BREAKING NEWS
Search

நடிகர் விஜய் வசந்த்தை வாழ்த்திய ரஜினி!

நடிகர் விஜய் வசந்த்தை வாழ்த்திய ரஜினி!

ற்று இடைவெளிக்குப் பிறகு வெளி நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார் சூப்பர் ஸ்டார். சென்னை 28, நாடோடிகள் படங்களில் நடித்தவரும், காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்தின் திருமண வரவேற்பில் பங்கேற்ற ரஜினி மணமக்களுக்குப் பரிசளித்து வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றாலும் வழக்கம்போல, திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்க விரும்பி ஓடி வந்தது, உற்சாகம், மலர்ச்சியின் மொத்த உருவமாகத் திகழ்ந்த ரஜினியைத்தான்.

மணமகன் விஜய் வசந்துக்கு நிலை கொள்ளவில்லை. அவரே எதிர்பார்த்திராத ஒரு இனிய அதிர்ச்சியாக அமைந்தது ரஜினியின் வரவேற்பு. “எனக்கு உண்மையிலேயே சந்தோஷம் தாங்கவில்லை. தலைவர் வந்ததில் எனது குடும்பத்தினர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவில்லை…” என்று நண்பர்களிடம் சொல்லி சந்தோஷப்பட்டார்.

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் பிறரைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதானே!

-என்வழி சிறப்புப் படங்கள்




12 thoughts on “நடிகர் விஜய் வசந்த்தை வாழ்த்திய ரஜினி!

  1. from UK

    தலைவர் ரொம்ப ஸ்மார்ட் ஆக இருக்கார் !!!

  2. josh

    தலிவா சொல்ல வார்த்தை இல்லை அந்த குடும்பமே எவ்வளவு சந்தோஷ ம இருக்கு

  3. vasanthan

    அந்த குடும்பத்தின் சந்தோசத்தை பார்க்க ,நாங்களே நேரில் தலைவரெய் பார்த்தது போல் உள்ளது ,

  4. Arun

    வினோ,
    நீங்க நிச்சயம் நம்ம தலைவர் ர பாத்து இருப்பீங்க நீங்க தலைவர முதல் ல நேரடியா எப்ப பாத்தீங்க அந்த அனுபவத்த கொஞ்சும் சொல்லுங்க

    நீங்க தலைவர் கூட பேசி இருக்கீங்களா?

    நன்றி,
    அருண்

  5. Raja

    வினோ. சூப்பர் ஸ்டில்ஸ். அதுவும் அந்த குடும்பம் பெறும் சந்தோசம் பார்க்கவே எவ்வளவு நல்ல இருக்கு…

  6. r.v.saravanan

    அனைத்து படங்களிலும் விஜய் வசந்த் குடும்பத்தினரின் சந்தோசத்தை
    பாருங்கள் எவ்வளவு உற்சாகம்
    என்னையும் தொற்றி கொண்டது

    படங்களுக்கு நன்றி வினோ

  7. devraj

    Thaliver looks super smart, and the family are extremely happy for Thaliver attending.

  8. Manoharan

    Actually I got invitation for the wedding as Vijay’s Uncle is my close friend. But I could not make it. Now after seeing this I regret myself. I missed the chance of seeing Rajini.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *