BREAKING NEWS
Search

நினைவுகளை மீட்டும் இசை…

நினைவுகளை மீட்டும் இசை…

சை பற்றி ஒருவருக்கு என்ன தெரிய வேண்டும்… எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்?

“டாக்டரிடம் போய் வியாதிக்கு மருந்து வாங்கிக் கொண்டு வருவதுதான் நோயாளிக்கு நல்லது. சிலர் ஆர்வக் கோளாறில் சில மருந்துகளின் பெயர்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள்.

தனக்கு சில மருந்துகளின் பெயர்கள் தெரியும் என்பதற்காக, ‘சார்… எனக்கு ரெண்டு நாளா கடுமையான காய்ச்சல். பாரசிட்டமால் போட்டேன்… கேக்கல. கால்பால் போட்டு பாக்கவா… இல்ல ஒரு இன்ஜக்ஷன் போடறீங்களா…?’

-இதைக் கேட்கும் ஒரு மருத்துவரின் மன நிலை எப்படியிருக்குமோ, அதுதான் இசையைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்துக் கொண்டு, என்னைப் படுத்துபவர்களிடம் நான் மாட்டிக் கொள்ளும் போதும் ஏற்படுகிறது.

ஒரு விஷயம் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம் தப்பில்லை. ஆனால் முழுமையாக தெரிந்து கொள்ளும் முன்பே தனக்குத் தோன்றியதையெல்லாம் ஊடகம் வழியாக பேசுவதும் எழுதுவதும், படைப்பைக் கெடுத்துவிடும் ஆபத்து உள்ளது… எப்படி அரைகுறை மருத்துவம் ஆளைக் கொன்றுவிடுமோ, அப்படித்தான் அரைகுறை இசை அறிவும் படைப்பைக் கொன்றுவிடும்… எனவே முதலில் நல்ல இசைக்கு ரசிகனாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்…”

-இது இசைஞானி இளையராஜா தனது மேடைக் கச்சேரி ஒன்றில் சொன்னது.

எத்தனை பெரிய உண்மையும், நடைமுறை அனுபவங்களும் இணைந்த வார்த்தை பாருங்கள்!

இசை பற்றி நமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

‘நாமறிந்த இசைக் கலைஞரிலே, எம்எஸ்வி போல, பர்மன்கள் போல, இளையராஜா போல… புவியினிலே யாருமில்லை’ என்று சொல்லும் பாமரத்தனமான ரசனையே நம்முடையது. அதுதான் மிகவும் சுகமானதும் கூட.

நல்ல இசைக்கு மொழி கிடையாது… நல்ல இசைக்கான கட்டுமான அமைப்புகள் அதை உருவாக்கியவருக்கு மட்டும் தெரிந்தால் போதும். கேட்பவருக்கு அதில் மனம் லயிக்க வேண்டும்.

அப்படி நம் மனம் லயித்த திரைப் பாடல்கள் குறித்த பதிவுகளை மொழி பேதமின்றி தொடர்ந்து எழுதும் ஒரு முயற்சி இது.

இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

உங்கள் இசை ரசனை, மனம் லயித்த பாடல்களைப் பகிர்ந்து கொள்ளலாம், எழுத்துக்களாக… வீடியோ வடிவங்களாக. திரையிசை தொடர்பான கட்டுரைகளையும் இந்தப் பகுதியில் அடிக்கடி எதிர்பார்க்கலாம்.

நாம் ரசித்த நல்ல பாடல்களை நண்பர்களுடன் அமர்ந்து பரிமாறிக் கொள்வதில்லையா… அப்படித்தான் இதுவும்.

ஓகே… நினைவுகளை இனிமைப்படுத்திய இனிய பாடல்களுடன் நம் பயணத்தைத் தொடர்வோம்…

இளைய நிலா….

இந்தப் பதிவின் முதல்பாடலாக இளையநிலாவைத் தர சில காரணங்கள் உண்டு…

தமிழ் சினிமாவில் ஆடியோவுக்கென்று மிகப் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திய பாடல்  இது.  இந்திப் பாடல்களுக்கென்று இருந்த பெரிய சாம்ராஜ்யத்தை கிட்டத்தட்ட காணாமல் போகச் செய்துவிட்ட பாடலும் கூட.

எண்பதுகளில் இளைஞர்களின் தேசிய கீதம் மாதிரி… எந்த இசைமேடையாக இருந்தாலும் முதலில் ஒலிக்கும் பாடல் இந்த இளையநிலாதான்… இன்றும் இளமை குறையாத இசை நிலா…

பயணங்கள் முடிவதில்லை படத்தில்  இந்தப் பாடல் இடம் பெற்றது.

இதன் தயாரிப்பாளர் கோவைத் தம்பி ஒருமுறை இப்படிச் சொன்னார்:

“என் திரையுல வாழ்க்கைக்கே பெரிய ஒளிவிளக்கை ஏற்றி வைத்த பாடல் இது என்றால் மிகையல்ல. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டுச் சொன்னார்…  ‘இந்தப் படம் உன்னை உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தும்’ என்று.  பொன்மனச் செம்மலின் வாக்கல்லவா… அப்படியே நடந்தது. அன்புச் சகோதரர் இளையராஜாவின் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் என்னை மீறி கண்ணீர் எட்டிப் பார்க்கும்…”

பாடலுக்கான குறிப்பு:

இசை: இசைஞானி இளையராஜா

பாடல்: வைரமுத்து

பாடியவர்: எஸ்பி பாலசுப்பிரமணியம்

படம்: பயணங்கள் முடிவதில்லை

வெளியான ஆண்டு: 1982

-எஸ்எஸ்
7 thoughts on “நினைவுகளை மீட்டும் இசை…

 1. r.v.saravanan

  ilya nila padal enakku oru sugamana thendral yen manathai mattumalla yen
  idayathai ye varudum

  welcome to ninaivugalai mettum isai

 2. சோலைராசு

  அருமை… இனிமை… வேறு எந்த வார்த்தை சொல்லிப் பாராட்ட… தினம் கேட்கும் பாடல்தான் என்றாலும் இப்போதும் புது அனுபவமாக உள்ளது. நன்றி!

 3. Sakthikumar, Detroit

  “டாக்டரிடம் போய் வியாதிக்கு மருந்து வாங்கிக் கொண்டு வருவதுதான் நோயாளிக்கு நல்லது. சிலர் ஆர்வக் கோளாறில் சில மருந்துகளின் பெயர்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள்.
  தனக்கு சில மருந்துகளின் பெயர்கள் தெரியும் என்பதற்காக, ‘சார்… எனக்கு ரெண்டு நாளா கடுமையான காய்ச்சல். பாரசிட்டமால் போட்டேன்… கேக்கல. கால்பால் போட்டு பாக்கவா… இல்ல ஒரு இன்ஜக்ஷன் போடறீங்களா…?’
  -இதைக் கேட்கும் ஒரு மருத்துவரின் மன நிலை எப்படியிருக்குமோ, அதுதான் இசையைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்துக் கொண்டு, என்னைப் படுத்துபவர்களிடம் நான் மாட்டிக் கொள்ளும் போதும் ஏற்படுகிறது.
  ஒரு விஷயம் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம் தப்பில்லை. ஆனால் முழுமையாக தெரிந்து கொள்ளும் முன்பே தனக்குத் தோன்றியதையெல்லாம் ஊடகம் வழியாக பேசுவதும் எழுதுவதும், படைப்பைக் கெடுத்துவிடும் ஆபத்து உள்ளது… எப்படி அரைகுறை மருத்துவம் ஆளைக் கொன்றுவிடுமோ, அப்படித்தான் அரைகுறை இசை அறிவும் படைப்பைக் கொன்றுவிடும்… எனவே முதலில் நல்ல இசைக்கு ரசிகனாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்…”
  -இது இசைஞானி இளையராஜா தனது மேடைக் கச்சேரி ஒன்றில் சொன்னது.”

  -இசை ஞானி வார்த்தைகள் அனைத்தும் உண்மை… உண்மையைத் தவிர வேறில்லை!

 4. Kamesh

  Mind Blowing Music…. Even though I have heard this many times it still
  remain fresh as you say Vinoji…

  Welcome to “Ninaivugalai Meettum Isai”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *