BREAKING NEWS
Search

‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது!’ – கார்த்திக்

‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது!’ – கார்த்திக்

மதுரை: ‘பணத்தை அள்ளி வீசி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் வருகிறேன் என்றால் இங்குள்ள பலருக்கு ‘ஜன்னி’ pictures_videos_45528811217கண்டுவிடுகிறது’ என நடிகர் கார்த்திக் கூறினார்.

கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரமே முடியும் தறுவாயில், இப்போதுதான் திருப்பரங்குன்றத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியிருக்கிறார் நாடாளுமன்ற மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக்.

தனது பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது:

எனது புனித பயணத்தை திருப்பரங்குன்றத்தில் முருகக் கடவுளை வேண்டி துவங்கி இருக்கிறேன். என் தமிழையும், தாயையும் வணங்கி விட்டு பிரசாரம் செய்கிறேன்.

உங்களிடம் ஒரே ஒரு வரம் கேட்கிறேன். தாமரை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றிபெற வையுங்கள். நமது வெற்றியை பார்த்து பயந்து சிலர் நம்மை தடுக்க பார்க்கிறார்கள். போதும் இந்த பகை அரசியல். நாம் நாடு, நம் குடும்பம், நம் சகோதரர்கள், இளைய சமுதாயத்தினர் முன்னேற வேண்டும்.

எத்தனை தடைகளை மீறி நாம் களம் இறங்கி இருக்கிறோம். நான் தேர்தலில் போட்டியிடக்கூடாது என தடுத்தவர்கள் ஏராளம். அவர்கள் கட்சியில் சாதாரண தொண்டர்கள் கூட வேட்பாளர்களாராகும் போது எனக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இல்லையா?

நமது கூட்டணி கட்சி அல்ல இது ஒரு குடும்பம். நமக்கு பணத்தை அள்ளி வீசி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் வருகிறேன் என்றால் இங்குள்ள பலருக்கு ‘ஜன்னி’ கண்டுவிடுகிறது. இது அவர்கள் குற்றம். ஓட்டு வாங்கிவிட்டு சென்னை சென்று விடுபவன் அல்ல நான். விருதுநகர் தொகுதியிலேயே உங்களோடுதான் வாழப் போகிறேன். நீங்கள் கொடுத்த உப்பை தின்று உங்களுக்காகப் பாடுபட வந்திருக்கிறேன்.

உங்களை ஏமாற்றியவர்களை இந்த முறை நீங்கள் ஏமாற்றுங்கள். மக்களை ஏமாற்றியவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும். கடமை உணர்வோடு கை நீட்டுகிறேன். உங்களை நான் கைவிட மாட்டேன் பா.ஜ.க.,வை மதம் சார்ந்த கட்சி என குறை கூறுபவர்களுக்கு தகுதி இல்லை”, என்றார் கார்த்திக்.




One thought on “‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது!’ – கார்த்திக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *