடிக்க போறோமோ
  எவளோ சாதனைகளை குவிக்க போகிறதோ
  அதெல்லாம் விட பாவம் அந்த வைதெரிச்சல் நண்பர்கள்

 2. santhosh

  அருமையான தகவலுக்கு நன்றி விநோஜி

 3. kris

  ஓவர் பில்டப் வேண்டாம் .பாப்போம்

 4. thala groups

  சூப்பர் சார் எங்கள் தல சார்பாக வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்

 5. கிரி

  பாஷாவை இனி எத்தனை பாஷா வந்தாலும் முறியடிக்க முடியாது! அதில் தலைவருக்கு எப்படி தனி சிறப்பு உள்ளதோ! அதில் சற்றும் குறையாத முக்கிய பங்கு மறைந்த அற்புத நடிகர் ரகுவரனுக்கும் இருக்கிறது.

  தலைவரை தவிர அந்த இடத்தை எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது! எப்படிப்பட்ட சிறந்த நடிகராக இருந்தாலும் சரி. எவராலும் ரீமேக் பண்ண முடியாத படம் பாஷா.

  அதே போல ரகுவரனின் அருமையான ரசிக்கும் படியான வில்லத்தனத்தை இனியும் யாரும் நிரப்ப முடியாது. இருப்பினும் வாழ்த்துக்கள் தலைவர் ரசிகனாக.

  எந்திரன் போற போக்க பார்த்தால் தலைவர் சொல்கிற மாதிரி ஆகஸ்டில் வந்து விடும் போல இருக்கே! 🙂

 6. Juu

  பாட்ஷா – தானா அமைஞ்சது!!!!
  பாட்ஷா 2 – இவனுங்கள அமைக்கறது????

  எப்டி பாத்தாலும் தலைவர் side la இருந்து ஒரு படம் நமக்கு..

 7. madhumidha

  உலக்கை நாயகன் கமல் பட வசூலில் ரஜினியை மிஞ்சும் என என் தோழி சொல்கிறாள்…. அவள் தீவிர கமல் ரசிகை… அனால் உண்மை அது இல்லையே…

  ரஜினி படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  மதுமிதா
  madhumidha1@yahoo.com

 8. balu

  எந்திரன் படம் முடிந்த பின் அரசியல் நுழைவது குறித்து உட்கார்ந்து பேசுவோம் என்று சொன்னாரே. அவ்வளவு தானா?

 9. r.v.saravanan

  வினோ இந்த இடுகையில் நீங்கள் கொடுத்துள்ள எந்திரன், சுல்தான், பாட்ஷா2 மூன்றுமே தலைவரை
  பற்றிய முத்தான செய்திகள் தான் நன்றி

  நம் எல்லோருக்கும் இந்த வருஷம் முழுக்க தீபாவளி தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *