BREAKING NEWS
Search

நிம்மதியான நாடுகள் எவை… இதோ ஒரு டாப்-10!

உலகின் சந்தோஷமான நாடுகள்!

லகம் முழுக்க மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா… பெரும்பாலும் வன்முறை, போர், அணு ஆயுதத் தயாரிப்பு, அணி சேர்ந்து கொண்டு அரசியலுக்காக ஒரு இனத்தையே அழிப்பது…. இப்படித்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம்? இதில் நிம்மதியான சூழல் எங்கே, எப்போது நிலவப் போகிறது?

-இப்படித்தான் மனம் வெறுத்துப் போய் பலரும் விரக்தியான வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த துயரங்களையும் தாண்டி மக்கள் சந்தோஷமாக வசிக்கும் நாடுகளும் உள்ளன என அறிவித்துள்ளது புதிய பொருளாதார பவுண்டேஷன் எனும் அமைப்பு. அதுதான் சந்தோஷமான நாடுகளின் பட்டியல்.

உலகில் மக்கள் சந்தோஷமாக, நிம்மதியாக, மிகக் குறைந்த அளவு பிரச்சினைகளுடன், ஆனால் நீண்ட ஆயுளுடன் வாழும் நாடு எது? 143 நாடுகளின் அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து ஒரு டாப் டென் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அவற்றின் விவரம்:

1. கோஸ்டா ரிகா

costa-rica-san-jose

இங்குதான் மக்கள் அதிகபட்ச சந்தோஷம், நிம்மதியான வாழ்க்கை மற்றும் அதிக ஆயுளுடன் வசிப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உலகில் ராணுவ அமைப்பையே வேண்டாம் என ஒழித்துக் கட்டிய ஒரே நாடு கோஸ்டா ரிகாதான். உலகிலேயே பசுமை வளமும் செழிப்பும நிறைந்த தேசம் இதுதான்.

சுற்றுச் சூழல் மாசுபாடு இல்லாத நாடு. மேலும் அடுத்த பத்தாண்டுகளில் செயற்கையான காரணங்களால் கார்பன் மாசுபாடே முற்றிலுமாக இல்லாத வகையில் இப்போதே அந்நாட்டு அரசு திட்டங்கள் தீட்டி வருகிறது.

அமெரிக்க கண்டத்தில் பனாமா மற்றும் நிகாரகுவாவுக்கு அருகே அமைந்துள்ள இதன் தலைநகர் சான் ஜோஸ்.

2. டொமினிக்கன் குடியரசு

உலகில் மக்கள் அதிக சந்தோஷத்துடன் வாழும் இரண்டாவது நாடு டொமினிக்கன் குடியரசு. கரீபிய தீவுக்கூட்டங்களைச் சேர்ந்தது. இந்தப் பிராந்தியத்திலேயே இரண்டாவது பெரிய நாடு இது.

airlines-to-dominican-republic

தொடர்ந்து ஸ்பானிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், அமெரிக்கர்கள், இப்போது ஹைய்திகாரர்கள் என எல்லா காலகட்டத்திலும் டெமினிக்கன் ஏதோ ஒரு விதத்தில் மற்ற நாட்டின் ஏகாதிபத்தியத்துக்குட்பட்டே இருந்து வந்துள்ளது.

இப்போது விடுதலைப் பெற்று விட்டாலும், இந்த நாட்டின் ஒரு பகுதி ஹைய்தி கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தாலும் மக்கள் பிரச்சினைகள் எதுவுமின்றி நிமதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். தலைநகர் சாண்டோ டொமினிகா.

3.ஜமைக்கா

இன்னமும் பிரிட்டிஷ் அரசியின் தலமையில் இயங்கும் நாடுகளில் ஒன்று ஜமைக்கா. உலகில் அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்து ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் உள்ள நாடு.

airlines-to-jamaica

மக்கள் மிகுந்த சந்தோஷமாகவும், பிரச்சினைகள் பெரிதாக இல்லாமலும் வாழ்கிறார்களாம். தலைநகர் கிங்ஸ்டன். பொழுதுபோக்கு, பீன்பிடிப்பது, குடிப்பது, கிரிக்கெட் பார்ப்பது!

4.கவுதிமாலா

இது ஒரு மத்திய அமெரிக்க நாடு. தலைநகர் கவுதிமாலா சிட்டியைத் தவிர, பிற பகுதிகளில் பெரிதாக போக்குவரத்து வசதிகள் கூட கிடையாது. ஆனால் மக்கள் நீண்ட ஆயுள் மற்றும் நிம்மதியுடன் வாழ்கிறார்களாம்.

photo_lg_guatemala

காரணம், இந்த நாட்டின் இயற்கை வளங்கள் இன்னமும் நவீனத்துவத்தால் ‘கற்பழிக்கப்படாமல்’ இருப்பதுதான். சுற்றுச் சூழல் முற்றாகப் பாதுகாக்கப்பட்டு வரும் நாடுகளுள் கவுதிமாலா முக்கியமான இடம் வகிக்கிறது.
5.வியட்நாம்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 13 வது நாடு. ஆசியாவின் முக்கிய நாடுகளுள் ஒன்று. பெயரளவுக்கு கம்யூனிஸ நாடாக இருந்தாலும், இன்றைக்கு ஆசிய அளவில் திறந்தவெளிச் சந்தைக் கொள்கையை கடைப்பிடிக்கும் நாடு இதுதான்.

800px-thac_be1baa3n_gie1bb91c

பெரும் அரசியல் நெருக்கடிகள், உள்நாட்டு யுத்தங்களைச் சந்தித்த இம்மக்களின் ஆயுதம், தொழில் இரண்டுமே விவசாயம்தான்! இந்த நாட்டு நெல் வயல்கள்தான் அன்றைய வியட்நாமிய யுத்த களமாக இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதனால் நல்ல சாப்பாடு, தரமான உணவுப்பொருட்கள், நிம்மதியான வாழ்க்கை என மக்கள் நிதானத்துடன் இருக்கிறாகள்.

6. கொலம்பியா

லத்தீன் அமெரிக்க நாடுகளுள் ஒன்று. கொலம்பஸ் கண்டுபிடித்த நாடுகளில் ஒன்றான இங்கு சர்வதேச சந்தைப் பொருளாதாரம் எவ்வளவுதான் சுரண்டினாலும், நிம்மதியும் சந்தோஷமும் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லையாம்.

bogota1

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட இங்கு அமேசான் காடுகள் மற்றும் சதுப்பு நிலப் பிரதேசங்கள் ஏராளம் உள்ளன. இதன் தலைநகர் பகோடா.

7.க்யூபா

உண்மையிலேயே உலகை ஆச்சரியப்பட வைத்துள்ள நாடு இது. எத்தனையோ சிக்கல்கள், தடைகள் இருந்தாலும், முன்பு புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, இப்போது அவர் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தலைமையில் வெற்றி நடைபோடும் நாடு இது.

teatrogarcialorca

இந்நாட்டு மக்களின் சராசரி வயது 78.3 ஆண்டுகள். உலகிலேயே அருமையான மருத்துவ வசதிகள் நிறைந்த நாடு. தலைநகர் ஹவானா.

8. எல் சால்வடார்

மத்திய அமெரிக்காவில் உள்ள இந்த நாடு, அப்பகுதியின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளுள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

el-salvador-home

நிச்சயம் இந்நாட்டு மக்கள் நிம்மதியாகத்தான் இருப்பார்கள். காரணம் உலகிலேயே அதிக வரிகள் இல்லாத ஒரே நாடு எல் சால்வடார்தான். தலை நகர் சான் சால்வடார்.

9. பிரேஸில்

ஜி 20 அமைப்பின் முக்கிய அங்கம். உலகின் பெரிய நாடுகளுள் ஒன்று. எல்லா வளங்களும் நிறைந்த மிகச் சிறந்த நாடான பிரேஸில், உலக அளவில் 10வது சக்தி வாய்ந்த பொருளாதாரமாகத் திகழ்கிறது. தலைநகர்: ரியோடி ஜெனிரோ.

rio_de_janeiro

10. ஹோண்டுராஸ்

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த நாடுதான் இதுவும். நாளுக்கு நாள் இதன் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பேராசை கொள்ளாத, குற்றங்கள் செய்யாத மக்கள் என்பதால் இந்த டாப் டென்னில் அமெரிக்காவுக்குக் கூட கிடைக்காத இடம் ஹோண்டுராஜுக்குக் கிடைத்துள்ளது. தலைநகர்: டெகுசிகல்பா1054531-las_marias_moskitia-honduras

இந்த முதல் பத்து சந்தோஷமான, நிம்மதியான நாடுகள் பட்டியலில் உலக வல்லரசுகள் எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா அல்லது தனக்குத் தானே வல்லரசுப் பட்டம் கட்டிக் கொண்டுள்ள இந்தியா… எதுவுமே இல்லை!
12 thoughts on “நிம்மதியான நாடுகள் எவை… இதோ ஒரு டாப்-10!

 1. pisasu

  hondurasila kalagam vanthu antha naatu athibarage irunthavar naadu kadathappattarungo! Braziluuku pora amrica candia tourist nimmathiya vara mudiyurathu illengo.
  Enna naamma loyla survey maathiri keethu

 2. கிரி

  ஹலோ ஹல்லல்லோ!

  சிங்கப்பூர் சூப்பர் நாடுங்க..ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நிம்மதியான டென்ஷன் இல்லாத ஊர் ….

  இது டாப் 10 ல இல்லையா…சன் டிவி டாப் 10 மாதிரி டகால்ட்டி வேலை பண்ணிட்டாங்களா!! 😉

  மற்றபடி நீங்க கூறிய இடங்கள் அருமையா இருக்கு…. கியூபா எல்லாம் இருக்கு சிங்கப்பூர் இல்லையா..இதை நான் ஒத்துக்க மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்.. 😀

 3. Logan

  News may right or wrong by the information is very worth,

  Why No Singapore and Maldives?

 4. jak

  i survived myself in some countries by last few years…singapore is one of the best peaceful country among the world.

 5. alagan.rajkumar

  sir, singapore munpu than nalla irunthathu,ippodu kidayathu.last year kooda enakku bad exp.enakku earpattathu. mahatma gandhi avargal aasai pattathu pol night 12 manikku kuda oru ilam pen jewels niraya aninthu kondu suthanthiramai poga mudiyum endral athu U.A.E. DUBAI THAN.

 6. M BALAMURUGAN

  ITHULA INDIA ENTHA EDATULA IRUKU………………
  100 KULANA VARUMA………………….
  APPA NAMBA OPP PAKISTAN ENN EDATULA VARUM…………….

 7. Manoharan

  Its interesting that most of the Countries belongs to American Continent. Who conducted this study ?

 8. v.jayachandran

  சொர்க்கமே என்றாலும் எங்க கோவையை போல வருமா? என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?

 9. BHARATHI DASAN

  நம்ம நாடும் இருக்கும் என்ற எண்ணம் தப்பானது என்று புரிஞ்சிக்கிட்டன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *