BREAKING NEWS
Search

நஷ்டத்தை சமாளிக்க வக்கில்லாவிட்டால் தனியார் விமான நிறுவனங்களை இழுத்து மூடுவதுதானே!

நஷ்டத்தை சமாளிக்க வக்கில்லாவிட்டால் தனியார் விமான நிறுவனங்களை இழுத்து மூடுவதுதானே!

ரை அடித்து உலையில் போட்டுக் கொள்வது என்பதற்கு சரியான அர்த்தம் தேவையென்றால், இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனங்களைக் கேட்கலாம். மோசடிக்கு புது அகராதியையே உருவாக்கும் அளவுக்கு தேர்ந்தவை இவை.

kingfisher2

பொத்தாம் பொதுவாக இந்தக் குற்றச்சாட்டை நாம் முன் வைக்கவில்லை. அரசுக்கு எரிவாயு எடுத்துத் தரும் காண்டிராக்டராக உள்ளே நுழைந்து, இப்போது அந்த எரிவாயுவுக்கே சொந்தம் கொண்டாடும் அம்பானிகள் தொடங்கி, தங்கள் ஊதாரித்தனம், மோசமான நிர்வாகத்தால் நஷ்டப்பட்டு அதற்கும் அரசிடம் நஷ்டஈடு கேட்டும் தனியார் விமான நிறுவனங்கள் வரை ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தனியார் தொழில்கள் என்பவை முழுக்க முழுக்க லாபநோக்கத்தில் இயங்குபவை. இதில் பொதுமக்கள் நலன் என்பது பூஜ்யமே. ‘அடடா… மக்கள் நன்றாக இருக்க வேண்டுமே என்ற நோக்கத்தில் எந்த முதலாளியும் இன்று தொழில் செய்யவில்லை. வேறு வழியே இல்லாமல், வாங்கியே தீர வேண்டிய கட்டாயத்தில் மக்களைத் தள்ளும் வேலையில்தான் தனியார் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

எனவே இதில் வரும் லாபமும் நஷ்டமும் அவர்களையே நூறு சதவிகிதம் சாரும். அந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் வரும்போது மூடிக்கொண்டு போக வேண்டியதுதானே தவிர, மீண்டும் மக்கள் பணத்தை லம்பாகக் கொள்ளையடிக்க வாய்ப்புத் தேடக் கூடாது!

தனியார் விமான நிறுவனங்கள் சலுகைகக் கட்டணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதில்லை. மாறாக 100 சதவிகித இறுதிநிலை லாபம் (Marginal profit) வைத்தே இயக்குகிறார்கள். இந்த விமான நிறுவனங்களுக்கு அரசு அளித்த எரிபொருள் சலுகை உள்ளி்டட எதையும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகச் சேர அனுமதித்ததே இல்லை. எல்லா நேரத்திலும் லாபம் முழுமையாக தங்களுக்கு வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள். இப்போது நிலைமை சரியில்லை என்று புலம்புகிறார்கள். அதாவது லாபம் குறைந்துவிட்டது. அதை தாங்க முடியவில்லையாம். எனவே மக்கள் பணத்திலிருந்து தங்களுக்கு 52000 கோடி ரூபாக்குமேல் சலுகை மற்றும் உதவி நிதி வேண்டுமாம்.

இல்லாவிட்டால் ஸ்ட்ரைக் செய்வார்களாம்…

எப்படி இருக்கு இந்த நியாயம்?

தனியார் விமான நிறுவன விமானங்களில் பயணக்கட்டணம் அதிகம் என்பதற்காக அதைப் பாதியாகக் குறைக்குமாறு பயணிகள் போராட்டம் நடத்தினால் ஏற்பார்களா… அல்லது, சில மாதங்களுக்கு முன்பு வரை அரசு அளித்த மொத்த சலுகையையும் தாங்களே ஏகபோகமாய் அனுபவித்து கொள்ளையடித்தார்களே… அதை திருப்பித் தரச் சொன்னால் தருவார்களா…

அட… இன்று நஷ்டத்தில் அரசுக்கு பங்கு தர முன்வருபவர்கள், முன்பு சம்பாதித்த லாபத்தில் சரி பாதியை அரசுக்குத் தருவார்களா…

இன்றைக்கு நஷ்டம் என்றால், நேற்று வந்த லாபத்தில் அதைச் சரிக்கட்டிக் கொண்டு தொழிலைத் தொடர்வதுதானே வியாபார தர்மம்?

அப்படியும் நஷ்டத்தைத் தாங்க முடியாவில்லை என்றால் இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதானே… எதற்காக அந்தத் தொழிலைத் தொடர வேண்டும்?

பெரும்பணக்காரர்கள் தவிர, பிற மக்கள் ஏன் விமானங்களைப் புறக்கணிக்கத் துவங்கினார்கள் என்பதை இவர்கள் யோசிக்க வேண்டும்!

விமான நிறுவனங்கள் ஸ்ட்ரைக் பற்றி இன்று வெளியாகியுள்ள செய்தியை கீழே தந்துள்ளோம். இதைப் படித்த பிறகு கட்டாயம் உங்கள் கருத்துக்களை தனி கட்டுரையாகக் கூட எழுதலாம்!

18ம் தேதி விமானங்கள் ஸ்டிரைக்!-அரசை மிரட்டும் தனியார் விமான நிறுவனங்கள்!

மும்பை: நஷ்டத்தைச் சமாளிக்க தங்களுக்கும் நிதிச் சலுகைகள் வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதியிலிருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தப் போவதாகவும் தனியார் விமான நிறுவனங்கள் மிரட்டல் விடுத்துள்ளன. meeting-mallaya

ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர், ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், இண்டிகோ உள்ளிட்ட எட்டு தனியார் விமான நிறுவனங்கள் இந்த ஸ்ட்ரைக் மிரட்டலை அறிவித்துள்ளன.

அரசுத் துறைக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ரூ.5000 கோடி நஷ்டத்தில் தவிக்கிறது. பயணிகள் குறைந்தது, தனியார் விமான நிறுவனங்களின் போட்டிகளைச் சமாளிக்க முடியாமை போன்ற காரணங்களால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது ஏர் இந்தியா. இதனால் அரசு இந்த நிறுவனத்துக்கு நிதியுதவி மற்றும் கடன்களை அளித்து கைதூக்கிவிடுகிறது.

அதே நேரம் தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக புலம்புகின்றன. தங்களுக்கும் நிதிச் சலுகைகள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

அரசு இந்த கோரிக்கையைக் கண்டு கொள்ளாததால், ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ளன. இதில், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இந்த அழைப்பு அறிவுப்பூர்வமானதல்ல என்று மறுத்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், ஸ்ட்ரைக் நடைபெறும் நாளன்று பயணிகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக கூடுதல் விமானங்களை அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அரசுக்கு எதிராக அரசு நிறுவனம் ஒன்றைத் தூண்டிவிடுவது கிரிமினல் குற்றத்துக்கு சமமானது என்று இவர்களுக்குத் தெரியாதா? என திருப்பிக் கேட்டுள்ளார் ஏர் இந்தியா இயக்குநர்களில் ஒருவர்.

இந்த ஸ்ட்ரைக் குறித்து கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா கூறுகையில், “நிதி நெருக்கடியால் கஷ்டப்படும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் கைகொடுக்கின்றன. அந்த மாதிரி இங்கும் சலுகைகள் வேண்டும்” என்றார்.

இது அறிவீனம்…!

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சக முதன்மை செயலாளர், “தனியார் விமான நிறுவனங்களுக்கு அரசு எப்படி உதவ முடியும்? அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு உதவவே ஆயிரம் முறை யோசித்துக் கொண்டிருக்கிறது அரசு. இதில் தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த லாபங்களுக்காக, தங்கள் இஷ்டப்படி இயக்கும் விமான நிறுவனங்களுக்கு அரசு எதற்காக பெய்ல் அவுட் தரவேண்டும்.

அவர்கள் கோரிக்கை முட்டாள்தனமானதும் கூட. வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களுக்கு பெயில் அவுட் தரும் அரசு, அந்த நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. விஜய் மல்லையா போன்றவர்கள் அதற்குத் தயாரா…”, என்றார் கோபத்துடன்.

மேலும், தனியார் விமான நிறுவனங்களின் எந்தக் கோரிக்கையையும் அரசு பரிசீலிப்பதாக இல்லை. அதற்கான அவசியமும் இல்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

எந்தக் காரணம் கொண்டும் மக்களின் பணத்தில் ஒரு சல்லிக் காசு கூட, தனியார் விமான நிறுவனங்களுக்கு சலுகையாகத் தரக்கூடாது என்றும், உலகிலேயே அதிக விமானக் கட்டணம் வசூலிப்பவை இந்திய தனியார் விமான நிறுவனங்களே என்பதால், இந்த நஷ்டம் அவற்றின் சொந்தப் பொறுப்பையே சாரும் என்றும் எதிர்கட்சிகள் இப்போதே கடுமையான நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.

-விதுரன்
12 thoughts on “நஷ்டத்தை சமாளிக்க வக்கில்லாவிட்டால் தனியார் விமான நிறுவனங்களை இழுத்து மூடுவதுதானே!

 1. வடக்குப்பட்டி ராமசாமி

  டாடா இவுங்களைவிட பெரிய மொள்ளமாரியாமே?
  விதுரன், டாடா பத்தியும் ஒரு போஸ்ட் எதிர் பார்க்கிறேன்!

 2. Seri

  The Domstic flight charges in America is very less compare to Indian Domestic flights!!!

  What happened to those money these Malliah earned… Spending for Models in beaches!!!

 3. Manoharan

  Even now Private airlines are fixing the Fare according to their will and wish. Sometimes Dometic Fares are very high comparing to International Fares for the same distance. Small aircrafts are getting full almost all days but Bigger aircrafts are only facing the heat. Sometimes more than half of the Flight are not getting occupied. But before a year these guys were generating profit like anything due to Very high fares comparing the present fares which is quite okay.

 4. Manoharan

  பெரும்பணக்காரர்கள் தவிர, பிற மக்கள் ஏன் விமானங்களைப் புறக்கணிக்கத் துவங்கினார்கள் என்பதை இவர்கள் யோசிக்க வேண்டும்!

  Becoz of this only they have reduced the fares considerebly Since 2008. Now slowly common men are using Flights instead of 2nd A/c Coach in Train. But if they hike the fares again then most of the airlines will have to stop their operations.

 5. jawahar.t

  அந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் வரும்போது மூடிக்கொண்டு போக வேண்டியதுதானே தவிர, மீண்டும் மக்கள் பணத்தை லம்பாகக் கொள்ளையடிக்க வாய்ப்புத் தேடக் கூடாது!

 6. Thinnu

  I told the same thing, this is all game to play and make money, if loss, close we dont pay tax for their loss,

 7. Thinnu

  dont his horses bring money or the brandy , viskey,beer !!!!, let that money can makeup the loss

 8. pisasu

  No doubt Indian Airlines is with loss, the same govt. servant mentality, treating passengers like the same way who approach any govt office.

 9. SenthilMohan K Appaji

  தமது நிறுவனத்தின் 51% பங்குகளினை அரசாங்கத்திற்கு இலவசமாக எழுதி கொடுக்கத் தயார் என்று அறிவித்த பின்பு தான், அரசாங்கம் bail-out பற்றியே யோசிக்க வேண்டும்.

 10. Thomas Ruban

  //நடக்கறது தனியார் அரசாங்கம்தானே… அதாவது அரசு இயந்திரங்கள் எல்லாத்தையும் தனியாருக்கென கொடுக்க முயற்சி செய்கின்ற கூட்டம் அல்லவா??
  இவர்களே, தனியார் முதலாளிகளுக்கு இப்படி ஒரு யோசனையை சொல்லி கொடுத்திருப்பார்கள்.//

  எனக்கும் இதே சந்தேகம் தான்.

  சில அரசு உழல் அதிகாரிகள் லஞ்ச பணத்திற்கு ஆசைப்பட்டு தனியார் முதலாளிகளுக்கு
  இப்படி சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கூரி யோசனையை சொல்லி கொடுக்கிறார்கள்.

  இதனால் பாதிக்கப்படுவது மக்களும், மக்களின் வரிபணமும் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *