BREAKING NEWS
Search

பசில் ராஜபக்சேக்கு பளார் விட்ட சிம்பன்ஸி!

பசில் ராஜபக்சேக்கு பளார் விட்ட சிம்பன்ஸி!

லங்கையில் பொருளாதார வளர்ச்சி அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பசில் ராஜபக்சே, சமீபத்தில் தெகிவலை மிருகக் காட்சி சாலையைப் பார்வையிடப் போனார்.

அங்குள்ள சிம்பன்ஸி குரங்கைப் பார்த்ததும் உற்சாகத்துடன் கைகுலுக்கு முயன்றார் பசில்.

சிம்பன்ஸி என்ன மூடிலிருந்ததோ… கொஞ்சநேரம் அமைதியாக விழித்துவிட்டு, பின்னர் பசில் ராஜபக்சேயின் கன்னத்தில் பட்டென்று ஒரு அறைவிட்டது. உடனே அதன் ஒரு கையை பராமரிப்பாளர் பிடித்துக் கொள்ள, மறுகையாலும் பசிலை அடித்தது சிம்பன்ஸி.

பசிலுக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும், சுதாரித்துக் கொண்டார். சுற்றியிருந்த அதிகாரிகளும், மிருகக் காட்சி சாலை பொறுப்பாளர்களும் பதற்றத்துடன், சிம்பன்ஸியை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.

பொதுவாக சிம்பன்ஸிகளுக்கு கூட்டமாக மனிதர்களைக் கண்டாலே அலர்ஜி. இவர்களோ பெரும் கும்பலாகப் போய் சிம்பன்ஸிக்காகக் காத்திருந்தனர். அதனைப் பராமரிப்பவர் கட்டிப் பிடித்தபடி தூக்கி வந்தார். ஆளாளுக்கு கையைக் குலுக்க முனைந்ததில் வந்த கடுப்பை இப்படிக் காட்டியுள்ளது சிம்பன்ஸி. வாயைக் கட்டுப்படுத்தி வைத்திருக்காவிட்டால் கடித்து வைத்திருக்கும் போல!

பொதுவாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா என்ற வசனம் பசிலுக்கும் தெரிந்திருக்கும் போலிருக்கிறது.

உடனே சுதாரித்துக் கொண்டு, “சிம்பன்ஸிகிட்ட அடிவாங்குவதும் நல்ல சகுனம்தான்… பெரிசுபடுத்தாதீங்க” என்று சிரித்துக் கொண்டே மற்ற பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியேறினார்.

அந்த வீடியோ:

-வீடியோ: அதிர்வு.காம்




7 thoughts on “பசில் ராஜபக்சேக்கு பளார் விட்ட சிம்பன்ஸி!

  1. sakthivel

    காரணம்….. அடி வாங்கிய சிமபன்சிக்கு தெரியுமோ????

  2. பஹ்ரைன் பாபா

    அடி வசமா விழலியே தல …

    __________

    ஏதோ குரங்கால முடிஞ்சது… நம்மாளுங்க அதுக்கும் லாயக்கில்லையே! 🙂

  3. குமரன்

    இந்தச் சிம்பன்சி செய்ததைக்கூட இலங்கைக்குப்போன நமது “விடுதலைச் சிருத்தை” திருமாவளவனோ, “கவிஞர்” கனிமொழியோ, “சிலைஞரின் அன்புத்தம்பி” பாலுவாலோ செய்யமுடியவில்லையே.

    யார் யாருக்கோ இங்கே பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா அது இதென்று நடக்கிறது. உண்மையில் இந்தச் சிம்பன்சிக்குத்தான் பாராட்டுவிழா நடத்தவேண்டும். நம்ம ஜெகத்ரட்சகன், ராம.நாராயணன், ஜாக்குவார் தங்கம் முதலானோர் கவனிப்பார்களா?

  4. Shankar

    சார் ,

    குரங்குகுள்ள ஆயிரம் விஷயம் இருக்கும் …,அதெல்லாம் நமக்கு எதுக்கு சார் :))))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *