BREAKING NEWS
Search

தேவ் ஆனந்த், அமிதாப், தர்மேந்திரா, சுபாஷ் கய்… வாரே வா…ரோபோவைக் காண திரண்டது பாலிவுட்!

தேவ் ஆனந்த், அமிதாப், தர்மேந்திரா, சுபாஷ் கய்… வாரே வா…ரோபோவைக் காண திரண்டது பாலிவுட்!


ரோபோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வசீகரன் என்று சரியாகத்தான் பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். உலகையே வசீகரித்துள்ள இந்த மனிதரின் அபூர்வ அவதாரத்தைக் காண நேற்று – திங்கள்கிழமை- பாலிவுட்டே திரண்டு வந்தது.

தி கிரேட் தேவ் ஆனந்த், பாலிவுட்டின் தாதா எனப்படும் தர்மேந்திரா, பிக் பி அமிதாப் பச்சன், வினோத் கன்னா, ஹேமமாலினி, சன்னி தியோல், இயக்குநர்கள் சுபாஷ் கய், ராஜ்குமார் சந்தோஷி, சகரண் ஜோஹர், பால்கி, ராஜ் குமார் ஹிராணி,பிரேம் சேப்ரா, அஷுதோஷ் கோவாரிகர், ஊர்மிளா மடோண்ட்கர், அபிஷேக் பச்சன், ரமேஷ் சிப்பி, கிரண் கெர், ஷ்ரியா, நதியா மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன்  நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!


பாலிவுட்டில் இத்தனை பிரபலங்களும் சமீபத்தில் ஒன்றுதிரண்டு பார்க்க வந்த ஒரே படம் ரஜினியின் ரோபோதான்.

கொட்டும் மழையில் ரஜினி வர, ஆயிரக்கணக்கான ரசிகர்களே அவருக்குக் குடைகளாகி நின்றார்கள். தலைவர் முகமெல்லாம் சந்தோஷ அலை!

படம் முடிந்த பிறகு ஒவ்வொரு பிரபலமும் தலைவரைப் பாராட்டித் தள்ளினர். அதையெல்லாம் தனிக் கட்டுரையாகத்தான் வெளியிட வேண்டி வரும்.

அமிதாப் கூறுகையில், “He (Rajini) is just incredible… அவரது படத்தை பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். ரோபோ ராக்ஸ். அவருடன் இணைந்து பணியாற்றியது பெருமை தருகிறது” என்றார்.

ஐஸ்வர்யா ராய் கூறுகையில், “ரஜினி மிகப் பெருந்தன்மையான மனிதர். அவருடன் பணியாற்றியதில் எனக்குதான் பெருமை” என்றார்.

இயக்குநர் சுபாஷ் கய் கூறுகையில், “ரஜினிக்கு இணையான நடிகரைச் சொல்ல முடியாது. ரஜினி ரஜினிதான்” என்றார். இவரால் இந்த அளவு பாராட்டப்பட்ட நடிகர் ரஜினியாகத்தான் இருக்கும்.

தபு: “ரஜினிகாந்த்… இந்த ஒரு வார்த்தையே போதும். அதற்கு இணையாக வேறு எதையும் சொல்ல முடியாது”.

ஊர்மிளா: “நம்மில் சிறந்தவர் ரஜினி. அவர் படம் பார்ப்பதில் ஒவ்வொருக்கும் பெருமை, மகிழ்ச்சி”

அமீர்கான்: “Rajini Sir is truely a legend… கலக்குகிறார். இந்த வேடத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ரோபோ முழுக்க முழுக்க ஒரு ரஜினி மேஜிக். ஷங்கரின் படைப்பாற்றல் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறது!”

தர்மேந்திரா: “மை டியர் ரஜினி… வி லவ் யு.. இனி இந்தியத் தரத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற நினைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் ரஜினியும் ஷங்கரும்!”

தேவ் ஆனந்த்: “இந்திய சினிமாவின் பெருமை ரஜினி… ரோபோ ரியல்லி ராக்ஸ்!”

மும்பையில் மீண்டும் கலக்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற தலைப்புடன் வட இந்திய செய்தித் தாள்களும் மீடியாவும் செய்திகளை வெளியிடுவதைப் பார்க்கும் போதும், படிக்கும் போதும் பரவசமாகிறது ரஜினி ரசிகன் மனசு!

மும்பையில் ரஜினி ஏற்பாடு செய்திருந்த இந்த ரோபோ சிறப்புக் காட்சி நிகழ்வை பாலிவுட் ஹங்காமா இணையதளம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. பாருங்கள்… பரவசம் கொள்ளுங்கள்!

படங்கள்- வீடியோ: பாலிவுட் ஹங்காமா
23 thoughts on “தேவ் ஆனந்த், அமிதாப், தர்மேந்திரா, சுபாஷ் கய்… வாரே வா…ரோபோவைக் காண திரண்டது பாலிவுட்!

 1. krish

  படம் சுமார் தான்.எதற்கு இந்த ஓவர் பில்டப்.சென்னையில் ஒரு தியேட்டர்யில் 5 ஷோ இப்ப 3 ஷோ. theriyumaa

 2. eppoodi

  krish போன்றவர்களுக்கு எந்திரனால் உண்டான வயிற்றெரிவை போக்க தமிழகம் முழுவதும் உடனடியாக நடமாடும் அம்புலன்ஸ் சேவை நடாத்தப்படவேண்டும் போல இருக்கிறது, இவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. யாரவது இவர்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்களேன்!

 3. ananth

  Those who cant participate in the celebrations, needs to be checked in a psychiatric hospital. Enthiran is a wonderful experience and is a pinnacle in Indian Cinema history. It just gets bigger when bollywood legends praise it, box office collections show off and rasigargal enjoy it. Hats off to Shankar for bringing in an experience of thalaivar, i have always dreamed.

 4. kicha

  Thalaivar perumai tharani muzhuvadhum paravattum.

  Ivlo perumayudan irundhum avar kaikatti nikara panivai parungayya.

  @ krish. Pidichavanga paarataranga ungaluku ennayya? Ivlo theatrela release pannina padam, ella idathilum vasul mazhai dhan.

 5. krish

  என்னுடைய கமெண்ட்ஸ்க்கு நன்றி.அப்படியே உங்க தலைவருக்கு ஒரு விசயத்தை ஞாபகப்படுத்துங்க, என்ன அப்படினு கேட்பது புரியுது.ரசிகர்களை கூப்பிட்டு விருந்து வக்கிறத தான் சொல்லுறேன்.கூப்பிட்டு வக்கிறாரா பார்க்கதான போரம்.

  ஒலிம்பிக் போட்டிய பத்தி யாருக்கும் கவலை இல்லை.எந்திரனை பற்றி கவலை.

 6. ரஞ்சன்

  //krish says:
  October 5, 2010 at 3:13 pm
  என்னுடைய கமெண்ட்ஸ்க்கு நன்றி.அப்படியே உங்க தலைவருக்கு ஒரு விசயத்தை ஞாபகப்படுத்துங்க, என்ன அப்படினு கேட்பது புரியுது.ரசிகர்களை கூப்பிட்டு விருந்து வக்கிறத தான் சொல்லுறேன்.கூப்பிட்டு வக்கிறாரா பார்க்கதான போரம்.//
  ———
  உங்களுக்கு அந்த கவலையே வேணாம். அதெல்லாம் நாங்க பாத்துப்போம். போங்க. போய் உங்க வேலையைப் பாருங்க. இப்போ நாங்க எந்திரன் என்ற விருந்தை அனுபவிச்சிக்கிட்டிருக்கோம்!

 7. mukesh

  //krish says:
  ஒலிம்பிக் போட்டிய பத்தி யாருக்கும் கவலை இல்லை.எந்திரனை பற்றி கவலை.

  ஒலிம்பிக் போட்டியா.. எங்கே நடக்குது ராசா…ஓஓ ….நீங்கல்லாம் intellectuals ன்னு சொல்லிக்கிறீங்க……

  திடீர்னு ஒரு தியேட்டர்யில் 3 ஷோ ன்னு உளருறீங்க….அப்புறம் விருந்து என்னாச்சு ன்னு உளருறீங்க….அப்புறம் இப்ப நடக்காத ஒலிம்பிக் பத்தி கவலை பட்டு உளருறீங்க….என்னா ஆச்சு மன்மத ராசா நல்ல டாக்டரா பாத்து மூளைய காட்டுங்க….

 8. Selva

  ananth says:
  Those who cant participate in the celebrations, needs to be checked in a psychiatric hospital.
  ——————–
  ஓகே.. ஆனந்த்.. படம் நல்ல இருக்கு. அதுக்காக இப்படி ஒரு கமெண்ட் தேவையா.

  இப்ப நீங்க சொல்லுங்க… யாரு டாக்டர் கிட்ட போகணும் ..

 9. eppoodi

  krish

  //அப்படியே உங்க தலைவருக்கு ஒரு விசயத்தை ஞாபகப்படுத்துங்க, என்ன அப்படினு கேட்பது புரியுது.ரசிகர்களை கூப்பிட்டு விருந்து வக்கிறத தான் சொல்லுறேன்.கூப்பிட்டு வக்கிறாரா பார்க்கதான போரம். //

  அவர் விருந்து வைக்கறார் இல்லை வைக்காமல் போறார், இது எங்க பிரச்சினை, உனக்கென்ன வந்திச்சு? நீ என்னத்த பாக்கிறது, உங்க வயித்தெரிச்சலைத்தான் நாடே பாக்குதே. உங்கப்பன்கிட்டயா கடன்வாங்கி விருந்து வைக்கபோறார். போயி முதல்ல நல்ல டாக்டரைபாரு இல்லை வயிறெரிவு புற்றுநோயாகிவிடும்.

  அப்புறம் தம்பி எந்திரனை விட ஒரு ரஜினி ரசிகனுக்கு ஒரு விருந்து யாராலையும் தரமுடியாது.

 10. eppoodi

  //ஒலிம்பிக் போட்டிய பத்தி யாருக்கும் கவலை இல்லை.எந்திரனை பற்றி கவலை.//

  ஒலிம்பிக்கிற்கு இன்னும் 1 1\2 வருடங்கள் இருக்கின்றன, அப்போது எல்லோரும் அதைபற்றி கதைப்பார்கள் கவலை வேண்டாம், ஒலிம்பிக்கிற்கும் காமன்வெல்த் கேமிற்க்கும் வித்தியாசம் தெரியாத ………க்கு பேச்சைபாரு! லொள்ளை பாரு! எகத்தாளத்தை பாரு!

 11. kicha

  //krish says:
  ஒலிம்பிக் போட்டிய
  பத்தி யாருக்கும்
  கவலை இல்லை .எந்திரனை பற்றி கவலை./

  Olimbic?
  Aiya saami, idhukapparamum ENDHA MUNJIYA VACHUKITTU indha pakkam varuve…?

  Mavane… KABARDHAR

 12. RAJ

  கிரீஸ் அண்ட் ஜெலுசில் பார்டீஸ் mayee mayee mayee mayee mayee mayee mayee mayee mayee mayee mayee mayee

 13. RAJ

  70 theatreal released — in one or two made three shows no loss ———————– no natural intelligence will find fault with this.

 14. Srinivas

  ////ஒலிம்பிக் போட்டிய பத்தி யாருக்கும் கவலை இல்லை.எந்திரனை பற்றி கவலை.//

  ஒலிம்பிக்கிற்கு இன்னும் 1 1\2 வருடங்கள் இருக்கின்றன, அப்போது எல்லோரும் அதைபற்றி கதைப்பார்கள் கவலை வேண்டாம், ஒலிம்பிக்கிற்கும் காமன்வெல்த் கேமிற்க்கும் வித்தியாசம் தெரியாத ………க்கு பேச்சைபாரு! லொள்ளை பாரு! //

  ஹ ஹ ஹா 🙂 அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்..அது அப்போ ..

  இப்போ .MrKRISH ….மெஹ்ஹ ……ஹா ஹா ஹா…மெஹ்ஹ 🙂

 15. mathan

  this cowar krish tearing blue tears.
  rajini sir already gave the viruthu.for rajini fan what can be bigger than endhiran virunthu.
  he just gave it to whole world not only rajini fans.
  better luck next time kirukku kris

 16. Shriram

  நானும் திரு ரஜினிகாந்தின் ரசிகன் தான். தற்சமயம் திருச்சிக்கு வேலை விஷயமாக maatral ஆகி வந்துள்ளேன். இங்கு கிட்டத்தட்ட 6 திரை அரங்குகளில் வெளி ஆகி உள்ளது. ஆனால், எதார்த்தமான உண்மை என்னவென்றால், நேற்று ஒரு சரா சரி ரசிகனுக்கு ulla aarvam pola எனக்கும், vasool nilavaram therindhu kolvadharkkaga anaithu arangukalukkum ponen. yennal nambave mudiyavillai! ovovuru theatre ilum, sumar 25,30 per dahn, adhuvum, evening show ku counter il, irundhargal. Idhu sathiyamana unmai. Aanal, chennai nilamaye veru. innum periya thirai arangugalil housefull aga dhan poi kondu irukkiradhu. Oru velai, ticket vilai, 200,250 yendru iruppadhal, makkal paarka thayangugirargalo yennevo. Nilamai ippadiye ponal, nitchayamaga, chennai thavira pira idangalil, periya vetri padamaga amayuma yenbadhu konjam sandhegam dhan. Tamizh vazhi typing velai seiyadha karanathal appadiye type seithullen.

 17. mukesh

  Shriram says:
  //நானும் திரு ரஜினிகாந்தின் ரசிகன் தான். //
  அப்படியா…..நடத்துங்க….
  //ovovuru theatre ilum, sumar 25,30 per dahn, adhuvum, evening show ku counter il, irundhargal. //

  திருச்சிக்கு நாங்க வந்து பார்க்க முடியாது என்பதாலா……நடத்துங்க….

  //chennai nilamaye veru. innum periya thirai arangugalil housefull aga dhan poi kondu irukkiradhu.

  அதானே பார்த்தேன்….உண்மையை சொன்னிங்க…பிழைச்சிங்க….நடத்துங்க….

  இன்னும் சில பேர் நானும் ரஜினி ரசிகன்னு சொல்லி வருவாங்கன்னு எதிர் பார்க்கிறோம்……

 18. Dinesh

  THX தொழில் நுட்பத்தில் இந்த படத்தை காண விரும்பினேன். ஆனால் ஒரே ஒரு ஷோ(ஒபெனிங்க் ஷோ) மட்டும் அதில் காட்டி விட்டு மத்த ஷோ-க்களை சாதாரண ஷோ-ஆக மாற்றி விட்டார்கள். வட போச்சே…

 19. Manoharan

  எனக்கு தெரிந்து எல்லா மீடியாக்களிலும் முதல்வாரம் டிக்கெட் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்வதால் நான் விசாரித்த வரை நிறைய பேர் படத்தை இரண்டாவது வாரத்தில் பார்க்கும் ஐடியாவில் இருக்கிறார்கள். அதேபோல் ஒரு ஊரில் அதிகமான தியேட்டர்களில் படத்தை போடும்போது மக்கள் நல்லமுறையில் பராமரிக்கப்படும் தியேட்டருக்குத்தான் முதலில் போவார்கள். அதனால் சில தியேட்டர்கள் முழுவதும் நிரம்பும், சில தியேட்டர்களில் கூட்டமே இருக்காது. இதைவைத்துக் கொண்டு பேசக்கூடாது.
  திருப்பூர் அருகே உள்ள ஒரு சின்ன ஊரில் மொத்த மக்கள் தொகையே 50 ஆயிரம்கூட தேறாது. அங்குள்ளவர்கள் ரிலீஸ் படம் பார்க்க திருப்பூர்தான் வருவார்கள். ஆனால் இப்போது அங்கேயே எந்திரன் 3 தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது. ( அந்த ஊரில் மொத்தமாகவே 3 தியேட்டர்கள்தான்.) 3 தியேட்டர்களிலும் முதல் 3 நாட்கள் ஐந்து காட்சிகள் திரையிட்டனர். மூன்று நாளும் அரங்கு நிறைவு. மொத்தம் மூன்று நாளும் சேர்த்து 45 காட்சிகள். சராசரியாக காட்சிக்கு 500 பேர் போட்டாலும் 22500 பேர் படம் பார்த்திருப்பார்கள். 50 ஆயிரம் பேர் உள்ள ஊரில் அதிக பட்சமாக 30 ஆயிரம் பேர்தான் படம் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களாக இருக்க முடியும். அதனால் முதல் 3 நாட்களில் கிட்டத்தட்ட மொத்த ஊரே படம் பார்த்துவிடும். அதற்க்கு அப்புறம் எப்படி தியேட்டர் நிரம்பும். 50 சதவீதம் நிரம்பினாலே மிகப் பெரிய சாதனை. அந்த சாதனையைத்தான் எந்திரன் செய்து கொண்டிருக்கிறது.

 20. noushadh

  THX தொழில் நுட்பம் என்றால் என்னவென்று சொல்லுங்களேன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *