‘நான் புறக்கணிக்கிறேன்… இலங்கை தயாரிப்புகளை, கிரிக்கெட்டை!’
இந்தக் கட்டுரை சற்று பெரிதாக இருக்கக்கூடும். இருந்தாலும் முழுவதுமாகப் படியுங்கள்…
“விக்டோரியா சீக்ரெட்.. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆயத்த ஆடைக் கடைகளுள் ஒன்று அது. கடைக்கு வெளியே தமிழர்கள் சிலர் கைகளில் இலங்கைப் பொருட்களை வாங்காதீர்கள் என்ற தட்டிகளுடன் நிற்கிறார்கள். அதைப் படித்துவிட்டு உள்ளே சென்ற ஒரு பெண், தனக்குத் தேவையான ஆடையை வாங்கிக் கொண்டு, நேராக வந்து தட்டி வைத்திருந்த தமிழரிடம் இப்படிச் சொன்னார்: “ஆம்… நான் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். மதிக்கிறேன். இதோ பாருங்கள்.. நான் வாங்கியவற்றில் எதுவும் இலங்கைத் தயாரிப்பு இல்லை!”
– எனக்கு கண்களில் மளுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அடப் பாவிகளா… இந்த மனசு, இந்தியாவிலிருப்போருக்கும், இந்திய ஆட்சியாளர்களுக்கும் இல்லாமல் போய்விட்டதே என மனசு அழுதது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா… டெட்ராய்டுக்கு முதல் முதலில் நான் வந்தபோது, எல்லோரிடமும் என்னை இந்தியன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வேன். இப்போது நான் அப்படி சொல்லிக் கொள்வதில்லை. நான் ஒரு தமிழன் என்றுதான் சொல்லிக் கொள்கிறேன். அது ஈழமா, தாயகமா என்ற பேதம் எங்களுக்கானது. அதை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்ற உணர்வு வந்துவிட்டது. இன்னொன்று, தமிழன் என்று சொன்னால் என்னை கவுரவமாகத்தான் பார்க்கிறார்கள், இப்போது. தமிழன் என்ற அடையாளத்தை உலகமும் அங்கீகரிக்கிறது.
என்வழி உள்ளிட்ட தளங்களில் இதுதொடர்பான செய்திகள் பார்த்தேன். இங்கே நண்பர்கள் நிறையப் பேர் பார்க்கிறார்கள். முடிந்த அளவு இந்த விஷயத்தை முதன்மைப்படுத்துங்கள். பலன் இருக்கும். பொருளாதார இழப்பின் வலி இலங்கைக்கு நன்கு தெரியும்…”
-இது அமெரிக்காவின் டெட்ராய்டில் முதலில் பணியாற்றி இப்போது பே ஏரியாவில் வசிக்கும் நண்பர் சக்திகுமார் நம்மிடம் சொன்னது.
நமது கட்டுரையைப் படித்தபிறகு அதற்கு பின்னூட்டமிட்டிருந்த நண்பர் கண்ணையா, இலங்கை பொருட்கள் புறக்கணிப்பு குறித்து மிகத் தீவிரமாக முன்மொழிந்திருந்தார். இந்தக் கட்டுரையை இத்தனை விரிவாக நாம் எழுதுவதற்கு அவரும்கூட ஒரு காரணம் என்பதை குறிப்பிடுவதில் தயக்கமில்லை. என்வழி என்பது எனக்கு மட்டுமே சொந்தமானதில்லை.. வழியில் பயணம் செய்யும் எல்லோருடையதும்தான்!
புறக்கணிப்பு ஏன்?
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பு பிரிட்டனில் துவங்கப்பட்டது இலங்கைப் பொருட்கள் பகிஷ்கரிப்பு போராட்டம். கார்டியன், டைம்ஸ் ஆன்லைன் உள்ளிட்ட பல பத்திரிகைகள் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தன. பல கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடவும் செய்தன. வழக்கம்போல தமிழ்ப் பத்திரிகைகள், சேனல்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. இணையதளங்கள் (அதுவும் ஈழ ஆதரவு), மக்கள் தொலைக்காட்சி தவிர வேறும் யாரும் இதுபற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை, பேசவில்லை.
வன்னிப் போரின் இறுதிக் கட்ட பேரவலங்களை கண்கொண்டு பார்த்து, அந்த துயரச் செய்திகள் கேட்டு உறைந்து போயிருந்த தமிழர்கள், கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு இந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்று இந்த புறக்கணிப்பு குறித்த செய்திகள் பரவத் தொடங்கிய பிறகு, நியாயமாக இந்தியாவிலிருந்தல்லவா இந்தப் புறக்கணிப்பு தொடங்கியிருக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது.
அதற்கு முன் இந்திய – இலங்கை வணிகத்தின் அளவு என்ன என்பதையும் மிகச் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
இலங்கையின் முக்கிய பொருளாதார ஆதாரம் இந்தியாதான். குறிப்பாக 2000 -ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியில் 838 சதவிகித (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லை… 838 சதவிகிதம்தான்!) அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது இலங்கை அரசின் வர்த்தகத் துறை அமைச்சகம்.
2000-ம் ஆண்டில் வெறும் 55 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கையிலிருந்து இறக்குமதி செய்து வந்த இந்தியா, அடுத்த ஏழு ஆண்டுகளில் 600 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இறக்குமதியின் அளவை அதிகரித்தது.
இந்த நிதியாண்டில் அது இன்னும் பெருமளவு உயர்ந்திருக்கக் கூடும். ஆனால் தொடர்புடைய புள்ளி விவரங்களை இன்னும் வெளியிடவில்லை இலங்கை – இந்திய வர்த்தக அமைச்சகங்கள்.
அதேநேரம் அமெரிக்கா தனது இறக்குமதியைக் குறைத்துக் கொண்டுள்ளது. 2000-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு இலங்கையின் ஏற்றுமதி 2075 மில்லியன் டாலராக இருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இன்று மேலும் குறைந்த வண்ணம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதோ.. கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே இலங்கை இந்தியாவுக்கு 3 மில்லியன் ஆயத்தை ஆடைகளை அனுப்பியுள்ளது. இந்த ஏற்றுமதிக்கு நயா பைசா வரிவிதிக்கவில்லை இந்தியா என்பது நம்மில் புத்திஜீவிகள் என்று பீற்றிக் கொள்ளும் பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தப் பொருள்தான் என்றில்லை, தடையில்லா ஏற்றுமதி என்று சிறப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் எந்தப் பொருளுக்கும் வரி கிடையாது. இந்தியாவின் கொல்கத்தா, கொச்சி துறைமுகங்களும் இலங்கைக்கு இலவசமாகவே திறந்துவிடப்பட்டுள்ளன (Custom Notification, No. 75/2007).
இன்னொரு பக்கம் இலங்கைக்குத் தேவையான பெருமளவு பொருள்களை அனுப்பி வருவது இந்தியாதான். அதற்கடுத்த நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளன.
இந்த மூன்று நாடுகளின் வாடிக்கையாளர்களும் முழுவதுமாகப் புறக்கணிக்க ஆரம்பித்தால் இலங்கை ஏற்றுமதி வர்த்தகம் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதைக் காட்டவே இத்தனை விவரங்களும்.
இலங்கையைச் சுற்றிப்பார்க்க மிக அதிக அளவில் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் இந்தியர்களே. இவர்கள் பெருமளவு பயன்படுத்துவது இலங்கை விமான சேவையான சிறிலங்கா ஏர்லைன்ஸைத்தான். இந்தியர்கள் கைவிட்டால், இலங்கை விமான சேவை படுத்துக் கொள்ளும்!
பொருட்கள் கொடுக்கல் – வாங்கல் ஒரு பக்கம் இருந்தாலும், சேவைப் பிரிவு பெருமளவு சார்ந்திருப்பது இந்தியாவைத்தான்.
இப்போதைக்கு சேவைப் பிரிவை விட்டுவிடலாம். காரணம் அதில் அரசின் பங்களிப்பே அதிகம்! தனியார் துறையின் பெரிய நிறுவனங்கள் பங்களிப்பு இருந்தாலும் அவர்களின் தமிழுணர்வு அல்லது தமிழர்கள் மீதான பாசம் நமக்குத் தெரிந்ததே. எனவே இதில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
எப்படி நாம் புறக்கணிப்பது… என்னென்ன பொருட்களைப் புறக்கணிப்பது… இது இலங்கைத் தயாரிப்பு என எப்படித் தெரிந்து கொள்வது?
இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை. இலங்கையின் பிரதான ஏற்றுமதி கார்மெண்ட்ஸ், தேயிலை, நறுமணப் பொருட்கள், தோல் பைகள் மற்றும் தென்னை சார்ந்த பொருட்களே. இவற்றுக்கு நிச்சயம் நம்நாட்டிலேயே மாற்று தயாரிப்புகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த மாற்றுப் பொருட்கள் தாராளாமாகக் கிடைக்கின்றன.
எனவே எந்தப் பொருளிலெல்லாம் மேட் இன் சிறிலங்கா என எழுதப்பட்டுள்ளதோ, அவற்றை முற்றாகப் புறக்கணிப்போம். அந்தப் பொருளில் நமது தமிழ் சகோதர – சகோதரிகளின் ரத்த வாடை வீசுவதை மானசீகமாக உணருங்கள்!
இன்னும் ரப்பர், புகையிலை, உலர் பழங்கள், கடல் உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி என பல வகைப் பொருட்களில் இலங்கைத் தயாரிப்புகளை நீங்கள் பார்க்கலாம்.
தங்க நகை வாங்கும் தாய்மார்களே… நீங்கள் கல் வைத்த நகைகளை வாங்காதீர்கள். காரணம் பெருமளவு கற்கள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சிங்களர்கள் சார்ந்த அல்லது சிங்களர்கள் நடத்தும் வர்த்தக நிறுவனங்களைப் புறக்கணிப்பதன் மூலம் – அங்கே இந்தியப் பொருள்களே விற்றாலும் கூட -நமது உணர்வைக் காட்டலாம்.
நமது சகோதரர்கள் புலத்தில் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்துக்கு, சிறிய அளவிலாவது நமது பங்களிப்பை இதய சுத்தியோடு தருவோம்.
ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் அல்லது வேறு ஏதேனும் நாட்டு விமான சேவைகளை மட்டுமே பயன்படுத்துவோம்.
அடுத்து – விளையாட்டுத் துறையில் இலங்கை தொடர்பான அனைத்தையும் உடனடியாகப் புறக்கணிக்கத் துவங்கலாம்.
இப்போது இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இந்தப் போட்டித் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கலாம். நான் இலங்கை – இந்திய போட்டித் தொடரைப் பார்க்க மாட்டேன் என்ற உறுதி நிச்சயம் உங்களுக்கு நன்மையையே தரும். மதிப்புமிக்க உங்கள் நேரம் மிச்சமாகும். உங்களையும் அறியாமல் ஏதேனும் ஒரு உருப்படியான காரியத்தைச் செய்ய அது உதவக்கூடும்.
இந்தப் புறக்கணிப்பால் பாதிக்கப்படப் போவது யார்?
நிச்சயம் இந்தக் கேள்வி சிலரிடமிருந்து எழும். ஈழத்தில் வாழும் நமது சகோதரர்களும்தானே பாதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லக் கூடும். ‘எங்கள் நாட்டுத் தயாரிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன… எனவே நானும் எங்கள் நாட்டு மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்’ என்று எந்த நாடும் சொல்லிவிட முடியாது. இதற்கும் பயங்கரவாதம் என்ற பொய்யைச் சொல்லி சர்வதேசத்திடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
இன்னொன்று, ஈழத்தில் இத்தனை நாளும் நடக்காத கொடுமையா… அவர்கள் பார்க்காத கஷ்டங்களா?
இதுவே தீர்வென்று சொல்ல வரவில்லை. ஆனால் இது வலி தரும் ஒரு அடி. இதுபோன்ற பலமுனை பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள்தான் இலங்கையைப் பணிய வைக்கும். இதனை எதிர்கொள்ள மீண்டும் சர்வதேச சமூகத்திடம்தான் போக வேண்டும் இலங்கை.
இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும்… இறுதிப் போரில் வென்ற அவர்கள், எதற்காக இத்தனை பதட்டம், குழப்பத்தில் தவிக்க வேண்டும்? போர்தான் ஓய்ந்து , மொத்த தமிழரும் சிறைப்பிடிக்கப்பட்டார்களே… அதன் பிறகும் ஏன் இந்த அவலம் தொடர்கிறது?
எனவே.. ‘சைடு எபெக்ட்’ இல்லாத மருந்துகளைத் தேடிக் கொண்டிருப்பதைவிட, அது குறைவாக உள்ள மருந்துகளுக்கு மாறுவத- காலச் சூழலுக்கு ஏற்ப- ஆரோக்கியமானதுதானே!
எனவே நண்பர் கண்ணையா பின்னூட்டத்தில் அனுப்பியதையே புறக்கணிப்பின் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம்…
“இலங்கை தயாரிப்புகள் என்று தெரியும் எதையும் நாம் முழுமையாக புறக்கணிப்போம். பயணத்துக்கு பிறநாட்டு விமானங்களையே உபயோகிப்போம்.
இலங்கை தொடர்பான அனைத்து விளையாட்டுக்களையும் புறக்கணிப்போம். இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டியை முற்றுமுழுதாக பார்க்காமல் தவிர்ப்போம். அது தொடர்பான செய்திகளையோ, விவரங்களையோ யாருடனும் பகிர்ந்து கொள்ளவும் மாட்டோம்.
எமது ஈழத்து உறவுகளுக்கு நிம்மதியான, பாதுகாப்பான வாழ்க்கை அங்கே அமையும் வரை இந்தப் புறக்கணிப்பைத் தொடர்வோம்!
ஒரு தமிழனாக மட்டுமல்ல, மனித நேயத்தை வலியுறுத்தும், உணர்வுகளுக்குக் குரல் எழுப்பும் அனைவரும் இதனைப் பின்பற்றுமாறும் தங்களால் முடிந்த அளவு பரப்புமாறும் வேண்டுகிறோம். இது யாரையும் கட்டாயப்படுத்தும் நிர்பந்தமல்ல. உணர்வுகளைச் சொல்கிறோம்.. மனிதத்தை மதிப்பவர்கள் மதிப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!”
நன்றி.
-வினோ
என்வழி.காம்
திரு. கண்ணையா அனுப்பிய பின்னூட்டத்தின் ஒரு பகுதி இது, நண்பர்கள் எஸ்எம்எஸ்-மின்னஞ்சல் அனுப்ப உதவக்கூடும்…
E-mail & SMS: “Friends, As a mark of protest in support of our ill fated Brothers & Sisters lodged in sickening Camps in Sri Lanka, let us vow to not to watch the on-going India-Sri Lanka Cricket Match series either live or in TV. We will not listen, talk, share any news about the Match with any one. Please spread this message to all you know”.
இது காந்திய வழி. அஹிம்சை போராட்டம். கொஞ்சம் தாமதமானாலும் வெற்றி நிச்சயம் .
sure i will send this message to all———vino
வினோ, பேனா முனை, வாள் முனையை விட வலிமையானது என்று உங்கள் கட்டுரை மீண்டும் நிரூபித்துள்ளது.
நண்பர்களே என்வழியின் இந்த கட்டுரையையே நாம் நமது மின்னஞ்சலில் உள்ள அணைத்து முகவரிக்கும் பதிவு செய்து அனுப்புவோம்.
நமது ஈழ சகோதரர்களின் துயர் துடைப்பது ஒன்றே இன்றைய நமது தலையாய கடமை. ஒரே ஒரு வேண்டுக்கோள். இதை ஏதோ கடமையே என்று ஓரிரு முறை மட்டும் அனுப்பி விட்டு அமைதியாக இருந்து விடாமல், தொடர்ந்து ஏதாவது செய்துக்கொண்டே இருப்போம்.
என்வழியின் இந்த பதிவு வலை தள பதிவுகளில் ஒரு மிகப் சிறந்த முன்னோடி. உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
மீண்டும் மிக்க நன்றி வினோ.
Sri Lanka tour of India, 3rd Test:
Sri Lanka won the toss and elected to bat
But who are going to suffer by this protest? is it Rajapaksha? I don’t think so. the people who are working in those company and poor people. We are going to put more pressure on poor people. It is good to be doing nothing than making something worst.
நண்பர்களே
திரு ஆனந்த் போன்றவர்களின், குரூர பதிவுகளை ஒதுக்கித் தள்ளுவோம். வினோ, இப்படிப்பட்ட நோகடிக்கும் பதிவுகளை அனுமதிக்க வேண்டுமா?
Sara அவர்களே உங்கள் கருத்து justified ஆக தோன்றினாலும், இதன் தாக்கம் அதிகார மட்டத்தில் நிச்சயம் எதிரொலிக்கும். இது ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது போல தோன்றினாலும், இதை செய்யாமல் இருந்தால் மட்டும் அவர்களுக்கு எந்த விடிவு காலமும் ஏற்படப்போவதில்லை. இந்த அறப்போராட்டம் இலங்கையின் அதிகார மையத்திற்கு எதிராக உலக மக்களின் உணர்வுப் பதிவே. இது பரவலாகும் பட்சத்தில், நிச்சயம் இதற்க்கு பலன் உண்டு.
__________
எதைத்தான் நம்மவர்கள் முழுமையாக ஏற்று ஓரணியில், ஒரு தலைமையின் கீழ் நின்று போராடி வென்றிருக்கிறார்கள். அப்படியெல்லாம் நடந்திருந்தால் விடுதலைப் புலிகளுக்கு இந்தத் தோல்வியே வந்திருக்காதே? அவர்களைக் குற்றம் சாட்டுவதாக நினைத்து காட்டிக் கொடுத்தவர்கள்தானே நம்மவர்கள்… ஆனால் எதிர்கருத்தை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஒரு சாதாரண கமெண்ட்… அவ்வளவுதானே. பார்க்கலாம். நம்மவர்கள் மனநிலை தெரிந்துவிடும்.
@Sara: close your ass, instead, open your brain!
ஸ்ரீலங்கா அரசியல் வாதிகளை எதிர்க்க துணிவில்லாமல் (அல்லது தெரியாமல்) இப்படி அப்பாவி பொதுமக்களின் (சிங்களம் மற்றும் தமிழ்) வியாபாரத்தை, வணிகத்தை கெடுப்பது எந்த வகையில் நியாயம் ?? கொழும்புவில் இருக்கும் பெரும்பாலான தமிழர்களும் ஆபரண கல் தயாரிப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளனர்.
அஹிம்சை போராட்டம். வெற்றி நிச்சயம் .
@முத்து செந்தில் குமார்: இதையாவது நாங்க பண்றோம், நீங்க என்னத்த கிழிச்சீங்க?
முத்து செந்தில் குமார்,
நீங்கள் இந்திய சுதந்திர போராட்டத்தை திரும்பி பாருங்கள். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், ஆங்கில பொருட்கள் எதிர்ப்பு எப்படி ஆங்கிலேயர்களை அடி பணிய வைத்தது என்று தெரியுமல்லவா. ?
இது அதே அகிம்சை வழி போராட்டம்.
எப்படி தனி மனிதனின் ஒரு வாக்கு சீட்டுக்கு ஒரு அரசாங்கத்தை நிர்ணயிக்கும் சக்தி இருக்கிறதோ, அதே போல் ஒவ்வொரு தனி மனிதன் வாங்கும் பொருட்களுக்கும் அவ்வளவு சக்தி உள்ளது. பொருளாதார சக்தி.. பல தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரே முடிவு எடுக்கும் பொது, அது விஸ்வருபம் ஆகிறது.
இதைத்தான் நமது மகாத்மா காந்தியடிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பயன்படுத்தி வெற்றி கண்டார்கள்.
நீங்களும் இதில் கலந்து கொண்டால் சந்தோஷ படுவோம்
முத்து செந்தில் குமார் மற்றும் சாரா அவர்களே..
தமிழ் மக்களை சிறுக சிறுக சித்ரவதை செய்து, ஒரு லட்சம் மக்கள் கொலைசெய்யப்பட்டு, மூன்று லட்சம் மக்கள் கொட்டடியில் அடைக்கப்பட்டு அந்த அப்பாவி மக்கள் அனுபவித்த கொடுமைகளைவிட ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள சில தமிழர்கள் இந்த புறகணிப்பு போராட்டத்தினால் பாதிக்கபடுவது ஒப்பீட்டுஅளவில் ஒன்றுமே இல்லை. இந்த தியாகத்தை இவர்கள் இப்போது செய்யவில்லையெனில் காலம் முழுக்க இவர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் படபோகும் அவஸ்தை மரண வலியாக இருக்கும்!!
எதயும் தியாகம் செய்யாமல் போரட்டத்தில் வெற்றிகொள்ளமுடியாது.
இந்த போராட்டத்தின் வெற்றியை இந்த சில தமிழ்மக்களும்தான் அனுபவிக்கபோகிறார்கள்!!!
சிலபேரின் நன்மைகளை கருத்தில்கொண்டு பலரின் வாழ்கையை மறந்துவிட முடியாது…
மேலைநாடுகளில் இந்த புறகணிப்பு போரட்டத்தை நடுதுவதே ஈழ தமிழர்கள்தான்..நீங்கள் சொல்லும் பாதிக்கப்படும் சில தமிழர்கள் இவர்களின் உறவினர்கள்தான்!!!!!!..
இந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு தயவுசெய்து இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கவேண்டும்..
நம்முடைய ஒற்றுமையை காட்டும் தருணம் இது….
ஒவ்வொரு தனி மனிதன் வாங்கும் பொருட்களுக்கும் அவ்வளவு சக்தி உள்ளது. பொருளாதார சக்தி.. பல தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரே முடிவு எடுக்கும் பொது, அது விஸ்வருபம் ஆகிறது.
repeat……….
//ஒவ்வொரு தனி மனிதன் வாங்கும் பொருட்களுக்கும் அவ்வளவு சக்தி உள்ளது. பொருளாதார சக்தி.. பல தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரே முடிவு எடுக்கும் பொது, அது விஸ்வருபம் ஆகிறது.//
சபாஷ் r.v.saravanan. நமது அறப்போராட்டத்திற்கு இது போன்ற சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் தான் வலுவூட்டும். நண்பர்கள் இது போன்ற கருத்துக்களை பதிவேற்றி இந்த போராட்டத்திற்கு பலம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எறும்பூற கல்லும் தேயும். வெற்றி பெறுமா என்று பார்த்து செய்வதில்லை போராட்டம். எது நியாயம் என்று தெரிந்து செய்வதே போராட்டம். நம்மாலான எல்லா முயற்சியும், செய்துக்கொண்டே இருப்போம்.
@ss and @Tamilan,
இந்த போராட்டத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கங்களை என்னால் எந்த வகையிலும் ஏற்க முடியவில்லை. ஸ்ரீலங்கா அணி விளையாடும் போட்டிகளை கூட பார்க்காதீர்கள் என்று சொல்லுவது, நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடகவே எனக்கு தோன்றுகிறது.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், இதநின்று முற்றிலும் வேறுபட்டதாக நினைக்கிறேன். ஆங்கிலயேர்-இந்தியர் சுதந்திர போராட்டத்தையும் ஈழ தமிழர் – சிங்களர் உரிமை போராட்டத்தையும் நான் வேறுபடுத்தியே பார்க்கிறேன்.
ஒவ்வரு போராட்டமும் (தனி மனிதன் மற்றும் கூட்டு முயற்சி) ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடு தான். மனித உணர்வுகளை மதிப்பவன் என்ற முறையில், இந்த போராட்டத்தை பற்றி மென்மேலும் விவாதிக்க விரும்ப வில்லை. சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் குள்ளநரிகளுக்கு எதிரான தமிழனின் எந்த ஒரு அற போராட்ட முறையும் வெற்றிபெற கடவுளை பிரார்த்திகிறேன். தமிழ் ஈழம் மலரட்டும்
SS அவர்கள் மன்னிக்கவும். கடந்த என் பின்னூட்டத்தில், உங்கள் கருத்தை r.v.saravanan சொன்னதாக பதிவு செய்து விட்டேன். உங்களின் இந்த கருத்து class.
Tamilan says
//இந்த தியாகத்தை இவர்கள் இப்போது செய்யவில்லையெனில் காலம் முழுக்க இவர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் படபோகும் அவஸ்தை மரண வலியாக இருக்கும்!!
எதயும் தியாகம் செய்யாமல் போரட்டத்தில் வெற்றிகொள்ளமுடியாது.//
Fantastic. Tamilan அவர்களின் இந்த கூற்று, நூற்றுக்கு நூறு உண்மை.
Sara.. the peoples who are working these companies only voted and selected Rajapakse as a Preseident… these kind of protest will effect them first… and if they have a brain next election they wont vote for Rajapakse so indirectly we are attacking Rajapakse.
I am sure…. because of this protest none of the poor people wont suffer…… becasue these companies are owned by Rajapakse bros….
Anand you are really great…. thamilan veenappovathe unna mathri thirogikalala than…. support panna mudiyatta pothikkittu irukka vendiyathu thane…
முத்து செந்தில் குமார் அவர்களே..
சிங்களவனை எல்லா வழிகளிலும் முடக்கவேண்டும்..இதுவும் ஒரு வழி..அவ்வளவுதான்..
நானும் இலங்கை தயாரிப்புகளை வாங்குவதில்லை என உறுதி கூறுகிறேன். ஆனால் சில மாதங்களுக்கு முன் நான் கொழும்பு சென்றிருந்தபோது தமிழர்கள் கடைகளில் சில பொருட்கள் வாங்கிவந்தேன்,அதை என்ன செய்வதென்று தெரியவில்லை.காசு கொடுத்து வாங்கியாகிவிட்டது. இனி என்ன செய்வது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கியது,தூக்கி எறியவும் மனமில்லை. அதே சமயம் தமிழர் கடையில்தானே வாங்கியது எனவும் தோன்றுகிறது. I really dont know what to do.
இலங்கை தயாரிப்புகளை புறக்கணிக்கலாம் சரி. ஆனால் கிரிக்கெட் விஷயத்தில் ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. இந்தியாவில் இன்றும் பாகிஸ்தான் சதி வேலைகள் செய்துகொண்டிருக்கிறது உயிரிழப்புகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் நடந்த சேம்பியன்ஸ் ட்ராபியில் கூட இந்திய பாக் ஆட்டத்துக்குத்தான் அதிக கூட்டம். காரணம் பாகிஸ்தானை ஆதரிக்கிறோமா ? கிடையாது. பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்க்கவேண்டும். அதை பார்ப்பதற்க்குத்தான் அவ்வளவு கூட்டம். பாகிஸ்தானிடம் இந்தியா தோற்ப்பதை எந்தவொரு இந்தியனாலும் ஜீரணிக்க முடியாது. அவ்வளவு ஏன் 2003 உலககோப்பையின் போது நம் ராணுவவீரர்களே இந்திய பாக் ஆட்டத்தை வெகு ஆர்வமாக பார்த்ததும் அதில் 98 ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு ஆப்பு அடித்த சச்சினை பாராட்டியதும் நாம் எல்லோரும் அறிந்ததே.இப்போது கூட இலங்கையை இந்தியா வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு இன்று கூட சேவாக் மரண அடி கொடுத்திருக்கிறார். இதுதானே நமக்கு வேண்டும். அவர்கள் தோற்த்து அவமானப்படுவதை பார்ப்பதில் என்ன தப்பு ? இது என்னுடைய தாழ்மையான கருத்து மட்டுமே. மற்றவர்களின் கருத்தை நான் மதிக்கிறேன். அதே சமயம் என்னுடைய கண்ணோட்டத்தையும் தெரிவிக்கிறேன்.அவ்வளவுதான். இதில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவேண்டாம். மாற்று கருத்து சொல்பவர்களை திட்டவேண்டாம். மற்றபடி கன்னையாவின் கருத்தை மதிக்கிறேன்.
திரு மனோகரன் அவர்களே. உங்கள் கருத்துக்கு நன்றி. மகிழ்ச்சி.
இலங்கையில் இருந்து வாங்கி வந்த பொருட்களை என்ன செய்வது என்ற உங்கள் தடுமாற்றம் நேர்மையானது. நீங்கள் மனசாட்சியுள்ள, தமிழ் இன உணர்வுள்ள உன்னத மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை. வாங்கி வந்த பொருட்களை பொறுத்த மட்டில் ஒரு வர்த்தகம் முடிந்து விட்டது. நீங்கள் தெரிந்து செய்யவில்லை. ஆதலால் குற்ற உணர்ச்சியின்றி நீங்கள் அதை தாரளமாக பயன் படுத்தலாம் என்பது என் கருத்து. புறக்கணிப்பு வர்த்தகத்தை பொருட்டு தான் இருக்கவேண்டுமேயன்றி, பொருட்களின் பயன்பாட்டின் பொருட்டு அல்ல. (நீங்கள் வாங்கிய பொருட்களை பொறுத்த மட்டில்).
கிரிக்கெட்டை பொறுத்தவரை, வெற்றி தோல்வி என்ற உங்கள் பார்வை உளவியல் ரீதியான ஒன்று. தமிழர்களை ஒடுக்கும் ஒரு நாட்டுடன் நமக்கு எந்த உறவும் தேவையில்லை என்ற நம் எல்லோரது கருத்தையும் பிரதிபலிக்கும் ஓர் அடையாளமே இந்திய-இலங்கை கிரிக்கெட் புறக்கணிப்பும். நாம் இலங்கை அணியை வீழ்த்துவதால் நமக்கு உளவியல் ரீதியான ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறதே தவிர வேறு ஆக்கப்பூர்வமான பலன் அதில் ஏதும் இல்லை. கிரிக்கெட்டில் நம்மை அவர்கள் தோற்கடித்தால், அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? எதுவும் நடக்கலாமே.
ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள். நாம் (தனிப்பட்ட முறையில்) கிரிக்கெட் விளையாட்டிற்க்கோ, இலங்கை அணி வீரர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல. தற்போது உள்ள சூழலில், நம் இனத்தை ஒடுக்கும் ஒரு நாட்டுக்கும், அதற்க்கு துணை போகும் நம் நாட்டிற்கும் நமது எதிர்ப்பை பதிவு செய்து அதன் மூலம் ஒரு சிறிய பாதிப்பையாவது ஏற்படுத்தி இலங்கையில் வாடும் நம் தமிழ் இனத்தை காப்பதே இந்த புறக்கணிப்பின் நோக்கம்.
ஆகவே மீண்டும் உறுதி ஏற்போம். இலங்கை பொருட்களை புறக்கணிப்போம். இந்திய-இலங்கை கிரிகெட் series ஐ புறக்கணிப்போம்.
///ஆகவே மீண்டும் உறுதி ஏற்போம். இலங்கை பொருட்களை புறக்கணிப்போம்///
OK.
கிரிக்கெட்டில் வெற்றி தோல்வியை விட அதில் புரளும் பணமே அதிகம். எனவே கிரிக்கெட்டை புறக்கணிப்பதன் மூலம் சர்வதேச பார்வையை திருப்ப முடியும்.
Take one decision without any confusion:BOYCOTT SRILANKA
வெறுப்புகளை உறுவாக்காதீர்கள்
வெறுப்புகளை உறுவாக்காதீர்கள்
வெறுப்புகளை உறுவாக்காதீர்கள்
வெறுப்புகளை உறுவாக்காதீர்கள்
வெறுப்புகளை உறுவாக்காதீர்கள்
வெறுப்புகளை உறுவாக்காதீர்கள்
வெறுப்புகளை உறுவாக்காதீர்கள்
வெறுப்புகளை உறுவாக்காதீர்கள்