Breaking News

நக்கீரன் சர்வே Vs ஜூனியர் விகடன் ஜோசியம்!

Tuesday, April 12, 2011 at 2:57 pm | 6,400 views

நக்கீரன் சர்வே Vs ஜூனியர் விகடன் ஜோசியம்!

மிழக தேர்தல் முடிவுகள் குறித்து எக்கச்சக்க சர்வேக்கள் வந்துவிட்டன. ஓரிரு பத்திரிகைகள் மட்டும் களத்துக்குப் போய் புள்ளியியல் முறைகள் மூலம் விவரங்களைச் சேகரித்து தேர்தல் முடிவின் போக்கு இப்படி இருக்கும் என்கிறார்கள்.

மீதியுள்ளவர்கள், தங்கள் ஆட்களை / நிருபர்களை தொகுதிவாரியாக அனுப்பி களத்தின் பொதுவான தன்மையைப் பார்த்து, அதற்கேற்ப தேர்தல் முடிவைக் கணித்துச் சொல்கிறார்கள், கிட்டத்தட்ட ஜோசியம் போல!

சமீபத்தில் அப்படி வெளியானவற்றில் ஒரேயொரு புள்ளியியல் ரீதியான கருத்துக் கணிப்பு வந்திருந்தது. அதை வெளியிட்டது நக்கீரன்.

மேலும் சில கணிப்புகளும் வந்தன… கிட்டத்தட்ட தேர்தல் ஜோசியம் போல. அவற்றில் ஜூனியர் விகடன் வெளியிட்டதும் ஒன்று!

அதென்ன நக்கீரன் வெளியிட்ட கணிப்புக்கு மட்டும் சர்வே அந்தஸ்து? திமுக சார்பு பத்திரிகை அல்லவா அது? என்றெல்லாம் சிலர் கேட்கலாம். அவர்களுக்கு ஒருவிளக்கம்… இந்தத் தேர்தலில் நேரடியாகக் களத்துக்குப் போய் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்காளர்களைச் சந்தித்து, அதற்கான தரவுகள் (Data) சேகரித்து, அவற்றை Reaserch Methodology- விதிகளின் படி பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, நிபுணர்களின் மேற்பார்வையில் வெளியிட்டுள்ளது நக்கீரன். நக்கீரன் நிருபர்கள் தவிர, வெளியாட்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதனை வெளிப்படையாக அந்த பத்திரிகை அறிவித்தும் உள்ளது.

ஆனால் மற்ற தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்தும் இதுபோல புள்ளியியல் முறைகளின் படி மேற்கொள்ளப்பட்டவை அல்ல. குறைந்தபட்ச Sampling Techniques கூட இந்த கணிப்புகளில் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இன்னார் ஜெயிக்க வேண்டும் என்ற சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் உள்ளக் கிடக்கையும், அதனைச் சார்ந்து அந்தப் பத்திரிகைகளின் நிருபர்கள் சேகரித்து வந்த விவரங்களும்தான் ‘இறுதி ரிசல்ட்’ எனும் பெயரில் வெளியாகியுள்ளன.

நிருபர்கள் கருத்துக் கணிப்பெடுக்க லாயக்கற்றவர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் அவர்களது சார்பு நிலை நிச்சயம் இந்த கணிப்புகளில் எதிரொலிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் மாவட்ட அளவில் செயல்படும் நிருபர்களின் கணிப்புகளில் இது அதிகம் தெரியும். இவர்கள் உள்ளார்ந்த பகுதிகளுக்குப் போய் மக்களின் மனநிலையை அறியவும் முற்படுவதில்லை.

அதனால்தான் நக்கீரன் கருத்துக்கணிப்பில் தெரியும் Professionalism, ஜூனியர் விகடன் கணிப்பில் கொஞ்சம் கூட இல்லை. விகடன் குழுவினர் கொடுத்திருப்பது பொதுப்படையான ஒரு போக்கு பற்றிய பார்வை. 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, ஆளும் கட்சிக்கெதிரான மக்கள் மனோபாவம் என்ற இரு பொதுப்படையான விஷயங்கள் ஜெயலலிதாவை சிம்மாசனத்தில் அமர வைத்துவிடும் என்று இவர்கள் நம்புவதை, கணிப்பாகத் தந்திருக்கிறார்கள்.

ஒரு Disclaimer மாதிரி, ‘கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்று வேறு குறிப்பிட்டுள்ளனர். ஆக அவர்களுக்கே, அவர்களின் கணிப்பில் நம்பிக்கை இல்லை. இத்தனைக்கும் இந்த கணிப்பு தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதைவிட ‘கடைசி நேரம்’ என்னவாக இருக்கும்… புரியவில்லை. இன்னொன்று, கருணாநிதியும் ஜெயலலிதாவும் கடைசி நேரத்தில் ஏதோ ‘லாஸ்ட் புல்லட்’ பயன்படுத்தப் போவதாக வேறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அது என்ன ‘புல்லட்’ என்று சம்பந்தப்பட்டவர்களுக்காவது தெரியுமா…?

இதற்கு முன் வந்த ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு முழுவதும் நம்பகத் தன்மையற்றதாகிவிட்டது. காரணம், தேர்தல் அறிவித்த கையோடு அவர்கள் மேற்கொண்ட கணிப்பு அது. தேர்தல் அறிக்கை, பிரச்சாரங்கள், வைகோ விளைவு என எதுவும் அப்போது இல்லை. கட்சி சார்பற்ற எல்லோருமே, தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்ற மனநிலையிலிருந்தபோது எடுத்த கணிப்பு அது. அவர்கள் கவனத்தில் கொண்ட ஒரு பொதுக் கருத்து, ‘ஆளும் கட்சிகளுக்கு எதிராக உருவாகும் மாற்று தேவை’ என்பது மட்டுமே.

ஆனால் நக்கீரன் இப்படி எந்த கருதுகோள்களுடனும் தனது கணிப்பை வெளியிடவில்லை.

அவர்களின் முதல்கட்ட சர்வே, இரண்டாம் கட்ட சர்வே இரண்டுக்குமே 6 தொகுதிகள்தான் வித்தியாசம் வருகிறது. புள்ளியியல் ரீதியான கணிப்பில் நடக்கக் கூடிய அதிகபட்ச மாறுதல் இது.

இதுவரை நக்கீரன் கணிப்பில் 2001-ம் ஆண்டு தேர்தல் கணிப்பு மட்டுமே தவறாகப் போயிருக்கிறது. அதன் பிறகு கிட்டத்தட்ட சுதாரித்துக் கொண்டு, தொடர்ந்து துல்லியமான கணிப்புகளைச் சொல்லி வந்துள்ளனர். 2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அத்தனை மீடியாவும் திமுக அணி தோற்கும் என்று கூறியபோது, திமுக 28, அதிமுக 12 என தெளிவான கணிப்பைச் சொன்னது நக்கீரன்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அதுவும் எந்தெந்த தொகுதிகளில் யார் ஜெயிப்பார்கள் என்று அந்த கணிப்பில் சொல்லப்பட்டிருந்ததோ, அவர்கள்தான் ஜெயித்தார்கள்!

நக்கீரனுக்கு நற்சான்று தருவதற்காக இவற்றையெல்லாம் குறிப்பிடவில்லை. கள ஆய்வு முறைகளில் நமக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.

நக்கீரன் வெளியிட்டிருப்பது கருத்துக் கணிப்பு… விகடன் உள்ளிட்ட பிறர் கடைசி நேரத்தில் வெளியிட்டிருப்பது ஜோசியம் (இறுதிக்கட்ட ரிசல்ட் என்று தொடர்ந்து மூன்று இதழ்களாகக் கூவுகின்றன இந்தப் பத்திரிகைகள். இறுதிக் கட்டத்துக்கு இவர்களின் அகராதியில் என்ன அர்த்தமோ!). இந்த ஜோசியத்தின் பின்னணியில் உள்ள ‘பாசம்’ பலருக்கும் நன்கு புரிந்த சமாச்சாரம்!

அடுத்த மாதம் அது வெளிச்சத்துக்கு வந்துவிடும்…!

இப்போது வெளியாகியுள்ள சர்வே முடிவுகளைப் பார்ப்போம்:

நக்கீரன் சர்வேபடி, திமுக கூட்டணி இந்தத் தேர்தலில் 140 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பெற்றுள்ளது.

கட்சி வாரியாக:

திமுக-90

காங்கிரஸ்-24

பாமக-17

விடுதலைச் சிறுத்தைகள்-4

முஸ்லிம் லீக்-3

கொங்குநாடு முன்னேற்றக் கழகம்-1

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்-1

அதிமுக கூட்டணி: 94

கட்சி வாரியாக:

அதிமுக-72

தேமுதிக-8

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-6

இந்திய கம்யூனிஸ்ட் -3

மனித நேய மக்கள் கட்சி-1

சமத்துவ மக்கள் கட்சி-1

கொங்கு இளைஞர் பேரவை-1

இனி ஜூனியர் விகடன் சர்வே:

கிட்டத்தட்ட நிலைமை தலைகீழ் என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அதிமுக அணி-141 (அதிமுக-105, தேமுதிக 17, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-11

இந்திய கம்யூனிஸ்ட் -4, மமக -3, கொங்கு இளைஞர் பேரவை-1)

திமுக அணி-92 (திமுக-67, காங்கிரஸ்-15, பாமக-7, விடுதலைச் சிறுத்தைகள்-2,

முஸ்லிம் லீக்-3, கொங்குநாடு முன்னேற்றக் கழகம்-1)

‘அம்மா வருவாங்க, வருவாங்க’ என்று ஸ்கூல் பிள்ளை கணக்காக சமீப காலமாக கூவிக் கொண்டிருக்கும் குமுதம்களை இந்த ஜோசியக் கணக்கில்கூட சேர்க்க விரும்பவில்லை!

-வினோ

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

67 Responses to “நக்கீரன் சர்வே Vs ஜூனியர் விகடன் ஜோசியம்!”
 1. Ramasubbu says:

  JUNIOR VIKADAN RESULT IS EXCELLENT

 2. ராஜ்குமார் says:

  //ராமசுப்பு//

  அதான் நீங்க கமெண்ட் போடும்போதே தெரியுதே! ஆனா உங்க ஆசையில் மண் விழ எனது வாழ்த்துகள்!! ஜூனியர் விகடன் கணிப்பு எப்போதும் பலித்ததில்லை என்பது உங்களுக்கு தெரியாமலிருப்பதற்காக எனது அனுதாபங்கள்!!!

 3. Ganesh says:

  But your words reflect that you too supporting DMK .. Why don’t you publish other English paper survey ? Most of survey shows that there is no majority for both. That is true….
  You may understand that recent M.K statements shows they are in defeat fever.
  ______

  இதில் திமுக ஆதரவு எங்கே வந்தது? நக்கீரன் Vs மற்ற பத்திரிகைகளின் கணிப்புகளுக்கு உள்ள வேறுபாட்டை சொல்லியிருக்கிறேன். ஆங்கிலப் பத்திரிகைகள் கருத்துக் கணிப்பின் லட்சணம் அறிந்த ஒன்று. அவுட்லுக் என்ற பத்திரிகை பிப் 28-ம் தேதி 626 பேரிடம் கருத்துக் கேட்டு, ஒருகணிப்பை வெளியிட்டது. அதையெல்லாமா கணக்கில் கொள்ள முடியும்?
  -வினோ

 4. Fan says:

  Vino, ungal kanippu ennae? Thanks

 5. கிரி says:

  வினோ நீங்க சொல்வது லாஜிக்காக உள்ளது. நானும் இதை நினைத்தேன்.

  யானைக்கு அடி சறுக்கலாம் என்பது போல நக்கீரனுக்கும் சறுக்கலாம் யார் கண்டா! நமது மக்களை கணிப்பது சிரமமே!

  பார்ப்போம் மே 13 நடக்கிறது என்று :-) விகடனா நக்கீரனா என்று.
  _____________

  இந்த விஷயத்தில் மட்டும் என்னால் நக்கீரனையும் விகடனையும் ஒப்பிட முடியவில்லை. காரணம், பெரிய உழைப்பு ஏதுமின்றி குத்து மதிப்பாக எழுதியிருக்கிறார்கள் ஜுவிகாரர்கள். அவர்களுக்கு இருக்கும் வசதிக்கு ஒரு விரிவான, புள்ளியியல் ரீதியிலான சர்வேயை எடுத்திருக்கலாம். சும்மா ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். பலித்தால், நாங்கதான் அப்பவே சொன்னோமே என்று கிரடிபிலிட்டி கோருவார்கள். இல்லாவிட்டால், கடைசி நேரத்தில் மாறும் என்றுதான் அப்போதே சொன்னோமே என்று ஜகா வாங்குவார்கள். இதைத்தான் இத்தனை தேர்தல்களிலும் ஜூவி கணிப்பின் முடிவாக பார்த்து வருகிறோம்.

  மற்றபடி யார் யாருக்கு வாக்களித்தாலும் நமக்கு ஒன்றுமில்லை. அரக்கர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகக் கூடாது என்ற கவலையைத் தவிர!
  -வினோ

 6. jawahar.t says:

  your words reflect that you too supporting DMK . இது முற்றிலும் தவறான கருத்து.

 7. afnan says:

  நக்கீரன் ரிசல்ட் எப்போதும் சரி ஆதலால் திமுக கூட்டணி வெற்றி nichayam

 8. Jawahar.T says:

  கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். அப்போதுதான் ஆட்சியாளர்களின் ஆணவம் அடங்கும். (அதற்காக நான் அம்மையாருக்கு சப்போர்ட் செய்யவில்லை) எல்லாம் நம் தலை விதி. நல்ல தலைமை வரும் வரை காதிருக்ககவேண்டும். நாம் நினைப்பது எல்லாமே ஏமாற்றத்தில் முடிகிறது…. இன்றைய சூழ்நிலையில் இரண்டில் யார் சின்ன திருடன் என்று பார்க்கவேண்டி உள்ளது.. நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம். இதை தவிர நமக்கு வேறு வழி இல்லை.

  அன்புடன்
  த. ஜவஹர். திருப்பூர்

 9. வெங்கடேசன், மதுரை says:

  ரஜினி ரசிகர்கள் உண்மையிலேயே மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தால், அதிமுக அல்லது அந்த குடிகாரன் கட்சிக்கு வாக்களிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். அந்த பொம்பளை ரஜினிக்கு எதிராக அத்தனை அவமானங்களையும் அரங்கேற்றியவர் என்பதை மறக்க வேண்டாம். என்வழி பலமுறை குறிப்பிட்டிருப்பதைப் போல, ரஜினியை திரையுலகின் முதல்வராக அமர்த்தி வைத்திருப்பவர் தலைவர் கலைஞர்தான்.

  அதுமட்டுமல்ல, இளைஞர்களுக்கு பைசா செலவில்லாமல் வேலை தந்த ஆட்சியும் இவருடையதுதான். மறந்துவிடாதீர்கள்.

 10. santoshji says:

  நக்கீரனின் தரம் குறித்து பலர் பலவிதமாக சொல்வார்கள். ஆனால் உண்மையை அப்பட்டமாக அவர்கள் சொல்வது சில நேரங்களில் கசப்பாகத்தான் இருக்கும். அவர்கள் எக்ஸ்க்ளூசிவ் என்ற பெயரில் கப்சா விட்டுக் கொண்டிருக்காமல் பீல்டில் இறங்கி வேலை செய்கிறார்கள். அதற்கான பலன் கிடைக்கிறது. அரசியல் என்று வரும்போது திமுக பக்கம் நிற்கிறார்கள். காரணம், கூட இருப்பவர்களுக்கே குழி வெட்டுவது ஜெயலலிதா குணம்.

  நக்கீரன் சொன்னது எப்போதுமே பலித்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் அதுவே நடக்கும். திமுக நல்ல கட்சி, நல்ல அணி என்று சொல்லவில்லை. தீமைகள் குறைந்த கட்சி. ஸ்டாலின் வந்தால் இந்த கருத்து மாறி, நல்ல கட்சி நல்ல ஆட்சி என்றே சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

  எனவே இதையெல்லாம் மனசில் வச்சு ஓட்டுப் போடுங்கப்பா.

 11. raj.s says:

  யார் ஜெய்தாலும் காங்கிரஸ் தோற்க வேண்டும்.

 12. RAJ says:

  DMK FRONT’S ADVANTAGES:

  1. GOVERNMENT SCHEMES
  2.RURAL VOTERS IN FAVOUR OF DMK ALLIANCE
  3.ALLIANCE ARITHMETIC
  4.ELECTION CAMPAIGN MANAGEMENT
  4.DEPUTY CM STALIN’S POSITIVE APPROACH
  5.ACTOR VADIVELU’S CHEMISTRY

  AIADMK FRONT’S DISADVANTAGES:

  1.PERSONAL ATTACK ON CM NOT WORKING
  2.WHIMSICAL APPROACH BY AIADMK LEADER
  3.VIJAYAKANT’S FORTUNE REVERSAL
  4.COPYING DMK’S ELECTION MANIFESTO

 13. Kumar says:

  Good survey.This survey shows that The srilankan tamil issue is not a real issue in TN day to day life politics.Seeman was not able to make impact in TN politics.

 14. kumaran says:

  நான் ஒரு தலைவர் ரசிகன் ஒட்டு போட விருப்பம் இல்லாமல் இருக்கிறேன்

 15. குமரன் says:

  ///மற்றபடி யார் யாருக்கு வாக்களித்தாலும் நமக்கு ஒன்றுமில்லை. அரக்கர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகக் கூடாது என்ற கவலையைத் தவிர!
  -வினோ//

  மிகச் சரி. இந்த இரண்டு அரக்கர்களிடமிருந்து எப்போதுதான் நமக்கு விடுதலை கிடைக்குமோ என்று ஏக்கமாக இருக்கிறது. நமது தலைவரும் மனம் வைக்க மாட்டேன் என்கிறார்.

  ///என்வழி பலமுறை குறிப்பிட்டிருப்பதைப் போல, ரஜினியை திரையுலகின் முதல்வராக அமர்த்தி வைத்திருப்பவர் தலைவர் கலைஞர்தான்.///

  தவறு. ரஜினியைத் திரையுலகின் முதல்வராக அமர்த்தி வைத்திருப்பவர் கருணாநிதி அல்ல. என்வழி அப்படி சொன்னதாக எனக்கு நினைவில்லை.

  1996 இல் கருணாநிதியை தமிழக முதல்வராக அமர்த்தியது ரஜினிதான். 2001 இல் ஜெயலலிதாவும், 2006 இல் கருணாநிதியும் முதல்வராக முடிந்தது, தலைவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதால்தான்.

  ரஜினி தேர்தலில் போட்டியிட்டால் வேறு யாரும் தமிழகத்தின் முதல்வராக ஆக முடியாது என்பதுதான் உண்மை.

 16. Raj Devar says:

  ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி ?

  அடித்துக் கொடுத்த ஆ . ராசா சிறைச்சாலையில் இருக்கும்போது , அடிக்கச் சொன்ன கருணாநிதி வெளியே இருப்பது நியாயமா ? கருணாநிதி மட்டும் அல்ல … கருணாநிதியோடு பங்கிட்டுக்கொண்ட மகள் கனிமொழியும் துணைவி ராஜாத்தியும் இருக்க வேண்டிய இடமும் , திகார் சிறைச்சாலை ​ தான்

  உலக வரலாற்றிலேயே எந்த ஜனநாயக நாட்டிலும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இவ்வளவு பெரிய தொகை கொள்ளை போனது இல்லை . இவருக்கு ஒரு கட்சி , இவ்வளவுக்கும் பிறகு ஒரு கூட்டணி . வெட்கம் இல்லாமல் கருணாநிதியின் பெயரால் வாக்குக் கேட்கிற கூட்டணிக் கட்சிக்காரர்கள் , தங்களின் சுய மரியாதையை மட்டும் அல்ல , சுரணையையும் இழந்துவிட்டார்களோ என்று ஐயுறுகின்றேன் !

  இன உணர்வுக்காகவும் மொழி உணர்வுக்காகவும் , அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி , சோனியாவுடனும் ராஜபக் ​ ஷேவுடனும் சேர்ந்து , ஈழத்தை மயானமாக்கிய ​ போதே , அந்தக் கட்சி வாழ்வதற்கான தகுதியை இழந்துவிட்டது . தமிழினம் அறிந்த மிகப் பெரிய துரோகிகளில் முதலானவர் , கோபாலபுரத்துக் கருணாநிதி . இரண்டாமவர் ஈழத்துக் கருணா . இவர்களை வரலாறு மன்னிக்காது
  !
  தமிழர்களின் உயிர்கள் மட்டும் அல்ல … தமிழ் மீனவர்களின் உயிரும் பறிபோவதற்குக் கருணாநிதிதான் காரணம் . இனத்தின் மீது அவருக்கு அக்கறை இல்லை . கருணாநிதி ஆட்சியின் எழுதப்படாதக் கொள்கை … ‘ நாட்டைச் சுரண்டுவதுதான் ’. அதனால்தான் ஆறுகளை எல்லாம்கூட கட்டாந்தரைகளாக்கிவிட்டார்கள் . இவர்கள் சுரண்டிய மணல் மீண்டும் ஊற 500 ஆண்டுகள் ஆகும் !

  சரி, ஜெயலலிதா ஊழல் செய்ய மாட்டாரா என்ற கேள்விக்கான பதில், செய்திருக்கிறார், செய்ய மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதுதான். அப்போது எதற்காக ஜெயலலிதாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு, மீண்டும் கருணாநிதி ஆட்சியை பிடித்தால், தமிழகமே இருக்காது

  ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், திமுக அரசின் ஊழல்களில் 50 சதவிகிதமாவது வெளியில் வரும். ஓரளவுக்காவது, இவர்களின் ஊழல்களுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும்.
  ஆனால், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், என்ன செய்தாலும் மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட முடியும் என்ற இறுமாப்பு, இன்னும் பல்வேறு தவறுகளை செய்யும் துணிச்சலை கருணாநிதிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கொடுக்கும்.

  “தேள் கடித்தால் உயிர் பிழைக்கலாம்…. பாம்பு கடித்தால் ?”

  அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் ,, உங்களுக்குத் தெரிந்தவர்களையும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். கருணாநிதி குடும்பத்தை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமல்ல….. சிறைக்கு அனுப்ப வேண்டியதும் நமது கடமை.

 17. kumaran says:

  தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனால் தமிழ்நாடு ஐரோப்பா போல் நிச்சியமாக உருவாகும் இது சத்யம் ஆனால் அதற்க்கு கடவுள் மனது வைக்க வேண்டும்

 18. Manoharan says:

  கருணாநிதியின் களவாணித்தனத்தை, குள்ளநரி குணத்தை வேரறுக்க ஜெயலலிதாதான் சரி. கருணாநிதியிடம் இன்னொரு முறை ஆட்சியை கொடுத்தால் நாம் வேறு ஊருக்கு போகவேண்டியதுதான். நாட்டை கெடுத்து குட்டிசுவராக்கி வைத்திருப்பவ* இவ*. அதுவும் எங்கள் ஊரில் திமுக டெப்பாசிட் வாங்காது. சாயப்பட்டறை பிரச்சனையில் ஊரை அடித்து உலையில் போட்டவ* கருணாநிதி. ஈழமக்கள் அழிய காரணமாக இருந்தவ* கருணாநிதி. அவ*க்கு ஓட்டு போடுவதை விட தூக்கு போட்டு சாகலாம். நக்கீரன் மீசையில் மண் ஓட்டும் நாள் மே 13 . அன்று இந்த கமெண்டை மறுபடியும் போடுகிறேன். வைகோவை வெளியேற்றிய கோபம் இருந்தாலும் , அதை கருணாநிதிக்கு ஆதரவாக ஆக்கக் கூடாது. அதனால் ஜெவுக்குத்தான் ஜெயம்.

 19. Ravi says:

  ” ஆனால் நக்கீரன் இப்படி எந்த கருதுகோள்களுடனும் தனது கணிப்பை வெளியிடவில்லை.”

  இது ஒன்றே போதும் இது நடுநிலையான கட்டுரை அல்ல என்பதற்கு!

  நக்கீரன் காமராஜ் திமுக திரும்ப வர வேண்டுமென்று எண்ணுவாரா இல்லையா?

  ஈழ மக்களின் இரத்தம் குடித்ததற்கும் கோடி கொள்ளையடித்ததையும் நாம் மறப்போம் மன்னிப்போம் என்றெண்ணி விட்டு விட்டால் என்ன பாடு படுத்துவார்கள் நம்மை?

  அரக்கனிடமிருந்து மீட்டு அரக்கியிடம் கொடுப்போம்!

 20. santoshji says:

  மனோகரன் என்ற அற்ப பதரே-

  நீ ஒருத்தன்தான் இந்த மாநிலத்தில் இருப்பதாக நினைப்பா? வாயை மூடு. அடிப்படை நாகரீகம் தெரியாத நீயெல்லாம் கருத்தெழுத வந்துவிட்டாய். வாய்க்கு வந்ததையெல்லாம் ஏன் இங்கே வந்து குரைக்கிறாய். கருணாநிதியை உனக்குப் பிடிக்காவிட்டால் யாருக்கும் கவலையில்லை. கருணாநிதி மீண்டும் வருவார். நக்கீரன் மீசையில் மண் ஒட்டுகிறதோ இல்லையோ, உன் முகத்தில் சாணி அப்பப் போகிறது. மவனே அப்போது உன் முகத்தை யாருடைய _____-ல் வைத்துக் கொள்ளப் போகிறாய்?

  வந்துட்டான் பெரிய ____கியாட்டம் கமெண்ட் போட.. நீயெல்லாம் ஒரு ரஜினி ரசிகன். வெக்கமாயில்ல. நாகரீகமா எழுதத் துப்பில்லன்னா மூடிக்கிட்டு போயேன்!

 21. வெங்கடேஷ், மதுரை says:

  //Manoharan says://

  மனோகரன் யு have disappointed us எ lot . திஸ் is not தி வே யு show your wrath on karunanidhi.

  நிச்சயம் கருணாநிதியின் திமுக கூட்டணிதான் வெல்லும். அது உறுதி. திருப்பூர் என்பது தமிழகத்தின் அளவுகோல் அல்ல.

  அதிமுக கூட்டணி, குடிகாரர் விஜயகாந்த் கூட்டணி தோற்கட்டும். இப்போதுள்ள அரக்கனே நமக்குப் போதும். இதை விட மோசமான அரக்கி ஜெயலலிதா வேண்டாம்.

  பிரபாகரன் இப்போது இருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பார்.

  மனோகரன்- மைன்ட் யுவர் வேர்ட்ஸ்!

 22. மிஸ்டர் பாவலன் says:

  1 ) கருணாநிதி == குடும்ப நலனையே கவனிப்பவர்
  2 ) ஜெயலலிதா = சசிகலா குடும்ப ஆதிக்கம்
  3 ) வை.கோ. = சவுண்ட் பார்ட்டி (நாஞ்சில் சம்பத் = நாக்கில் சனி)
  4 ) கேப்டன் = குவார்ட்டர், ஆப் பார்ட்டி
  5 ) தாசு = வெத்து வேட்டு

  இதில் – கருணாநிதி வெற்றி பெற ஒரு கூட்டமே இங்கு
  எழுதுகிறது.

  மாற்றம் விரும்புவோருக்கு ஒரே வழி == பச்சை மேடம்

  பச்சை நிறமே பச்சை நிறமே !
  இரட்டை இலை நிறமும் பச்சை நிறமே !
  உங்கள் ராசி பச்சை நிறமே !
  எங்கள் ஓட்டும் பச்சை நிறமே!

  பச்சை அம்மா வாழ்க !
  தங்க தாரகை ஆட்சி மீண்டும் மலர்க !

  -மிஸ்டர் பாவலன்

 23. வெங்கடேஷ், மதுரை says:

  திரு மனோகரன்-
  சாயப்பட்டரைகளின் கழிவு எவ்வளவு பெரிய பிரச்சினை. ஏன் இந்த விஷயத்தில் ஆலை அதிபர்கள் ஒத்துழைப்பதில்லை? முடிந்தவரை அரசையும் கோர்ட்டையும் ஏமாற்றத்தானே பார்க்கிறார்கள். அந்த பகுதியே வளமிழந்து நச்சாகிவிட்டதே. ஒரு அணையே நாசமாகிவிட்டதே. அரசை குறை சொல்லும் முன் உங்கள் பக்க நியாய தர்மம் பார்க்க மாட்டீர்களா? சாயப்பட்டறைகள் ஐகோர்ட் மூட உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் கெடாமல் மாற்றுத் திட்டங்களை நீங்கள் முன்வைப்பதுதானே!

  அதிமுக கோட்டை என்பதால் திருப்பூரை கவனிக்காமல் விட்டு விட்டனர் என்று அதிமுக காரர்கள் கூப்பாடு போடுகிறார்களே, சாயப்பட்டறைகள் வந்தது இன்று நேற்றா? அதிமுக காலத்தி்ல இல்லையா? கழிவு கடலில் கலக்கும் திட்டம் வேண்டும் என்று இதுவரை கலைஞரையோ,அல்லது தமிழக அரசையோ குரல் உயர்த்தியோ,பணிந்தோ யாரும் கேட்கவில்லையே. ஏமாற்றுவதிலேயே குறியாக இருந்தால் இப்படித்தான் நடக்கும்.

 24. envazhi says:

  நண்பர்கள் மனோகரன், சந்தோஷ்ஜி..

  உங்கள் எதிர்ப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை வலிமையான வார்த்தைகளில் காட்டுங்கள். வசவாக காட்ட வேண்டாம். தலைவரும் பார்க்கும் தளம் இது என்பது நினைவிருக்கட்டும். உங்கள் இருவரது கருத்தையும் நீக்கவே நான் விரும்புகிறேன். ஆனால் உங்கள் கருத்து சுதந்திரத்தை மதித்து அனுமதித்துள்ளேன். கருணாநிதி ஒரு மாநிலத்தின் முதல்வர். சைபர் சட்டப்படி இதுபோன்ற வன்மையான வார்த்தைகளைப் பிரயோகிப்பது தண்டனைக்குரியது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

  -ஆசிரியர்

 25. kannan says:

  all books wants number of sales only its their business so we don’t fight with each other in our area result on the basis of nakkeeran many results changed

 26. diamond says:

  தி.மு.க. ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்..?

  நாளைய தினம், நம் தலையெழுத்தை மாற்றப் போகும் நாள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளையர் கூட்டம் நமது சொத்துக்களைக் கொள்ளையடிக்க நம்மிடமே அனுமதி பெறும் நாள். இதுவரை பட்டது போதும். இனிமேலாவது விழித்துக் கொள்வோம்..
  தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி வீட்டுக்குப் போயாக வேண்டும். அடித்துத் துரத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை..!
  அதற்கான காரணங்களாக எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  1. ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. செய்த துரோகம்

  டெசோ மாநாடு நடத்தினோம். அகில இந்திய அளவில் ஈழத் தமிழர் பிரச்சினையை கொண்டு சென்றோம் என்ற தி.மு.க. கட்சியினரின் கூச்சலெல்லாம் கடந்த காலத்தோடு முடிவுற்றுப் போனது..

  இறுதி யுத்தம் என்று ராஜபக்சேவால் அறிவிக்கப்பட்டு இந்திய கைக்கூலி அரசின் ஆயுத உதவியால் லட்சணக்கணக்கான தமிழ் மக்கள் ஒதுங்க இடம் கிடைக்காமல் ஒரு நாள் இரவு நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாமல் ஊர் விட்டு ஊராக ஓடிக் கொண்டிருக்கும்போது தமிழர்களுக்கெல்லாம் தலைவன் நானே என்று தன்னைத்தானே பீத்திக் கொண்ட இந்த உத்தமர், என்ன செய்தார்..?

  ஆயுதம் கொடுப்பது இந்தியா. உலகச் சமுதாயம் இதில் தலையிடாமல் இலங்கையைக் காப்பது இந்தியா. ஐ.நா. சபைக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவிடாமல் தடுப்பது இந்தியா என்று அத்தனை படுகொலைகளுக்கும் முழு முதற்காரணமான அன்றைய மத்திய அரசுக்கு முட்டுக் கொடுத்து தனது கட்சி எம்.பி.க்களின் ஆதரவினால் ஆட்சி நடத்த உதவிய இந்தக் கருணாநிதி கயவனில்லையா..?

  புலிகள் தொடர்பான கருத்து வேறுபாட்டை பற்றிப் பிரச்சாரம் செய்ய இதுவா நேரம்..? அங்கே முள்ளிவாய்க்காலில் குடிப்பதற்கு பால்கூட இல்லாமல் குழந்தைகள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தபோது இந்த அருந்தவத் தமிழ்த் தலைவரின் புத்திரர்களும், வாரிசுகளும் நீரா ராடியாவுடன் “எனக்குத்தான் மந்திரி பதவி.. இல்லை.. இல்லை.. எனக்குத்தான் மந்திரி பதவி..” என்று பதவி ஆசை உரையாடலில் திளைத்திருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள்தானா..?

  தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு எத்தனை மந்திரி பதவி வேண்டும். எந்தெந்த இலாகாக்கள் வேண்டும் என்பதற்காக இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியில் போய் பிச்சையெடுக்கத் தெரிந்த இந்தத் தரித்திரத் தலைவருக்கு ஈழத் தமிழன் கொல்லப்படுகிறான் என்றவுடன் டெல்லியுடன் பேச முடியவில்லை.. அவர்களுக்கு நெருக்கடி கொடு்க்க முடியவில்லை. தான் கொடுத்திருக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் தனது சீமந்தபுத்திரனுக்கு அமைச்சர் பதவி தராமல் போனால் நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம். வெளியேறுவோம் என்று மட்டும் சொல்லத் தெரிகிறது.

  ஆக.. இவருக்கு தன் குடும்பம், சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் மட்டுமே முக்கியம். அவர்களுக்காகத்தான் ஆட்சி, அதிகாரத்தைப் பெற விரும்புகிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..! போதுமே.. இவரை வைத்துக் கொண்டு இனிமேல் நம்மால் கக்கூஸ்கூட கழுவ முடியாது. வீட்டுக்கே அனுப்பி ரெஸ்ட் எடுக்க வைப்போம்..! இந்த ஒரு காரணத்துக்காவே இந்த ஆட்சி தொலைய வேண்டியதுதான்..!

  2. ரவுடித்தனம் செய்த அமைச்சர்கள்..!

  சமூகத்தில் ரவுடித்தனம் செய்பவர்களைத் தடுக்க வேண்டிய அரசு நிர்வாகமே ரவுடித்தனம் செய்தால் என்னவென்று சொல்வது..?

  தான் கொள்ளையடிக்க நினைத்த சொத்தை தராத ஒரே காரணத்துக்காக அந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளரை பொய் வழக்கில் சிக்க வைத்து, ஜெயிலுக்கு அனுப்பி வைத்து… இரவோடு இரவாக புல்டோசரை வைத்து அந்த இடத்தையே தரைமட்டமாக்கிய ஒரு மாபெரும் ரவுடியே இந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தால் அது எவ்வளவு பெரிய கொடுமை..!

  அது மட்டுமா..? தன்னை எதிர்த்து பத்திரிகைகளிடம் பேட்டி கொடுத்ததற்காகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காகவும் அந்த நிலத்தின் உரிமையாளரின் மகனை நட்ட நடு இரவில் தனது வீட்டுக்கு எதிரே பகிரங்கமாக கட்டி வைத்து சவுக்கால் அடித்திருக்கும் கொடுமையைச் செய்திருப்பதும் அதே அமைச்சர்தான்..!

  என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..? ராஜாவின் அமைச்சர் பதவியைப் பறித்தார்கள். கண் துடைப்புக்காக சிறையில் அடைத்தார்கள். மிக, மிக விரைவாக இந்த வழக்கை நடத்தி முடித்தார்கள். சாட்சி சொல்ல ஒருவர்கூட இல்லாத நிலையில் அந்த வழக்கு தள்ளுபடியானது. அந்தத் தாக்கப்பட்ட தமிழரின் உடலில் இன்னமும் இருக்கும் வரி, வரியான கோடுகள்தான் இந்த உத்தமச்சோழனின் பரம்பரையின் லட்சணத்தை படம் பிடித்துக் காட்டுகிறது..

  இதைக் கேள்விப்படும்போது நம் மனசு கொதிக்கிறது..! யாரோ ஒரு பதிவர் வார்த்தைகளால் திட்டிவிட்டாரே என்றபோதே ஆள், அம்பு, படையணி திரட்டி ஒரு வாரத்திற்கு அவர் மீது சொல்லம்பு தொடுக்கும் வலையுகப் பதிவர்கள் கொஞ்சம் இதைப் பற்றி ஒரு நிமிடமாவது யோசித்துப் பாருங்கள்..!

  இதுபோல் நம்மில் யாருக்காவது.. நமது உடன்பிறந்தாருக்கு நேர்ந்திருந்தால் நமக்கு எந்த அளவுக்கு ரத்தம் கொதித்திருக்கும்.? ஆனாலும் இந்த ஆட்சியை ஆதரிக்க நம்மில் சிலருக்கு எப்படி மனம் வருகிறது என்றே தெரியவில்லை..! இதோடு விட்டார்களா இந்தக் கயவர்கள்..?

  இதே ரவுடி அமைச்சருக்கு மீண்டும் தேர்தலில் நிற்க சீட் கொடுத்து நிற்க வைத்து “இவரையும் ஜெயிக்க வையுங்கள்” வெட்கமில்லாமல் நம்மிடமே வந்து கேட்கிறார்கள். இப்படி கேட்கும் அளவுக்கு இந்த ஆட்சியாளர்களுக்கு தைரியம் இருக்கிறது என்றால் மக்களாகிய நம்மை எந்த அளவுக்கு இவர்கள் எடை போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது..!

  இவருக்குப் போட்டியாக சேலம் மாவட்டத்து குறுநில மன்னரான வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், ஒருவரின் குடும்பச் சொத்தை அபகரிக்க வேண்டி அந்தக் குடும்பம் மொத்தத்தையும் ஆள் வைத்து கொலை செய்திருக்கிறார். அந்தக் குற்றத்தை இவர்தான் செய்திருக்கிறார் இன்று இன்றைய ஆட்சியின் காவல்துறையே கைது செய்கிறது. அந்தக் கைது செய்யப்பட்டவனையே அமைச்சராக இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம் சிறைக்குச் சென்று பார்க்கிறார்..! போதுமே.. இந்த வழக்கு என்னாகும் என்று இப்போதே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..!

  இவர்கள் நம் மீது காட்டும் இந்த மரியாதைக்கு நாம் பதில் மரியாதையை செய்ய வேண்டாமா..? தயவு செய்து இவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்..!

  3. ஸ்பெக்ட்ரம் மகா ஊழல்

  இனிமேல் இதுபோன்ற ஊழலை உலகத்திலேயே யாருமே செய்ய முடியாது என்று உலக அரசியல்வியாதிகளே சொல்கின்ற அளவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்திருக்கும் இவர்களை எந்த விளக்கமாற்றை வைத்து அடிப்பது..!

  அந்த ஊழல் பணம் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பும், இவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நம்மிடம் ஓட்டுக் கேட்க வருகிறார்கள்..?

  நாம் எப்படி இவர்களை அனுமதிப்பது..? நம் அனுமதி பெற்றே இந்தக் கொள்ளையை இவர்கள் செய்திருக்கிறார்கள் என்னும்போது அடுத்த முறை தேர்வு செய்யும்போது நாம் கவனமாக இருக்க வேண்டாமா? ஆகவே தோழர்களே.. தயவு செய்து இந்தக் கூட்டணியை ஒதுக்கித் தள்ளுங்கள்..!

  4. ஆட்சி நிர்வாகம் செய்த லட்சணம்..!

  நடக்கவே முடியாத முதலமைச்சரை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தினால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு உதாரணத்தையும் கருணாநிதிதான் செய்து காட்டியிருக்கிறார்.

  அவருடைய கட்சி உறுப்பினரான ஒரு நகர மன்றத் தலைவர் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டிருக்கிறார். மாநிலத்தின் முதல்வரான இவருக்கு அந்தத் தகவல் மாலைவரை சொல்லப்படவில்லை. மாலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட பின்பு ஆச்சரியத்துடன் “அப்படியா..?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்கிறார்.. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தினால் வெளங்குமா..?

  முதல் அமைச்சரின் குடும்பச் சண்டை பகிரங்கமாக வெடித்தது. இதனால் அப்பாவிகள் 3 பேரின் உயிர்கள் பிரிந்தன. அந்தக் கொலைகாரர்களை அப்பட்டமாக வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தும், அந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியடையச் செய்யும் அளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து முடித்து தனது மகனை காப்பாற்றிக் கொண்ட இந்த ராஜராஜசோழனை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா..? அந்த வழக்கில் இறந்து போன அப்பாவிகளுக்கு என்னதான் பதில்..?

  முத்துக்குமார் என்னும் வீர இளைஞன் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான். அந்த இளைஞனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் தான் பெற்றெடுத்த ரவுடி மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அறிக்கை வெளியிட்ட இந்த மகா உத்தமத் தலைவனை தமிழகம் பெற்றெடுத்ததற்கு நாம் நிச்சயமாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..!
  பிரபாகரன் என்னும் ஒரு தமிழரின் தாயார்.. 80 வயது மூதாட்டி. பெயர் பார்வதியம்மாள். சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார். படுத்தப் படு்க்கையாகக் கிடக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுமாம்..! அதனால் அவரை அப்படியே திருப்பியனுப்பிவிட்டார் இந்த மனுநீதிச் சோழன்.

  இதாவது பரவாயில்லை. இதற்காக அவர் சொன்ன விளக்கங்கள்தான் மகா கொடுமை. முதலில் “எனக்குத் தெரியாது..” என்றார். பின்பு “அந்த அம்மையாரை திருப்பி அனுப்பிய பின்புதான் என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது..” என்றார். மீண்டும் வேறொரு அறிக்கையில் “அந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால்தான் காவல்துறையினர் அனுப்பப்பட்டார்கள். ஆனால் இதுவும் எனக்குத் தெரியாது. நான் தூங்கிவிட்டேன்..” என்று அண்டப்புளுகு புளுகினார்.

  இவர் எதுக்காக முதல் அமைச்சர் பதவியில் உட்கார்ந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்..!? வீட்டில் ஓய்வெடுத்து தூங்கலாமே..? யார் வேண்டாம் என்று மறுத்தது..?

  தன் கண்ணெதிரே தமிழகத்து வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் நான் பேசினேன் என்று தைரியமாக இவருடைய வாய் சொல்கிறது என்றால் எவ்வளவு தைரியம் இவருக்கு..? அதைப் பார்த்தவர்களும், செய்தியைக் கேட்பவர்களும் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றுதானே இவர் நினைத்திருக்கிறார்..!? இந்த மனிதரை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டாமா..!?

  சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை கை கட்டி வேடிக்கை பார்த்தது இவருடைய காவல்துறைதான். ஆள் மாற்றி ஆள் கை காட்டி இப்போது கோர்ட்டின் நடவடிக்கையில்தான் உண்மைகளே வெளி வருகிறது. இவருடைய ஆட்சியின் லட்சணம் இதிலிருந்தும் தெரிகிறது..! கேட்டால் இந்தியாவிலேயே இவர்தான் ஆட்சி நடத்துவதில் சிறந்தவராம்..! தூக்குப் போட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறது..!

  உயர்நீதிமன்றத்தி்ல் வழக்கறிஞர்கள், காவல்துறையினருக்கு இடையில் மோதல்.. மீண்டும் ஒரு அமளி.. நிலைமையைக் கட்டுக்குள் அடக்க வேண்டிய வழி வகைகளை ஆராய வேண்டிய இவரோ சாவகாசமாக வீட்டில் அமர்ந்து லைவ் ரிலே பார்த்துக் கொண்டிருக்கிறார்..!

  இவருடைய வீட்டில் ஒரே ஒரு நாள் காவல்துறை புகுந்ததற்காக எத்தனை, எத்தனை ஒப்பாரிகளையும், கூச்சல்களையும் கிளப்பினார் இவர்..? அப்போது மற்றவர்களை இவர் என்னவென்று நினைக்கிறார்..? இவர் முதல்வராக இருக்க வேண்டுமென்று இங்கே யார் அழுதது..?

  இங்கே நான் கேள்விப்பட்ட, படித்த இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் தோழர்களே..!

  உலகத்தின் 214-வது பணக்காரர் சிவ்நாடார். மொத்தச் சொத்துக்கள் 4 பில்லியன்.. HCL நிறுவனத்தின் தலைவர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. தினத்தந்தியின் நிறுவனர் அமரர் ஆதித்தனாரின் உடன் பிறந்த அக்காளி்ன் மகன். நடிகர் சரத்குமாரின் சொந்த அத்தை மகன். பிரபல தமிழ்ப் பெண் எழுத்தாளர் ரமணி சந்திரனின் உடன்பிறந்த தம்பி..!

  இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இவர் மூலமாக சிவ்நாடாருக்கு ஒரு மகன் உண்டு. ஏதோ ஒரு காரணத்தினால் இந்த மனைவியை விலக்கிவிட பெரும் முயற்சி செய்தார் சிவ்நாடார். முடியவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டார் அவரது மனைவி.

  மனைவியுடன் சமரசமாக போக முயற்சி செய்தார். முடியாமல் போக இப்போதைய ஆட்சியாளர்களை அணுகினார். கொடுக்க வேண்டியதை கொடுத்திருக்கிறார். உத்தரவுகள் பறந்தன. அந்த 2-வது மனைவி மீது அதிரடியாக ஒரு வழக்கு பாய்ந்தது. என்ன வழக்கு தெரியுமா..? பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக..! இது எப்படியிருக்கு..? 4 பில்லியன் சொத்துள்ள ஒருவரின் மனைவி கத்தியைக் காட்டி வழிப்பறி செய்தாராம்.. அப்படியே அவரைக் கொத்தாகத் தூக்கிச் சென்று சிறையில் அடைத்தார்கள். இது போன்ற கொடுமைகளை பிரிட்டிஷ்காரர்கள்கூட செய்திருக்க மாட்டார்கள்..!

  அந்த மனைவி வெளியில் வர வேண்டுமெனில் பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்ல வேண்டும் என்றார்கள். அந்தப் பெண்ணும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள.. பணம் கை மாறியது.. வழக்கும் கைவிடப்பட்டது. திருமண ஒப்பந்தம் முறிந்து போன சந்தோஷத்தில் சிவ்நாடார் விமானமேறினார். அவரது முன்னாள் மனைவிக்குக் கொடுக்கப்பட்டதில் பாதியை ஆட்சியில் இருந்தவர்களும், ஏற்பாடு செய்த உளவுத்துறையின் மூத்த அதிகாரியொருவரும் பங்கு போட்டுக் கொள்ள.. கணவர் கொடுத்தப் பணத்தில் பாதிதான் மனைவிக்கு நஷ்ட ஈடாகக் கிடைத்தது.

  எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவரை, பத்திரிகையாளர்களுடன் பேச விடாமல் செய்ததில் அந்த மூத்த உளவுத்துறை அதிகாரிக்கு பெரும் பங்குண்டு. இந்த ஆட்சி போன பின்பு இந்த விவகாரம் வெளிவரும் என்று நினைக்கிறேன்..!

  ஆட்சி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த மாட்டேன் என்றெல்லாம் பொய் சொல்லி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட இந்த முதலமைச்சரும், அமைச்சரவை சகாக்களும் இது போன்ற எத்தனை, எத்தனை குற்றங்களைச் செய்கிறார்கள்.. செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு நன்கு தெரியும்..! இவர்களை ச்சும்மா விட்டு வைக்கலாமா..? வாய்ப்பு நாளை மறுநாள் வந்திருக்கிறது.. விட்டுவிடாதீர்கள் தோழர்களே..!

  இது மட்டுமல்ல.. விலைவாசி உயர்வு, மின் வெட்டு என்ற இரண்டு பூதங்களையும் வளர்த்துவிட்டதில் இவர்களுக்கும் பங்குண்டு..!

  யார் ஆட்சி செய்தாலும் விலைவாசி உயரத்தான் செய்யும் என்பார்கள் சிலர்..! ஆனால் பெட்ரோல், டீசலின் விலையை தன்னிச்சையாக அந்த நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றியது இந்தத் தர்மதுரையின் கட்சியின் முழு ஆதரவைப் பெற்றிருக்கும் மத்திய ஆட்சிதான்.

  ஒரே மாதத்தில் 2 முறைகள் ஏற்றப்பட்டு நிமிடத்துக்கு நிமிடம் காய்கறிகளின் விலையை உச்சத்தைத் தொட காரணகர்த்தாகவாக இருந்து தொலைந்திருக்கும் இந்தக் கயவர்களைத் தண்டிக்க வேண்டாமா..?

  இந்த ஐந்தாண்டு காலத்தில் அத்தனை அமைச்சர்களும் சொல்லி வைத்தாற்போல் தங்களது சொத்துக்களை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் அதேபோல் மாநிலத்தின் அத்தியாவசியத் தேவையான மின் சப்ளையை பல மடங்கு உயர்த்தாமல்.. அதற்கான வழிமுறைகளைக் கண்டறியக்கூட மனமில்லாமல் இருந்திருக்கும் இந்த திறமையில்லாதவர்கள் எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும்..?

  தங்களுடைய சொத்து மதிப்புகளை மட்டும் உயர்த்தத் தெரிந்த இவர்களுக்கு மாநிலத்திற்கு மிகத் தேவையான மின் உற்பத்தியை பெருக்கத் தெரிய வேண்டாமா..? எல்லாவற்றிலும் கமிஷன் அடித்தே பழகித் தொலைத்திருக்கும் இவர்களால் கமிஷனைத் தாண்டி எதையும் செய்ய முடியாமையே இதற்குக் காரணம் என்று கோட்டை வட்டாரத்தில் தெளிவாகவே பேசுகிறார்கள். இந்தத் திருடர்கள் நமக்குத் தேவைதானா..?

  கடைசியாக மீனவர்கள் பிரச்சினை..! மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கிறார்கள். அப்படிச் செல்ல வேண்டாம் என்று கூப்பாடு போடும் மத்திய அரசும், தமிழக அரசும், எல்லை தாண்டிப் போய்விடும் நம் தமிழகத்து அப்பாவி மீனவர்களை பங்களாதேஷும், பரமவைரி பாகிஸ்தானும் துப்பாக்கியால் சுடாமல் பத்திரமாகத் திருப்பியனுப்புவதை அறிவார்களா..?

  சுண்டைக்காய் பயலாட்டம், ஒண்ணுக்கடித்தாலே வரைந்துவிடும் அளவுக்கு சின்ன நாடாக இருக்கும் இந்த இலங்கைக்கு எத்தனை தைரியம் இருந்தால் இத்தனை தமிழர்களை கொன்று குவித்திருப்பார்கள்..? ஒன்றா இரண்டா..? இதுவரையில் 550-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கேட்பார் உண்டா..?

  இந்தியாவில் இருந்து அத்தனையையும் இறக்குமதி செய்து கொண்டு, நாம் போடும் பிச்சைக் காசில் உட்கார்ந்து சாப்பிடும் அந்த நாட்டு கொழுப்பெடுத்த ராணுவத்திற்கு தமிழன் என்றாலே இளக்காரமாகப் போகிறதே..? இதற்கென்ன காரணம்..? கேள்வியே கேட்காத, கேட்க விரும்பாத, மத்திய அரசும், தமிழக அரசும்தானே..!

  மத்திய அரசுதான் இதற்கு பொறுப்பு என்றால், அந்த அரசுக்கு நீங்கள் ஏன் ஆதரவு கொடுக்கிறீர்கள்..? உங்களது கட்சிக்காரர்கள் ஏன் வெட்கமில்லாமல் மந்திரி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்..?

  இதே தமிழன் ஓட்டுப் போட்டு உன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியதால்தானே உங்களது மனைவி, துணைவியுடன் மக்கள் பணத்திலேயே விமானத்தில் ஊர், ஊராகச் சுற்றுகிறீர்கள்..? உங்க அப்பன் வீட்டுக் காசுலயா போறீங்க..? துரோகிகளா..!

  அன்பு பதிவர்களே..! வாசகர்களே..! பொதுமக்களே..! இவர்கள் இருந்தென்ன? போயென்ன..? நாட்டு மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத இந்தக் கோழைகளை ஆட்சிக் கட்டிலில் ஒரு நிமிடம்கூட இனியும் உட்கார வைக்கக் கூடாது..! வீட்டுக்கு அனுப்பி வைப்போம். வாருங்கள்..!

  சரி.. தி.மு.க. வேண்டாம். அப்படியானால் இந்தக் கூட்டணி..? கூட்டணி வேறு இவர்கள் வேறா..? இந்தக் கூட்டணியே வேண்டாம். இவர்களுடன் கூட்டணி வைத்த பாவத்திற்காக அவர்களுக்கான தண்டனையை அவர்களும் அனுபவிக்கத்தான் வேண்டும்.

  அதிலும் இந்தக் கூட்டணியின் பிரதான அங்கமாக இருக்கும் காங்கிரஸை ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவிடாமல் செய்தால்தான், முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த நமது தமிழர்களின் ஆன்மா சாந்தியாகும்..!

  இந்தப் பக்கமும் பேசுவோம்.. அந்தப் பக்கமும் பேசுவோம் என்ற நினைப்பில், “ஏய் இந்திய அரசே..” என்று ஏதோ அமெரிக்க ஒபாமாதான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துகிறார்போல் கூச்சலிடும் திருமாளவன், அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இத்தாலியம்மாவுடன் ஒரே மேடையில் காட்சி தந்து அந்தம்மாவுக்கும் சல்யூட் அடித்து தன்னை கொடுந்தமிழனாகக் காட்சி தருகிறார். இவரையும் சேர்வார் சேர்க்கை சரியில்லை என்கிற காரணத்திற்காகத் தண்டிக்கத்தான் வேண்டும்.

  இந்தக் கூட்டணி வேண்டாம் என்றால் வேறு எவருக்கு..?

  எதிரில் நிற்பது ஜெயலலிதாவின் அதிமுக கூட்டணி. இவர்கள் இல்லாமல் இந்திய ஜனநாயகக் கட்சி, மற்றும் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் சுயேச்சைகள் என்று பல பிரிவினரும் நிற்கிறார்கள்..!

  என்னுடைய முதல் சாய்ஸ்.. இரண்டு கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றாக வேண்டும். ஏழை, எளிய மக்களுக்காக இன்றளவும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கூட்டணி தர்மத்தைக்கூட பொருட்படு்த்தாமல் பேசக் கூடிய தலைவர்கள் கம்யூனிஸ இயக்கத் தலைவர்கள்தான்.

  ஆகவே இந்த கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களை நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்குப் போடுகின்ற ஓட்டு நிச்சயம் வீண் போகாது..!

  மீதம் இருக்கின்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியைத் தவிர மற்றவர்களில் உங்களது தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள்..? யார் வந்தால் உங்களால் அவர்களை எளிதாக அணுகமுடியும்..? யார் சம்பாதிக்க நினைக்காமல் இருக்கிறார்கள்.? என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்..! அதுவே போதும்..!

  இறுதியில் குழப்பங்கள் வரலாம். வரட்டும்.. தி.மு.க. கூட்டணியை முதலிலேயே முற்றாக வெளியேற்றிவிட்டதால் அடுத்து இருப்பவர்களில் ஒருமித்தக் கருத்து கொண்டவர்கள் தங்களுக்குத் தாங்களே விலங்கு போட்டுக் கொண்டு குறைந்தபட்சம் ஒரு நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டுமே என்கிற பய உணர்வோடு ஆட்சி நடத்த முன் வருவார்கள் என்று நம்புகிறேன்..!

  என் இனிய தோழர்களே..! இந்த முறையும் தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள்..!

  தி.மு.க. கூட்டணியை முற்றாகப் புறக்கணித்து இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுத்து ஒளி பாய்ச்சுங்கள்..!

 27. RAJINI RASIKAN says:

  மாற்றம்.. மாற்றம்.. மாற்றம்.. வேண்டும்.

  தங்கத் தாரகையே வருக. தரமான ஆட்சி தருக.

 28. Elango says:

  //உங்கள் எதிர்ப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை வலிமையான வார்த்தைகளில் காட்டுங்கள். வசவாக காட்ட வேண்டாம்//
  very good points vino. if you are a supporter of Jaya, give the positive points abt her and talk why she is better than karunanidhi. same for DMK supporters. but dont do a cheap personnel attacks.
  I am a DMK supporter, but during 2009 parliment election i was so upset with karuna on ealam and supported admk. but now i realised that noone in tamilnadu except VAIKO is real heartly supporting ealam. everybody else is just using ealam issues for votes. infact karuna is better than jaya and vijayakanth. also if i compare the governance of DMK and ADMK. DMK always comes no.1 in terms of education/industrial growth etc etc.
  so i support for DMK again .

 29. unmai says:

  ஹலோ வினோ,

  நக்கிரன பத்தி இங்க படிங்க உண்மை புரியும். :) :) :)

  http://www.**********4-43.html
  _____________________

  தயவுசெய்து இந்த மாதிரி சுட்டிகளை நமது தளத்தில் தர வேண்டாம். நக்கீரன் யார், மற்ற பத்திரிகைகள் எப்படி என்று நமக்கும் தெரியும்!

  -வினோ

 30. Bala says:

  ஈழப் போரில் கருணா குடும்பத்தின் சாட்சியம்

  செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011 10:௦௩

  வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு இதழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

  வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு இதழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

  இறுதிப் போரில் மக்களைப் பாதுகாப்பதற்காக எத்தகையை அர்ப்பணிப்புக்களைப் புரிவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருந்தார்கள் என்பதையும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாகப் பொய்யுரைத்து சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உறுதுணை புரிந்த அரசியல்வாதிகள், பரப்புரையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் மறுமுகத்தை வெளிக்கொணர்வதே இத்தொடர் கட்டுரைகளின் நோக்காகும். இதில் வெளிக்கொணரப்படும் உண்மைகளை நிரூபிக்கும் சில கடிதங்களையும் வெளியிடுவதற்கு நாம் முடிவு செய்துள்ளோம். இதுவரை காலமும் மிகவும் அந்தரங்கமான முறையில் பேணப்பட்டு வந்த இக்கடிதங்களை, காலத்தின் தேவை கருதி இப்பொழுது நாம் வெளிக்கொணர்கின்றோம்.

  இந்த வகையில் இவ்வாரத்திற்கான கட்டுரையில், போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி மக்களின் துயர்துடைக்கும் நோக்கத்துடன் ஒரேயொரு நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடனும், அவரது புதல்வி கனிமொழியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தொடர்பாடல்களைப் பதிவு செய்கின்றோம்.

  . . .

  2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்: வன்னி மேற்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைகள், கிளிநொச்சியை மையப்படுத்தித் தமது வலிந்த தாக்குதல்களை உக்கிரப்படுத்தியிருந்தன. யுத்த விமானங்கள், ஆட்லறி எறிகணைகள், பல்குழல் பீரங்கிக் கணைகள் சகிதம் கிளிநொச்சியையும், அதனை அண்டிய ஏனைய மக்கள் குடியிருப்புக்களையும் இலக்கு வைத்து சிங்களப் படைகள் நிகழ்த்தி வந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் நாள்தோறும் தமிழ் உயிர்கள் நரபலி வேட்டையாடப்பட்டு வந்தன.

  மக்களின் இழப்புக்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழிக் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும், தமிழக மக்களிடையே கொந்தளிப்பான சூழலை தோற்றுவித்திருந்தது. இதற்கு ஏறத்தாள ஒரு மாதத்திற்கு முன்னர் 2008 செப்ரம்பர் மாதம் 9ஆம் நாளன்று வவுனியாவில் சிங்களப் படைகளின் கட்டளைப்பீடம் மீது கரும்புலிகளும், வான்புலிகளும் இணைந்து நிகழ்த்திய தாக்குதலில் இந்தியப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்தமை, தமிழின அழிப்பில் இந்தியா உடந்தையாக இருப்பதைப் பட்டவர்த்தனமாக்கியிருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் மக்களின் தார்மீகக் குரல் ஓங்கியொலிக்கத் தொடங்கியிருந்தது.

  ஏறத்தாள ஏழு மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகள் கலைஞர் கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தைத் தோற்றுவித்திருந்தன. காங்கிரஸ் கூட்டணியின் அச்சாணி என்று சோனியா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கருணாநிதியின் அரசியல் எதிர்காலம்கூட ஒருவகையில் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகளால் கேள்விக்குறியாகும் அபாயமும் மேலோங்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையிலேயே போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நாடகம் ஒன்றை கருணாநிதி கனக்கச்சிதமாக அரங்கேற்றத் தொடங்கியிருந்தார்.

  டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நிகழ்த்துதல், மனிதச் சங்கிலிப் பேரணிகளை முன்னெடுத்தல் என்று நீண்டு விரிந்து செல்லத் தொடங்கிய கருணாநிதியின் போர்நிறுத்த நாடகம், ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாளன்று இந்திய மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கும் காட்சியாகக் கட்டவிழத் தொடங்கியது. இதன்படி பதினான்கு நாட்களில் ஈழத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகம்-புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு பதவி விலகுவார்கள் என்று கருணாநிதி அறிவித்திருந்தார்.

  இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

  இந்த வகையில் கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பும், ஜெயலலிதாவின் தன்னாட்சியுரிமை அறிக்கையும் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் தொடர்பான ஓரளவு நம்பிக்கையை வன்னி மக்களிடையே ஏற்படுத்தியிருந்தன. தமிழகத்தின் கட்சி அரசியலில் எந்தவொரு காலகட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையிடாத பொழுதும்கூட, ஈழத்தமிழர்களின் நலன்களில் ஒத்திசைவான சமிக்ஞைகளை ஏககாலத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெளியிட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை ஒரு ஆரோக்கியமான விடயமாகவே பார்க்கப்பட்டது.

  தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்விதமான தொடர்புகளையும் தாம் பேணுவதில்லை என்ற தோற்றப்பாட்டை கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும், ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊடகங்களில் காண்பித்து வந்த பொழுதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் காலம்காலமாக உறுதுணையாக நிற்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாக, பின்கதவுத் தொடர்புகளை இவர்கள் பேணியே வந்திருந்தனர்.

  இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பின்கதவுத் தொடர்பாடல்களை 2006ஆம் ஆண்டிலிருந்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாகக் கருணாநிதி பேணி வந்திருந்தார். கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் தொடர்பாக ஏறத்தாள மூன்று தசாப்தகாலப் பட்டறிவைக் கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். 1980களில் எம்.ஜி.ஆர் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய ஒரேயொரு காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விரோதமான போக்கைக் கையாண்டவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் கருணாநிதியுடனும் நல்லுறவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பேணிய பொழுதும்கூட, விடுதலைப் புலிகளின் விடயத்தில் காழ்ப்புணர்ச்சியுடனேயே கருணாநிதி நடந்துகொண்டார். தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக 1994ஆம் ஆண்டு மே மாதம் வைகோ அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றிய கருணாநிதி, வைகோவைப் பயன்படுத்தித் தன்னைப் படுகொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யையும் அவிழ்த்து விட்டிருந்தார்.

  இவ்வாறாக கருணாநிதியின் புலிவிரோதப் போக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்த பொழுதும்கூட, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் அவருடன் நல்லுறவைப் பேணுவதற்கே தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியிருந்தார்கள். இந்த வகையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் அறிக்கைகளை 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கருணாநிதி வெளியிடத் தொடங்கிய பொழுது, அவருக்கு தமது நேசக்கரத்தை நீட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழத்தமிழர்களின் துயர்துடைப்பதில் அவரால் ஆற்றக்கூடிய பணிகளையிட்டு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதன் ஓர் அங்கமாக ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாள் காலையில் கருணாநிதிக்கான அந்தரங்க மடல் ஒன்றை, நேரடியாக அவரது மின்னஞ்சல் முகவரிக்கும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் அனுப்பி வைத்திருந்தார். அந்த மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது:

  “மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி
  முதலமைச்சர்,
  தமிழ்நாடு,
  இந்தியா.

  அன்புடன் அண்ணா,
  ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு துயர் துடைக்க உங்களால் உங்கள் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் அனைத்துக்கட்சி மாநாடு சிறப்புடன் நடைபெற என்வாழ்;த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இம்மாநாடு தொடர் நடவடிக்கைகளின் ஊடாக ஈழத்தமிழ் மக்களின் சுபீட்சமான சுதந்திரமான வாழ்விற்கு வழிசமைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

  நன்றி
  புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  பா. நடேசன்,
  பொறுப்பாளர்,
  அரசியற்துறை,
  தமிழீழ விடுதலைப்புலிகள்,
  தமிழீழம்.”

  எனினும் இதற்கான பதில் எதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அனுப்பி வைக்கவில்லை. இருந்த பொழுதும், மறுநாள் 15ஆம் நாளன்று ஈழத்தமிழர்களுக்காக தனது நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்கு தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம் கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) உறுப்பினராக அங்கம் வகித்து வந்த கனிமொழியால் கையளிக்கப்பட்ட இந்தக் கடிதம் ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டதோடு, கனிமொழியின் தமிழினப் பற்றுத் தொடர்பாக ஈழத்தமிழர்களிடையே நம்பிக்கையையும் தோற்றுவித்திருந்தது.

  ஒரு கவிஞராகவும், கருணாநிதியின் இலக்கிய வாரிசாகவும் ஈழத்தமிழர்களால் அறியப்பட்ட கனிமொழியின் பதவி விலகல் அறிவிப்பு கருணாநிதி மீதான ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் 16ஆம் நாளன்று, நேரடியாகவும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அந்தரங்க வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்தச் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:

  “அன்பின் சகோதரி கனிமொழிக்கு,
  ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு இந்த மக்களின் துயர் துடைக்கும் நோக்குடன் உங்கள் இராஐசபா அங்கத்தினர் பதவியைத்துறந்து முன்மாதிரியாக நடந்துகொண்டமை முழுத்தமிழ் மக்களையும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தி உள்ளது. இதற்காக நான் எமது இயக்கத்தின் நன்றியினையும் மக்களின் நன்றியினையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  நன்றி
  புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

  பா.நடேசன்,
  பொறுப்பாளர்,
  அரசியல்துறை,
  தமிழீழ விடுதலைப் புலிகள்,
  தமிழீழம்.”

  எனினும் இதற்குப் பின்னரான இரண்டு வார காலப்பகுதியில் கருணாநிதி பிரகடனம் செய்த கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு செயல்வடிவம் பெறவேயில்லை. இதேபோன்று தனது தந்தையிடம் கையளித்த பதவி விலகல் கடிதத்தையும் கனிமொழி மீளப்பெற்று தனது ஆசனத்தைப் பாதுகாத்துக் கொண்டார். கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் ‘தமிழ்ப்பற்று’ மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு ஒரு நாடகம் என்பது வெட்டவெளிச்சமாகிப் போக, தமது பதவியைப் பாதுகாப்பதற்காக இந்திய மத்திய அரசின் கூட்டுச்சதிக்கு திரைமறைவில் கருணாநிதி உடந்தையாக நிற்பது பட்டவர்த்தனமாகத் தொடங்கியிருந்தது.

  இருந்த பொழுதும் தமது நம்பிக்கையை ஈழத்தமிழினம் தளரவிடவில்லை. இதன் வெளிப்பாடாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, 31.10.2008 அன்று தமிழீழ தேசிய போரெழுச்சிக் குழுவின் செயலாளர் சே.முகுந்தன் அவர்களால் சுப.வீரபாண்டியன் ஊடாக கருணாநிதிக்கான மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு செவிசாய்த்து எவ்வித நடவடிக்கைகளையும் கருணாநிதி எடுக்காத நிலையில் 02.12.2008 அன்று கருணாநிதிக்கான மற்றுமொரு மனுவொன்று வன்னியிலிருந்து தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் க.ஆதித்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படியொன்று மீண்டும் 07.12.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களால் கருணாநிதியின் நேரடி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  இருந்த பொழுதும் கருணாநிதியின் மனம் நெகிழவேயில்லை. 02.01.2009 அன்று கிளிநொச்சியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பொழுது தமிழகத்தில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் உரையாற்றிய கருணாநிதியின் புதல்வி கனிமொழி, “கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த செய்தி கிடைத்த பின்னர் இனியும் தமிழினம் பொறுமை காக்க முடியாது” என்ற தொனியில் உரையாற்றியிருந்தார். அவரது உரை இவ்வாறு அமைந்திருந்ததே தவிர அவரது செயல் சிங்கள-இந்திய கூட்டுச்சதியை ஆமோதிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக புதுடில்லியில் காங்கிரஸ் ஆட்சிபீடத்தின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் செய்கைகள் அமைந்திருந்தன.

  2009ஆம் ஆண்டு சனவரி மாதம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் தீக்குளிப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை நசுக்குவதிலேயே கருணாநிதி குறியாக இருந்தார்.

  இதேநேரத்தில் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் படை வலிமை தொடர்பான ஐயம் வல்லாதிக்க சக்திகளிடையே வலுவடைந்திருந்தது. யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று அதுவரை கருத்து வெளியிட்டு வந்த வல்லாதிக்க சக்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்திப் பகிரங்கமாக அறிக்கை வெளியிடத் தொடங்கியிருந்தன.

  கே.பி-உருத்திரகுமாரன் தரப்பினரின் ஆமோதிப்புடன் 2009 பெப்ரவரி மாதத்தின் முதல் நாட்களில் வல்லாதிக்க சக்திகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு-சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜீ ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் பா.சிதம்பரம் வலியுறுத்த, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடுக்கி விடப்படுவதை பிரணாப் முக்கர்ஜீ வலியுறுத்தியிருந்தார்.

  இதற்கு எவ்விதமான ஆட்சேபனையையும் வெளியிடாது ஊடகங்களில் அமைதி காத்த கருணாநிதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தி தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு செய்திகளை அனுப்பியிருந்தார். இம்முறை கருணாநிதியினதும், பா.சிதம்பரத்தினதும் பின்கதவுத் தொடர்பாளர் வகிபாகத்தை வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் வகித்திருந்தார். இது தொடர்பாக 12.02.2009 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான செய்தி ஒன்று ஜெகத் கஸ்பார் அடிகளாரால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய நேரம் 4:45 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அரசின் அதிகாரபூர்வ செய்தி கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்துமாறு கோரி அன்று மாலை பா.நடேசன் அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஜெகத் கஸ்பார் அனுப்பிய மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது:

  “அன்புள்ள திரு.நடேசன்,
  தொடர்பு விபரங்களை உள்ளடக்கிய மடல் எமது நேரம் பி.ப 4:45 இற்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  தயவு செய்து உறுதிப்படுத்தவும்.

  ஜெகத்”

  எனினும் இதன் பின்னரான நாட்களில் இந்திய அரசின் ஆயுதக் களைவு-சரணடைவு திட்டத்திற்கான தமது ஆட்சேபனையை மிகவும் பண்பாகவும், இராஜதந்திரிமான முறையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள். அதேநேரத்தில் வன்னி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் பரப்பளவு சுருங்கத் தொடங்க, சிங்களப் படைகளின் அரக்கத்தனமான தாக்குதல்களில் படுகொலை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

  இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு கௌரவமான போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிடவில்லை. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நேரடித் தொடர்புகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பேணுவதற்கு ஏதுவாக, 02.03.2009 அன்று மின்னஞ்சல் ஒன்றை கனிமொழி அனுப்பியிருந்தார். ஏக காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தும் அழுத்தங்கள் தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக கருணாநிதியால் பிரயோகிக்கப்பட்டன.

  இந்நிலையில் ஆனந்தபுரம் சமர் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் 29.03.2009 அன்று காலையும், மதியமும் கனிமொழிக்கும், கருணாநிதிக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அவசர செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தம்மால் வாசிக்க முடியவில்லை என்று கனிமொழி பதிலளித்ததை அடுத்து மீண்டும் அதே செய்தியை மறுநாள் 30.03.2009 அன்று காலை கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அனுப்பி வைத்தார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

  “அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,
  தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கானக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் சிங்கள அரசு யுத்தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென்றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண்ணம் உள்ளனர். இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப்பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர்காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.

  நன்றி,

  என்றும் உங்கள் அன்பான,
  சகோதரன் பா.நடேசன்”

  மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பா.நடேசன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த செய்திக்கு கருணாநிதியோ, அன்றி கனிமொழியோ உடனடியாக எந்தவொரு பதிலையும் அனுப்பவில்லை. ஆனந்தபுரம் முற்றுகையில் தமிழீழ தேசியத் தலைவர் சிக்கியிருப்பதாக இந்திய அரசுக்கு சிங்கள அரசு செய்தியொன்றை அனுப்பியிருந்த நிலையில், பா.நடேசனின் கடிதத்திற்கு பதிலளிக்காது கனிமொழியும், கருணாநிதியும் அமைதி காத்தனர்.

  இந்நிலையில் வீரத்தளபதிகளான பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா போன்றோரும், நூற்றுக்கணக்கான போராளிகளும் தமது உயிரை வேலியாக்கி நிகழ்த்திய எதிர்த்தாக்குதல்களில் சிங்களப் படைகளின் ஆனந்தபுரம் பெட்டி முற்றுகை உடைக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் நகர்த்தப்பட்டார். தமிழீழ தேசியத் தலைவரை உயிருடன் சிறைப்பிடிப்பதற்கு சிங்கள-இந்திய அரசுகள் எடுத்த முயற்சி மாவீரர்களின் வீரம்செறிந்த தாக்குதல்களாலும், தற்கொடையாலும் சிதறடிக்கப்பட்டது.

  05.04.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து மறுநாள் 06.04.2009 நாளன்று புலம்பெயர் தேசங்கள் தோறும் கிளர்ந்தெழுந்த ஈழத்தமிழர்கள் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். இந்நிலையில், சிங்கள-இந்திய அரசுகளின் கனவு பலிக்காத சூழலில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் 07.04.2009 அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கருணாநிதியின் புதல்வி கனிமொழி அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது:

  “நடேசன் அண்ணன்,
  நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதை செய்ய முடியாதுவிட்டால் தயவு செய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும், தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து தவறான வழிகாட்டல்களை பின்பற்றாதீர்கள்.

  கனிமொழி.”

  எனினும் கனிமொழியின் இந்த மடலுக்கான தமது ஆட்சேபனை கருணாநிதியின் பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்று பிற்பகல் மீண்டுமொரு தடவை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்தி கனிமொழியால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு பிறிதொரு மடல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த மடலின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது.

  “நடேசன் அண்ணன்,
  அங்குள்ள நிலமைகள் தொடர்பாக நாங்கள் எல்லோரும் கவலையடைந்துள்ளோம். சிறீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்வரும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அறிவிப்பதைபற்றி சிந்தியுங்கள். உள்துறை அமைச்சரும், முதலமைச்சரும் அங்குள்ள மக்கள் தொடர்பாக மிகவும் அக்கறையாக உள்ளார்கள்.
  நான் சொல்வதை செய்ய முடியாவிட்டால், தயவு செய்து டில்லியில் உள்ள ஆட்களுடன் கதைக்கவும்.

  கனிமொழி.”

  ஒருபுறம் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருதில் கருணாநிதி குறியாக இருந்ததை அவரது புதல்வியின் மடல் வெளிப்படுத்தியதோடு, முத்தமிழ் அறிஞரின் வாரிசு என்று பெயர்போன அவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்கள் இன்னொரு செய்தியையும் உணர்த்தியிருந்தது. அதாவது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு கனிமொழி அனுப்பிய இரண்டு கடிதங்களின் படிகள், இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டமையே அந்த செய்தியாகும்.

  இவ்வாறாக வன்னிப் போரின் உச்சகட்டத்தில் கருணாநிதியின் மறுமுகம் தமிழீழ விடுதலைப் புலிகளிடையே எவ்விதமான ஐயம்திரிபு இன்றி பட்டவர்த்தனமாகியிருந்தது. தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளை சரணடைய வைத்து அழிப்பதில் குறியாக இருந்த கருணாநிதி, அதற்காக ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களின் உயிர்களை சிங்களம் காவுகொள்வதையிட்டு எவ்வித கவலையும் கொள்ளவில்லை.

  26.04.2009 அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர்நிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்த பொழுதும்கூட, இதுவிடயத்தில் சிங்கள அரசைப் போர்நிறுத்தம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகள் எவற்றிலும் இந்திய அரசு ஈடுபடவேயில்லை. இதற்கான அழுத்தங்கள் எதனையும் கருணாநிதியும் பிரயோகிக்கவில்லை.

  அதேநேரத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கத் தொடங்க, தமிழகத்தில் மீண்டும் தளிர்விட்ட மக்களின் கொந்தளிப்பை தணிக்கும் நோக்கத்துடன் மறுநாள் 27.04.2009 அன்று சென்னையில் கருணாநிதியால் உண்ணாநோன்பு நாடகம் அரங்கேற்றப்பட்டது. காலையில் உண்ணாநோன்பை தொடங்கிய கருணாநிதி, தனது முயற்சியால் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அன்று மதியத்திற்குள் பழரசம் அருந்தித் தனது உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆனால் அதே நாளில் வன்னியில் நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களை சிங்களம் நரபலி வேட்டையாடியது. கருணாநிதியை நம்பியிருந்த வன்னி மக்களுக்கு சாவையே பரிசாக கருணாநிதி வழங்கினார். கருணாநிதியின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஈழத்தமிழினமே பலிக்கடா ஆக்கப்பட்டது.

  இது பற்றி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு எழுதப்பட்ட மின்மடலில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினமணி பத்திரிகையை சேர்ந்த வி.தேவதாசன் என்ற ஊடகவியலாளர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

  “தோழர் நடேசன் அவர்களுக்கு, வணக்கம்
  சென்னையிலிருந்து தினமணி செய்தியாளர் தேவதாசன் எழுதுவது. போரை நிறுத்த இலங்கை அரசின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என கூறி, சென்னையில் தனது உண்ணாவிரதத்தை 6 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் கருணாநிதி முடித்துக் கொண்டுள்ளார். கருணாநிதி கூறுவது உண்மையா? தயவுசெய்து உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள்.

  அன்புடன்
  வி.தேவதாசன்.”

  தனது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக கருணாநிதி ஆடிய உண்ணாநோன்பு நாடகத்தின் உண்மைத்தன்மையை தமிழக மக்களில் ஒருதரப்பினர் நன்கு புரிந்து கொண்டிருந்ததையே தினமணி செய்தியாளரின் கடிதம் வெளிப்படுத்தியிருந்தது.

  “தமிழினத்தின் காவலன், உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன், முத்தமிழ் வித்தகர்!” என்றெல்லாம் முகமகன் கூறப்படும் தந்திரி கருணாநிதியின் மறுமுகத்தை உலகத் தமிழனம் புரிந்து கொள்வதற்கு சிறிதளவாவது இக்கட்டுரை உதவிபுரிந்திருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

  கருணாநிதியைப் போன்று தமிழீழ தேசத்திற்கு துரோகமிழைத்த தந்திரிகளின் மறுமுகம் இனிவரும் தொடர் கட்டுரைகளில் அவர்கள் எழுதிய கடிதங்களுடன் ஆதாரபூர்வமாக வெளிக்கொணரப்படும்!

  நன்றி: ஈழமுரசு (08.04.2011

  நன்றி பதிவு இணைய தளம்.ஈழப் போரில் கருணா குடும்பத்தின் சாட்சியம்
  செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011 10:03
  வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு இதழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

  வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு இதழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

  இறுதிப் போரில் மக்களைப் பாதுகாப்பதற்காக எத்தகையை அர்ப்பணிப்புக்களைப் புரிவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருந்தார்கள் என்பதையும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாகப் பொய்யுரைத்து சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உறுதுணை புரிந்த அரசியல்வாதிகள், பரப்புரையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் மறுமுகத்தை வெளிக்கொணர்வதே இத்தொடர் கட்டுரைகளின் நோக்காகும். இதில் வெளிக்கொணரப்படும் உண்மைகளை நிரூபிக்கும் சில கடிதங்களையும் வெளியிடுவதற்கு நாம் முடிவு செய்துள்ளோம். இதுவரை காலமும் மிகவும் அந்தரங்கமான முறையில் பேணப்பட்டு வந்த இக்கடிதங்களை, காலத்தின் தேவை கருதி இப்பொழுது நாம் வெளிக்கொணர்கின்றோம்.

  இந்த வகையில் இவ்வாரத்திற்கான கட்டுரையில், போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி மக்களின் துயர்துடைக்கும் நோக்கத்துடன் ஒரேயொரு நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடனும், அவரது புதல்வி கனிமொழியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தொடர்பாடல்களைப் பதிவு செய்கின்றோம்.

  . . .

  2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்: வன்னி மேற்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைகள், கிளிநொச்சியை மையப்படுத்தித் தமது வலிந்த தாக்குதல்களை உக்கிரப்படுத்தியிருந்தன. யுத்த விமானங்கள், ஆட்லறி எறிகணைகள், பல்குழல் பீரங்கிக் கணைகள் சகிதம் கிளிநொச்சியையும், அதனை அண்டிய ஏனைய மக்கள் குடியிருப்புக்களையும் இலக்கு வைத்து சிங்களப் படைகள் நிகழ்த்தி வந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் நாள்தோறும் தமிழ் உயிர்கள் நரபலி வேட்டையாடப்பட்டு வந்தன.

  மக்களின் இழப்புக்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழிக் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும், தமிழக மக்களிடையே கொந்தளிப்பான சூழலை தோற்றுவித்திருந்தது. இதற்கு ஏறத்தாள ஒரு மாதத்திற்கு முன்னர் 2008 செப்ரம்பர் மாதம் 9ஆம் நாளன்று வவுனியாவில் சிங்களப் படைகளின் கட்டளைப்பீடம் மீது கரும்புலிகளும், வான்புலிகளும் இணைந்து நிகழ்த்திய தாக்குதலில் இந்தியப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்தமை, தமிழின அழிப்பில் இந்தியா உடந்தையாக இருப்பதைப் பட்டவர்த்தனமாக்கியிருந்தது. இதன் எதிரொல

 31. prabhu says:

  hi
  vino do u know onething NAKKERAN DMK supporter thats why they told like that WAIT and SEE……………

 32. KARTHIK says:

  karuthu kanipu oru pakam iruthalum makkal mathill oru koolai koodam ondru thayaragividhathu enpadhai makkal unarthu vidanar

 33. Gopi says:

  என்வழி தனிவழி என்பதை மறவாதீர்! என்வழி நக்கீரன் வழி ஆகி விட்டது போல் தெரிகிறது :)

 34. Thinakar says:

  மக்கள் மனது எப்படி என்று இன்னும் முப்பது நாட்களில் தெரிந்து விடும் கார்த்திக்.. போய் வாக்களியுங்கள்..

 35. RAJINI RASIKAN says:

  விலை வாசி உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு. மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர் பார்கிறார்கள் – ஓட்டு போட்ட பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி.

  தலைவா நீங்கள் அரசியலுக்கு வரும் வரை புரட்சி தலைவி தமிழ் நாட்டை ஆளட்டும்.

 36. RAJINI RASIKAN says:

  நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.

  இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களித்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இந்த சாவடியில் வாக்களித்தார்.

  பின்னர் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர், ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

  ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவார். இந்த முறை அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  - nakkeeran

 37. Muki says:

  2001 ஐப் போலவே 2011 நிலும் தவறாகப் போகிறது

 38. மிஸ்டர் பாவலன் says:

  nakkeeranin கணிப்பு:

  ” காங்கிரஸ்-24

  பாமக-17 ”

  இதை காங்கிரசும், பா.மா.க. கட்சிகாரர்கள் கூட நம்புவது கஷ்டம்.

  ஒரு தி.மு.க. ஆதரவு பத்திரிக்கை எழுதுவதற்கு அவர்களுக்கு உரிமை
  உண்டு. நான் மறுக்கவில்லை.

  தமிழகத்தில் “பசுமை” மலரும் நாள் நெருங்கி விட்டது.

  “இரட்டை இலை” மீண்டும் தழைக்க போகிறது ..

  தங்க தாரகை அம்மா ஒரு புதிய வரலாற்றை படைப்பார்.

  -நடுநிலையாளர் பாவலன்

 39. manju says:

  திமுக தோற்ற்க வேண்ணூம்

 40. நாஞ்சில் மகன் says:

  வினோ இங்கு இருக்கும் எல்லோர் மனநிலையும் கருணாநிதி , ஜெயா என்றுதான் இருக்கிறது. ஏன் ஒரு புதிய மாற்றத்தை எற்படுத்த மாட்டேங்குறார்கள் என்றுதான் புரியவில்லை. ஆனால் இங்கு கமெண்ட் எழுதியிருப்பதை பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது திமுக மீண்டும் வந்தால் அவர்கள் செய்த ஊழலுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து விட்டார்கள் என்றுதான் அவர்கள் ஆட்சி அமையும்.

  ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.இந்த சாவடியில் வாக்களித்தார்.

  மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

  ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவார். இந்த முறை அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன செய்ய அவரால் இப்படி வேதனை படத்தான் முடியும். பச்சை தமிழன் கறைபடியாத கரத்துக்கு சொந்தகாரர் காமராஜரையை தோற்கடித்த கூட்டம் இங்கு இருக்கும் போது தலைவர் ரஜினி என்ன செய்ய முடியும்.

  வினோ ஏன் இந்த பதிவுகளை மறைக்க வேண்டும்.

  ஹலோ வினோ,

  நக்கிரன பத்தி இங்க படிங்க உண்மை புரியும். :) :) :)

  http://www.**********4-43.html

 41. வெங்கடேஷ், மதுரை says:

  விகடன் இப்போதே பின்வாங்க ஆரம்பித்துவிட்டது. கடைசி நேரத்தில் ஐம்பது தொகுதிகளில் பணம் பாய்ந்ததாம்! அப்போ தேர்தல் ஆணையம் சும்மா இருந்தது என சொல்ல வருகிறார்களா? அல்லது தங்களது கணிப்பு ஜோஸியம்தான் என்பதை ஒப்புக் கொள்கிறார்களா? திமுக கூட்டணி நிச்சயம் 150 தொகுதிகளில் வெல்லும் என்பதே உண்மை!

 42. kk says:

  ஆட்சி மாற்றம் வேண்டும் !!! ஆ தி மு க உழல் செய்தபோது மக்கள் மாற்றத்தை விரும்பினர் அதே போல் தி மு க உழல் தலை விரித்து ஆடுகிறது ஆட்சி மாற்றம் வேண்டும் நமக்கு இருபதே இரண்டு கட்சிகள். இந்த தி மு காவை மறுபடியும் ஆட்சியில் அமர்த்தினால் நாம் உழளுக்கு அனுமதியாலிததாகி விடும் பிறகு அனைத்து தொழில்கள்ளிலும் இவர்களது ஆத்திகமேஇது குடும்பம் இல்லை இரத்தத்தை உறிஞ்சும் அட்டைபூசிகள்.

  நக்கீரன் கருத்து கணிப்பு மெய்பட வினோவுக்கு எனது வாழ்த்துக்கள்

 43. மிஸ்டர் பாவலன் says:

  நண்பரே:

  பொதுவாக கலைஞருக்கு சொல்லில் மனதில்
  இருப்பதை காட்டி விடும் திறம் உண்டு.

  “கூட்டணி ஆட்சி அமையலாம்” என அவர் சொல்லி
  இருப்பது – உளவு துறை தகவல் படி – தி.மு.க. கட்சி
  கூட்டணி தோல்வி அமைவது தின்னமாகி விட்டது.
  அவர் – விஜயகாந்த், கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகளை
  இழுத்து எப்படியாவது மெஜாரிட்டி அமைக்க முயற்சிக்கிறார்.

  கனிமொழி, அழகிரி, ஸ்டாலின் ஊழல் சொல்ல வேண்டியது இல்லை.

  தி.மு.க. நல விரும்பிகள் பலர் இந்த வலையில் எழுதி வந்தாலும்,
  நடுநிலையாளர்கள் விரும்புவது – மாற்றமே. அதற்கு ஒரே வழி
  தங்க தாரகை, மைசூர் மகாராணி – பச்சை அம்மா ஒருவரே.

  அம்மா ஆட்சி அமைவது உறுதி.

  நாளை நமதே – எந்த நாளும் நமதே !

  -மிஸ்டர் பாவலன்

 44. குமரன் says:

  diamaond எழுதியிருப்பவை நூற்றுக்கு நூறு சரியானவை.

 45. Ravi says:

  நக்கீரன் சர்வே Vs ஜூனியர் விகடன் ஜோசியம்! என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரை மிகச் சரியாக ஆய்ந்து எழுதப்பபட்டுள்ளது. சபாஷ்!

 46. Thinakar says:

  மிஸ்டர் பாவலன்,, உங்கள் அம்மா ஆதரவுக்கு யாரும் எதுவும் சொல்லவில்லை.. ஆனால் நடு நிலையாளன் என்று சொல்லிக்கொண்டு தங்கத்தாரகை, மைசூர் மகாராணி என்றெல்லாம் சொல்வது சரியில்லை.. நீங்கள் அதிமுக கட்சி உறுப்பினர் இல்லாமல் இருக்கலாம்.. அதிமுக ஆதரவாளன் என்று உரக்கசொல்லுங்கள

 47. srinivas says:

  ஏன் நீங்கள் இந்த மாதிரி கருத்தை மக்கள் மத்தியில் கூறுகிறிர்கள்.
  நீங்கள் முடிவெடுக்க வேண்டாம் எது சிறந்த பத்திரிகை என்று?
  தயவு செய்து நக்கீரன் சிறந்த பத்திரிகை என்று முடிவு செய்யாதிர்கள்.
  இது தலைவர் வெப் சைட் என்று நம்புகிறோம். நீங்கள் அதை மட்டும் கவனியுங்கள்.

 48. டாக்டர் சுப்பாண்டி says:

  சிறு குழந்தைகள் ஒரு வார்த்தையை பிடித்து கொண்டால்
  விடாமல் அதையே சொல்லி சொல்லி பழகுவது போல்
  (நமக்கும் அந்த வார்த்தை கேட்டு கேட்டு மனதில் நின்று
  விடும்!) திரு பாவலன் அவர்கள் – முன்பு “கலை செல்வி” என்று
  த்ரிஷா புகழ் பாடி போற்றி கொண்டிருந்தார். இப்போது
  “கனவு கன்னி, தங்க தாரகை, மைசூர் மகாராணி” என்று
  ஜெயா புகழ் பாடி போற்றி கொண்டிருக்கிறார்.

  அவர் நடுநிலையாளர் என சொல்லி கொள்வதை வெறும் தமாஷாக எடுத்து கொண்டால் அது நமக்கு நல்லது !

  -டாக்டர் சுப்பாண்டி

 49. ரசிகன் says:

  -srinivas says:-

  இதில் உங்களுக்கென்ன வந்தது? ஜூனியர் விகடன் பங்குதாரரா நீங்கள்? எது சரி, தவறு என முடிவெடுப்பது உங்கள் உரிமை. ஆனால் ஒரு விஷயம் குறித்த கருத்தை முன்வைப்பது பத்திரிகையாளர்கள் வேலை. அதைச் சொல்லக் கூடாது என உங்களைப் போன்றவர்கள் சொல்லக் கூடாது. உடன்பாடில்லை என்றால் அதை மட்டும் சொல்லிவிட்டுப் போங்கள். இதை எழுதுங்கள், எழுத வேண்டாம் என சொல்ல நீங்கள் யார்?

  ரஜினி ரசிகர்கள் என்ற வட்டத்திலிருந்து வெளியே வராத வரை ரஜினிக்கே உங்கள் மீது மதிப்பிருக்காது. நாலும் தெரிந்த நல்ல ரசிகனாக இருங்கள்!

 50. Manithan says:

  தி மு க வெற்றிபெறுவது தான் தமில்நாடிற்கு நல்லது. தமிழகத்தை முனேற்ற பாதைக்கு கொண்டு செல்வது தி மு க (கலைஞர்) ஆட்சி தான்.

 51. Manoharan says:

  வினோ மன்னிக்கவும். என்னை ஒருமையில் திட்டியவனை பற்றி கடைசியாக் ஒரு கமென்ட்.

  @ * சந்தோஷ் . இன்னிக்குதாண்* உன்னோட கமென்ட் பார்த்தேன். எனக்கு நாகரிகத்தை பற்றி சொல்ல நீ யாரு* ? முதல்ல உன்னோடதை மூ…..அப்புறம் என்னை சொல்லலாம்.

  @ வெங்கடேஷ். உங்கள் கூற்றை எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

 52. bala says:

  டியர் வினோ
  நீ சொன்னது எல்லாம் பச்சை பொய் . நக்கீரன் ஒரு dmk support நியூஸ் பேப்பர் அவர்கள் விடுதலை புலிகள் பற்றி கொஞ்ச காலம் எழுதி காசு பார்த்தார்கள் இவர்கள் என்னமோ களத்தில் இருந்தவர்கள் போல ,ஜெகத் கஸ்பர் இன்று 2g பணத்தில் இருபதாக சிபிஐ கண்டறிந்து உள்ளது

 53. Prakash says:

  ஸ்பெக்ட்ரம் ல ஊழல் எதுவும் நடக்கலைன்னு எழுதின நக்கீரனை நம்ப சொல்றீங்கள வினோ?????????

 54. durai says:

  வினோ நீங்கள் ரஜினி ரசிகனாங்க இருக்கலாம் ஆனால் நான் உங்களுக்கு ஒன்று மட்டும் தெளிவு செய்ய விரும்புகிறேன் . ரஜினி யாருக்கு ஒட்டு போட்டார் என்று அனைவருக்கும் வெளிப்பட்டது அதை தொடர்ந்து அவர் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற வற்றை பஹிர்ந்து கொண்டார் அதன் பின் நக்கீரனில் அவரை பற்றி தாழ்த்தி செய்திகள்
  வெளியிட்டு அவர் எதோ பெரிய தவறு செய்தது போல் வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளியிட்டது இதற்கு காரணம் ஒன்று தான் அவர்கள் கலைஞரை ஆதரிகிறார்கள்

  அது மட்டும் அல்ல அவர்கள் ரஜினியை பற்றி எழுதிய செய்திகளுக்கு ரஜினியை பற்றி அவதுறு comment எழுதிய அனைவரின் கமெண்ட் களை அனுமதித்து இருகிறார்கள் ஆனால் நீங்கள் என்னவோ நக்கீரனை இன்னமும் நம்பி கொண்டு இருகிறீர்கள் ரஜினி கலைஞரை ஆதரித்தால் அவர்களின் போக்கு ஒருமாதிரி இருக்கும் ( ரஜினியை உயர்த்துவார்கள் ) இல்லாவிட்டால் மிகவும் தால்துவார்கள் ஆனால் நீங்கள் தான் பாவம் என்ன செய்வது.
  ______________________
  எழுதப்பட்ட கட்டுரை ரஜினி சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நக்கீரன் திமுக ஆதரவுப் பத்திரிகையாகவே இருக்கட்டுமே. அவர்கள் சர்வே முறையாக உள்ளது. ஜூனியர் விகடன் ஜோசியம் சொல்லியிருக்கிறது. இதுதான் கட்டுரையின் சாரம். அதைவிட்டுவிட்டு ஏன் எதையெதையோ நினைத்து கமெண்ட் எழுதுகிறீர்கள்?

  -வினோ

 55. balu says:

  நக்கீரன் ஜூனியர் விகடன் இரண்டு பேரும் ஒன்றை சொல்ல மறந்து விட்டார்கள் இந்த முறை கூட்டணி ஆட்சி வரும் என்பதை……………….. இந்த முறை இளைஞர்கள் புதிய வாக்களர்களாக இருப்பதால் அவர்கள் தான் முடிவு செய்வார்கள்

 56. GJ says:

  அருமையான ஆய்வு கட்டுரை சபாஷ் வினோ…

 57. palaniswamy says:

  நக்கீரன் ஒரு திமுக அடர்வு பேப்பர் அதய் நம்ப முடியாது

 58. Agniputhiran says:

  அருமையாக ஆய்வு செய்து கட்டுரை வெளியீடு செய்கிறீர்கள். பாராட்டு மற்றும் வாழ்த்துகள்.

 59. வீரன் says:

  அம்மா ஆட்சிக்கு வந்ததும் மொதல்ல
  இந்த நக்கீரன் மாதிரி தி.மு.க. ஆதரவு
  பத்திரிக்கைக்கு சீல் வச்சா நல்லது :)

  கூடவே நாஞ்சில் சம்பத் பேசறதுக்கு
  தடுப்பு சட்டம் ஸ்பெஷலாப் போடணும்

  ரானா படத்துக்கு சிறப்பு ஷோவை அம்மா
  பாத்துட்டு “படம் சூப்பர், பெரிய ஹிட் ஆகும்”
  என்று சொல்ற நாளு சீக்கிரம் வந்துடும்பா..

  அத்தொட்டு இந்த காங்கிரஸ் காரன் எல்லாம்
  குடுமியை பிடிச்சு அடிச்சுக்கப் போறான், ஏன்
  கலீஞர் கூட கூட்டணி வெச்சுக் கிட்டோம்னு ..

  வரேன்பா..

  -வீரன்

 60. suravi says:

  nakeeran survay pannarathu irrugattum yar addchivaranum mutevu makkal pannanum makkal aadchingrathu santhosam irruganum palivangakodathu ADMK AADCHYAAL anithuarasuooliyrum palivangapattanur DMK AADCHYAAL Ravutisum irruguthu Annal makkal sunthosuma irrugainga DMK RAVUTISIYATHA KATTUPADUTHANUM ADMK AADCHIPOLLA,2G NERIPIGATTUM APPUARM PARKALM MATTURUKATCHIGU IPPAVALIILLA ,ADMK, DMK, DMK BEST

 61. S.K.RAJ says:

  தமிழ்நாடு பாட்டரி பணியாளர் முன்னேற்ற சங்க பொதுசெயலாளர் எஸ்,கே. ராஜ் கூறுகிறார் இந்த தேர்தல் முடிவு கள் தி.மு.க. விற்கு சாதகமாகவே உள்ளது என்கிறார் . அதன் அடிப்படையில் தி,மு.க. 180 தொகுதிகளிலும் அதி.மு.க 54 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்கிறார் .இதன் விளைவாக தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் 6 வது முறையாக முதல்வர் ஆகிறார் . முக்கிய செய்தி ; விஜயகாந்த் அவர் தொகுதியில் பின் தங்குகிறார் . ஜெயலலிதா அவர் தொகுதியில் கேள்விக்குறிதான் ! ஆச்சர்யம் ஆனால் உண்மை கே.வி .தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் முந்துகிறார் .தொடர்புக்கு ; 9500049673

 62. RAJA says:

  ஜெயலலிதா மீது கடந்த 15 ஆண்டுகளாக வழக்குகள் நடந்து வந்ததும் பாதியிலேயே பெரும் வழக்குகளில் சட்டத்தை விலைக்கு வாங்கினார்.அப்படியும் இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ள சூழ் நிலையில் ,அம்மையார் எப்படியெல்லாம் பத்தினி வேஷம் போடுகிறார் ,டான்ஷி வழக்கில் நிலத்தை திரும்ப அரசுக்கு தரவேண்டும் என்று நீதிமன்றம் கூரியப்பிறகு டான்ஷி நிலத்தை அரசிடம் ஒப்படைத்தார் ஜே .அப்படி இருக்க கலைஞர் டிவி ஒரு நிறுவனத்திடம் வாங்கிய தொகை திரும்ப கொடுத்த பிறகுதான் அந்த நிறுவனம் 2G ச்பெக்ட்ருமில் தொடர்பு இருந்து இருக்கிறது . எனவே இதை பேச ஜே விற்கு எந்த தகுதியும் கிடையாது ..இன்னொரு சந்தேகம் வருகிறது ஓராண்டு சம்பவத்திற்கு இவ்வளவு வேகம் காட்டுவதும் 15 ஆண்டுக்கால வழக்குக்கு காலம் தாழ்த்துவது ஏனோ ! எனவே விரைவில் தி மு க ஆட்சி மலர்ந்து ,அம்மையாருக்கு கண்டிப்பாக கலைஞர் உடனடி நடவடிக்கை தேவை . இதுதான் உண்மை தமிழனின் கறுத்து. எனவே கொள்ளைக்காரி ஜெயலலிதா இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் .

 63. shanmugam says:

  ஹாய் ஹே ***** ! ஊழல் ஊழல்னு சொல்ரிகளே எவண் பன்ல ?செவப்பு துண்டு போட்டவன் வரைக்கும் காசு வாங்கிட்டு பேசுறான் /அதிமுக வந்தா திருடாதா ?அந்தம்மா யாரு தமிழ்நாட்ட ஆல?அந்தம்மா காலில் விழும் எவனும் தன்மானத பத்தி பெசாந்திங்க/ ************************

 64. shanmugam says:

  2g தவிர திமுக நல அரசாகவே இருந்தது ,2g விசயத்தில் supreme கோர்ட் தீர்ப்பு சொல்லும் அபோ எலாம் தெளிவா கேடுகுங்கோ

 65. saravanakumar says:

  அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று கலைஞர் குடும்பத்தை சிறையில் அடைக்கவேண்டும் என்பதே தன்மான தமிழனின் ஆசையாகும் . இப்படிக்கு, நாம் தமிழர் கட்சி

 66. j.parthasarathy says:

  அதிமுக இந்த தேர்தல் ளையும் மரண அடி வாங்கினால் தேர்தல் ஆணையம் ஏலேக்ட்ரோனிக் மசின்ல தில்லுமுல்லு பண்ணிட்டதா ஜெயலலிதா ஒப்பாரி வெப்பா அதிமுககரனுக்கு முதுகு எலும்பு இல்லை வெட்கம் கேட்ட ஜென்மங்கள் ஈன பிறவிகள் தேர்தல் ரிசல்ட் க்கு பிறகு எதனை பேர் தற்கொலை பண்ணிப்பன்களோ?

 67. muthusamy says:

  nakkeren oru pradu padirikai, oru dupakur , aduthu varuvathu amma adichithaan, idthil enna shandekam.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)