BREAKING NEWS
Search

நீங்காத புலிப் பயத்தில் சிங்கள ராணுவம்!


இனத் துரோகிகளை விலைக்கு வாங்கியும் நீங்காத புலிப் பயத்தில் சிங்கள ராணுவம்!

ஹா புலிகளைத் தோற்கடித்து விட்டோம்… பிரபாகரனை ஒழித்துவிட்டோம்’ என்று வெளியில் சீன் காட்டினாலும் உள்ளுக்குள் உதறலோடுதான் இருக்கிறது இலங்கை ராணுவம்.

AstroLTTE_news_1187144212848

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பிறகு, புலிகள் அடியோடு மாயமாகிவிட்டனர். சரணடைந்தவர்கள் போக மீதிப் புலிகள் எங்கே, அவர்களின் அதி நவீன ஆயுதங்கள் எங்கே என்று சல்லடை போட்டுத் தேடிப்பார்த்து விட்டன இலங்கை- இந்தியப் படைகள். ஆனால் நோட்டைக் கண்டுபிடித்தோம், போட்டைப் பார்த்தோம், நகையைக் கண்டுபிடித்தோம், பிரபாகரன் ஆல்பம் கிடைத்தது என்று சொல்லிக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவம், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மர்ம உணர்வில் காத்திருக்கிறது.

இந்தப் பக்கம், மாவீரர் நாள் உரை வாசிப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஏகப்பட்ட புலிக் கதைகள்.

“எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்”

-என்ற மிகப் பெரிய தியாக சிந்தனைக்குச் சொந்தக்காரர் தலைவர் பிரபாகரன்.

அந்த நேர்மையாளன், தன் சுயநலம், மனைவி, குழந்தைகள் நலம் என எல்லாவற்றையும் தியாகம் செய்து தன் இன மக்களுக்காக உருவாக்கிய தமிழீழத்தை காட்டிக் கொடுப்பதிலும், சிங்களத்திடம் பலன்களை அனுபவிப்பதிலும் குறியாய் உள்ளனர், அவரது தளபதிகள் என தங்களைக் கூசாமல் சொல்லிக் கொள்கிற சில ‘துரோகப் புலிகள்!’

விடுதலைப் புலிகள் என்ற லச்சினையைப் பார்த்தாலே முன்பெல்லாம் பலருக்கும் மரியாதை இருந்தது. ஆனால் இன்றோ மீடியாக்காரர்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு,  அந்த லெட்டர் பேடைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

‘மாவீரர் நாள் உரை என்று ஒருவர் அறிக்கைவிட, அதெல்லாம் இல்லை என்று இன்னொருவர் அறிக்கை தர, பனகொட முகாமில் பல சொகுசுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இன  ‘துரோகிகள்’, இலங்கை அரசின் அறிவிக்கப்படாத படையாக மாறி வேறொரு கள்ள அறிக்கையை, அதே புலிகளின் லெட்டர் பேடில் அடித்து அனுப்புகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு, தன்னைத் தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரையும் வாய்விட்டுக் கதற வைத்துள்ளது.

‘இதற்காகவா எம் தலைவர் இத்தனை பாடுபட்டார்!’ என கண்ணீர் விட்டுக் கதறும் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லவும் நாதியில்லை.

தாய்த் தமிழகத்திலோ, பிரபாகரன் பெயரை முடிந்தவரை பிஸினஸ் செய்வதில் பலரும் குறியாக உள்ளனர். இன்று வரை பெரும்பாலான பத்திரிகைகளுக்கு அட்டைப் பட உபயம், தலைவர் பிரபாகரன்தான். தினம்தோறும் புதிய கதைகள்… மர்மத் தொடர்கள்.

தாங்கள் விரும்பியது நடந்துவிட்ட மகிழ்ச்சியில், இந்த ஆண்டு மாவீரர் உரையை கோத்தபய டைரக்ஷனில், சிலர் பனகொட மீகாமிலிருந்தோ அல்லது கிளிநொச்சியின் கவுரவச் சிறையிலிருந்தோ வாசிக்கக் கூடும் என்கிறார்கள் எஞ்சியிருக்கும் சில தமிழீழ விசுவாசிகள்.

இன்னொரு பக்கம், இலங்கை முழுவதையும் உஷார் நிலையில் வைத்துள்ளது சிங்கள ராணுவம்.

ஆட்களே இல்லாத, தமிழரின் மாபெரும் சுடுகாடாகக் காட்சிதரும் வன்னிப் பிரதேசத்தைக் காக்க முன்னிலும் அதிக படையணிகளைத் தருவித்துள்ளது ராணுவம்.

இத்தனைக் குழப்பத்தை தமிழ்ப் போராளிகளுக்குள் ஏற்படுத்தி பிரித்தாண்டாலும், இலங்கை அரசின் புலிப் பயம் மட்டும் விலகவில்லை என்பதற்கு இது ஒன்றே சாட்சி.

துரோகிகள் நிறைந்த இனம், எதையும் சேர்ந்து நின்று ஒரு தலைமையில் கீழ் சாதிக்க வக்கற்ற கூட்டம் என்ற பெயரெடுத்தாலும், இந்த ஒரு விஷயத்தை நினைக்கும்போது சிலிர்ப்பாகத்தான் உள்ளது.

ஒரு நிஜமான மாவீரன், உலகத் தமிழினத்தின் தலைவன் பிறந்த இந்த நாளில், இனியாவது அவரின் நேர்மை வழிநிற்கும் சபதம் ஏற்பார்களா தமிழுணர்வாளர்கள்?

-விதுரன்
7 thoughts on “நீங்காத புலிப் பயத்தில் சிங்கள ராணுவம்!

  1. endhiraa

    மாவீரருக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

  2. Senthil

    தமிழின தலைவா – பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  3. arulnithyaj

    மாவீர‌ர் தலைவர் பிரபாகரன் அவ‌ர்க‌ளுக்கு பிற‌ந்த‌ நாள் நல்வாழ்த்துக்க‌ள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *