BREAKING NEWS
Search

நாடோடிகள்… கிரீடம் சூட்டத் தயாராகும் தமிழ் ரசிகர்கள்!

நாடோடிகள்… கிரீடம் சூட்டத் தயாராகும் தமிழ் ரசிகர்கள்!

வெளியான இரண்டே நாட்களில் நாடோடிகள் படம் பெரிய வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த இணையம் அல்லது நாளிதழைத் திறந்தாலும் படம் குறித்த பாஸிடிவ் ரிப்போர்ட்கள் ப்ளஸ் விமர்சனங்கள். nadodigal

படத்தின் பின்பாதியில் சற்று தொய்வு இருப்பதாகக் கூறப்பட்டாலும்,  ஒரு நல்ல படம் என்ற முத்திரை விழுந்துவிட்டதால், ரசிகர்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை.

படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். விஜய்காந்த் கட்சியின் நெல்லை தொகுதி மக்களவை வேட்பாளர். தேர்தலில் இழந்ததை படத்தில் சம்பாதித்துவிடும் நம்பிக்கையில் மிகத் தெம்பாக, அடுத்து இருபடங்களுக்கு பூஜை போடத் தயாராகிவிட்டார்.

நாடோடிகள் குறித்து தட்ஸ்தமிழ் தந்துள்ள ஒரு ரிப்போர்ட்:

பெயர்தான் நாடோடிகள்… ஆனால் நிஜத்தில், இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் பெஸ்ட் என்ற மகுடம் ‘சுப்பிரமணியபுரம்’ புகழ் சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்துக்குத்தான் என்பது உறுதியாகிவிட்டது.

நேற்று வெளியான இந்தத் திரைப்படத்துக்கு அடுத்த வாரம் முழுக்க முன்பதிவு முடிந்துவிட்டது. திரையிட்ட அத்தனை இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்குகிறது. தொடர்ந்து இரு தோல்விப்படங்கள் கொடுத்த இயக்குநர் சமுத்திரக்கனி இந்த வெற்றியால் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.

இன்னொரு பக்கம் ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக மற்றும் நடிகராக அடுத்தடுத்து வெற்றிக் கொடி நாட்டிய மகிழ்ச்சியில் சிரிக்கிறார் சசிகுமார்.

இந்தப் படத்தின் கதை உருவாக்கம் மற்றும் அதை சமுத்திரக் கனி காட்சிப்படுத்தியுள்ள விதம், குறிப்பாக நடிப்புக்கு இந்தப் படத்தில் அவர் தந்துள்ள முக்கியத்துவம் போன்றவை ரசிகர்களை படத்துடன் ஒன்றிப் போகச் செய்துவிட்டன.

ஒரு முழுமையான நடிகராக ஜொலிக்கிறார் இந்தப் படத்தில் சசி.

நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் யாதார்த்தம் பிளஸ் கமர்ஷியல் என சகல அம்சங்களும் கலந்த படமாக வந்துள்ள நாடோடிகளுக்கு இப்போதே கூடுதல் பிரிண்டுகள் கேட்டு விநியோகஸ்தர்கள் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படத்தின் வெற்றியை உறுதி செய்வதே அந்தப் படம் வெளியான சில தினங்களுக்குள் இப்படி கூடுதல் படப்பெட்டி கேட்டு வரும் விநியோகஸ்தர்கள்தான் என்தால் நாடோடிகள் குழு சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறது.

இப்படியே அடிக்கடி நல்ல நல்ல படமா கொடுங்க ராசா!
7 thoughts on “நாடோடிகள்… கிரீடம் சூட்டத் தயாராகும் தமிழ் ரசிகர்கள்!

 1. prashanthan

  அப்படி போடு மாமு …. நல்ல சினிமாவுக்கு என்றைக்குமே வெற்றி நிச்சயம் …
  தமிழ் சினிமாவின் ஓட்டம் ” பருத்திவீரன் ” படத்திலையே மாற்றப்பட்டு விட்டது … என்னதான் ரஜினி, விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்து இருந்தாலும் .. கதை நல்லா இல்லா விட்டால் அவர்களின் ரசிகர்களே அதை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள் … உதாரணாம் ரஜினியின் குசேலன் , விஜயின் பல படங்கள் *(எல்லாம் இவருக்கு தோல்வி படங்கள் தானே ) போன்றவை …. இனி தமிழ் சினிமா உருப்படும் ….

 2. Malar

  Really good movie to watch… Sasi kumar’s acting ins enjoyable… Good Actor… Congrats!

 3. arul

  i too saw that.very nice movie, particularly the first half is superb but the second half have some javvu scenes // கதை நல்லா இல்லா விட்டால் அவர்களின் ரசிகர்களே அதை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள் … உதாரணாம் ரஜினியின் குசேலன்//yennappa prasanth gapla vidura do you know one day before the release of kuselan, kumudam in their special review said that the film was very good particularly that climax scene in which rajini by his just like that acting makes the audience eyes into wet.but the film didnt go well.from that it came to know that every people in the world wont want rajini in a guest or serious role eventhough some medias showed their negative faces on that time.
  பிரசாந்த் நன்றாக புரிந்துகொள்ளுங்கள் “ஆர்ட் பில்மில் ரஜினி வந்தா நல்லாருக்காது பாட்ஷா சிவாஜி போன்ற படத்தில் எதார்த்த நடிகர்கள் வந்தா நல்லாருக்காது”

 4. makkal kural

  1st half jolly. 2nd half romba bore. finally this is a very average film only, not a super hit film.

 5. Manoharan

  Sasikumar is the biggest plus in nadodikal. The movie is very realistic and the part 30 minutes before interval is moving in Jet speed. It is a sure hit like Subramaniapuram. Sasi kumar hits hattrick as Director,Producer and Actor.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *