BREAKING NEWS
Search

நயன்தாராவை பிரபு தேவா கல்யாணம் பண்ணா ‘காப்பு’ நிச்சயம்! – வழக்கறிஞர் கருத்து

நயன்தாராவை பிரபு தேவா கல்யாணம் பண்ணால் 5 ஆண்டு சிறை தண்டனை நிச்சயம்! – வழக்கறிஞர் கருத்து

சென்னை: ஏற்கெனவே திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசிக்கும் பிரபுதேவா, இப்போது நடிகை நயன்தாராவை இரண்டாவதாக திருமணம் செய்தால், அவருக்கும் நயன்தாராவுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் நிச்சயம் என பெண் வக்கீல் கூறியுள்ளார்.

நயன்தாராவுடனான காதலை பிரபுதேவா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ள பிரபுதேவா, விரைவில் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

இந்த இருவரும் கள்ளத் தொடர்பிலிருந்த போது, பிரபுதேவாவின் மனைவி ரம்லத் நயன்தாராவை கடுமையாக எச்சரித்திருந்தார். தனது கணவரைவிட்டு விலகுமாறும், நயன்தாராவை பார்த்தால் அடிப்பேன் என்றும் மிரட்டிப் பார்த்தார். ஆனால் அதை பொருட்படுத்தவில்லை இருவருமே.

இந்த நிலையில் திருமணத்துக்கு தயார் ஆவதற்காக சினிமாவில் நடிப்பதையும் நயன்தாரா நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன்தான் நயன்தாராவின் கடைசி தமிழ்ப் படம். நயன்தாரா தந்த நெருக்கடியால்தான் திருமண அறிவிப்பை பிரபு தேவா வெளியிட்டார் என்கிறார்கள்.

சட்ட சிக்கல்…

ஆனால் முதல் மனைவி ரம்லத்தை விவகாரத்து செய்யாமல் நயன்தாராவை மணந்தால் சட்ட சிக்கல் வரும் என்கின்றனர் வக்கீல்கள். பிரபுதேவாவுக்கு 5 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரபுதேவா- நயன்தாரா திருமணம் சட்டப்படி செல்லுமா? இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் விஜயதரணி கூறுகையில், “பிரபுதேவாவுக்கு மனைவி ரம்லத் இருக்கிறார். இரு குழந்தைகளும் உள்ளனர். எனவே நயன்தாராவை மணப்பது சட்டப்படி குற்றம்தான்.

ரம்லத் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. எனவே அது செல்லாது என பிரபுதேவா கருதலாம். இந்து சட்டப்படி நாலைந்து பேரை வைத்துக் கொண்டு தாலி கட்டினாலே அது செல்லத்தக்கதுதான். பிரபு தேவா-ரம்லத் திருமணத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தியதை அக்கம் பக்கத்து வீட்டார் பார்த்து இருக்கிறார்கள். பிரபுதேவா பாஸ்போர்ட்டில் மனைவி ரம்லத் என்ற லதா என உள்ளது. இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் பிறப்பு சான்றிதழிலும் தந்தை பிரபுதேவா என்றுதான் உள்ளது.

ரம்லத் தனது பெயரை லதா என மாற்றி இந்துவாக மாறியது கெஜட்டில் பதிவாகி உள்ளது. அதில் கணவர் பிரபுதேவா என இருக்கிறது. ரேஷன் கார்டிலும் பெயர்கள் உள்ளன.

இவையெல்லாம் பிரபு தேவா-ரம்லத் கணவன்- மனைவி உறவை சட்டப்பூர்வமானதாக்கப் போதுமான ஆதாரங்கள். எனவே பிரபுதேவா- நயன்தாரா திருமணம் நடந்தால் இருவருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி.

சமீபத்தில் இந்தியாவில் முதல் மனைவி இருந்தும் அமெரிக்காவில் இன்னொரு பெண்ணை மணந்து ஒருவர் குடித்தனம் நடத்தினார். இந்த விஷயம் தெரிந்ததும் முதல் மனைவி போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் இரண்டாவது மனைவி அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய போது விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். அதன்படி பார்த்தால் நயன்தாராவுக்கும் தண்டனை கிடைக்கும். பிரபுதேவாவுக்கு 5 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது…,” என்றார்.

ஒழுக்கக் கேட்டுக்கு பகிரங்க அங்கீகாரம்!

பிரபு தேவாவின் இந்த திருமண அறிவிப்பு திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“முதல் மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டே, இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அவர் கூறியிருப்பது சட்டப்படியும் சரியல்ல, நியாயப்படியும் சரியல்ல. திரையுலக பிரபலங்கள் எதைச் செய்தாலும் அதற்கு சட்டென்று கவன ஈர்ப்பு கிடைக்கிறது.

இளைஞர்கள் மனதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த செயலை பிரபுதேவா செய்வது சரியல்ல,” என்றார் பெயர் சொல்ல விரும்பாத பிரபல தயாரிப்பாளர் ஒருவர். பிரபு தேவாவை வைத்து ஒரு வெற்றிப் படம் தந்தவர் அவர்.
11 thoughts on “நயன்தாராவை பிரபு தேவா கல்யாணம் பண்ணா ‘காப்பு’ நிச்சயம்! – வழக்கறிஞர் கருத்து

 1. tamilan

  கருணாநிதிக்கு எத்தனை பொண்டாட்டி. போய் அவங்கவங்க வேலைய பாருங்க சார்
  __________

  அதற்காக எல்லோரும் அவர் வழியைப் பின்பற்ற வேண்டும் என்கிறீர்களா?
  -என்வழி

 2. tamilan

  ஏன் அதபத்தி எந்த பத்திரிகையிலும் போட மாட்டேங்கறீங்க.ஒரு முதல்வரே மூணு பொண்டாட்டி கட்டுனா எப்படி இளைஞர்கள் மனதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தாதா.
  ஊருக்கு எளச்சவன் உங்க கையில் கெடச்சா சும்மா பந்தாட்றீங்க.

 3. Shankar

  அய்யா, தமிழன்…கருணாநிதி தனது மனைவி,இணைவி,துணைவியார்களை சரிக்கட்டியதால் தான் பிரச்சனையில்லை. மேலும் அந்த பெண்மணிகள் எதிர்ப்பு காட்டவில்லை(இல்லை அமுக்கப்பட்டதோ தெரியவில்லை..அல்லது இப்பொழுது இருக்கும் பெண்ணியக்கங்கள் அப்பொழுது இல்லையோ என்னவோ) அதுபோல லதா என்கிற ரமலத்தை பிரபு தேவா சரிக்கட்டினால் விசயம் ஓகே.

 4. tamilan

  கருணாநிதி மாதிரி பிரபு தேவாவுக்கு கிரிமினல் புத்தி இல்ல அதுக்கு என்ன பண்றது

 5. Manoharan

  முதலில் கருணாநிதியை கண்டியுங்கள். இன்னொன்று . முதல் மனைவி புகார் கொடுத்தால்தான் வழக்கு பதிவு செய்ய முடியும். அது நடக்குமென்று தோன்றவில்லை. நடிகர் பிரபு, மாஜி திமுக கைத்தறி அமைச்சர் NKKP ராஜா போன்றோர் இரண்டு மனைவிகளுடந்தான் வாழ்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத தண்டனை எப்படி பிரபுதேவாவுக்கு மட்டும் கிடைக்கும். அவ்வளவு ஏன்..வீரா படத்தில் ரஜினியே இரண்டு திருமணம் செய்வதை நியாயப்படுத்தியிருக்கிறார்.

 6. Ravanan

  ஒரு சட்டமும் பாய முடியாது…. இது மனித மீறல் பிரச்னை…. அரசன் எவளியோ அவளியே மக்களும்..

 7. kicha

  /நடிகர் பிரபு, மாஜி திமுக
  கைத்தறி அமைச்சர் NKKP
  ராஜா போன்றோர்
  இரண்டு மனைவிகளுடந்தான்
  வாழ்கின்றனர்/

  prabhu? Is it true?

 8. Ramesh

  கருத்து வேறுபாடு கணவன் மனைவிக்கிடையே தோன்றி இனி சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை என்று இருவரில் ஒருவராவது தீர்மானித்தால் தொடரும் உறவில் தனித்தனி வழியே செல்வது சாலச்சிறந்தது. அந்த வகையில் ரம்லத் விட்டுக்கொடுப்பு செய்வாராக இருந்தால் அது பெண்ணுக்குப் பெருமை.

 9. Manoharan

  @ கிச்சா. பிரகாஷ் ராஜின் மாஜி மனைவி லலிதகுமாரியின் சகோதரிதான் பிரபுவின் இரண்டாவது மனைவி . அவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. அவரை ஜூனியர் சிவாஜி என்று எது படத்தில் அறிமுகம் செய்வதாக கேள்விப்பட்டேன்.

 10. kicha

  @ manoharan. Idhu veraya? Aana lalithakumari sister disco shanthi dhane?

  Ennavo… Indha fieldla ozhukamkaradhu kelvikuridhan.

 11. saravanan

  Mr. Manoharan,

  Junior sivaji endra nadigar Prabhuvin annan Mr. Ramkumar’s Second wife (She is sister of Actress Sri Priya) son.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *