BREAKING NEWS
Search

‘நான்கு தருவதாகச் சொல்லி ஒன்று மட்டும் கொடுத்தா எப்படி?’ – ராதிகா

‘நான்கு தருவதாகச் சொல்லி ஒன்று மட்டும் கொடுத்தா எப்படி?’ – ராதிகாவின் கோபம்

pop-cornசின்னத்திரை விருது என்ற பெயரில் சன் டிவி தொடர்களுக்கு மட்டும் விருது வழங்குவதாக ஒரு அமைப்பு அறிவித்த போதே, இதில் வில்லங்கம் வரும் என்று நினைத்தோம். அப்படியே நடந்துவிட்டது. இந்த ஆண்டு சிறந்த சின்னத்திரை நடிகையாக ராதிகா தேர்வாகி விருதும் பெற்றார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அதை திருப்பித் தருவதாகக் கூறிவிட்டார்.

ஏனோ?

அமெரிக்காவிலிருந்த ராதிகாவை, அரசி தொடருக்கு மட்டும் 4 விருதுகள் தருகிறோம்… உடனே வாங்க என வரவழைத்தார்களாம். வந்த பிறகு ஒரே ஒரு விருது மட்டும் கொடுத்ததில் செம கடுப்பாகிவிட்டார் ராதிகா.

இன்னொரு பக்கம் விருது கிடைக்காத கோபத்தில் தேவயானி வாய்க்கு வந்ததையெல்லாம் மேடையில் பேச, விழா ஏற்பாட்டாளர்களை செம வாங்கு வாங்கிய ராதிகா, விருதைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இன்னும் சில தினங்களில் சின்னத் திரை வட்டாரங்களில் இந்த விருது மேட்டர் பெரும் ரகளையைக் கிளப்பும் என்கிறார்கள்!

pop-corn ட்டி & பிரா’ கலைஞன் விழுந்து விழுந்து பத்திரிகைகளுக்கு சமாதான அறிக்கை அனுப்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார், கடந்த மூன்று நாட்களாக. ஒரு பக்கம் விருந்துக்கு கூப்பிட்டுப் பார்க்கிறார்… மறுபக்கம் நாமெல்லாம் சகோதரர்கள் என்கிறார். ம்ஹூம்.. எந்த நிருபரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

‘இந்த அறிக்கையையெல்லாம் விட்டுட்டு முதல்ல மன்னிப்பு அறிக்கை தயார் பண்ணுங்க… அதைப் போட வைக்க முயற்சி பண்றேன்’ என்று கூறியுள்ளாராம் அவருக்கு திரைமறைவில் வேலை பார்க்கும் ஒரு பிஆர்ஓ.

pop-cornமிழ் ஈழப் பிரச்சினைக்காக உயிரையும் கொடுப்போம் என்று முழங்கியதுடன் திமுக கூட்டணியை எதிர்த்து கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த சினிமா இயக்குநர்கள், மீண்டும் கருணாநிதியைப் பார்க்க நாள் குறித்துள்ளார்களாம்.

‘பழைசையெல்லாம் மறந்துடுங்க… முன்பு நீங்க தர்றதா சொன்ன இலவச வீட்டு மனையைக் கொடுத்து உதவுங்கள்’ என்பதுதான் இந்த சந்திப்பின் பிரதான விஷயம்!




5 thoughts on “‘நான்கு தருவதாகச் சொல்லி ஒன்று மட்டும் கொடுத்தா எப்படி?’ – ராதிகா

  1. கிரி

    // சில தினங்களில் சின்னத் திரை வட்டாரங்களில் இந்த விருது மேட்டர் பெரும் ரகளையைக் கிளப்பும் என்கிறார்கள்//

    இவங்களும் இவங்க விருதும்!

    இவங்க சீரியல் கொடுமையை பார்க்கும் மக்களுக்கு தான் விருது கொடுக்க வேண்டும். 🙂

  2. r.v.saravanan

    சின்னத்திரை விருது என்ற பெயரில் சன் டிவி தொடர்களுக்கு மட்டும் விருது வழங்குவதாக ஒரு அமைப்பு அறிவித்த போதே,

    iduvey thavaru……..

  3. r.v.saravanan

    இவங்க சீரியல் கொடுமையை பார்க்கும் மக்களுக்கு தான் விருது கொடுக்க வேண்டும்.

    ha…ha..

  4. Raja

    ஜட்டி & பிரா’ கலைஞன் என எழுதுவது ஜெயா டீவியில் மைனாரிட்டி திமுக என வாசிப்பது போல் உள்ளது.
    ஜட்டி & பிரா என படிக்கும் போது அருவருப்பாக உள்ளது. இது என்வழியில் வேண்டாம் பிலிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *