BREAKING NEWS
Search

தேர்தல் முடிவை நிர்ணயிப்பது அரசு ஊழியர் வாக்குகளே! – முதல்வர் கருணாநிதி

நானும் ஒரு தொழிலாளி…! – முதல்வர் கருணாநிதி பேச்சு

சென்னை: அரசு அலு​வ​லர்​க​ளின் வாக்கு,​​ ஒரு தேர்​தல் முடிவை நிர்ண​யிக்​கக் கூடிய அள​வுக்கு உள்​ளது என்றார் முதல்​வர் கரு​ணா​நிதி.

தமிழ்​நாடு அரசு அலு​வ​லர் ஒன்​றி​யத்​தின் 57-வது மாநில மாநாடு சென்​னை​யில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இதில் மாநாட்டு சிறப்பு மலரை வெளி​யிட்டு முதல்​வர் பேசி​ய​தா​வது:

அன்​றா​டம் உழைத்து,​​ குடும்​பத்​தை​யும் காப்​பாற்​றிக் கொண்டு,​​ பொது​வாழ்​வில் உள்ள பல்​வேறு சங்​க​டங்​களை எல்​லாம் சந்​தித்து வாழும் பெரிய சமு​தா​ய​மாக அரசு அலு​வ​லர்​கள் உள்​ள​னர்.​ அவர்​க​ளும் சமு​தா​யத்​தின் ஓர் அங்​கம் தான்.​ சமு​தா​யத்​து​டன் நெருங்​கிய தொடர்பு அவர்​க​ளுக்கு உள்​ளது.

அரசு அலு​வ​லர்​க​ளின் வாக்கு,​​ ஒரு தேர்​தல் முடிவை நிர்​ண​யிக்​கக் கூடிய அள​வுக்கு உள்​ளது.​ ​முத​லில் அஞ்​சல் வாக்​கு​களை எண்ணி முடித்​தால்,​​ அதுவே மொத்த வாக்​கு​க​ளுக்​கான குறிப்பை உணர்த்​தக் கூடி​ய​தாக உள்​ளது.​​ இத்​த​கைய ​ ஜன​நா​யக ஏற்​பா​டு​க​ளுக்கு அடிப்​ப​டை​யாக அமைந்​தி​ருப்​பது அரசு ஊழி​யர்​கள்தான்.

நீங்​கள் உணர்ச்​சி​வ​சப்​ப​டக் கூடி​ய​வர்​கள் அல்ல.​ நம்மை ஆளு​கின்ற வர்க்​கம் எது,​​ என்று சிந்​தித்து அதற்​கேற்ப முடி​வு​களை எடுக்​கக் கூடி​ய​வர்​கள்.​ அத​னால்தான் நானும்,​​ நீங்​க​ளும் இந்த விழா​வில் பங்​கேற்​கக் கூடிய சூழ்​நிலை உரு​வா​கி​யுள்​ளது.

நமது எதிர்​கா​லத்தை நிர்​ண​யிக்​கக்​கூ​டிய,​​ ​ நிகழ் காலத்தை நடத்​தக்கூடிய,​​ நமது சந்​த​தியை வாழ வைக்​கக் கூடிய ​இயக்​கம் கட்​சி​யின் பெய​ரால் உரு​வா​னது அல்ல.

உங்​க​ளது உள்​ளம் மற்​றும் உழைப்​பின் அடிப்​ப​டை​யில் உரு​வா​னது இந்த இயக்​கம்.​ நீங்​கள்,​​ உங்​க​ளின் ஒரு சில கோரிக்​கை​களை நிறை​வேற்​றி​ய​தற்​காக மட்​டுமே,​​ என் மீது நீங்​கள் அன்பு காட்​ட​வில்லை.​ நான் வருங்​கா​லத்​தி​லும் உங்​கள் கோரிக்​கை​களை நிறை​வேற்​று​வேன் என்ற நம்​பிக்கைதான் அன்​புக்​குக் கார​ணம்.​ அர​சுக்கு நன்றி பாராட்​டும் வகை​யில் இந்த மாநாடு நடை​பெ​று​கி​றது.​ இந்த மாநாட்டை மிகுந்த பூரிப்பு​டன் ஏற்​கி​றேன்.

பல்​வேறு முனை​க​ளில் பாடு​ப​டும் நீங்​கள் தமி​ழ​கத்​தின் பொரு​ளா​தா​ரத்தை மேலும்,​​ மேலும் உயர்த்த வேண்​டும்.​ அரசு அலு​வ​லர்​க​ளின் ஊதி​யத்​துக்​கா​க​வும்,​​ செல​வு​க​ளுக்​கா​க​வும்தான் அரசு வரு​வா​யில் 97 சத​வீ​தம் செல​வா​கி​றது என்று முந்​தைய ஆட்சி​யில் தெரி​விக்​கப்​பட்​டது.​ அரசு அலு​வ​லர்​க​ளுக்​கான சம்​பள உயர்வு,​​ சலுகைகள் என்​பது,​​ மக்​கள் நலத் திட்​டங்​களை நிறை​வேற்​றப் பாடு​ப​டும் அவர்​க​ளின் உழைப்​புக்​குத் தரு​வ​தா​கும்.​ அது திட்​டச் செல​வு​டன் கூடி​யதே தவிர,​​ தனிச் செலவு அல்ல.

முத்​தனோ அல்​லது முனி​யனோ அவர்​க​ளின் வியர்வை சிந்​திய உழைப்​பால்தான்,​​ பல்​வேறு திட்​டங்​களை நிறை​வேற்​று​வ​தில்தான் இந்த நாட்​டி​னு​டய முன்​னேற்​றம் இருக்​கி​றது என்​பதை நாங்​கள் உணர்ந்​துள்​ளோம்.​ இதை வீண் செல​வா​கவோ அல்லது பொரு​ளா​தா​ரத்தை சீர​ழிப்​ப​தா​கவோ நாங்​கள் கரு​த​வில்லை.​ அப்​படி கருதுகின்​ற​வர்​க​ளுக்கு பொரு​ளா​தா​ரம் தெரி​ய​வில்லை என்று கூற மாட்​டேன்.​ பொருளா​தா​ரத்தை முறை​யா​கப் படிக்க வேண்​டி​ய​வர்​கள் என்​பதை மட்​டும் அவர்களுக்​குச் சொல்​லு​வேன்.

நானும் ஒரு தொழிலாளி!

அரசு ஊழி​யர்​க​ளாக இருக்​க​லாம்.​ ஆனால்,​​ அவர்​க​ளும் தொழி​லா​ளர்​கள்தான்.​ நான் முதல்​வ​ராக இருக்​க​லாம்.​ ஆனால்,​​ நானும் ஒரு தொழி​லாளி தான்.​ அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோ​ரும் தொழி​லா​ளர்​கள் தான்.​ சமு​தா​யம் மேம்​பட எங்​க​ளு​டைய உழைப்பை உவந்து வழங்​கு​கி​றோம்.​ அதே போல நீங்​க​ளும் உங்​க​ளின் உழைப்பை அளிக்​கி​றீர்​கள்.​ எனவே நீங்​கள் வேறு,​​ நாங்​கள் வேறு அல்ல.

மக்​க​ளுக்​கான சேவை​யில் உங்​க​ளுக்​கும் பங்​குண்டு.​ அர​சின் நிறை,​​ குறை​க​ளில் எல்லாம் உங்​க​ளுக்​கும் பொறுப்பு உண்டு.​ எனக்​கும் பொறுப்பு உண்டு.​ உங்​க​ளுக்கு இன்​னல் வந்த போதெல்​லாம் நான் உங்​கள் பக்​கமே இருந்​தேன்.​ இப்​போ​தும் இருக்கின்​றேன்.​ இனி எப்​போ​தும் இருப்​பேன்,” என்​றார் முதல்​வர் கரு​ணா​நிதி.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்​கள் துரை​மு​ரு​கன்,​​ பொன்​முடி,​​ தமிழ்​நாடு அரசு அலு​வ​லர் ஒன்​றி​யத்​தின் மாநில தலை​வர் கோ.​ சூரி​ய​மூர்த்தி,​​ மாநில பொதுச் செய​லர் இரா.​ சண்​மு​க​ரா​ஜன் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​ற​னர்.
11 thoughts on “தேர்தல் முடிவை நிர்ணயிப்பது அரசு ஊழியர் வாக்குகளே! – முதல்வர் கருணாநிதி

 1. தமிழ்நாட்டு கருணா

  “நானும் ஒரு தொழிலாளி”
  ஆம் தமிழ்மக்களை அழிக்க, என்குடும்பத்தை மட்டும் காக்க அரும்பாடுபடும் தொழிலாளி…
  இனம் இனத்தோடுதான் சேரும்..லஞ்சம் வாங்கும் கூட்டம் அதன் தலைவனிடம் தான் சேர்ந்து இருக்கிறது.

 2. Dinesh

  அரசு ஊழியர்களைத் தவிர மத்தவங்கள் எல்லாம் வேற வேலை பாத்து பொழச்சுக்குங்க.

 3. குமரன்

  நான் ஒரு தமிழன் (இலங்கையில் தமிழர்கள் மீது வான்வழித்தாக்குதல் நடக்கும்போது எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி பதவிக்காகப் பேரம் பேசினாலும் கூட) … நான் ஒரு தமிழன்….

  நான் தாழ்த்தப்பட்டவன் ….. (ஊர் உலகத்திலுள்ள எத்தனை பேர் என் காலில் விழுந்தாலும் கூட, நானும் எனது நான்காம் தலைமோரை வாரிசுகளும் சைக்கிளிலோ பேருந்திலோ போகவேண்டிய அவசியம் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு வராது என்றாலும் கூட) நான் தாழ்த்தப்பட்டவன்…

  நான் ஒரு தொழிலாளி ( இன்னும் பத்துத தலைமுறைக்கு எனது உடனடி, தூரச் சொந்தங்கள் கூட யாரிடமும் கைகட்டி வேலை செய்யும் சூழல் இல்லாவிட்டாலும் கூட) நான் ஒரு தொழிலாளி …

  ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் ….

 4. radha

  அந்த சூநாக்கு தான அவனுகளுக்கு ரொம்ப சலுகை தரைஎடா ..**************************

 5. Muralikumar

  திரு
  . குமரன்,
  மிக நன்றாக சொன்னீர்கள்.

 6. Chozhan

  தேர்தல் முடிவை நிர்ணயிப்பது அரசு ஊழியர்களே அல்லாது வாக்குகள் அல்ல. இது கடந்த சட்டசபை தேர்தலில் நான் கண்டது. கள்ள ஓட்டு போடுவது உண்மையிலேயே கட்சிகாரர்கள் இல்லை இது மாதிரி அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்கள்தான் ஆகாசத்திலிருந்து வந்தவர்கள் அதிசய பிறவிகள் மற்றவர்கள் ஈனப்பிறவிகள் எனவே கலைஞர் அவர்களே அரசு ஆள/தக்கவைத்துக்கொள்ள அரசாங்க ஊழியர்களுக்கு முடிந்தவரை சலுகைகளை அள்ளி அள்ளி கொடுக்க வேண்டுகிறேன். பத்திரிக்கைகளும் உங்களை பாராட்டும்.

 7. Converse Stupidity

  இதே ரேஞ்சுல போன பெருசு இழவு வீட்டுக்கு போய் நானே ஒரு பிணம்தான்னு பேசபோகுது

 8. SenthilMohan K Appaji

  //*அன்​றா​டம் உழைத்து,​​ குடும்​பத்​தை​யும் காப்​பாற்​றிக் கொண்டு,​​ பொது​வாழ்​வில் உள்ள பல்​வேறு சங்​க​டங்​களை எல்​லாம் சந்​தித்து வாழும் பெரிய சமு​தா​ய​மாக அரசு அலு​வ​லர்​கள் உள்​ள​னர்.​ **/
  அன்றாடம் உழைத்து, குடும்பத்தையும் காப்பாற்றும் அரசு அலுவலர்கள் தாம் கொஞ்சம் வாங்கும் சம்பளத்திற்கு உழைக்கிறோமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

  //*அரசு அலு​வ​லர்​க​ளின் வாக்கு,​​ ஒரு தேர்​தல் முடிவை நிர்​ண​யிக்​கக் கூடிய அள​வுக்கு உள்​ளது.​ ​**/
  அதனால தான அள்ளி அள்ளி கொடுக்குறீங்க.

  //*நீங்​கள்,​​ உங்​க​ளின் ஒரு சில கோரிக்​கை​களை நிறை​வேற்​றி​ய​தற்​காக மட்​டுமே,​​ என் மீது நீங்​கள் அன்பு காட்​ட​வில்லை.​ நான் வருங்​கா​லத்​தி​லும் உங்​கள் கோரிக்​கை​களை நிறை​வேற்​று​வேன் என்ற நம்​பிக்கைதான் அன்​புக்​குக் கார​ணம்.​ **/
  ரைட்டு. அடுத்த தேர்தலுக்கு பலமான அச்சாரம் போட்டுட்டாலும், அப்பப்ப சரியாய் இருக்கானு Cross Verify பண்றீங்க பாருங்க. இதுதான் உங்ககிட்ட அவங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயம்.

  //*இந்த மாநாட்டை மிகுந்த பூரிப்பு​டன் ஏற்​கி​றேன்.**/
  இதுக்கு என்ன சொல்றதுனே தெரில.

  //*அரசு அலு​வ​லர்​க​ளுக்​கான சம்​பள உயர்வு,​​ சலுகைகள் என்​பது,​​ மக்​கள் நலத் திட்​டங்​களை நிறை​வேற்​றப் பாடு​ப​டும் அவர்​க​ளின் உழைப்​புக்​குத் தரு​வ​தா​கும்.​**/
  ஒத்துக்குறோம். ஆனால் அவர்கள் படும் பாட்டினையும் ஒருமுறை தெளிவு பண்ணினால் நல்லா இருக்கும்.

  //*அரசு ஊழி​யர்​க​ளாக இருக்​க​லாம்.​ ஆனால்,​​ அவர்​க​ளும் தொழி​லா​ளர்​கள்தான்.​ நான் முதல்​வ​ராக இருக்​க​லாம்.​ ஆனால்,​​ நானும் ஒரு தொழி​லாளி தான்.​ அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோ​ரும் தொழி​லா​ளர்​கள் தான்.​ சமு​தா​யம் மேம்​பட எங்​க​ளு​டைய உழைப்பை உவந்து வழங்​கு​கி​றோம்.​**/
  சம்பளம்/கிம்பளம் வாங்கும் ஒவ்வொரு முறையும் அல்லது தினமும் தூங்கும் போதும் இதனை எண்ணிப் பாருங்கள்.

 9. Manoharan

  தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அரசுஊழியர்கள். உபயம் : கருணாநிதி.

 10. சரவணன்

  அட போங்கப்பா,எத்தனை முறை சொல்லுவது இந்த கிழவன் பேச்சை இனி மதிக்க வேண்டாமென்று.வாரம் ஒரு முறை இப்படி ஏதாவது தமாஷ் பண்ணுவதே வேலை.

 11. r.v.saravanan

  அரசு ஊழியர்கள் அல்லாத நாங்களெல்லாம் என்ன பாவம் பண்ணினோம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *