நூற்றாண்டின் அதிசய சூரிய கிரகணம் – வீடியோ காட்சிகள்
இந்த மாதிரி ஒரு அதிசய சூரிய கிரகணத்தைப் பார்க்க இன்னும் 123 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே மக்களுக்கு எழுந்த ஆர்வம் புரிந்து கொள்ளக் கூடியது.
இந்த நூற்றாண்டின் வானத்து அதிசயமான சூரிய கிரகணம் பார்க்க உலகமே வாய்ப்பான இடங்களில் கூடி நின்றது.
இந்தியாவில் வாரணாசியில் முழுமையான சூரிய கிரகணம் தெரிந்தது.
அதுபற்றிய முழுமையான வீடியோ காட்சிகளை டைம்ஸ் நவ் வெளியிட்டிருந்தது.
சூரிய கிரகணம் தொடங்கியதுமே வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருளாக இருந்தது. சூரிய கிரகணம் இங்கு தெளிவாகத் தெரியவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆக்ரா, குவஹாத்தி, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் பாதி அளவே கிரகணத்தைக் காண முடிந்தது. தலைநகர் டெல்லியிலும் முக்கால்வாசி கிரகணத்தையேப் பார்க்க முடிந்தது.
டெல்லியில் உள்ள நேரு பிளானட்டோரியத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.
சென்னையில் …
சென்னையிலும் சூரிய கிரகணம் சரியாகத் தெரியவில்லை. கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் மக்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்க சிறப்பு தொலைநோக்கி வசதி செய்யப்பட்டிருந்தது. இதை ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று பயன்படுத்தி கிரகணத்தைப் பார்த்தனர்.
ஆனாலும், மேகக் கூட்டம் காரணமாக கிரகணம் சரிவரத் தெரியவில்லை. பாதி அளவே தெரிந்தது.
கறுப்புச் சூரியனின் உதயம்!
சூரிய வைரம்!