BREAKING NEWS
Search

நாட்டைவிட்டு வெளியேற சம்மதித்தால் பொன்சேகாவுக்கு விடுதலை! – இது ராஜபக்சே டீல்!

நாட்டைவிட்டு வெளியேற சம்மதித்தால் பொன்சேகாவுக்கு விடுதலை! – ராஜபக்சே

கொழும்பு: அரசியலிலிருந்து முற்றாக விலகி, இலங்கையை விட்டே வெளியேற பொன்சேகா ஒப்புக் கொண்டால் அவருக்கு விடுதலை செய்யத் தயாராக உள்ளதாக ராஜபக்சே கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இறுதிப் போரில் இலங்கை ராணுவத்துக்கு தலைமை ஏற்று வெற்றி பெற வைத்தவர் சரத் பொன்சேகா. யுத்தம் முடிந்த பின்னர், அந்த வெற்றியை சொந்தம் கொண்டாடும் நோக்கில், ராணுவத்திலிருந்து விலகி ராஜபக்சேவுக்கு எதிராக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். ராணுவத்துக்கு ஆயுதம் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக பொன்சேகா கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவருக்கு 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கே அவருக்கு கைதிகளுக்கு வரும் தபால் பிரித்துத் தரும் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சரத் பொன்சேகா அரசியலில் இருந்து முற்றிலும் விலகி நாட்டை விட்டு வெளியேற நினைத்தால், அவருக்கு மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மன்னிப்புக் கேட்காவிட்டாலும் சரி… வெளியே போனால் சரி!

இந்த தகவலை ராஜபக்சே, பொன்சேகாவின் நெருங்கிய உறவினரிடம் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதர் மூலமாக தெரிவித்துள்ளதாகவும், அதே வேளையில் மன்னிப்பு கோராமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இணங்கினாலும் பொன்சேகாவை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் ராஜபக்சே தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்காக கோரிக்கையை பொன்சேகாவின் நெருங்கிய மதகுரு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன நடந்தாலும் சரி, சிறையிலிருந்தபடியே மக்களாட்சிக்காக பாடுபடுவேன், என பொன்சேகா தெரிவித்துள்ளார்.

-என்வழி




One thought on “நாட்டைவிட்டு வெளியேற சம்மதித்தால் பொன்சேகாவுக்கு விடுதலை! – இது ராஜபக்சே டீல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *