BREAKING NEWS
Search

நான் மகான் அல்ல – திரைப்பட விமர்சனம்

நான் மகான் அல்ல – திரைப்பட விமர்சனம்

டிகர்கள்: கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்ரகாஷ், சூரி
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: சுசீந்திரன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

சொந்த சரக்கு தீர்ந்து போய் அரைத்த மாவை அரைக்கலாமா என யோசிக்கும்போதே ஒரு படைப்பாளி காணாமல் போகிறான்.

கோடம்பாக்கத்தில் அப்படிக் காணாமல் போன ‘ஒற்றைப் பட அதிசய’ படைப்பாளிகள் ஏராளம்… வெண்ணிலா கபடிக் குழு என்ற நல்ல படம் தந்த சுசீந்திரனும் அப்படிக் காணாமல் போய்விடுவாரோ என்ற கேள்வி எழுகிறது, அவரது இரண்டாவது ‘குப்பைப் படமான’ நான் மகான் அல்ல பார்த்ததும்!

கார்த்தி தெரிந்தே இந்த மாதிரி கதைகளில் நடிக்கிறாரா (இந்தக் கதையை அவர் தேர்வு செய்ய 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதை தனி செய்தியாகப் பரப்பினார்கள்!).. அப்படியானால் நான்கே படங்களில் நடித்துள்ள, நடிப்பின் அரிச்சுவடியையே தாண்டாத தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாகவே அவர் கற்பனை செய்து கொண்டிருக்கிறாரா.. புரியவில்லை.

மிகக் கொடிய முறையில் தனது தந்தையைக் கொன்ற கும்பலை அதைவிட மகா கொடூரமாக பழிக்குப் பழி வாங்குகிறார் ஹீரோ என்ற ஒற்றை வரிதான் கதை.

ஏதோ ஒரு வங்கியில் கடன் வசூலிக்கும் வேலை கார்த்திக்கு. ஏதோ ஒரு கல்யாணத்தில் காஜலைப் பார்க்கிறார். தமிழ் சினிமா நியதிப்படி உடனே காதல் பிறந்து டூயட் பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். காஜலைப் பெண் கேட்டு அவர் தந்தையிடம் போய் நிற்கிறார் கார்த்தி. அவரோ, உருப்படியான வேலையுடன் வா என்று திருப்பியனுப்ப, அடுத்த பாதியில் காஜல் காணாமல் போகிறார். கார்த்தியின் காதலும் காணாமல் போகிறது.

கார்த்தியின் அப்பா ஒரு இரட்டைக் கொலையைப் பார்த்துவிட, அந்தக் கொலைகார கும்பல் அவரைத்துரத்திக் கொன்றுவிட, கார்த்தி ஆவேசமாக… அப்புறம் க்ளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்வது இருட்டுக்கடைக்கே அல்வா விற்ற கதையாகிவிடும் அல்லவா!

ஆனால் அந்த க்ளைமாக்ஸை சொன்னவிதம் படு கோரம்… படைப்பாளி என்று சொல்லிக் கொள்கிறவர்களின் வக்கிர வெளிப்பாடு என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

வெண்ணிலா கபடிக் குழு படம் தந்த நம்பிக்கையில்தான் பிரஸ் ஷோவுக்குக் கூட போகாமல், இந்தப் படத்தைக் காசு கொடுத்துப் பார்த்தோம். தலைவலியை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றிருந்தால், யார் தடுக்க முடியும்!

கோடம்பாக்க படைப்பாளிகளில் 98 சதவீதம் பேர் தங்களின் இரண்டாவது படத்தில் சறுக்கியவர்களாகவே இருப்பார்கள். சுசீந்திரனும் இதற்குத் தப்பவில்லை.

கார்த்திக்கு நடிப்பு வரவில்லை. நக்கலும் எகத்தாளமுமாக அந்த பருத்திவீரன் கெத்திலேயே காலத்தை ஓட்டிவிட முடியும் என நம்புகிறார் போலும்… சண்டைக் காட்சிகளில் மகா செயற்கை. இவரது வீரப் பிரதாபம் எப்போது முடியும் என யோசிக்கும்போதே கடுப்பாகிறது.

காஜல் அகர்வால் படத்தின் நாயகி. பல்லைக் காட்டிக் கொண்டே முதல் பாதியில் அங்கும் இங்கும் ஓடுகிறார். இடைவேளைக்குப் பிறகு காணாமல் போகிறார். இதற்கு இவர் படத்தில் இல்லாமலேயே கூட இருந்திருக்கலாம்.

இடைவேளை வரை ஆங்காங்கே சில டைமிங் காமெடிகள் ரசிக்கும்படி இருப்பதையும் மறுப்பதற்கில்லை. அதே ட்ராக்கில் படத்தைக் கொண்டு போயிருந்தாலும் வாய்விட்டு சிரித்துவிட்டு வந்திருக்கலாம்.

படத்தின் ஆறுதல் சூரியின் காமெடி (வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டா போட்டியில் ஜெயிப்பாரே அவர்தான்!). அதே போல ஜெயப்ரகாஷின் அசத்தலான நடிப்பு மறக்க முடியாதது.

யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்திலும் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். பாடல்கள் அருமை. பின்னணி இசையில் தந்தையை நினைவுபடுத்துகிறார்.

பாஸ்கர் சக்தியின் வசனம், மதியின் ஒளிப்பதிவு எதுவும் மனதில் பதிகிற மாதிரியில்லை. ராஜீவன் போட்டிருக்கும் சுனாமி குடியிருப்பு பக்கா சினிமா செட் என்று தெரிகிறது.

ஒரு நல்ல தலைப்பை வீணடித்தார்கள் என்பதைத் தவிர, இந்தப் படத்தின் சாதனை என்று எதுவுமில்லை. இந்த லட்சணத்தில் ‘எ பிலிம் பை சுசீந்திரன்’ என்று டைட்டில் கார்டு வேற!

-என்வழி
23 thoughts on “நான் மகான் அல்ல – திரைப்பட விமர்சனம்

 1. krish

  ஹலோ நீங்க இப்படி சொல்றீங்க ஆனா **** விமர்சனத்தில் படம் சூப்பர் அப்படின்னு சொல்றாங்க.எத நம்ப ஒண்ணுமே புரியல பாஸ்.

 2. Manoharan

  படம் உண்மையிலேயே சூப்பர். அதுவும் கார்த்தியின் நடிப்பு பிரமாதம். முதல் காட்சியிலிருந்து கடைசிவரை நம்மை சீட் நுனியில் வைத்திருக்கிறது படத்தின் வேகம் . முதல் பாதியில் கார்த்தியின் காமெடி களைகட்டுகிறது. இரண்டாவது பாதி ஆக்ஷன் விருந்து. இந்தப் படம் மோசம் என்றால் அது நிச்சயம் படம் பார்த்தபின் செய்த விமர்சனமாகத் தெரியவில்லை.

 3. RAMAN

  padam super. fight good.climax super .comdey super.songs super .karthi acting superrrrrrrrrrrrrrrrr

 4. Muthu

  இந்த விமர்சனத்தில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது … இந்த படம் சார்ந்த நபர்களில் யாரையோ உங்களுக்கு பிடிக்கவில்லை .. அதற்காக இப்படி ஒரு விமர்சனம் போட்டு உங்களின் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.. இந்த படம் ஒரு மிக சிறந்த படமோ , தமிழ் திரையுலகையே புரட்டி போடும் ரகத்தை சார்ந்த படமோ இல்லைதான், அனால் அதற்காக நீங்கள் விமர்சனம் செய்த அளவுக்கு மோசமானதாக தெரியவில்லை… நான் உங்களை போல ஒரு அறிவாளி இல்லை. ஒரு சாதாரண ரசிகன்.. என் பார்வையில் இது ஒரு நிறைவான படம்.. எனக்கு கார்த்தி ஐ பிடிக்கும் என்பது தனி கதை.. அதற்காக வக்காலத்து வாங்கவில்லை.. ஒரு சாதாரண ரசிகனின் பார்வையில் என் கருத்தை தெரிவிக்கிறேன்..

 5. saathick

  தம்பி உனக்கு படம் சம்பந்த பட்ட யாரையோ பிடிக்கல அதுக்கு படம் நல்ல இல்லைன்னு சொல்ல கூடாது.

 6. guru

  உங்களுக்கு ரஜினி படம் தவிர வேற படம் புடிக்காத …………….

 7. Rajiv

  ஹாய் எவெரிபடி…

  கமன்ட் பண்ண டாக் யாரு ……..

 8. Manoharan

  ஆயிரத்தில் ஒருவன்,பையா,சிங்கம்,நான் மகான் அல்ல- இந்த நான்கு படங்களுக்கும் உங்கள் விமர்சனம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் நான்குமே ஹிட் .உங்களின் எதிர்மறையான விமர்சனத்துக்கு பத்திரிக்கையாளர்கள் பற்றி சூர்யா பேசியதுதான் காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் தனிநபர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்த படத்தை நம்பியுள்ள மற்றவர்களும் பாதிக்கப் படவேண்டுமா ? அதுவும் கார்த்தி என்ன தவறு செய்தார் ?

 9. niyayam

  நான் மகான் அல்ல – விமர்சனம்

  கார்த்தி நடிப்பில் அடுத்த ஹிட் ’நான் மகான் அல்ல’. அப்பட்டமான சென்னை கதைக் களம். ஒரு சராசரி மனிதனின் கோபம் தான் படம். அந்த கோபம் எதனால் என்பதும் அதற்கான நியாயமான காரணங்களும் படத்தில் சொல்லப்படுகிறது. வெண்ணிலா கபடிக்குழு இயக்குனர் சுசீந்திரன் கொடுத்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட படம்.

  திரும்பிப் பார்த்தாலே பத்து பேர் பறக்கும் ஹீரோயிஸக் கதைகளை பார்த்திருப்போம். கால் கையோடு நான்கு ஐந்து பேர் கட்டிப்புரண்டு உருளுகிற எதார்த்தமான சண்டைக் காட்சி ரசிகர்களுக்கு ரொம்பவும் புது அனுபவம். ஹீரோயிஸ அபத்தங்களை உடைத்து எரிந்த சுசீந்திரனுக்கு ஒரு சல்யூட்.

  நடுத்தர குடும்பத்து பையனாக ஜீவா ( கார்த்தி ). வாழ்க்கையில் எல்லா விஷயங்களையுமே ஈசியாக எடுத்துக் கொள்ளும் ஜாலி கேரக்டர். கால் டாக்ஸி ஓட்டும் அப்பா, பாசமான அம்மா, துறு துறு தங்கச்சி, டைம் பாசுக்கு நக்கலான நண்பர்கள், அழகான காதலி என வேல வெட்டி எதுவும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை. அழகான பூந்தொட்டிக்குள்ள வெடிகுண்டு வீசின மாதிரி ஜீவா வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனை.

  திடீரென மர்ம நபர்களால் ஜீவாவின் அப்பா கொல்லப்படுகிறார். எதற்காக இந்த கொடூரக் கொலை, யார் இதை செய்தவர்கள் என்பதை ரொம்பவும் புதுவிதமான திரில்லோடு சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.

  சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரிப் படிக்கும் இளைஞர்கள். அடுத்தவன் காதலியை கடத்திக் கொண்டுவந்து கற்பழித்து சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி கூவம் குப்பைகளில் தூக்கி எறிகிறார்கள். போலீஸ் விசாரணையில் ஜீவாவின் அப்பாதான் கடத்தி வந்த கால் டாக்ஸியின் டிடைவர் என தெரியவருகிறது. பசங்களின் கடத்தல் சங்கதி தெரியாத நிலையில் தவருதலாக அவர்களிடம் சிக்கிக் கொண்டதையும், கடத்தி வந்த பசங்களின் முகங்களை காட்டிக்கொடுக்கத் தயார் என்று போலீசிடம் சொல்கிறார் ஜீவாவின் அப்பா.

  இந்த விஷயம் அறிந்த வில்லன் கும்பல் தான் தன் அப்பாவின் கொலைக்கு காரணம் என ஜீவாவிற்கு தெரியவருகிறது. ஜீவா வில்லன் கும்பலை எப்படி பழித்தீர்க்கிறார் என்பது சுறுசுறுப்பான விறுவிறுப்பு.

  படத்தின் முதல் பாதியை அசத்தலான அரட்டையோடும் இரண்டாம் பாதியை கண்ணீர் கலந்த ஆவேசத்தோடும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். தன் முந்தைய படங்களைப் போல இயல்பான நக்கல் வசனங்களோடு முதல் பாதியில் வந்தாலும் படத்தின் இரண்டாம் பாதியில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்தி.

  காஜல் அகர்வாலுடன் காதல் லூட்டி ஒருபக்கம் என்றால், ராயபுரம் முட்டுச்சந்துகளில் வில்லன்களை விரட்டி விரட்டி அடிக்கும் மிரட்டல் மறுபக்கம்.

  காஜல் அகர்வால் கேக் மேல் வைத்த செர்ரி பழம் மாதிரி வர்றாங்க போறாங்க, வேற எதுவும் பெருசா இல்லை. கார்த்திக்கு அப்பாவாக ‘பசங்க’ ஜெயப்பிரகாஷ் சரியான தேர்வு. நான் மகான் அல்ல அவருக்கு கிடைத்திருக்கும் மற்றொரு நல்ல கேரக்டர். வில்லன்களாக வரும் பசங்களில் ஒரு மூன்று பேர் மனதில் பதிகிற அசத்தல் நடிப்பு.

  தன் திரைக்கதை நுணுக்கங்களை வெண்ணிலா கபடிக்குழு படத்திலேயே நிரூபித்த சுசீந்திரன், இதிலும் அதை சிறப்பான முறையில் செய்திருக்கிறார். ’கண்ணோரம் காதல் வந்தால்…’ என யுவன் ஷங்கர் ராஜாவின் குரல் ஒலித்ததும் தியேட்டரில் பலத்த கைதட்டல். பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார் யுவன். படத்தில் வரும் அப்பா மகன் பாடல் தமிழ் சினிமாவின் பொக்கிஷப் பாடல்களில் ஒன்றாக இருக்கும்.

  ரேணிகுண்டா படத்தின் சண்டை காட்சிகளில் தன் மிரட்டல் அடியால் மிரள வைத்த அனல் அரசு இதிலும் அடிக்கு அடி மிரட்டுகிறார். எதையும் அழகாகவே காண்பித்து பழக்கப்பட்ட மதியின் கேமரா அசல் சென்னையை ரொம்பவும் எதார்த்தமாக படம்பிடித்திருக்கிறது.

  கொடூரமாக நடக்கிற ஒரு உண்மை விஷயம். கேக்கில் தடவிய க்ரீம் போல் முதல் பாதியில் கொஞ்சம் அரட்டை பிறகு மிரட்டல் என உஷாராக கையாண்டிருக்கிறார் இயக்குனர். வில்லன்களை அடித்து முடித்ததும் வழக்கமான ஹீரோயிஸ வசனங்கள் எதுவும் பேசாமல் ஹீரோ கார்த்தியின் பார்வையிலேயே அனைத்தையும் புரியவைக்கிறார் இயக்குனர்.

  நான் மகான் அல்ல – அசத்தலான அடி

 10. SivaDharshan

  சரியா சொன்னிங்க தலைவா, தலைவர் பட பேரையே கெடுக்குரானுங்க!
  இனி இவனுங்களுக்கு புரியணும்!

 11. Vishwa

  என்வழி வினோவிற்கு சூர்யா மீதோ அல்லது சூர்யா குடும்பத்தினர் மீதோ அல்லது படம் சம்மந்தப்பட்டவர்கள் மீதோ காழ்புணர்ச்சி இருக்கும் என்ற விவாதத்துக்குள் நன் வர விரும்பவில்லை… அனால் ஒரு நடுநிலை பார்வையாளனாக இந்த படத்தின் முதல் பாகம் என்னை கவர்ந்தது ஆனால் இரண்டாம் பாகம் அந்த அளவு கவரவில்லை..

  வினோ கூறியதை போல் முதல் படத்தில் தன்னை நிரூபித்த சுசிந்திரன் இரண்டாம் படத்தில் தண்ணி கவனிப்பார்கள் என்ற அச்சத்தில் இந்த படத்தை செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.படம் முழுவதும் ஒரு SHOCK VALUE இருக்கவேண்டும் என்ற ஒற்றை குறிகோளுடன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அனால் ஒரு சமூகத்தில் சில விஷயங்களை(அது குற்றமானாலும்) வெளிச்சம் போட்டு காட்டுவது தவிர்க்க பட வேண்டும். அதை இந்த இயக்குனர் செய்ய தவறி இருக்கிறார். கல்லூரி மாணவர்களை இத்தனை கொடூரமாக எந்த இயக்குனரும் சித்தரிக்கவில்லை(உண்மையில் இத விட கொடூரமாக சில மாணவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது வேறு கதை). அத்தகைய Psychotic மாணவர்கள் சிலர் இருஅகலம் ஆனால் எடுத்தாள்வதற்கு நிறைய கதைகள் உள்ளன..அதனை விட்டு விட்டு சமூகத்திற்கு ஒரு பயனும் இல்லாத இத்தகைய படங்களை வரவேற்க கூடாது என்பதே என் கருத்து..

  அன்புடன்..
  விஷ்வா

 12. RAJA

  ithu oru vizhipunarvu padam….lovers thaniya ecr porathala varugira vilaivugal,clg students(oru silarin) kodiya mugammugam theriyatha nanbargal nambi selum lovers ku varugira problems ponra pala vishayangalai thgil urithu kati irrukirathu…………..

 13. purushoth

  படம் சூப்பர் . ரொம்ப நலருக்கு …….. சாங் குட்…………

 14. jawahar

  en vazhi vinu!! padam unmaiyile super. ungaloda vimarsana parvai thappaga irukkirathu enpatharku merkanda comments ellam utharanam.

 15. RAMESH {KUNDUMANI}

  வணக்கம்.நான் மகான் அல்ல சூப்பர் படம்

 16. RAMESH {KUNDUMANI}

  இந்த படத்தை நல்லா இல்லை என்று விமர்சனம் செய்த என் வழி என்ற நபருக்கு என் கண்டணத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் படத்தை பார்த்தீர்களா என்பது என்னுடைய முதல் கேள்வி.
  நான் மகான் அல்ல.இந்த படத்திற்கு ஏற்ற தலைப்பு
  மனிதர்கள் செய்யும் கொடூரங்களை மன்னிப்பதற்கு நான் மகான் அல்ல என்பது இந்த படத்தின் தலைப்பு.அதை உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.ரசிகர்களுக்கு
  என் உண்மை கருத்து
  படம் நல்லா இருக்குது எல்லாரும் பார்க்கலாம்.
  சில காட்சிகள் படத்தின் கதைக்கு தேவை.அதை சரியாக செய்திருக்கிறார் சுசீந்திரன்.இடை வேளைக்கு பிறகு கஜால் அகர்வாலை காணவில்லை என்று ஒரு காரணம் காட்டுகிறார்கள் படத்தின் கதையை கொண்டுபோக தேவை இல்லை கஜால்.

 17. கழுத்தறுப்பு

  இதெல்லாம் ஒரு படம்னு எவனும் சப்போர்ட் பண்ணி எழுதாதீங்கடா

 18. vijay

  டப்பா படத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய விமர்சனம் “FOUR BROTHERS” படத்தை ரீமேக் பண்ணி எதுத்ததே கேவலம். இந்த டைரக்டர் “வெண்ணிலா கபடி குழு” ரிலீஸ்ல்ல “நான் அமிர் , பாலா போட்ட கோடை அழுத்தமா போடுவேன்னு” சொல்லியிருக்காரு.

  படம் குப்பை – வில்லன் கோஷ்டி ஹீரோ அப்பா வண்டில்ல பொண்ணை கூட்டிட்டு போவங்களாம். தலைய வெட்டிப் போட்டப் பின்னால “ஹீரோவோட அப்பா” அத டிவில்ல பார்த்து இவர்களை மாட்டி விட்டுருவாருன்னு, நெனப்பங்களாம், அதே மாதிரி, ஹீரோவோட அப்பா டிவியில ” அழுகுன்ன தலைய ” பார்த்து உடனே சாட்சி சொல்ல போவாராம்! அதனால கொலை பண்ணிடுவாங்களாம். ஒரு வயசான மனிசன கொல்ல CM-அ கொல்ற மாதிரி ஸ்கெட்ச் போடுவாங்களாம்.
  கொரியன் படம் BAD GUYல்ல வர்ர சீன் மாதிரி கொன்னுடுவாங்கள்ளாம்.

  அப்புறம் ஹீரோவோட சூப்பர் பவர் கொலை பண்ணி பனியில்ல (four brother movie) சாரி இங்கே கடல் மண்ணுல்ல பொதப்பாராம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *