BREAKING NEWS
Search

பன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு!


நல்லவர்களை, நேர்மையாளர்ளை மதிக்கும் பண்பு எப்போது வரும் இந்த மக்களுக்கு!

மீபத்தில் ஒரு இணைய தளத்தில் நான் படித்த செய்திக்கட்டுரை இது.  சூடான விவாதத்துக்கு ஒத்துவருமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆனால் தேசத்தின் தலைமகனாக இருந்த ஒருவர் எந்த அளவு, தன் சொந்த நலனை, சுற்றத்தார் நலனை பெரிதாக நினைக்காமல் இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Kalam-new

அவர் பெயர் நமக்கு நன்கு பரிச்சயமானதுதான்…  டாக்டர் ஆ ப ஜெ அப்துல் கலாம்.

இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை. பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். குடியரசுத் தலைவராக மட்டுமல்ல… பல பெருமைகளைத் தேடித் தந்ததில் தேசத்தின் தலைமகன் அவர்.

ஆனால் அவர் பிறந்த ஊரும், வசித்த தெருவும் சாக்கடை தேங்கி, பன்றிகள், கழுதைகள் உலவும் இடமாக மாறிப் போய் கிடக்கிறது.

அந்தக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:

“அவரது வீட்டையும், அந்த மாபெரும் மனிதர் வாழ்ந்த தெருக்களையும் பார்த்தால்தான் நமது பெருமை நமக்கு புரிவது எப்போது என்ற பெரும் ஏக்கம் வந்து தொலைக்கிறது. சாலையெங்கும் தேங்கி நிற்கும் மழை நீர்.

அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைகளையும், பன்றிகளையும் கடந்துதான் டூரிஸ்ட்டுகள் அந்த வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் (அந்த நீல வண்ண வீடுதான் கலாமுடையது. தற்போது அங்கே வசிப்பது அவரது அண்ணன். வீட்டின் பக்க சுவருக்கு கூட சிமெண்ட் பூசவில்லை பாருங்கள்).

பக்கத்திலேயே குடை ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் பெரியவர், தனது எட்டுக்கு எட்டு அளவு கொண்ட கடையில் தானும் கலாமும் இருப்பது போன்ற புகைப்படத்தை மாட்டியிருக்கிறார். விசாரித்தால் இவர்தான் கலாமை தூக்கி வளர்த்த அவரது தாய் மாமா என்றார்கள். தனது பத்தாவது தலைமுறை பேரனுக்கும் கோடிகளை சேர்த்து வைக்கிற அரசியல் தலைவர்கள் மத்தியில் தன்னை தூக்கி வளர்த்த தாய் மாமனுக்கு ஒன்றுமே செய்யவில்லை கலாம். அந்த போட்டோ கூட அவரே பணம் கொடுத்து பிரேம் போட்டதுதானாம்… (நன்றி: அந்தணன், தமிழ்சினிமா)”

-இதை தட்டச்சும்போதே விழிகளை நீர் மறைக்கிறது. கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் மனதில் வந்து போகிறார்.

அதிகாரிகளைக் கூப்பிட்டு, அந்தப் பகுதியை கொஞ்சம் மேம்படுத்தச் சொல்லியிருக்கலாம் அவர். ஆனால் அரசு எந்திரம் எதையும் முறையாகச் செய்யட்டும் என்ற நேர்மையான பார்வை. எல்லா மக்களுக்கும் என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அதுவே எனக்கும் இருக்கட்டுமே என்ற தார்மீகம் அவரது மௌனத்தில் புதைந்திருப்பதாக நான் புரிந்து கொண்டேன்.

தனது ராமேஸ்வரம் பயணத்தின் போது, குறிப்பிட்ட எருமையின் பாலைக் கறந்து கொடுத்தால்தான் குடிப்பேன் என அடம்பிடித்து, ராஷ்ட்ரபதி பவன் எருமைகளை தனி ரெயில் பெட்டியில் கூட்டிச் சென்று சாதனை படைத்த ஜனாதிபதிகள் குடியிருந்த அதே குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்படி ஒரு எளிய தமிழனும் வாழ்ந்ததை எண்ணி பிடறி சிலிர்க்கிறது.

அதே நேரம் இந்த எளிமையும் நேர்மையும் கூட, இந்த நாட்டை, அதன் கேடுகெட்ட நிர்வாகத்தை, ஊழல் பேர்வழிகளை ஒரு இஞ்ச் அளவுக்குக் கூடத் திருத்த முடியவில்லையே என்ற ஆதங்கமும் நெஞ்சுக்குள் நெருப்புப் பந்தாய் பொங்குகிறது!

திருந்தவே திருந்தாதா இந்த தேசம்? நல்லர்வர்களை, நேர்மையாளர்களை மதிக்கும் அறிவு என்றைக்கு இந்த தேசத்து மக்களுக்கு வரப்போகிறது? உயிரோடு இருக்கும்போதே, ஒரு நல்ல மனிதரை மதிக்கும் பண்பை எப்போதுதான் நாம் கற்கப்போகிறோம்?

-சூரியன்
16 thoughts on “பன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு!

 1. vairavan

  சூப்பர் சூப்பர் நல்ல விசயம்
  ஊழல் பேர்வழிகளை ஒரு இஞ்ச் அளவுக்குக் கூடத் திருத்த முடியவில்லையே

 2. ahhori

  நிறை குடம் தலும்பவில்லை. இங்கே கூத்தாடிகளுக்கு மட்டுமே மரியாதையை.

 3. kannaiah

  உன்னை போல் ஒருவன் எடுத்தவர்கள், கரம் சந்த லாலா என்று ஒரு இந்து தீவிரவாதி கதா பாத்திரத்தை காட்டி compromise செய்து இருந்ததோடு, இதை போன்ற இஸ்லாமிய சமுதாய மக்களை பற்றியும் காண்பித்து இருக்’கலாம்’.

 4. ksk

  இந்த செய்தியை பார்க்கும் போது ஒரு சாதாரண விவசாயி குடும்ப சூழ்நிலை தான் நினைவுக்கு வருகிறது. விவசாயி நெல்லை விதைக்கிறார்கள். கலாம் அய்யா நல்ல சிந்தனைகளை விதைத்துள்ளார்கள். தான் எவ்வளவு சாதித்தாலும் தன்னை ஒரு சாதாரண குடிமகனகத்தான் கருதுகிறார்கள்,

  அதனால் தான் கலாம் அவர்கள் இத்தனை லட்சம் மக்கள் , குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பு பெற்று இருக்கிறார்கள்.

  இப்படிபட்ட நேர்மையான வாழ்க்கை அவருக்கு சேர்த்து கொடுத்த சொத்து அது.

  அவர் பங்களாக்கள் கட்டியிருந்தால் அவரை நாம் இப்படி கொண்டாடுவோமா. ?

  கலாம் அவர்களால் நேரடியாக, உடனடியாக சீர்திருத்தம் செய்ய முடியா விட்டாலும், அவர் விதைத்துள்ள சிந்தனைகள், நாளைய சமுதாயத்தை நல் வழியில் நடத்தி சென்று நமது தேசத்தை வலிமையாக்கும்.

  அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவாது நாம் பொதுநலத்துடன் நடந்து கொண்டாலே அவருக்கு நாம் காட்டும் மரியாதை.

  மரம் முளைத்து ,வளர்ந்து, கனி கொடுக்க கால அவகாசம் தேவை. . கலாம் அய்யா விதை தான் விதைத்துள்ளார்கள். பொறுமையாக இருங்கள் சகோதரர்களே.

 5. r.v.saravanan

  இப்படி ஒரு எளிய தமிழனும் வாழ்ந்ததை எண்ணி பிடறி சிலிர்க்கிறது.

  மாபெரும் மனிதர் than avar

  perumaiyaga ulladu

 6. sam

  திருந்தவே திருந்தாதா இந்த தேசம்?

  17 ஆண்டுகளுக்கு பிறகு லிபரான் அறிக்கை
  சுங்க அதிகாரிகள் லஞ்சம்
  கோயில் கருவறையில் உ ……………

  திருந்தவே திருந்தாதா இந்த தேசம்?

 7. sam

  தனது ராமேஸ்வரம் பயணத்தின் போது, குறிப்பிட்ட எருமையின் பாலைக் கறந்து கொடுத்தால்தான் குடிப்பேன் என அடம்பிடித்து, ராஷ்ட்ரபதி பவன் எருமைகளை தனி ரெயில் பெட்டியில் கூட்டிச் சென்று சாதனை படைத்த ஜனாதிபதிகள் குடியிருந்த அதே குடியரசுத் தலைவர்????

  யாருக இவரு???நகலும் தெரிஞ்சுகிறோம்………………..

 8. palPalani

  kannaiah, நீங்க நல்லாத்தான் பாக்குறீங்க(கேடு கேட்ட சமுதாயத்தை)!

 9. ஸ்ரீராம்.

  உண்மையான ஆதங்கத்துடன் எழுதப் பட்டுள்ள கட்டுரை. இவரைப் போல மாணிக்கங்களை நம் பாரதம் பெற என்ன தவம் செய்தோம்? நீங்கள் சொன்னாற்போல் கர்மவீரர், கக்கன் இவரைப் போல நல்லவர்களை, தன நலம் கருதாத் தங்கத் தலைவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மிகப் பெரிய மனிதர்.

 10. Manoharan

  நீங்கள் ஏற்கனவே சொன்னது போல் அதிகாரம் உள்ள அரசியல் பதவிக்கு அப்துல்கலாம் போன்றவர்கள் வருவதில்லை. அப்படி அவர்கள் வரும்போது நிலைமை மாறலாம்.

 11. இராசகம்பிரத்தான்

  தன்னலம் இல்லா தியாகங்களுக்கு பள்ளி புத்தகங்களில் இடம் உண்டு, இவர்களைப் பற்றி விடை எழுதி ஆசிரியர்களிடம் இருந்து மாணவர்களுக்கு மதிப்பும் உண்டு.
  மற்றபடி எப்பொழுதும் போல் மறப்போம் ,மறந்தவர்களை மன்னிப்போம்.
  இப்பொழுது பார்க்கவேண்டியது ஏராளம் மானாடா மயிலாட பார்பதா?இல்லை விட்டு போன தொலைக்காட்சி தொடர் நாடகங்களை எப்படி பார்பது என்ற பதற்றதில் இருக்கும் என் இந்திய இரத்தங்களுக்கு, சமூக தீ தன் சட்ட்டையை தீண்டாதவரை அவனிடம் இருந்து எதைப்பற்றியும் நினைக்க கூடாது,

  பல ஆயிரம் கோடி கருப்பு பனம் சுருட்டும் அரசியல்வாதிகளை சட்டம் மருத்துவ முதலுதவி செய்து காப்பாற்றும்,

  தீபாவளிக்கு கூட பட்டாசு வெடிக்க தெரியாதவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ளி நாட்டுமக்களை காப்பாற்றும் காவல்கள்,பாதுகாப்புதுறை. கூடவே பதவி உயர்வும் சேர்ந்து பெறும்.

  பாமரன் ஒருவன் கொலை செய்தால் அவனுக்கு தூக்கு கயிரு நிச்சயம்,
  பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்தாலும் -கலவத்தில் செத்ததால் கமிசன் வெச்சு ,அதுக்கு காரணமான அரசியல்வாதிகளை பதவியில் வச்சு அழகு பார்க்கும் புண்ணிய பூமி நம் பாரத தாய்.

 12. pjs

  வாவ்…சூப்பர்…

  பல ஆயிரம் கோடி கருப்பு பனம் சுருட்டும் அரசியல்வாதிகளை சட்டம் மருத்துவ முதலுதவி செய்து காப்பாற்றும்,

  தீபாவளிக்கு கூட பட்டாசு வெடிக்க தெரியாதவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ளி நாட்டுமக்களை காப்பாற்றும் காவல்கள்,பாதுகாப்புதுறை. கூடவே பதவி உயர்வும் சேர்ந்து பெறும்.

  பாமரன் ஒருவன் கொலை செய்தால் அவனுக்கு தூக்கு கயிரு நிச்சயம்,
  பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்தாலும் -கலவத்தில் செத்ததால் கமிசன் வெச்சு ,அதுக்கு காரணமான அரசியல்வாதிகளை பதவியில் வச்சு அழகு பார்க்கும் புண்ணிய பூமி நம் பாரத தாய்.

 13. vicky

  இதை எல்லாம் பார்த்து ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகள் திருந்தாவிட்டாலும் பரவாயில்லை நமது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திருந்தினாலே போதும். ஆனால் அதுதான் நடக்காது/முடியாது.
  ஏனெனில் அவர்களை இப்படி ஆக்கியதே நாம்தானே. அற்ப சலுகைக்காகவும், அற்ப சுகத்துக்காகவும் அவர்கள் பின்னால் வால் பிடிப்பதும், அவர்களுக்கு வாக்களிப்பதும் நாம்தானே! பிறகு எப்படி அவர்கள் திருந்துவார்கள்?

  ஏமாறுபவர்கள் (நாம்) இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் (அரசியல்வாதிகள்) இருக்கத்தான் செய்வார்கள். மக்களை ஆட்டு மந்தைகள்போல வைத்திருக்க அவர்களிடம் நல்ல ஆயுதங்கள் உண்டு. அதுதான் அவர்கள் வசம் உள்ள ஊடகங்கள். அவர்கள் என்னதான் ஏமற்று வேலை செய்தாலும் நாம் அதை கண்டுகொள்ளாத அளவிற்க்கு அவர்களின் ஊடகங்கள் ஊடாக கட்டப்பட்டிருக்க்கிறோம்.(இராசகம்பிரத்தான் சொன்னதுபோல)

  எப்போது நாம் இதில் இருந்து மீளுகிறோமோ; அப்போதுதான் நாமும் திருந்துவோம் அவர்களும் கலாம் ஐயா போல மாறுவார்கள்.

  இல்லையேல்;
  இப்போது இருப்பவர்கள் தனக்கும், தனது பத்தாவது தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பதுபோலவும், இதற்கு முன் இருந்தவர் தனக்கும் தனது தோழிக்கும் சொத்து சேர்த்ததுபோல, இனி வருபவர்களும் சேர்ப்பார்கள்………

  இதில் ஆச்சரியபட ஏதும் இல்லை!

 14. sps

  அருமையான வரலாறு தாங்கிய செய்தி,அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற பெருமிதம் நான் என் வாழ் நாளில் ஒருவரை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நபர் மாண்புமிகு கலாம் அவர்கள் அதுவும் நிறைவேறியது அவரை சந்திதேன் நிறைய விசயங்கள் பேச இயலவில்லை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசக்கூடிய வாய்ப்பும் கிட்டியது.இந்த செய்திக்கு நன்றி
  இவ்வேளையில் இங்கு பதி செய்திட ஒரே ஒரு வார்த்தைதான் தோன்றுகிறது ” திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பது தான் அது.

 15. Kiri

  இந்திய 1950 முன்னாடி இருந்தத விட மகா கேவலம். பிச்சைக்காரனும் எமத்துரவனும்தான் மிக மிக அதிகம்..

 16. Ram

  இந்த மாதிரி நல்ல நல்ல தலைவர்களை திரும்ப ஜனாதிபதியா வர விடுங்க! மத்தவங்க எல்லாம் பேசாம நமக்கு என்னனு இருக்காம கொஞ்ஜம் உதவி பண்ணுங்க இந்தியா கொஞ்சம் முன்னுக்கு வரட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *