BREAKING NEWS
Search

நாம் தமிழராய் இணைந்து வென்றோம்..! – சீமான்

நாம் தமிழராய் இணைந்து வென்றோம்..! – சீமான்

சென்னை: கொழும்பு திரைப்பட விழா மாபெரும் தோல்வி அடைந்ததற்கு நாம் தமிழராய் இணைந்து போராடியதே காரணம். இதற்காகப் போராடிய அமைப்புக்களுக்கு நன்றி என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சீமான் விடுத்துள்ள அறிக்கை:

“தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும்(IIFA), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI)யும் இணைந்து நடத்திய ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக ரீதியிலான மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு நாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்த போராட்டம் முக்கிய காரணம் ஆகும்.

தமிழ் இனப்படுகொலையை மறைக்கவும் சர்வதேச அளவில் தனது நாட்டின் மீதான அவப்பெயரைப் போக்கவும் இலங்கையை பாதுகாப்பான சுற்றுலா நாடாக பறை சாற்றவும்,இந்திய அரசின் உதவியுடன் கொடுங்கோல் சிங்கள அரசானது ஜூன் 2 முதல் 4 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழாவை கொழும்பு நகரில் நடத்தி அதன் தொடர்ச்சியாக உலக வர்த்தக மாநாட்டை நடத்தி தனது வர்த்தக நலனை பெருக்கிக் கொள்ளலாம் என்பது தான் சிங்கள அரசின் திட்டம்.இதற்காக இலங்கை அரசு ஏறத்தாழ 100 கோடி ரூபாயை செலவழித்துள்ளது.

ஆனால் நாம் தமிழர் இயக்கம் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்த பின்பு சர்வதேச திரைப்பட விழா முழுக்க முழுக்க தோல்வி அடைந்துள்ளது.பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ள இந்த வெற்றியில் நாம் தமிழர் இயக்கம் முக்கிய பங்காற்றியுள்ளது.

முதற்கட்டமாக இந்த நிகழ்வின் பிரதான விருந்தாளியான அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு எதிராக மிக்ப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்தது. முதன் முதலாக கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் வீட்டின் முன் மாபெரும் முற்றுகைப்போராட்டத்தை நடத்தியது. கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் கண்டு தனது கொழும்பு செல்லும் முடிவைப் பரீசீலிப்பதாக நடிகர் அமிதாப் இணையத்தில் அறிவித்தார்.

ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு பின்பும் அவர் தனது முடிவை அறிவிக்காததால் மே 11 ஆம் நாள் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து நூற்றுககணக்கானோர் கலந்து கொண்டனர். எமது போராட்டத்தின் வீரியம் காரணமாக அமிதாப் மற்றும் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோர் கொழும்பு திரைப்பட விழாவில் இருந்து மறுநாளே விலகிக் கொண்டனர். இதுவே இந்த தொடர் போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியாகும்.

இதன் மூலம் மற்ற நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள மிகவும் தயங்கினர்.இந்த திரைப்பட விழா நிகழ்வு தோல்வியடையப் போகின்றது என்பதற்கு அமிதாப் விலகிய நிகழ்வே கட்டியம் கூறுவதாக அமைந்தது.

அதற்கு பின்னர் தூதராக நியமிக்கபப்ட்ட சல்மான்கான் கொடும்பாவியை நாம் தமிழர் இயக்கமும் இதர தமிழ் அமைப்புக்களும் இணைந்து மும்பை தாராவி காவல் நிலையம் முன் எரித்தனர். அதற்குப் பின்னும் ஜூன் 1 ஆம் நாள் மும்பை ஆசாத் மைதானத்தில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த இந்தி நட்சத்திரங்களைக் கண்டித்து ரஜினி ரசிகர் மன்றத்துடன் இணந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். இன்று கொழும்பு சர்வதேச திரைப்பட விழா மிகப்பெரிய தோல்வியடைந்து இலங்கை அரசின் திட்டத்தில் மண் அள்ளிப் போடப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் அமைப்புக்களும் தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுத்த பொழுது மும்பையில் களத்தில் இறங்கி நாம் தமிழர் இயக்கம் போராடியதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். இவவாறு பல்வேறு கட்டப்போராட்டங்களை நாம் தமிழர் இயக்கம் நடத்தியதன் காரணமாக இன்று மிகபபெரிய வெற்றி நம் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்துள்ளது. இது நாம் தமிழர் இயக்கம் மட்டும் பெருமைப்படும் வெற்றியல்ல. மற்ற அமைப்புக்களின் பங்கும் இதில் கலந்துள்ளது.

குறிப்பாக தென்னிந்திய வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், இதில் ஆக்கப்பூர்வமான படைப்புக்களை அளித்த நண்பர்கள்,குரல்கொடுத்த கட்சிகள், தமிழ் அமைப்புக்கள், தன்னெழுச்சியாக திரண்ட தமிழ் ஆர்வலர்கள், போராட்டத்தை வெளிக்கொணர்ந்த ஊடகங்கள் அனைவரிடமும் இந்த நேரத்தில் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொள்கின்றேன்,” என்று கூறியுள்ளார் சீமான்.
7 thoughts on “நாம் தமிழராய் இணைந்து வென்றோம்..! – சீமான்

 1. ss

  இப்படி ஒரு அறிக்கை தேவை இல்லாதது.. நன்றி கடிதமாக இருந்தால், அவர் இயக்கம் எடுத்த முயற்சிகளை நினைவு படுத்த தேவை இல்லை. நல்லது யார் செய்தாலும் மக்கள் அடையாளம் கண்டு கொள்வர். இந்த சுய விளம்பரம் தேவையற்றது.

 2. annu

  நாம் தமிழர் இயக்கம் பற்றி வரிக்கு வரி புகழ்வதைப் பார்த்தால் இதுவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. இவர்களின் போராட்டத்தையும் தாண்டி பல பெரிய தலைகளின் அறிவுரையால்தான் அமிதாப் வீட்டினர் விலகினார்கள் என்பதை முன்பே படித்தபின் இதை படித்தால் வெறும் ஸ்டன்ட் போலவே தெரிகிறது. ஹ்ம்ம்…தமிழ் மக்களின் தலைவிதி…வேறென்ன சொல்ல?

 3. ramachandran

  எல்லோரும் செய்த வேலைக்கு பாராட்ட எதிர்பர்கிரும், அப்படி இர்ருகும்போடு, நாம் தமிழர் இயக்கம் நடத்திய போராட்டம் அடைந்த வெற்றிக்கு, யாரும் நன்றியோ, பாராட்டோ தெரிவிக்காத பொது, அவங்க இயக்கமும் மேலும் வளரவேண்டும் என்று நினைத்து அவர் இப்படி பேசி இருக்கலாம்.

 4. Ramanan

  நாம் தமிழர் இயக்கம் ஒன்று தான், இன்று தமிழருக்கு இருக்கும் மிக பெரிய நம்பிக்கை.

 5. Muthu

  மானமுள்ள தமிழர் இயக்கம் வளர வாழ்த்துங்கள்.. குறை சொல்லாதிர்கள் ஆதரவு கரம் நீட்டுங்கள்… சீமான் போல் பலர் தமிழ் நாட்டின் அவலத்தை போக்க முன்வர ஊக்கத்தை கொடுத்து பாராட்ட முன் வாருங்கள்… தமிழ் நண்பர்களே…

 6. பரிதி நிலவன்

  //அனைத்து தமிழ் அமைப்புக்களும் தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுத்த பொழுது மும்பையில் களத்தில் இறங்கி நாம் தமிழர் இயக்கம் போராடியதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். //

  இதுதான் சரியான அணுகுமுறை. வெற்றிக்கு காரணம் மும்பையை திரும்பி பார்க்க வைத்ததுதான். சென்னையில் போராடி இருந்தால் இன அழிப்பின் வீரியம் பாலிவுட் நடிகர்களுக்கு புரிந்திருக்காது என்பதுதான் உண்மை.

  அவரவர்க்கு அவரவர் மொழியில் சொன்னால்தான் விளங்கும்.
  மும்பையில் போராடிய நாம் தமிழர் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *