BREAKING NEWS
Search

பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதை விட தோற்பது மேல்! – வைகோ

பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதை விட தோற்பது மேல்! – வைகோ

மதுரை: பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது பற்றி நான் ஒருபோதும் சிந்தி09-vaiko200ப்பதில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அப்படிபெறும் வெற்றியை விட தோல்வியே மேல், என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் மதிமுக நிர்வாகிகள் பொதுக் குழு கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவ வீரர்களால் தோற்கடிக்கப்படவில்லை. இந்திய அரசின் துரோகத்தால், தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அது தான் உண்மை.

இந்திய அரசு, சிங்கள அரசோடு சதி செய்து, யுத்தம் நடத்தியது. விடுதலை புலிகளுக்கு எந்த பொருட்களும் போக விடாமல் தடுத்து, இலங்கைக்கு ஆயுதங்களையும் கூடவே வழங்கியது.

தமிழகத்தில் மதிமுகவை எப்படியாவது அழித்து விட வேண்டும் என சிலர் முயற்சி செய்கின்றனர். அது எந்த காலத்திலும் நடக்காது.

தமிழக அரசு செய்த துரோகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து தான் திமுகவினரும், காங்கிரசாரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆயுதத்தை ஆயுதத்தால் தான் வெல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஓட்டுகளுக்கு பணம் கொடுத்து வாங்குவது பற்றி நான் சிந்திப்பது இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அந்த வெற்றியை விட தோல்வியே மேல், என்றார்.




2 thoughts on “பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதை விட தோற்பது மேல்! – வைகோ

  1. thinnu

    அமெரிக்காவில் 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அதிபராக இருந்தவர், ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ். இவருக்கு நேற்று முன்தினம் 85-வது பிறந்தநாள் ஆகும்.

    இதையொட்டி, மைனே நகரில் தனது இல்லத்துக்கு அருகே, விமானத்தில் இருந்து, 10 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் கீழே குதித்து அவர் பிறந்தநாள் கொண்டாடினார்.

    அவரது சாகசத்தை அவரது மகன்கள் ஜார்ஜ் டபிள்ï புஷ், ஜெப் புஷ், மனைவி பார்பரா ஆகியோர் கண்டு ரசித்தனர். இதுபோல், 90-வது பிறந்தநாளிலும் பாராசூட்டில் குதிக்கப் போவதாக புஷ் கூறினார்.

    இவர் ஏற்கனவே, தனது 75 மற்றும் 80-வது பிறந்தநாள்களிலும் இதேபோல் பாராசூட்டில் குதித்துள்ளார்.

    Can any one of our guys !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *