BREAKING NEWS
Search

பட்ஜெட்: அரசுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாகாது!

பட்ஜெட்…சில முக்கிய அம்சங்கள்

டெல்லி: 2வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று 06-pranab200பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை 3ம் தேதி தாக்கல் செய்தது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பல சலுகைகளுடன் கூடியதாக அந்த பட்ஜெட் அமைந்தது.

இந்த நிலையில் இன்று பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி.

இந்த பட்ஜெட்டிலும் பல்வேறு சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில சிறப்பு அம்சங்கள் வருமாறு…

-ஏழைகளுக்கு ரூ. 3க்கு 25 கிலோ அரிசி/கோதுமை

-12 முதல் 18 மாதங்களில் மக்கள் அனைவருக்கும் பயோ-மெட்ரிக் ஸ்மார்ட் கார்டுகள்

-தேசிய பெண்கள் கல்வி இயக்கம் துவக்கப்படும்

-வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உணவு உத்தரவாத திட்டம்.

-இதற்காக ரூ. 350 கோடி ஒதுக்கீடு

-ஏழைகளுக்கு ரூ. 3க்கு அரிசி/கோதுமை

-ஊரக வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ. 2000 கோடி

-ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடியால் 5 லட்சம் பேருக்கு பயன்

-3 ஆண்டுகளில் பெண்கள் கல்வி இரு மடங்காக்க நடவடிக்கை

-தமிழகத்திலும் ராஜஸ்தானிலும் மாபெரும் ஜவுளிப் பூங்காங்கள்

-கல்விக் கடனுக்கு முழு வட்டியும் தள்ளுபடி-அது வங்கிகளுக்கு மானியமாக தரப்படும்

-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மாபெரும் வெற்றி. இத்திட்டத்துக்கு மேலும் ரூ. 39,000 கோடி

-இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 8800 கோடி

-பொதுத்துறை வங்கிகள்-காப்பீட்டு நிறுவனங்கள் தனியார்மயமாகாது

-அன்னிய-உள்நாட்டு முதலீடுகளை எளிதாக்க நடவடிக்கை

-தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 100 ஆக உயர்வு

-பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனங்களில் அதிக மக்கள் முதலீடுக்கு திட்டம்

-ரயில்வேக்கு இடைக்கால பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 15,800 கோடி ஒதுக்கீடு

-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தால் 4.47 கோடி பேருக்கு வேலை கிடைத்தது

-பொதுத்துறைகள் நாட்டின் தூண்கள். அவை தனியார்மயமாகாது, தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

-வருமான வரி தாக்கல் எளிதாக்கப்படும்

-வரி தாக்கலுக்கு சரால்-2 திட்டம் அறிமுகமாகும்

-பொருளாதார சரிவால் வங்கித்துறைக்கு பெரும் பாதிப்பில்லை

-பொருளாதார சரிவால் இந்தியாவுக்கு பிற நாடுகளை விட குறைவான பாதிப்பே

-பத்திரிக்கைத் துறைக்கு உதவி நிதி 6% அதிகரிப்பு

-பெட்ரோலிய பொருட்கள் விலையை நிர்ணயிக்க நிபுணர் கமிட்டி

-பொருளாதார நெருக்கடியால் சிறுதொழில் துறைக்கு கடும் வீழ்ச்சி

-சிறுதொழில்துறைக்கு கூடுதல் நிதி

-சர்வதேச விலைக்கு ஏற்றபடி பெட்ரோல்-டீசல் விலைகளில் மாற்றம்

-பட்ஜெட் எதிரொலி-சென்செக்ஸ், நிப்டியில் வீழ்ச்சி

-மின் திட்டங்களுக்கு ரூ. 2089 கோடி

-ரூ. 3.25 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு

-குறைந்த வட்டியில் விவசாயிகளுக்குக் கடன்

-தேசிய எரிவாயு கட்டமைப்பு உருவாக்கப்படும்

-மும்பை வெள்ளத் தடுப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி

-விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு

-ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

-அடிப்படை கட்டமைப்பு-சமூக வளர்ச்சித்துறைக்கு கூடுதல் நிதி

-விவசாயக் கடன்களுக்கு 3.25 லட்சம் கோடி ஒதுக்கீடு

-ரயில்வேவுக்கு ஒதுக்கீடு 15,000 கோடி கூடுதல் நிதி

-நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு வசதிக்கு ரூ. 3972 கோடி

-தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு 23% கூடுதல் நிதி

-எரிவாயு உற்பத்தி இரு மடங்காக்கப்படும்

-இந்திய அடிப்படை கட்டைப்பு நிறுவனம் உருவாக்கப்படும்

-ஜவஹர்லால் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்துக்கு 83% கூடுதல் நிதி

-பட்ஜெட் எதிரொலி- 15,000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்

-ஜிடிபி சரிவால் வேலை உருவாக்கம் பாதிப்பு

-தனியார் முதலீடுகளுககு முக்கியத்துவம்

-கடந்த இரு காலாண்டுகளும் மிக மோசமானவை

-அடிப்படைக் கட்டமைப்புத்துறை வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம்

-விவசாயத்துறை வளர்ச்சியை 4% ஆக அதிகரித்தாக வேண்டும்

-அன்னிய முதலீடு மிக மிக அவசியம்

-சந்தையில் கூடுதல் நிதி புழக்கத்துக்கு வழி செய்யப்படும்

-9% வளர்ச்சியை மீண்டும் எட்டுவது பெரும் சவால்

-ஆனால், அதை எட்டியாக வேண்டும்

-உள்நாட்டு தொழில்துறையில் மீண்டும் வளர்ச்சி தெரிகிறது

-பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 1.86 லட்சம் கோடி முதலீடு

-விவசாயத்துறையில் 4% வளர்ச்சி நிலைநிறுத்தப்படும்

-கடந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 6.7%

-நிதிப்பற்றாக்குறை 6.9%

-தனியார் துறை மூலமே வளர்ச்சியை ஸ்திரப்படுத்த முடியும்

-அன்னிய முதலீட்டார்கள் இந்தியாவில் முதலீடு செய்வது மீண்டும் அதிகரிக்கிறது

-9% வளர்ச்சியை எட்டி, நிலைநிறுத்த நடவடிக்கை

-பொதுத்துறையின் செயல்பாடு சீர்படுத்தப்படும்

-2008-09ல் ஒட்டுமொத்த உற்பத்தி சரிவு

-அடிப்படை கட்டமைப்பு முதலீடு 9 % வளர்ச்சி

-1.2 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

-45 நாட்களில் புதிய நேரடி வரிகள் திட்டம் அறிவிப்பு

-பெங்களூரில் மத்திய வரிகள் ஒருங்கிணைப்பு அலுவலகம் அமைப்பு

-நேரடி வரிகள் வருவாய் 58% அதிகரிப்பு

-பட்ஜெட் செலவீனங்கள் ரூ. 10,28.032 கோடி

-கடன்களுக்கு அரசு செலுத்தும் வட்டிச் செலவுகள் ரூ. 2 லட்சம் கோடி

-வருவாயில் 3ல் ஒரு பங்கு வட்டிக்கே போகிறது

-வருவாய் பற்றாக்குறை 4.8%

-நிதிப் பற்றாக்குறை 6.8 %

-பாதுகாப்புத்துறைக்கு 1.42 லட்சம் கோடி ஒதுக்கீடு

-திட்டச் செலவுகள் 34 சதவீதம் அதிகரிப்பு

-மொத்த செலவுகள் 10 லட்சம் கோடியைத் தாண்டுவது இதுவே முதல்முறை

-2009-10ல் திட்டமில்லா செலவுகள் 6.9 லட்சம் கோடி

-2009-10ல் மொத்த செலவு ரூ. 10 லட்சம் கோடி

-2009-10ல் திட்ட செலவுகள் மதிப்பீடு 3.9 லட்சம் கோடி

-சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்கு ரூ. 1740 கோடி

-அய்லா புயல் நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ. 1000 கோடி

-தலா ரூ. 25 கோடியில் முர்ஷிதாபாத், மலப்புரத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலை வளாகங்கள்

-சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி

-கமான்வெல்த் விளையாட்டுகளுக்கு ரூ. 3,472 கோடி

-ரூ. 1 லட்சம் வரை வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியம்

-ராணுவத்துக்கு நிகராக துணை ராணுவப் படையினருக்கு படிகள்

-தேசிய கங்கைத் திட்டத்திற்கு ரூ. 562 கோடி

-ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஓய்வூதியம் அதிகரிப்பு

-மத்திய பாராமிலிட்டரிப் படையினருக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம்

-10000 வீடுகள் கட்ட திட்டம்

-பயோமெட்ரிக் கார்ட் திட்டத்துக்கு ரூ. 125 கோடி

-புதிய ஐஐடிக்கள், என்ஐஐடிகளுக்கு ரூ. 435 கோடி

-ஹரியாணா-பஞ்சாப் பல்கலைக்களுக்கு ரூ. 50 கோடி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *