BREAKING NEWS
Search

‘பசங்க’ளுக்கு தங்க யானை விருது!

‘பசங்க’ளுக்கு தங்க யானை விருது!

சங்க படம் முதல் முதலில் விளம்பரம் செய்யப்பட்ட போது, இதெல்லாம் ஓடுமா என்று கேட்டவர்கள்தான் தமிழ் சினிமா வர்த்தகர்கள். படம் வெளியானதும், அது குறிப்பிட ஆங்கிலப் படத்தின் தழுவல் என்றவர்கள் நிறைய. அந்த ஆங்கிலப் படத்தின் பெயரைக் கூட வெளியிட்டார்கள் பத்திரிகை விமர்சனங்களில்.

pasanga

ஆனால் நல்ல கதைக் கரு ஒன்றை மையப் புள்ளியாக வைத்து பல படைப்புகள் உருவாவதை யாரும் தவறென்று கூறுவதில்லை. பசங்க படத்திலும் அதுவே நடந்தது. மக்களின் ஆதரவில் வசூலும், நல்ல சினிமாவை ரசிப்போர் தந்த ஆதரவில் இப்போது விருதுகளும் குவிய ஆரம்பித்துவிட்டன (என்ன… டைரக்டர் ஏற்கெனவே ரொம்ப ஓவரா பேசுற பார்ட்டி.. இனி தாங்க முடியாது!).

ஹைதராபாத்தில் நடந்த 16வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் பங்கேற்ற பசங்க தமிழ்ப் படத்துக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜிடம் தங்க யானை விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இயக்குநர் சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்த இரண்டாவது படம் இது.

விழாவில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, நடுவர்களும் பாராட்டினார்களாம். சிறந்த ஆசியப் படங்கள் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற படங்கள் லிஸ்ட்:

பாண்டிராஜ் (பசங்க – இந்தியா) – சிறந்த இயக்குநர் (தங்க யானை)

ஹாஃப் மைன் ஹாஃப் (ஈரான்) – சிறந் தபடம் (தங்க யானை)

டூ மென் க்ளாஸ் ரூம் (சீனா) – சிறந்த படம் (தங்க தட்டு)

சில்ட்ரன் அண்ட் ஏஞ்சல் (சீனா) – சிறந்த திரைக்கதை (வெள்ளி யானை)




2 thoughts on “‘பசங்க’ளுக்கு தங்க யானை விருது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *