BREAKING NEWS
Search

‘பணமில்லை…!!’: கங்கை – காவிரி இணைப்பு கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு!


‘பணமில்லை…!!’: கங்கை – காவிரி இணைப்பு கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் இனி சாத்தியமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ganges_valley_rishikeshங்கை- ​காவிரி இணைப்பு திட்​டம் என்று அழைக்​கப்​ப​டும் இந்த திட்​டத்​துக்கு 4.4 லட்​சம் கோடி ரூபாய் நிதி தேவைப்​ப​டு​கி​றது என்​ப​தால் அந்த திட்​டம் கைவி​டப்​ப​டுவதாக மத்​திய நீர்​வ​ளத் துறை அமைச்​சர் பவன்​கு​மார் பன்​சால் மக்​க​ள​வை​யில் புதன்​கி​ழமை அறி​வித்​தார்.

50 ஆண்டுகளுக்கு முன்பே விவாதிக்கப்பட்ட விஷயமான தேசிய நதிகள் இணைப்பு, தமிழகம் – கர்நாடகம் இடையே 2002-ல் ஏற்பட்ட காவிரி பிரச்சினை காரணமாக, மீண்டும் நாடுதழுவிய விவாதமாக மாறியது.

தேசிய நதிகள் இணைப்பை வலியுறுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அது குறித்து அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்​பாயைச் சந்தித்துப் பேசி இத்திட்டத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

அவரைப் போன்ற பல நடுநிலையாளர்களும் வலியுறுத்திய திட்டம் இது.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜன​நா​யக கூட்​டணி அரசு, கங்கை -​ காவிரி இணைப்பு திட்​டத்தை அமல்​ப​டுத்துவதில் சற்றே முனைப்பு காட்டியது. அன்றைக்கு இந்த திட்டத்துக்கு 5 லட்சம் கோடிகள் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

அதற் ​காக முன்​னாள் மத்​திய அமைச்​சர் சுரேஷ் பிரபு தலை​மை​யில் உயர்​நிலை பணிக் குழுவை நிய​மித்​தது. அந்​தக் குழு​வும் இதற்​கான ஆரம்​ப​கட்​டப் பணி​க​ளில் இறங்​கி​யது.

இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யாகி வட மாநி​லங்​க​ளில் பாயும் வற்​றாத ஜீவ நதி​க​ளை​யும்,​ தென்​னிந்​திய தீப​கற்​பத்​தில் பாயும் நதி​க​ளை​யும் இணைத்து வறட்சி,​ வெள்​ளம் ஆகிய இரு தேசி​யப் பேர​ழி​வு​க​ளை​யும் ஒரு சேர சமா​ளிக்க இந்த நதி நீர் இணைப்​புத் திட்​டம் உத்​தே​சிக்​கப்​பட்​டது.

ஆனால் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்த பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

முக்கியமாக, “நதி​நீர் இணைப்பு திட்​டத்தை நான் ஆத​ரிக்​க​வில்லை,​ அத​னால் சாத​கங்​க​ளை​விட பாத​கங்​களே அதி​கம்” என்று காங்​கி​ரஸ் கட்​சி​யின் பொதுச் செயலாளரான ராகுல் காந்தி சமீ​பத்​தில் தமிழகம் வந்தபோது கருத்து தெரி​வித்​தி​ருந்​தார். இதை ஏரா​ள​மா​னோர் கண்​டித்​தி​ருந்திருந்தனர்.

ஆனால் முடிவெடுக்கும் இடத்தில், அதிகாரத்தில் இருப்பவர் என்பதால் அவர் சொல்வதற்கு பெரிய மாற்றுக் கருத்துக்களோ, எதிர்ப்போ எழவில்லை. ராகுல் சொல்வது யதார்த்தமானது என்று சொல்லிவிட்டனர்.

ராகுலின் கருத்துக்கு வலுசேர்க்கும் பொருட்டு, ‘நதி​களை இணைப்​ப​தற்கு கோடிக்​க​ணக்​கான ரூபாய் முத​லீடு தேவை, ஏரா​ள​மான நிலங்​க​ளைக் கைய​கப்​ப​டுத்த வேண்​டி​யி​ருக்​கும்.

அத்​து​டன் நதி​நீர் இணைப்​புக் கால்​வாய்​களை வெட்ட ஏரா​ள​மான கிரா​மங்​க​ளில் வாழும் மக்​களை அவர்​க​ளு​டைய வசிப்​பி​டங்​களி​லி​ருந்து வெளி​யேற்ற நேரும்.

விவ​சாய நிலங்​க​ளும் தரிசு நிலங்​க​ளும் இந்த திட்​டத்​துக்​காக ஏரா​ள​மான அள​வில் கைய​கப்​ப​டுத்​தும்​போது அது சமூக,​ பொரு​ளா​தார பிரச்​னை​க​ளைப் புதி​தாக உரு​வாக்​கும். எனவே கோடிக்​க​ணக்​கான பணம் விர​ய​மா​வ​து​டன் சமூ​கத்​தில் அமை​தி​யின்​மை​யும் ஏற்​ப​டும்.

நதி​களை அவற்​றின் போக்கி​லி​ருந்து திருப்​பு​வ​தால் அதன் பாச​னப் பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு மர​ப​ணுக்​க​ளில் சிதை​வு​கள் ஏற்​பட்டு உடல் ஊனம் போன்​றவை ஏற்​ப​டு​வ​தா​கக்​கூட சில ஆய்​வு​கள் எச்​ச​ரித்​தன. இந்த நிலை​யில் மத்​திய அர​சின் புதிய முடிவு மீண்​டும் பலத்த சர்ச்​சையை தேசிய அள​வில் ஏற்​ப​டுத்​தும்’ என பல காரணங்களைக் கூறத் தொடங்கிவிட்டனர்.

அன்றைக்கு ராகுல்காந்தி பேசிய போதே, இந்தத் திட்டத்தின் கதி என்ன என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

இப்போது அந்த முடிவினை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

ஆனாலும் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளை இணைப்பது தனியாகவும், தென்னக நதிகளை இணைப்பது தனியாகவும் நிறைவேற்றப்படும் என்று நீர்​வ​ளத் துறை அமைச்​சர் பவன்​கு​மார் பன்​சால் அறிவித்துள்ளார்.




7 thoughts on “‘பணமில்லை…!!’: கங்கை – காவிரி இணைப்பு கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு!

  1. govindaraj

    அதானே எல்லா பணமும் தமிழனை கொல்ல ஸ்ரீலங்கா அரசுக்கு கொடுதுடங்களே! இந்தியனுக்கு தமிழ் நாடோ தமிழனோ முக்கியம் கிடையாது

  2. Tamilan

    நம்ம அரசியல்வியதிகளிடம் இல்லாத பணமா!!! 72 லட்சம் கோடி மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சி ஸ்விஸ் பாங்க்ல வச்சிகிட்டு பணம் இல்லன்னு கதவிடுறாங்க..
    இந்த நாடு உருப்படும்னு எனக்கு தோனல!!!

  3. ராஜ்

    //ஆனாலும் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளை இணைப்பது தனியாகவும், தென்னக நதிகளை இணைப்பது தனியாகவும் நிறைவேற்றப்படும் என்று நீர்​வ​ளத் துறை அமைச்​சர் பவன்​கு​மார் பன்​சால் அறிவித்துள்ளார்.//
    அப்போ தான் ஒரு பக்கம் வறட்சியும் இன்னொரு பக்கம் வெள்ளமும் வந்து இவன்க அரசியல் பண்ண வசதியா இருக்கும் .

  4. harisivaji

    இவங்களுக்கு இது பாஜக கொண்டுவந்த திட்டம் என்பதாலே
    செய்ய மனசுவரல அப்படி செஞ்சுட்டா அவுங்க நாங்க தான் மோதல தொடங்கினோம் சொல்லி பெருமைதேடிகுவாங்க …
    இதலாம் விட அதி புத்திசாலி ஒன்னு இருக்கு அதுக்கு இது புடிக்கல அப்புறம் எப்புடி

    இந்தியா வெளங்கின மாதரிதான்

  5. r.v.saravanan

    தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் இனி சாத்தியமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் evargalukku சாத்தியமில்லை

  6. palPalani

    கனவு நனவாகிறது!

    ஆம் ஒரு இந்தியனின், கனவு நனவாகிறது!

    /*
    அதி புத்திசாலி ஒன்னு இருக்கு அதுக்கு இது புடிக்கல
    */

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *