BREAKING NEWS
Search

நவ 1 முதல் விரும்பிய செல்போன் சேவைக்கு அதே எண்ணுடன் மாறிக் கொள்ளும் வசதி!

நவ 1 முதல் விரும்பிய செல்போன் சேவைக்கு அதே எண்ணுடன் மாறிக் கொள்ளும் வசதி!

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும், விரும்பிய செல்போன் நெட்வொர்க்குக்கு அதே எண்ணுடன் மாறிக்கொள்ளும் வசதி, ஒரு வழியாக அடுத்த வாரம் நடைமுறைக்கு வருகிறது.

செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதியை கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தியது மத்திய தொலைத் தொடர்புத்துறை.

ஆனால், செல்போன் நிறுவனங்கள் பல, அதற்கான உயரிய தொழில்நுட்ப வசதி இல்லாமல் இருந்தன. எனவே, அவை அந்த வசதியைப் பெற கால நீட்டிப்பு செய்து கொண்டே இருந்தது மத்திய அரசும். இதுவரை கிட்டத்தட்ட 4 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்போதுதான் ஒருவழியாக அனைத்து செல்போன் நிறுவனங்கள் தங்களை ‘அப்கிரேட்’ செய்து கொண்டுள்ளன.

நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்திருக்கிறார். முதற்கட்டமாக இது ஹரியாணாவில் மட்டும் அமலுக்கு வருகிறது.

குறித்த செல்போன் நிறுவனம் வழங்கும் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றாலும் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தொடர்ந்து அதே நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதையடுத்து, வேறு செல்போன் நிறுவனத்தின் சேவையில், ஏற்கெனவே இருக்கும் அதே செல்போன் எண்ணைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்தது.

இதனை அறிமுகப்படுத்தினால், வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, கட்டணக் குறைப்பு உள்பட பல வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதைத் தவிர்க்கவே பல நிறுவனங்கள் இந்த வசதியை தாமதப்படுத்தி வந்தன என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள்.

இந்த முறையாவது சொன்ன தேதியில் செய்வார்களா…?

என்வழி




7 thoughts on “நவ 1 முதல் விரும்பிய செல்போன் சேவைக்கு அதே எண்ணுடன் மாறிக் கொள்ளும் வசதி!

  1. SASI

    DINAMALARUKKU SERUPPU ADI ,

    ENDHIRANAI PATRI YARO EZHUTHIYA KATHAIYAAAM ,

    MUTHALMURAIYAGA ENDHIRAN NEWS, ATHARKKU KITAITHA PARICHU ATHIL ULLA COMMENTS.

  2. பாலா

    இம்முறையும் நீட்டிப்பு வழங்கப்படும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன…

  3. கிரி

    //கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும், விரும்பிய செல்போன் நெட்வொர்க்குக்கு அதே எண்ணுடன் மாறிக்கொள்ளும் வசதி//

    Excuse Me Mr Vino! 🙂 ஓராண்டாக அல்ல. 2005 ம் ஆண்டில் இருந்து.. புலி வருது கதையா! சொல்லிட்டு இருக்கானுக. இப்ப கூட எனக்கு நம்பிக்கை இல்லை.

  4. SenthilMohan K Appaji

    என்னது ஹரியானாவில மட்டுந்தானா? அடப்பாவிகளா.

    //*செல்போன் நிறுவனங்கள் பல, அதற்கான உயரிய தொழில்நுட்ப வசதி இல்லாமல் இருந்தன. எனவே, அவை அந்த வசதியைப் பெற கால நீட்டிப்பு செய்து கொண்டே இருந்தது**/

    இது டகால்ட்டி வேலைங்க. இந்த வசதியால அதிகம் பாதிப்படைவது Airtel தான். அதனால அவங்க பண்ணிய ஏதோ கோக்கு-மாக்கு வேலை தான் இது.

  5. Manoharan

    இந்த வசதி வந்தால் செல்போன் நெட்வொர்க்கை மாற்றும் முதல் ஆளாக நானிருப்பேன். பத்துக்கு பத்து ரூமுக்குள் போனால்கூட சிக்னல் கிடைப்பதில்லை. கொடுமையான சர்வீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *