தனுஷ் ஏற்படுத்திய சங்கடமும் எஸ்பிஎம்மின் பெருந்தன்மையும்!
ரஜினி ரசிகர்கள் பலருக்கும் தனுஷ் ஒரு புதிர்தான். ‘இவர் தலைவருக்கு சாதகமாகப் பேசுகிறாரா… அல்லது புகழ்வதாகச் சொல்லி விமர்சனம் செய்கிறாரா.. ஒண்ணுமே புரியலையே’ என்று கேட்பவர்கள் நிறைய.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியும் அப்படித்தான் அமைந்தது.
சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய டிபி கஜேந்திரன், ‘சமீபத்தில் நான் தனுஷ் வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்கப் போயிருந்தேன். அப்போது தனுஷ் நடந்து கொண்ட விதம் எனக்கு பழைய நினைவுகளைக் கிளறியது.
நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் அடிக்கடி ரஜினி வீட்டுக்குச் செல்வேன். அப்போது என்னை ஒரு உதவி இயக்குநர் என்று பார்க்காமல், ரஜினி சாரே வந்து வரவேற்று உபசரித்துப் பேசுவார்.
ரஜினி சார் அன்றைக்கு எப்படி வரவேற்பாரோ, பேசுவாரோ, வழியனுப்பி வைப்பாரோ, அதே பண்பும் பணிவும் தனுஷிடம் நான் பார்த்தேன். நிச்சயமாக சொல்கிறேன், ரஜினி சாரின் அடுத்த வாரிசு தனுஷ்தான். உறவு முறையிலும் சரி, நடிப்பிலும் சரி ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் தனுஷ்தான்” என்றார்.
அடுத்த நிமிடம் மைக்கைப் பிடித்த தனுஷ் இப்படிச் சொன்னார்:
“ரஜினி சார் பெண்ணை கட்டிக்கிட்டதாலேயே நான் அவருக்கு வாரிசாகிவிட முடியாது. நான் எப்பவுமே கஸ்தூரிராஜாவோட வாரிதான். அதுதான் உண்மை. என்மேல இருக்கிற அன்பால கஜேந்திரன் இப்படி பேசறாரு. எங்கப்பா கஸ்தூரிராஜா இல்லேன்னா நான் இல்லே.. அதனாலதான் இந்த விழாவுக்கே வந்தேன்” என்றார்.
டிபி கஜேந்திரனுக்கு சற்று சங்கடம்தான்.
ஆனால் அடுத்துப் பேசிய எஸ்பி முத்துராமன், தான் எப்படிப்பட்ட பண்பான மனிதர் என்று மீண்டும் ஒருமுறை காட்டினார்.
“சூப்பர் ஸ்டாருக்கு நான் வாரிசில்லை என்று தனுஷ் இங்கே சொன்னார். நான் இந்த மேடையிலிருந்து தைரியமா சொல்றேன், எங்க சூப்பர் ஸ்டாருக்கு மகன்கள் இல்லை… இரண்டும் மகள்கள்தான். அதனால் சூப்பர் ஸ்டார் வீட்டுல நீயும் ஒரு மகன்தான்னு இங்கு மகிழ்ச்சியோடு அறிவிச்சிக்கிறேன்.
எங்க ரஜினி சார் வீட்டுக்கு மகனும் நீதான், மருமகனும் நீதான். வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு..” என்று கூற, இப்போது தனுஷ் நெளிந்தார்!
-என்வழி
i don’t see anything wrong in Dhanush reply..that’s shows his self respect.
மேடையிலே தனுஷை புகழ்வதற்காக ஒரு மாபெரும் மனிதருடன் ஒப்பிடுவது தனுஷுக்கு பெருமை.
ஆனால் கஸ்தூரி ராஜா எப்பேர்பட்ட பெருமை வாய்ந்த படங்களை தனுஷுக்கு கொடுத்தார். அதையும் நினைத்து தனுஷ் பெருமை படட்டும்.
நல்ல வேளை. தனுஷ் மறுத்தது ரஜினி ரசிகனாக நிம்மதி.
அதற்கு ஏதோ தனக்குத்தான் சுயமரியாதை இருப்பது போல தனுஷ் பதில் அளித்திருப்பது தேவையற்றது.
MGR கூட பாக்யராஜை தன் கலையுலக வாரிசு என்றுதான் சொன்னார்.
நம் இந்தியர்களுக்கு இன்னும் மன்னராட்சி முறை வாரிசு மயக்கங்கள் போகவில்லை என்று தான் தோன்றுகிறது. கஜேந்திரனுடைய பேச்சு ஒரு உதாரணம். ஏன் யாரவது, யாருக்காவது வாரிசாக இருந்தே ஆக வேண்டும்? நாமாகவே இந்த வாரிசு கலாசாரத்தை உருவாக்கி ஊக்கப்படுத்துவது. பின்னர் அதை விமர்சனம் செய்வது. (கருணாநிதி – ஸ்டாலின் ஒரு உதாரணம்). முன்பொருமுறை இப்படி தான் எம்.ஜி.ஆர் பாக்யராஜை தன்னுடைய வாரிசு என்று அறிவித்தார். எம்.ஜி.ஆர் சொன்னதாகவே இருந்தாலும் அது அபத்தமே. அப்படி தான் கமலை, சிவாஜயின் வாரிசு என்று சிலர் கூறிய போது கமலே, “சிவாஜியின் இடம் சிவாஜிக்கு. வாரிசு என்ற சொல்லை வைத்து அதன் தனித்தன்மையை கெடுக்க வேண்டாம்” என்றார். 100 க்கு 100 உண்மை. ரஜினியே ஒரு முறை “விக்ரம் தான் அடுத்த Super Star” என்று ஒரு மேடையில் பேசினார் (தூள் பட வெற்றி விழா என நினைக்கிறன்). அது அவருடைய பெருந்தன்மையாக இருந்தாலும், எனக்கு இந்த வாரிசு வாக்கியங்களில் நம்பிக்கை இல்லை. ரஜினியும் கூட எம்.ஜி.ஆரின் வாரிசாக வரவில்லை. தனித்தன்மையுடன் தான் வந்தார். இது தனுஷுக்கும் பொருந்தாதா? ஏன் ஒருவர் தனித்தன்மையுடன் வருவதை நாம் ஊக்கப்படுத்துவதில்லை. பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி எல்லோரும் தங்கள் தனித்தன்மையால் தான் பேசப்படுகிறார்களே அன்றி, வாரிசு என்ற விஷயத்தை வைத்து அல்ல.
எங்க ரஜினி சார் வீட்டுக்கு மகனும் நீதான், மருமகனும் நீதான். வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு..” என்று கூற, இப்போது தனுஷ் நெளிந்தார்
super answer எஸ்பி முத்துராமன் sir
ரஜினியின் மருமகன் ஆகிவிட்டாலும் தன் நிலை என்னவென்பதை தனுஷ் உணர்ந்திருக்கிறார். ரஜினியின் மருமகன் என்பதற்க்காகவே ரஜினியின் பெயரை வைத்து எந்தவொரு ஆதாயமும் தனக்கு கிடைப்பதை தனுஷ் விரும்பவில்லை. இது ரஜினிக்கு நிச்சயம் பெருமைதான். எப்படி சிவாஜிராவை ரஜினி இன்னும் மறக்கவில்லையோ அதே போல்தான் கஸ்தூரிராஜாவின் மகன் என்பதுதான் முன்னிறுத்தப்படவேண்டும் என்று தனுஷ் நினைக்கிறார். இது ஆணவம் இல்லை, இது சுயமரியாதை. ஒரு தந்தைக்கு மகன் இப்படித்தான் இருக்கவேண்டும். ரஜினியும் அதைத்தான் விரும்புவார்.