BREAKING NEWS
Search

நடிகர் சங்கத்துக்கு மீ்ண்டும் தலைவராகும் சரத்குமார்!

நடிகர் சங்க தலைவர் பதவி: போட்டியின்றி தேர்வாகிறார் சரத்?

டிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. jaggubhai-sarathkumar

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வரும் ஜூலை 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய நேற்றுதான் கடைசி நாளாகும்.

ஆரம்பத்தில் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறிவந்தார் சரத் குமார்.

ஆனால் இப்போது தனது முடிவை அவர் மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான மனுவை அவர் ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டார். ஆனால் அவரை எதிர்த்து வேறு யாரும் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை.

போட்டி உருவாகி தேர்தலில் மோதுவதைவிட, இந்த முறையும் சரத்குமாரே தலைவராக இருக்கட்டும் என நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்தை ஏற்று மீண்டும் சரத்தை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யும் முயற்சியில் ராதாரவி உள்ளிட்டோர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நடிகர் சங்கத்தில் மொத்தம் 3200 உறுப்பினர்கள் உள்ளனர்.

இம்முறையும் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். சரத்குமாரின் அணியில் நின்று முன்பு ஜெயித்த அனைவரும் மீண்டும் அதே பதவிகளுக்குப் போட்டியிடுகிறார்கள்.




One thought on “நடிகர் சங்கத்துக்கு மீ்ண்டும் தலைவராகும் சரத்குமார்!

  1. prakash

    After he lost the election without single seat, he now wants to be atleast the president of actor association. Appidi oru pathivi aasai. Naayi polae alaiyurangae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *