BREAKING NEWS
Search

நான் அவனில்லை 2 – திரைப்பட விமர்சனம்

நான் அவனில்லை 2 – விமர்சனம்

naan-avan-illai

நடிப்பு: ஜீவன், மயில்சாமி, லட்சுமி ராய், ஹேமமாலினி, ரக்ஷனா, ஸ்வேதா மேனன்

இசை: டி இமான்

தயாரிப்பு: நேமிச்சந்த் ஜபக், ஹிதேஷ் ஜபக்

இயக்கம்: செல்வா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

ளமை திமிரும் ஒரு பெண் (ஹேமமாலினி என்கிற ஸ்ருதி பிரகாஷ்), தனக்கு வரப்போகும் கணவன் நாய்க்குட்டி மாதிரி காலைச் சுற்றிக் கிடக்க வேண்டும் என விரும்புகிறாள் (இப்படியொரு ரகசிய ஆசை நிறைய பேருக்கு இருக்கும்போல!)…

இன்னொரு பெண்ணுக்கோ (ஸ்வேதா மேனன்…), அடுத்த பெண்களின் கணவர்களை மயக்கி கட்டிலுக்கு வரவழைத்து, அவனிடம் பணம் – வைரங்களை ‘ஆட்டையைப் போடுவதில் ஒரு தனி கிக்’…

மூன்றாவது  ஒரு நடிகை (லட்சுமி ராய்)… இவருக்கோ உலகத்தின் அத்தனை நாடுகளிலும் தனக்கு சொத்து இருக்க வேண்டும், நிலங்கள் வாங்கிக் குவிக்க வேண்டும் என ஆசை.

நான்காவது பெண் (ரக்ஷனா) திருட்டு கேஸ்… வைரங்களைக் கொள்ளையடிக்கும் இந்தப் பெண்ணின் மனம் விசித்திரமாக கொள்ளை போகிறது, அடிக்கடி ‘நெஞ்சைத் தொடும்’ (இது வேற டச்.. நிஜ டச்) ஒரு கள்ளச் சாமியால்!

இந்த நான்கு பெண்களையும் ஏமாற்றுகிறான் ஒருவன்…. ஐந்தாவதாக ஒரு பெண்ணுக்கு (சங்கீதா) உதவ!

படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா… ஆனால் இந்த சுவாரஸ்யத்தை திரையில் முழுமையாகக் கொண்டு வரத் தவறி விட்டார் இயக்குநர் செல்வா, தனது சொதப்பல் திரைக்கதையால்.

1974-ல் பாலச்சந்தர் எடுத்த, அன்றைக்கு பெரிய ஹிட் என்று சொல்ல முடியாத ‘நான் அவனில்லை’ படத்தை பல ஆண்டுகள் கழித்து2007-ல் ரீமேக்கிய செல்வா, இப்போது அந்த ரீமேக்குக்கு இரண்டாவது பாகம் தந்துள்ளார்.

இந்த மாதிரி 5 ஹீரோயின் கதைகளில் உள்ள ஒரு வசதி, நாயகிகளை உரித்த கோழிகளாக்கி நினைத்த நேரத்தில் நாயகனுடன் ஆட விடலாம். படம் முழுக்க கவர்ச்சி மழை.. ரசிகனும் சீட்டை விட்டு நகரமாட்டான்.

கிட்டத்தட்ட அது ஒர்க்அவுட் ஆகிறது இந்தப் படத்திலும்.

திரையை ஆக்கிரமிக்கும் நாயகிகளின் கவர்ச்சிக் காட்சிகளை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள், லட்சுமிராய் சம்பந்தப்பட்ட பக்கா நாடகத்தனமான, சுமார் காட்சிகளில்கூட ஜாலியாக கமெண்ட் அடித்தபடி சீட்டிலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

அந்த பனிப் பிரதேசத்தில் லட்சுமி ராயை நிச்சயம் அரை நிர்வாணத்தில் ஓட வைக்காமல் விடமாட்டார் இயக்குநர் என ஒரு ரசிகர் கமெண்ட் அடிக்க, சரியாக அடுத்த காட்சியிலேயே லட்சுமி ராயும் – ஜீவனும் பனித்தரையில் புதைந்தபடி பாட்டுப் பாடுகிறார்கள்!

படத்தின் பல காட்சிகள் இப்படி எளிதில் யூகிக்கக் கூடியவைதான்.

ஆனால் பிரபலமான நகை திருடியாக வரும் ரச்சனா, வாலியின் பக்தையாக மாறுவது சுவாரஸ்யமான கற்பனை. அவருக்கு ஜீவன் கவிதை உபதேசம் செய்யும் காட்சி ‘மகா பச்சை’… ஆனால் அதற்குதான் ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்!!

‘பொண்ணுங்கள ஏமாத்தற கேரக்டரா… கூப்பிடுங்க ஜீவனை’ என்று இனி சொன்னாலும் வியப்பில்லை. அந்த அளவு சரளமாக ஏமாற்றுகிறார்.

ஆனால் அத்தனையும் செய்துவிட்டு, நான் அவனில்லை என்று திரும்பத் திரும்ப சொல்வதில் என்ன லாஜிக் இருக்கிறது என்றுதான் புரியவில்லை. ‘நான் அவனில்லை’ என்பதை எப்படி நிரூபிக்கிறார்… சர்ச்சுக்குள் புகுந்து, பேராயரின் அங்கியை அணிந்து இஷ்டத்துக்கும் டயலாக் பேசிவிட்டு, எகிறி குதித்து தப்பிவிடுகிறாராம். ஏமாந்தவர்கள் அவனது திறமையைக் கண்டு வியந்து, அப்படியே மனம் திருந்தியும் விடுகிறார்களாம். சட்டம், போலீஸ் என்ன ஆனது? இவற்றுக்கு விடையில்லை. (“இந்த மாதிரி நாலு பார்ட்டி இருந்தா நமக்கும் சொல்லச் சொல்லு மச்சி அந்த டைரடக்கரை!” – இது நமக்கு முன்னால் அமர்ந்து படம் பார்த்த ரசிகர் கமெண்ட்!)

படத்தில் நாயகிகளைவிட முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒருவர் உள்ளார். அவர் மயில்சாமி. கிடைக்கிற ‘கேப்’பிலெல்லாம் புகுந்து விளையாடுகிறார் மனிதர். குறிப்பாக ரக்ஷனாவை ஏமாற்ற ஜீவன் வாலியாகவும், மயில் அவருக்கு சிஷ்யராகவும் வரும் காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது.

நல்ல நடிப்பைக் காட்ட வேண்டிய படம் இது அல்ல என்று தெரிந்து கவர்ச்சியை மட்டும் தாராளமாகக் காட்டி நடித்திருக்கிறார்கள் 4 நாயகிகளும்.

ஈழத் தமிழ் பெண்ணாக வருகிறார் சங்கீதா. ஆனால் பெரிசாக ஈர்க்காத பாத்திரம். சூழல் புரிந்து அதை வர்த்தகமாக்கிக் கொள்வதில் நம்மாட்களுக்கு பிஎச் டியே கொடுக்கலாம்.

ஒளிப்பதிவு இதம். ஆனால் இசையமைப்பாளர் இமான், கிடைத்த வாத்தியங்களையெல்லாம் உருட்டி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார், படம் முழுக்க.

கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் செல்வா…  வெளிநாட்டு லொக்கேஷன்கள், நாயகிகளுக்கான கொஞ்சூண்டு உடைகளைத் தேர்வு செய்வதில் காட்டிய ஈடுபாட்டை,  திரைக்கதை உருவாக்கத்திலும் காட்டியிருந்தால் படத்தின் ரேஞ்சே வேறாக இருந்திருக்கும்.

இப்போ…?

‘ஜஸ்ட் டைம் பாஸ்’!

-எஸ்எஸ்
6 thoughts on “நான் அவனில்லை 2 – திரைப்பட விமர்சனம்

 1. Mouthayen Mathivoli, Singapore

  உரித்த கோழிகளை வெறித்து பார்க்கும் ஜனங்களுக்கு படம் பிடித்திருக்கும்

 2. கவினனன்

  கண்டிப்பாக இது எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு படமே.. கண்டிப்பாக நான் அவனில்லை ௨-இல் ஒரு குடும்பக் கதையையோ அல்லது மர்மக் கதையையோ சொல்ல முடியாது. இயக்குனர் தன் வேளையைச் சரியாகவே செய்துள்ளார். இரண்டாம் பாகத்தைப் போரடிக்காமல் ரசிக்கும் வண்ணம் வழங்கியதற்கே ஒரு பாராட்டு வைக்கலாதம். சிறந்த பொழுதுபோக்கு படம். முடந்தால் குடும்பத்துடன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

 3. Raja

  படம் ஆரம்பித்து 30 நிமிடங்களில் அரங்கத்தில் இருந்து குடும்பத்துடன் வெளிஏறிய முதல் படம்….

 4. Selvakumar

  கண்டிப்பாக இது எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு படமே.. கண்டிப்பாக நான் அவனில்லை ௨-இல் ஒரு குடும்பக் கதையையோ அல்லது மர்மக் கதையையோ சொல்ல முடியாது. இயக்குனர் தன் வேளையைச் சரியாகவே செய்துள்ளார். இரண்டாம் பாகத்தைப் போரடிக்காமல் ரசிக்கும் வண்ணம் வழங்கியதற்கே ஒரு பாராட்டு வைக்கலாதம். சிறந்த பொழுதுபோக்கு படம். முடந்தால் குடும்பத்துடன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

  ———–
  இட்ஸ் ரைட் . 5 acctress vachi padam eduththa.. makkal ethir parkirathu gilma than. So this movie is good for simple entertainment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *