BREAKING NEWS
Search

நாடு கடந்த தமிழீழ அரசினால் என்ன பயன்? – கேள்வி பதில்

நாடு கடந்த தமிழீழ அரசினால் என்ன பயன்? -கேள்வி பதில் -13

நாடு கடந்த தமிழீழ அரசினால் என்ன பயன்? என்ன செய்து விட முடியும்? –

வி ஏ மனோகரன், எஸ் விஜய்

லங்கையில் தமிழர் பகுதிகள் முற்றிலும் சிங்கள அரசின் ஆட்சியின் கீழ் வந்துவிட்ட நிலையில், தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் தளம் வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்புதான் நாடு கடந்த தமிழீழ அரசு.

இதன் முக்கிய பணி, உலகின் பல தேசங்களிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவருவதே.

சொந்த நாட்டில் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாத நிலையில், வெளியிலிருந்தபடி, ஒரு அரசியல் அமைப்பாக இயங்கி, சர்வதேச சக்திகள் மூலம் அழுத்தங்கள் கொடுத்து, மீண்டும் தங்கள் நிலப்பரப்பை பெறுவதுதான் இதன் மூலத் திட்டம்.

ஆனால் அது உடனே நடக்கிற காரியமல்ல. அதுவரை சொந்த நாட்டில், அதாவது இலங்கையில் வதை முகாம்களில் உள்ள தமிழர்களை மீண்டும் மீள் குடியேற்றம் செய்வது, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டுத் தருவது, தமிழர் நிலங்களை மீட்டெடுப்பது, தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றங்களைத் தடுப்பது போன்ற முக்கிய பிரச்சினைகளில் தமிழர் குரலாக நாடு கடந்த அரசு தனது தாக்கத்தைக் காட்ட முடியும்.

அதுமட்டுமல்ல, தாயகத்தில் ஒரு வலுவான போராட்டக் களத்தை அரசியல் ரீதியாக உருவாக்கவும், அந்த அமைப்புக்கு வெளியிலிருந்து வலுவூட்டுவதும் கூட, நாடு கடந்த அரசால் இயலக்கூடிய விஷயங்களே.

நாடுகடந்த அரசுக்கு இப்போது நடக்கும் தேர்தல்கள் மூலம் 135 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு தலைமையும் தெரிவு செய்யப்பட்டு, நாடு கடந்த அரசு முழுமையாக இயங்கும் போது இதன் முக்கியத்துவம் உணரப்படும்.

இன்னொன்று, அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளுடன் ராஜரீக உறவுகளை மேற்கொள்ளவும் நாடுகடந்த அரசால் முடியும். நிஜமான தமிழீழம் அமைந்திருந்தால், எப்படி அனைத்து நாடுகளிலும் தூதரக உறவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்குமோ அதற்கு சமமான ஒரு அந்தஸ்து கிடைக்கவும் வாய்ப்புள்ளது (ஆனால் இது சர்வதேச நாடுகள் தரும் அங்கீகாரத்தைப் பொறுத்தது.)

எப்படியோ, எந்தப் பற்றுதலும் இல்லாமல் அந்தரத்தில் தவிக்கும் தமிழர்களுக்கு இப்போது கிடைத்துள்ள ஒரு கிளை போன்றதுதான் இந்த நாடுகடந்த அரசு. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தின், வேறு வடிவம் இது என்று ருத்திரகுமாரன் முன்பு கூறியது நினைவிருக்கலாம். எல்லாம் சரியாக நடந்தால், தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் இந்த நாடுகடந்த அரசுதான் என்ற நிலை வரும்.

**********

வினோ,

ஒரு பத்திரிக்கையின் பதிப்பாளர் என்பவர் யார்? நிறுவன ஊழியரா ? அல்லது பத்திரிக்கையின் சொந்தகாரரா?

குமுதம் விஷயத்தில் யார் சொந்தக்காரர் , யார் ஊழியர் ?. கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன். ரொம்ப நாளாகவே இந்த குழப்பம். தெளிவு படுத்துங்களேன் பிளீஸ்.

ஜவஹர் பழனியப்பன் , அமெரிக்க ஓஹையோ மாநிலத்தில் பிரசித்தி பெற்ற மருத்துவர் என்று நான் கேள்வி பட்டிருக்கிறேன். அது உண்மையா?

எஸ்எஸ்

திப்பாளர், ஆசிரியர் ஆகிய இரு பொறுப்புகளிலும் அந்தப் பத்திரிகையை ஆரம்பிக்கும் முதலாளியே கூட இருப்பதுண்டு. பல பத்திரிகைகளில் அப்படித்தான். சில பத்திரிகைகளில் ஆசிரியரும் பதிப்பாளரும் பங்குதாரர்களாகவும் இருப்பார்கள். சில நிறுவனங்களில் பதிப்பாளர் என்பவர் சம்பளம் பெறும் ஊழியராகவும் இருக்கிறார்கள். இவர்களே பத்திரிகையின் பிரதிநிதிகளாகவும் (ஐஎன்எஸ் போன்ற அமைப்புகளில்) முன் நிறுத்தப்படுவார்கள். அதற்காக அவருக்கே பத்திரிகை சொந்தமாகிவிடாது.

இந்த மூன்றாவது கேஸ்தான் குமுதம்.

குமுதத்தைப் பொறுத்தவரை அமரர் எஸ்ஏபி அண்ணாமலைதான் நிறுவனர், உரிமையாளர். அவரது சொந்தப் பணத்தில், அதாவது மூதாதையரின் பணத்தைக் கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில் அவருக்கு உதவியாக வந்தவர்தான் பார்த்தசாரதி. இருவரும் நண்பர்கள். பின்னாளில் அவருக்கு பதிப்பாளர் என்ற அந்தஸ்தைத் தந்தார் எஸ்ஏபி.

எஸ்ஏபி மரணத்துக்குப் பிறகு நிறுவனத்தின் உரிமையாளரானார் அவரது மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன். கவுரவ ஆசிரியராகவும் பதவி வகிக்கிறார். குமுதம் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் அவர்களது குடும்பத்தினரிடமே உள்ளன.

அமெரிக்காவில் பிரபலமான மருத்துவராக அவர் பதவியில் இருந்தாலும், குமுதத்தின் மீது தனி அக்கறை காட்டி வந்தார்.

பார்த்தசாரதியின் மகன்தான் இப்போது குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் வரதராஜன். இவர் பதிப்பாளராகப் பதவி வகிக்க ரூ 6 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார், மாதந்தோறும்.  இந்த சம்பளத்தைப் பின்னர் ஜவஹரின் கவனத்துக்கே கொண்டு செல்லாமல் ரூ 10 லட்சமாக உயர்த்திக் கொண்டுள்ளார் வரதராஜன்.

குமுத்தின் ஐஎன்எஸ் பிரதிநிதியும் வரதராஜன்தான்!

பல கோடி ரூபாய் நிதி மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். லாபத்தில் இயங்கிய (நம்பர் ஒன் வார இதழ், குமுதம்!) குமுதம் குழும பத்திரிகைகள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டியுள்ளார்.

இவையெல்லாம் சட்டப்படி அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள். இவை தவிர, குமுதத்தில் ஜவஹரால் நியமிக்கப்பட்டவர்களை ஒழித்துக் கட்டுவது வரதராஜனுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இதற்கு குமுதத்தில் பணியாற்ற வந்த ஜவஹர் பழனியப்பன் சகோதரி கூட தப்பவில்லை.

இன்னும், வரதராஜனின் பாத்ரூம் கேமரா சமாச்சாரங்கள், பிடிக்காத ஊழியருக்கு குப்பைக் கூடை ட்ரீட்மெண்ட், ஊழியரின் புதுச் சட்டையில் கிரீஸ் தடவும் அவரது வக்கிரம்… இவற்றையெல்லாம் தனியாகத்தான் எழுத வேண்டும்!

குமுதம் குழும இதழ்களில் ஒன்றின் முக்கியப் பொறுப்புக்கு நம்மை ஒரு முறை அழைத்திருந்தார் வரதராஜன். ட்ரைடெண்ட் ஹோட்டலில் சந்திப்புக்கு ஏற்பாடு  செய்திருந்தனர். நமது மிக நெருங்கிய நண்பர்களுக்கு அவரிடம் நேர்ந்த அனுபவங்களை ஏராளமாகத் தெரிந்து வைத்திருந்ததால், நாம் அவரைச் சந்திக்கக் கூடப் போகவில்லை!

*********

லைவர் என்னதான் செய்கிறார்? சமீப காலமாக எந்த நிகழ்ச்சியிலும் அவரைப் பார்க்க முடியவில்லையே!

Suresh கிருஷ்ணா

லைவர் மிகவும் பிஸியாக இருக்கிறார். எந்திரன் இறுதிக் கட்டப் பணிகள், சுல்தான் படப்பிடிப்பு, மகளின் திருமணம், நலத் திட்ட உதவிகள் என அவருக்கு ஏராளமான பணிகள். கட்டாயத்துக்காக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவர் அவர். அவரை அப்படிப் பங்கேற்க வைக்கவும் யாராலும் முடியாது. அந்த வகையில் நேரம் இருந்து, கலந்து கொள்ளலாம் என்று மனதுக்குப் பட்டால் பளிச்சென்று முதலில் நிற்பவர் ரஜினி ஒருவர்தான்!

-வினோ

என்வழி்
5 thoughts on “நாடு கடந்த தமிழீழ அரசினால் என்ன பயன்? – கேள்வி பதில்

 1. ss

  மிக அருமையான பதில். சந்தேகம் நீங்கியது.

  ” இன்னும், வரதராஜனின் பாத்ரூம் கேமரா சமாச்சாரங்கள், பிடிக்காத ஊழியருக்கு குப்பைக் கூடை ட்ரீட்மெண்ட், ஊழியரின் புதுச் சட்டையில் கிரீஸ் தடவும் அவரது வக்கிரம்… இவற்றையெல்லாம் தனியாகத்தான் எழுத வேண்டும்!

  குமுதம் குழும இதழ்களில் ஒன்றின் முக்கியப் பொறுப்புக்கு நம்மை ஒரு முறை அழைத்திருந்தார் வரதராஜன். ட்ரைடெண்ட் ஹோட்டலில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நமது மிக நெருங்கிய நண்பர்களுக்கு அவரிடம் நேர்ந்த அனுபவங்களை ஏராளமாகத் தெரிந்து வைத்திருந்ததால், நாம் அவரைச் சந்திக்கக் கூடப் போகவில்லை! ”

  பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் சிலருக்கு இது தெரியாதா?. அல்லது பத்திரிகை சுதந்திரம் என்பது பத்திரிக்கையின் உரிமையாளர் / பதிப்பாளர் / ஆசிரியர்களுக்கு மட்டும் தானா? ..

  ஊரில் உள்ள கண்ட கடைசல்களைபற்றியெல்லாம் புலனாய்வு செய்யும் பத்திரிக்கையின் ஊழியர்கள், செய்தியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் வெளிச்சத்திற்கே வராமல் போய்விடுவது வேதனையான விஷயம்.

 2. mukesh

  நித்தியானந்தனின் சகவாசம் வரதராஜனுக்கு நிறைய இருக்கும் போலிருக்கிறதே? வரதராஜானந்தா ஸ்வாமிகள்

 3. Kiri

  .//கட்டாயத்துக்காக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவர் அவர். அவரை அப்படிப் பங்கேற்க வைக்கவும் யாராலும் முடியாது.//

  Big joke of century…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *