BREAKING NEWS
Search

நாட்டில் ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! – சோனியா கவலை

ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! – சோனியா கவலை

டெல்லி: லஞ்சம், ஊழல் பெருகுவது நாட்டுக்கு ஆபத்து என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.

டெல்லியில் நேற்று இந்திரா காந்தி பெயரில் 10-வது மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

சோனியா காந்தி கூறுகையில், “இந்திய பொருளாதாரம் உறுதியானதாக இருப்பதோடு வளர்ச்சி அடைந்தும் வருகிறது. ஆனால் நமது தார்மீக உலகம் சுருங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு தலைவர்கள் தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள். உயர்ந்த கொள்கைகளுக்காக போராடி இந்த தேசத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது. சகிப்புத்தன்மை குறைந்து சமூக மோதல்களும் நடைபெறுகின்றன. இது தேசத்தின் பெருமைக்கும், கவுரவத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

உற்பத்தி பெருக்கம் மற்றும் சேவை மேம்பாட்டுக்கு நமது புதிய எண்ணங்கள், நிதி, மேலாண்மை திறமைகளை பயன்படுத்த வேண்டும். பணியில் நேர்மை, ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை தேவைப்படுகிறது. பாரபட்சமற்ற முறையில் பணிகள் நடைபெற்றால்தான் சமுதாயத்தில் எல்லோருக்கும் சீரான பலன்கள் கிடைக்கும். அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைப்பதோடு, சிறந்த கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சமூக ஜனநாயகம் என்பது வெறும் கோஷம் அல்ல. நமது அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் நீதி கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவும் போது நாம் முழு வளர்ச்சியை எட்ட முடியாது. நம் நாட்டில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். அதே சமயம் உணவுக்காக போராடும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அபிவிருத்தியின் பலன் ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும்…” என்றார்.
5 thoughts on “நாட்டில் ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! – சோனியா கவலை

 1. Kaathavarayan Marmayogi

  Who is talking about corruption & graft? The fountainhead and embodiment of all these evils….this like Devil preaching Gospel…

 2. vedamgopal

  ராணி மஹாராணி ஒளிந்து திரிந்து
  சமயம் பார்த்து பதவி தேடி ஓடி அலைந்த ராணி
  எட்டவில்லை என்பதினால் எட்டி உதைத்த ராணி
  ஒட்டாமல் ஒட்டிக்கொண்டு சிண்டுமுடியும் ராணி
  உத்தமராம் காந்தி அவர் பேர் கெடுக்கும் ராணி
  புனிதமான பாரதத்தின் புகழ் குலைக்கும் ராணி
  அன்னியமத ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் ராணி
  உண்டவீட்டில் கன்னம் வைக்கும் ஊமையான ராணி
  சகுனிளையே வென்றுவிட்ட சாகச கூனி
  கோடிகளை சேர்த்துவிட்டு கோலோச்சும் ராணி
  உன்னதமாம் இந்துமதம் அதன் உருகுலைக்கும் ராணி
  மானம் இல்லை வெட்கம் இல்லை ரோஷம் இல்லை இங்கே
  கொழுத்துவிட்ட அன்னியரின் அடிவருடும் கூட்டம்
  இனிமேலும் தாங்காது வஞ்சகரின் சூழ்சி

 3. vedamgopal

  Given below the statement of a patriotic Christian women Dr,Annie Besant:-

  “ After a study of some forty years and more of the great religions of the world, I find none so perfect, none so scientific, none so philosophical and none so spiritual that the great religion known by the name of Hinduism. Make no mistake, without Hinduism, India has no future. Hinduism is the soil into which India’s roots are stuck and torn out of that she will inevitably wither as a tree torn out from its place. And if Hindus do not maintain Hinduism who shall save it? If India’s own children do not cling to her faith who shall guard it. India alone can save India and India and Hinduism are one”

 4. Dr. Suppandi

  அம்மையார் கருத்தின் சாராம்சம்:

  1 . ஊழல் அதிகம்.
  2 . சகிப்புத் தன்மை குறைவு.

  அதாவது காமன் வெல்த், ஸ்பெக்ட்ரம் என்பது போன்ற ஊழல் அதிகம்.
  ஆனால் அதை நாம் சகிக்கும் தன்மை குறைவு. எனவே எதிர்ப்புகளைக்
  குறைத்து நமது பணியை மட்டுமே செய்ய வேண்டும்.

  -முனைவர் சுப்பாண்டி

 5. shriram

  யாரை ஏமாற்ற இந்த பித்தலாட்ட பேச்சு? போபோர்ஸ் இல் இருந்து ஒவ்வொரு ஊழலுக்கும் ஊற்று கண் காங்கிரஸ். நரசிம்ம ராவ் காலம் தொட்டு இந்த ஊழல் பெருக்கு எடுத்து ஓடுகிறது. அதிலும் இந்த UPA – II ஆட்சி பற்றி கேட்கவே வேண்டாம். கோட்ட்ரோசி இந்திய அரசாங்கத்திற்கு டிமிக்கி கொடுத்து கண்ணாமூச்சி ஆட்டம் போட்டுகொண்டு இருந்த பொழுது அதுவும் அவர் அடித்த கொள்ளை பணம் முடக்க பட்டபொழுது , இந்த தியாக செம்மல் திரு அருளால் மிகவும் கவனமாக அந்த மகானுபாவரிடம் திரும்ப சேர்க்க பட்டது. நேர்மையின் சிகரம் என்று தூக்கி வைத்து அறிவு ஜீவிகளால் கொண்டாடப்படும், நம் இந்திய திரு நாட்டின் பிரதம மந்திரி, கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல், குட்ட்ரோசி க்கு வீணாக தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று எதிர் கட்சியினரை விண்ணப்பித்து கொண்டார். இன்று அந்த மனிதர் இத்தாலி இல் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். என்ன செய்வது இந்த மக்களுக்கும் தற்குறிகள் ஆட்சி தானே பிடித்து இருக்கிறது. 6 வருடம் , வாஜ்பாயி என்ற நல்ல மனிதர் ஆட்சி நடந்தது. 55 வருடம் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்யாத இந்தியாவில் உள்ள அத்துணை நகரங்களையும் இணைக்கின்ற சாலை இணைப்பை செய்தார். கிராமங்களை இணைத்தார். ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் அத்தியாவசிய உணவு வழங்கினர். அத்வானி போன்ற நல்ல தலைவனின் துணை கொண்டு நமது எல்லைகளை ஊடுருவல் நிகழா வண்ணம் இரும்பு வேலி அமைத்தார். உலகமே வியக்கும் வண்ணம் அணு ஆயுத பரிசோதனை நடத்தி காட்டினர். அப்துல் கலாம் என்ற மா மனிதரை ஜனாதிபதி ஆக்கி நமக்கு எல்லாம் பெருமை சேர்த்தார். அதே அப்துல் கலாம் திரும்ப அதிபர் தேர்தலுக்கு போட்டிபோட்ட பொழுது , இந்த காங்கிரஸ் மற்றும் சிறுபான்மையினர் பற்றி வாய் கிழிய பேசும், தமிழ் இன துரோகி, தன்னுடைய குடும்பத்திற்காக எதையும் அடகு வைக்க தயங்காத, கருணாநிதி யின் துணை கொண்டு திரும்ப அதிபர் பதவிக்கு வர முடியாத அளவிற்கு இந்த தியாக செம்மல் பார்த்து கொண்டார். காரணம், சோனியா காந்தி பிரதம மந்திரியாக வருவதை அவர் விரும்பாததே. தன்னால் வர முடியாது என்று தெரிந்த உடன், இந்த தியாக டிராமா போடப்பட்டது.. இருக்கவே இருக்கிறது ஜால்ரா கும்பல்.. பத்திரிக்கை, டிவி சேனல் கள்.. எல்லா வற்றிற்கும் மேலாக, இருக்கவே இருக்கிறது இந்த செம்மறி ஆடு கும்பல்கள்.. ஆஹா.. என்ன ஒரு தியாகம்.. தேடி வந்த பதவியை தூக்கி எரிந்து விட்டாரே.. பதவி வெறி பிடித்த இந்த நாட்டில் இப்படி ஒருவரா? கதை திரை கதை என்று ஒரு முழு சினிமாவே நமக்கு எல்லாம் காட்ட பட்டது.. நம்பினோம்.. என்ன தவறு செய்தார் என்பதற்காக இந்த வாஜ்பாய் தோற்கடிக்க பட்டார்? யாரும் கேட்பதற்கு ஆள் இல்லை. ஜனநாயகத்தின் தூண் என்று சொல்ல படுகின்ற பத்திரிக்கை உலகம், ஒரு சிலவற்றை தவிர மற்ற அனைத்தும் சோனியா வின் அடிவருடிகளாக வலம் வருகின்ற அவலம்.. பொம்மை பிரதமர்.. கூட்டணி கட்சிகள் பற்றி கேக்கவே வேண்டாம்.. நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல , அடிக்கின்ற கொள்ளையில் பங்கு கொடுத்தால் போதும்.. மஹா ஜனங்களை பற்றி கேக்கவே வேண்டாம்.. குடி, பிரியாணி, உக்காந்த இடத்தில சோறு, இருக்கவே இருக்கிறது, திரு மங்கலம், formula வோட்டுக்கு பணம்.. ஜனங்கள் தங்களையே விற்க துணிந்த பின் ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு என்ன கவலை? ஊழலுக்கு, சீனாவில் மரண தண்டனை.. சவுதியில் அங்க ஹீனம், அமெரிக்காவில் 15 , 20 வருடம் ஜெயில்.. ஆனால், இங்கு? பாராட்டு பத்திரம்.. வெக்கமே இல்லாமல், தமிழர் தலைவர், இன மான(கெட்ட) தலைவர் என்றெல்லாம் அடை மொழி தனக்கு தானே போட்டுகொண்டு திரியும் ஈன பிறவிகள் படை திரட்டி கொண்டு விமான நிலையத்தில், இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கின்றனர்.. நடந்த அத்துணை ஊழல்களும் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லாமல், அத்துணை பேரின் மேற்பார்வையில் தான் நடந்து இருக்கின்றன.. கூட்டு கொள்ளை..வெக்கம், மனம், ரோசம் இல்லாமல், மன்மோகன் சிங்க் ரெண்டு நாளைக்கு முன், டெல்லி யில் இந்த ராசா வை தோளில் தட்டி கொடுக்கின்றார்.. ஆனால் என்ன.. தேர்தல் வந்தால்.. இந்த பிச்சைக்கார ஜனங்களுக்கு ஆயிரமோ, ரெண்டாயிரமோ விட்டு எரிந்தால் வோட்டு போட போகிறது.. பன்றிகளுக்கு மலம் தானே பிடித்த உணவு.. கருணாநிதி, சோனியா, இன்னும் நிறைய பேரின் மலம், வந்து விழ போகின்றது.. பன்றிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்.. இது ஒரு ஊழல் தேசம்.. நான் ஒரு பொழுதும் தகாத வார்த்தையை பிரயோக படுத்தியதே இல்லை.. ஆனால்..என்னால்.. அடக்க முடிய வில்லை.. நானும் தமிழகம் முழுவதும் சுற்றி வருகின்றேன்.. வியாபார விஷயமாக.. மிகவும் வருத்ததோடு சொல்கிறேன்.. தமிழன் ஒரு மாங்காய் மடையன் மட்டும் இல்லை.. எந்த வித உணர்வும், இல்லாத ஒரு வெட்டி கூட்டம்..அவனுக்கு தேவை.. கேளிக்கை மட்டும் தான்.. இன்னும் 100 வருடங்கள் ஆனாலும்.. இந்த கூட்டம் திருந்தாது.. சோனியா கருணாநிதி யின் பரம்பரைக்கு தான் வோட்டு போடும்.. வாழ்க ஊழல்.. வாழ்க தமிழ் கலாச்சாரம்.. தடித்த வார்த்தை பிரயோகங்களுக்கு மன்னிப்பு..
  வேதனையுடன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *